Thursday, January 15, 2009

தியாகராஜ கிருதி - முந்து3 வெனுக - ராகம் த3ர்பா3ரு - Mundu Venuka - Raga Darbaaru

பல்லவி
முந்து3 வெனுகயிரு பக்கல தோடை3
1முர 22 ஹர ராரா

அனுபல்லவி
எந்து3 கான நீயந்த3மு வலெ ரகு4
நந்த3ன வேக3மே ராரா (மு)

சரணம்
சரணம் 1
சண்ட3 பா4ஸ்கர குலாப்3தி4 சந்த்3
கோத3ண்ட3 பாணியை ராரா
3அண்ட3 கொலுசு ஸௌமித்ரி ஸஹிதுடை3
அமித பராக்ரம ராரா (மு)

சரணம் 2
ஓ க3ஜ ரக்ஷக ஓ ராஜ குமார
4ஓங்கார ஸத3 ராரா
பா43வத ப்ரிய பா33 ப்3ரோவவய்ய
த்யாக3ராஜ நுத ராரா (மு)


பொருள் - சுருக்கம்
முர, கரர்களை வதைத்தோனே! இரகு நந்தனா! வெஞ்சுடர்ப் பகலோன் குலக் கடலின் மதியே! அளவற்ற ஆற்றலோனே! ஓ கரியைக் காத்தோனே! ஓ இளவரசே! ஓங்காரத்துள்ளறையே! பாகவதர்களுக்கினியோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே
  • முன், பின், இரு பக்கங்களிலும் துணையாய் வாராயய்யா;

  • எங்கும் காணேன், உனதெழில் போன்று;

  • வேகமாய் வாராயய்யா;

  • கோதண்டமேந்தி வாராயய்யா;

  • அண்மையில் பணியாற்றும் இலக்குவனுடன் கூடி, வாராயய்யா

  • நன்கு காப்பாயய்யா;

  • வாராயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முந்து3/ வெனுக/-இரு/ பக்கல/ தோடை3/
முன்/ பின்/ இரு/ பக்கங்களிலும்/ துணையாய்/

முர/ க2ர/ ஹர/ ராரா/
முர/ கரர்களை/ வதைத்தோனே/ வாராயய்யா/


அனுபல்லவி
எந்து3/ கான/ நீ/-அந்த3மு/ வலெ/ ரகு4/
எங்கும்/ காணேன்/ உனது/ எழில்/ போன்று/ இரகு/

நந்த3ன/ வேக3மே/ ராரா/ (மு)
நந்தனா/ வேகமாய்/ வாராயய்யா/


சரணம்
சரணம் 1
சண்ட3/ பா4ஸ்கர/ குல/-அப்3தி4/ சந்த்3ர/
வெஞ்சுடர்/ பகலோன்/ குல/ கடலின்/ மதியே/

கோத3ண்ட3/ பாணியை/ ராரா/
கோதண்டம்/ ஏந்தி/ வாராயய்யா/

அண்ட3/ கொலுசு/ ஸௌமித்ரி/ ஸஹிதுடை3/
அண்மையில்/ பணியாற்றும்/ சுமித்திரை மகனுடன்/ கூடி/

அமித/ பராக்ரம/ ராரா/ (மு)
அளவற்ற/ ஆற்றலோனே/ வாராயய்யா/


சரணம் 2
ஓ க3ஜ/ ரக்ஷக/ ஓ ராஜ குமார/
ஓ கரியை/ காத்தோனே/ ஓ இளவரசே/

ஓங்கார/ ஸத3ன/ ராரா/
ஓங்காரத்துள்/ உறையே/ வாராயய்யா/

பா43வத/ ப்ரிய/ பா33/ ப்3ரோவு/-அய்ய/
பாகவதர்களுக்கு/ இனியோனே/ நன்கு/ காப்பாய்/ அய்யா!

த்யாக3ராஜ/ நுத/ ராரா/ (மு)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வாராயய்யா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - முர - முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட ஓரரக்கன்

2- 2 - கரன் - இராமனால் கொல்லப்பட்ட அரக்கன்

4 - ஓங்கார ஸத3 - ஓங்காரத்துள்ளறையே - 'ஜக3தா3னந்த3 காரக' என்ற பஞ்ச ரத்ன கிருதியில், தியாகராஜர், இறைவனை 'ஓங்கார பஞ்ஜர கீர' (ஓங்காரமென்னும் கூண்டிலுள்ள கிளியே) என்றழைக்கின்றார். இது குறித்து 'பதஞ்சலி யோக சூத்திர'த்தின் செய்யுள் நோக்குக -

"ஓம் எனும் சொல் (ஓங்காரம்) அவனை (பரம்பொருளை) சுட்டும்" (I.27) (ஸ்வாமி ப்ரபவானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

விளக்கம்
3 - அண்ட3 கொலுசு - அண்மையில் பணியாற்றும் - இச்சொல் இலக்குவனைக் குறிக்கும். ஆனால் 'அண்ட' என்ற சொல்லுக்கு 'புவனம்' என்றும், 'கொலுசு' என்ற சொல்லுக்கு 'அளந்த' என்றும் பொருளுண்டு. அதன்படி, வாமனாவதாரத்தில் மூன்று அடிகளில் பேரண்டத்தினை அளந்த விஷ்ணுவின் அவதாரமாகிய ராமனுக்கும் இச்சொல் பொருந்தும்.

புராண விரிவுரையாற்றும் திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தனது 'தியாகராஜ ராமாயணம்' என்னும் அரிகதையில், இப்பாடல் குறித்து பகர்வது யாதெனில் - "தியாகராஜர், திருப்பதி வெங்கடேச பெருமானை தரிசித்துவிட்டு, தம்முடைய ஆட்களுடன் நாகலாபுரம் காடு வழியாக திரும்பி வரும்போது, கொள்ளைக்காரர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்; அவர்களிடமிருந்து தமது ஆட்களைக் காப்பாற்ற இப்பாடலை அவ்வமயமே பாடினார்; உடனே இரு சேவகர்கள் தோன்றி அவர்களைக் காத்தனர் . அவ்விருவரும் மாறுவேடம் பூண்ட ராம-லக்ஷ்மணர்கள் என்று தியாகராஜர் கருதினார்."

வெஞ்சுடர்ப் பகலோன் - பரிதி
சுமித்திரை மகன் - இலக்குவன்

Top


Updated on 16 Jan 2009

No comments: