Saturday, January 10, 2009

தியாகராஜ கிருதி - எந்து3ண்டி3 வெட3லிதிவோ - ராகம் த3ர்பா3ரு - Endundi Vedalitivo - Raga Darbaru

பல்லவி
எந்து3ண்டி3 வெட3லிதிவோ ஏவூரோ நே தெலிய இபுடை3ன தெலுபவய்ய

அனுபல்லவி
அந்த3 சந்த3மு வேரை நட3தலெல்ல த்ரி-கு3ணாதீதமையுன்னதே3 கானி ஸ்ரீ ராம (எந்து3)

சரணம்
சிடுகண்டேனபராத4 சயமுல தகி3லிஞ்சே 1ஸி1வ லோகமு காது3
வடு ரூபுடை33லினி வஞ்சிஞ்சியணசு-வானி 2வைகுண்ட2மு காது3
விட வசனமுலாடி3 ஸி1ரமு த்ரும்ப-ப3ட்33 3விதி4 லோகமு காது3
தி3டவு த4ர்மமு ஸத்யமு ம்ரு2து3 பா4ஷலு கலுகு3 தி3வ்ய ரூப த்யாக3ராஜ வினுத நீ(வெந்து3)


பொருள் - சுருக்கம்
இராமா! திடம், அறம், மெய்ம்மை, மென்சொற்களும் உடைத்த தெய்வீக வடிவே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
எங்கிருந்து எழுந்தருளினாயோ! எவ்வூரோ! நானறியேனே; இப்போழ்தேனும் தெரிவியுமைய்யா!
  • அழகும், ஒயிலும் வேறாகி, நடத்தையாவும் முக்குணத்திற்கு அப்பாற்பட்டுள்ளதன்றோ!

  • சொடக்கினால் குற்றங்களைச் சாட்டும் சிவலோகமன்று;

  • மாணாக்கனாக உருக்கொண்டு பலியினை வஞ்சித்து அடக்குவோனின் வைகுண்டமன்று;

  • பொய்ச் சொற்கள் பகர்ந்து தலை கிள்ளப்பெற்ற விதி லோகமன்று;

அப்படியானால், நீயெங்கிருந்து எழுந்தருளினாயோ! எவ்வூரோ!


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3ண்டி3/ வெட3லிதிவோ/ ஏ/-ஊரோ/ நே/ தெலிய/ இபுடை3ன/ தெலுபவய்ய/
எங்கிருந்து/ எழுந்தருளினாயோ/ எந்த/ ஊரோ/ நான்/ அறியேனே/ இப்போழ்தேனும்/ தெரிவியுமைய்யா/


அனுபல்லவி
அந்த3/ சந்த3மு/ வேரை/ நட3தலு/-எல்ல/ த்ரி-கு3ண/-அதீதமை/-உன்னதே3 கானி/ ஸ்ரீ ராம/ (எந்து3)
அழகும்/ ஒயிலும்/ வேறாகி/, நடத்தை/ யாவும்/ முக்குணத்திற்கு/ அப்பாற்பட்டு/ உள்ளதன்றோ/ ஸ்ரீ ராமா/ எங்கிருந்து...


சரணம்
சிடுகண்டே/-அபராத4 சயமுல/ தகி3லிஞ்சே/ ஸி1வ/ லோகமு/ காது3/
சொடக்கினால்/ குற்றங்களை/ சாட்டும்/ சிவ/ லோகம்/ அன்று/

வடு/ ரூபுடை3/ ப3லினி/ வஞ்சிஞ்சி/-அணசு-வானி/ வைகுண்ட2மு/ காது3/
மாணாக்கனாக/ உருக்கொண்டு/ பலியினை/ வஞ்சித்து/ அடக்குவோனின்/ வைகுண்டம்/ அன்று;

விட/ வசனமுலு/-ஆடி3/ ஸி1ரமு/ த்ரும்ப-ப3ட்33/ விதி4/ லோகமு/ காது3/
பொய்/ சொற்கள்/ பகர்ந்து/ தலை/ கிள்ளப்பெற்ற/ விதி/ லோகம்/ அன்று/

தி3டவு/ த4ர்மமு/ ஸத்யமு/ ம்ரு2து3/ பா4ஷலு/ கலுகு3/ தி3வ்ய/ ரூப/ த்யாக3ராஜ/ வினுத/ நீ/ (வெந்து3)
திடம்/ அறம்/ மெய்ம்மை/ மென்/ சொற்களும்/ உடைத்த/ தெய்வீக/ வடிவே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ நீ/ யெங்கிருந்து..


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - வைகுண்ட2மு - பலி சக்ரவர்த்தி, தன்னையாட்கொள்ள வந்திருப்பது, தான் வழிபடும் விஷ்ணுவென்றறிந்தே, தன் தலையே முன்வைத்தான். ஒரு தொண்டனுக்கு, இதைவிட பெரிய பேறென்ன வேண்டும்? ஆயினும், விஷ்ணுவைப் பொருத்தவரையில் அது வஞ்சனையாகும். பாகவத புராணம், 8-வது புத்தகம், அத்தியாயங்கள் 18 – 23 நோக்கவும்

Top

3 - விதி4 லோகமு - சிவனின் உண்மையான உருவ்த்தினை அறிய, விஷ்ணு, பன்றி உருவமெடுத்து அடியையும், பிரமன், அன்னப் பறவையினுருவெடுத்து முடியையும் தேடினார்கள். விஷ்ணு, தான் அடி காண இயலாததை ஒப்புக்கொள்ள, பிரமனோ தன்னுடை செருக்கினால், தான் முடி கண்டதாக பொய் சொன்னான். அதனால் சிவன், பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றினைக் கிள்ளியதாக புராணங்கள் கூறும்.

இந்நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றதாக அக்கோயில் தலவரலாறு கூறும்.

இச்சம்பவம் குறித்து ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய் லஹரி, 70-வது செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம்
1 - ஸி1வ லோகமு - சொடக்கினால் குற்றங்களைச் சாட்டும் சிவலோகம் - எதனை ஆதாரமாக வைத்து தியாகராஜர் இப்படி் கூறுகின்றாரென விளங்கவில்லை.

முக்குணங்கள் - சாத்துவிக, இராசத, தாமத குணங்கள்
மாணாக்கன் - வாமனராக அவதரித்தது
பலி - அரியாலொடுக்கப்பட்ட ஓர் அரக்கப் பேரரசன்
விதி - பிரமன்

Top


Updated on 11 Jan 2009

No comments: