அபராத4முல மான்பியாது3கோவய்ய
அனுபல்லவி
க்ரு2ப ஜூசி ப்3ரோசிதே கீர்தி க3லதி3க நீகு (அ)
சரணம்
சரணம் 1
அத்யந்த மத்ஸர மதா3ந்து4டை3 ஸஜ்ஜனுல
நித்ய கர்மமுல வலெ நிந்தி3ஞ்சுகொன்ன நா (அ)
சரணம் 2
சூசு வாரலகெது3ட ஸொக்கி ஜபிதுட3னைதி
யோசிஞ்ச நீ பாத3 யுக3ள த்4யானமு லேனி நா (அ)
சரணம் 3
1ஸ்த்ரைண ஜனுலனு கூடி3 2வீணாடி3தினி கானி
ப்ராண ஹித கு3ண கத2ல பல்கனைதி நா (அ)
சரணம் 4
ஸ1ரணு ஜொச்சின நன்னு கருணிஞ்சவே ராம
வர த்யாக3ராஜ நுத வஸ1மு காதி3க 3நாகு (அ)
பொருள் - சுருக்கம்
இராமா! தியாகராசனால் போற்றப்பெற்ற மேலோனே!
- குற்றங்களை மன்னித்து ஆதரிப்பாயய்யா!
- பெரும் காழ்ப்பும் செருக்குமுடைக் குருடனாகி, நல்லோரை தினசரிச் சடங்குகள் போலும், நிந்தித்திருந்தேன்;
- காண்போரெதிரில் சொக்கி, செபம் செய்பவனாகினேன்;
- உனது திருவடியிணை தியானம் செய்தேனில்லை;
- பெண்டிரை விழைவோரைக் கூடி, (பொழுதை) வீணாக்கினேன்;
- உயிருக்கு நன்மை பயக்கும் (உனது) பண்பு கதைகளைப் பகர்ந்திலேன்;
- சரணடைந்த என்னை கருணிப்பாயய்யா;
- இயலாதினியு மெனக்கு;
- யோசிக்காதே;
- கருணை செய்து காத்தால், புகழோங்குமுனக்கு.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அபராத4முல/ மான்பி/-ஆது3கோ/-அய்ய/
குற்றங்களை/ மன்னித்து/ ஆதரிப்பாய்/ அய்யா!
அனுபல்லவி
க்ரு2ப/ ஜூசி/ ப்3ரோசிதே/ கீர்தி/ க3லது3-இக/ நீகு/ (அ)
கருணை/ செய்து/ காத்தால்/ புகழ்/ ஓங்கும்/ உனக்கு
சரணம்
சரணம் 1
அத்யந்த/ மத்ஸர/ மத3/-அந்து4டை3/ ஸஜ்ஜனுல/
பெரும்/ காழ்ப்பும்/ செருக்குமுடை/ குருடனாகி/ நல்லோரை/
நித்ய/ கர்மமுல/ வலெ/ நிந்தி3ஞ்சுகொன்ன/ நா/ (அ)
தினசரி/ சடங்குகள்/ போலும்/ நிந்தித்திருந்த/ எனது/ குற்றங்களை...
சரணம் 2
சூசு வாரலகு/-எது3ட/ ஸொக்கி/ ஜபிதுட3னு/-ஐதி/
காண்போர்/ எதிரில்/ சொக்கி/ செபம்/ செய்பவன்/ ஆகினேன்;
யோசிஞ்ச/ நீ /பாத3/ யுக3ள/ த்4யானமு/ லேனி/ நா/ (அ)
யோசிக்காதே/ உனது/ திருவடி/ இணை/ தியானம்/ இல்லாத/ எனது/ குற்றங்களை...
சரணம் 3
ஸ்த்ரைண ஜனுலனு/ கூடி3/ வீணு-ஆடி3தினி/ கானி/
பெண்டிரை விழைவோரை/ கூடி/ (பொழுதை) வீணாக்கினேன்/ அன்றி,
ப்ராண/ ஹித/ கு3ண/ கத2ல/ பல்கனைதி/ நா/ (அ)
உயிருக்கு/ நன்மை பயக்கும்/ (உனது) பண்பு/ கதைகளை/ பகர்ந்திலேன்/ எனது/ குற்றங்களை...
சரணம் 4
ஸ1ரணு/ ஜொச்சின/ நன்னு/ கருணிஞ்சவே/ ராம/
சரணம்/ அடைந்த/ என்னை/ கருணிப்பாயய்யா/ இராமா/
வர/ த்யாக3ராஜ/ நுத/ வஸ1மு காது3/-இக/ நாகு/ (அ)
மேலான/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ இயலாது/ இனியும்/ எனக்கு/ குற்றங்களை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நாகு - நாது3.
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸ்த்ரைண ஜனுல - இச்சொல்லுக்கு 'பெண்டிரைச் சேர்ந்தவர்' என்று பொருள். இவ்விடத்தில் 'பெண்களை விழைவோர்' என பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இச்சொல்லினை, தியாகராஜர் 'காமுகன்' என்று பொருளில் உபயோகப்படுத்தியுள்ளாரா என விளங்கவில்லை.
2 - வீணாடி3தினி - தெலுங்கு மொழியில் 'வீண்' என்று சொல் இருப்பதாகத் தெரியவில்லை. தியாகராஜர், ஒரு வேளை, தமிழ்ச் சொல்லினை பயன்படுத்தியுள்ளாரா எனத் தெரியவில்லை. இச்சொல்லுக்கு இங்கு 'பொழுதை வீணாக்கினேன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
Top
Updated on 09 Jan 2009
No comments:
Post a Comment