Tuesday, January 13, 2009

தியாகராஜ கிருதி - ஏல தெலிய லேரோ - ராகம் த3ர்பா3ரு - Ela Teliya Lero - Raga Darbaaru

பல்லவி
1ஏல தெலிய லேரோ 2பூர்வ கர்ம-
மேலாகு3ன ஜேஸிரோ
ராமய்ய

அனுபல்லவி
பா3ல ஸ1ஸா1ங்க 3கலாலங்க்ரு2த நுத
நீல வர்ண ஸுகு3ணாலய நீ மஹிம(லேல)

சரணம்
சரணம் 1
பா3ல தனமுன ஸூ1ல த4ருனி
விஸா1ல த4னுவுனு லீலகா3 பூ4-
பாலகுலு கன கேல விரசி
குஸா1லுகா3 ஸ்ரீனேலின நி(ன்னேல)

சரணம் 2
நாலுகொ3க பதி3 வேல கஞ்சு
ரதா2ல ஸுர ரிபு மூல ப3லமுல
லீலகா34னொக கோலனேஸி
கால யம புரி பாலு ஜேஸின நி(ன்னேல)

சரணம் 3
ராஜ ஸே12ருனியீ ஜக3திலோ
5ராஜஸம்பு3ன பூஜ ஸேயு
ராஜுலனு
3ஜ ராஜுலகு ம்ரு23
ராஜ த்யாக3ராஜ நுத நி(ன்னேல)


பொருள் - சுருக்கம்
இராமய்யா? சிவனால் போற்றப்பெற்றோனே! நீல வண்ணா! பண்புகளினுறைவிடமே! சிவனை, இப்புவியில், இராசதத்தினால் வழிபடும் அரசர்களெனும் கரிகளுக்குச் சிங்கமே! தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
  • ஏனறிந்திலரோ உனது மகிமைகளை? முன் வினைகள் எவ்விதம் செய்தனரோ?

  • இளமையில், சிவனின் பெருத்த வில்லினை, விளையாட்டாக, புவியாள்வோர் காண, கைகளால் முறித்து, களிப்புடன் திருமகளையாண்ட உன்னை ஏனறிந்திலரோ?

  • பதினான்காயிரம் கஞ்சியத் தேர்களையும், ராவணனின் மூல பலத்தினையும்,விளையாட்டாக, ஓரம்பெய்து, நமனின் புரமடையச் செய்தவுன்னை ஏனறிந்திலரோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/ தெலிய லேரோ/ பூர்வ/ கர்மமு/-
ஏன்/ அறிந்திலரோ/ முன்/ வினைகள்/

ஏலாகு3ன/ ஜேஸிரோ/ ராமய்ய/
எவ்விதம்/ செய்தனரோ/ இராமய்யா/


அனுபல்லவி
பா3ல/ ஸ11/-அங்க/ கலா/-அலங்க்ரு2த/ நுத/
இளம்/ முயல்/ சின்னத்தோன்/ பிறை/ அணிவோனால்/ போற்றப்பெற்றோனே/

நீல/ வர்ண/ ஸுகு3ண/-ஆலய/ நீ/ மஹிமலு/-(ஏல)
நீல/ வண்ணா/ பண்புகளின்/ உறைவிடமே! உனது/ மகிமைகளை/ ஏன்...


சரணம்
சரணம் 1
பா3ல தனமுன/ ஸூ1ல/ த4ருனி/
இளமையில்/ சூலம்/ ஏந்தியின்/

விஸா1ல/ த4னுவுனு/ லீலகா3/ பூ4/-
பெருத்த/ வில்லினை/ விளையாட்டாக/ புவி/

பாலகுலு/ கன/ கேல/ விரசி/
யாள்வோர்/ காண/ கைகளால்/ முறித்து/

குஸா1லுகா3/ ஸ்ரீனி/-ஏலின/ நின்னு/-(ஏல)
களிப்புடன்/ திருமகளை/ யாண்ட/ உன்னை/ ஏன்...


சரணம் 2
நாலுகு3/-ஒக/ பதி3/ வேல/ கஞ்சு/
நான்குடன்/ ஓர்/ பதின்/ ஆயிரம்/ கஞ்சிய/

ரதா2ல/ ஸுர/ ரிபு/ மூல/ ப3லமுல/
தேர்களையும்/ சுரர்/ பகைவனின்/ மூல/ பலத்தினையும்/

லீலகா3னு/-ஒக/ கோலனு/-ஏஸி/
விளையாட்டாக/ ஓர்/ அம்பு/ எய்து/

கால/ யம/ புரி/ பாலு ஜேஸின/ நின்னு/-(ஏல)
கால/ யமனின்/ புரம்/ அடையச் செய்த/ உன்னை/ ஏன்...


சரணம் 3
ராஜ/ ஸே12ருனி/-ஈ/ ஜக3திலோ/
திங்கள்/ தலையிலணிவோனை/ இந்த/ புவியில்/

ராஜஸம்பு3ன/ பூஜ ஸேயு/
இராசதத்தினால்/ வழிபடும்/

ராஜுலு/-அனு/ க3ஜ/ ராஜுலகு/ ம்ரு23/ ராஜ/
அரசர்கள்/ எனும்/ கரி/ அரசர்களுக்கு/ மிருக/ ராசனே!

த்யாக3ராஜ/ நுத/ நின்னு/-(ஏல)
தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ உன்னை/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
3 - கலா - 16-ல் 1 (1/16) பாகம் 'கலா' எனப்படும். அந்த முறையில், திங்களின் ஒவ்வொரு பிறையும் 'கலா' எனப்படும்

விளக்கம்
1 - ஏல தெலிய லேரோ - ஏன் அறிந்திலரோ - வால்மீகி ராமாயணம், யுத்த காணடத்தில் (117-வது அத்தியாயம் - சீதை நெருப்பினுள் புகுதல்) பிரம்மா, சிவன் ஆகியோரை நோக்கி ராமன் பகர்வது - "நான் என்னை ஒரு சாதாரண மனிதனாக, தசரத மன்னனின் புதல்வனாக உணர்கின்றேன். பிரம்மா, நான் யாரென்றும் எங்கிருந்து வந்தேனென்றும் பகரட்டும்."

தியாகராஜர், தன்னுடைய 'ரமா ரமண பா4ரமா' (ராகம் வஸந்த பைரவி) என்ற கிருதியில் உரைப்பது - "உன்னுடைய மருமங்களை அறிந்தவர் மட்டுமே உன்னுடை செயல்களைப் புரிந்துகொள்ளமுடியும்".
Top
2 - பூர்வ கர்மமேலாகு3ன ஜேஸிரோ - முன்வினைகள் எவ்விதம் செய்தனரோ - வால்மீகி ராமாயணம், யுத்த காணடத்தில் (111-வது அத்தியாயம்) ராவணனின் மனைவி, மண்டோதரி, 'தன்னுடைய கணவன் இவ்வளவு பெருமையுடைத்தவனாயிருந்தும், ராமன், விஷ்ணுவின் அவதாரமென உணராமற்போனானே' என்று புலம்புகிறாள்.

மூன்றாவது சரணத்தில், தியாகராஜர் 'ராஜஸம்பு3ன பூஜ ஸேயு ராஜுலு' - 'இராசத குணங்களுடன் வழிபடும் அரசர்கள்' என்கிறார். இவ்விரண்டையும் சேர்த்து நோக்குகையில், தியாகராஜர், பகவத் கீதையில் (அத்தியாயம் 3, செய்யுள் 9) கண்ணன் உரைத்த சொற்களை நினைவுகூர்கின்றார் எனத் தெரிகின்றது - "இவ்வுலகோர் வேள்விக்காகவென்றல்லாது (சுய நலத்திற்காக) இயற்றும் பணிகளால் (பிறப்பு இறப்பெனும்) கட்டுக்குள் அகப்படுகின்றனர். எனவே, ஓ, குந்தி மகனே, வேள்விக்காகவென்றே, பற்றறறுத்து, பணிகளை இயற்றுவாய்".
Top
4 - ஒக கோலனேஸி - ஓரம்பெய்து - வால்மீகி ராமாயணம் - ஆரண்ய காண்டம், அத்தியாயம் 30, செய்யுடகள் 30, 31-ல் தண்டகாரண்யத்தில், 14000 அரக்கர்களை ராமன், ஒன்றரை மணி நேரத்தில் வதைத்ததை, தேவர்கள் புகழ்கின்றனர். அவ்விதமே, யுத்தகாண்டத்திலும் (அத்தியாயம் 93-ல்) ராவணனின் மூல பல சேனைகளை வதைத்த பெருமை கூறப்படுகின்றது.

5 - ராஜஸம்பு3ன பூஜ ஸேயு ராஜுலு - இராசத குணத்துடன் (சுய நலத்திற்காக) வழிபடும் மன்னர்கள் - தியாகராஜர் ராவணனை முக்கியமாகக் குறிப்பிடுகின்றார்.
Top

முயல் சின்னத்தோன் - திங்கள்
இளந்திங்கட் பிறை சூடி, சூலமேந்தி, திங்களணிவோன் - சிவன்
திருமகள் - இங்கு சீதையைக் குறிக்கும்
நான்குடனோர் பதினாயிரம் - பதினான்காயிரம்
கஞ்சியம் - வெண்கலம்
கஞ்சியத் தேர்கள் - கரன் (சூர்ப்பநகையின் சோதரன்) சேனை
சுரர் பகைவன் - இராவணன்
மூல பலம் - அடிப்பெலமாயிருக்கும் சேனை
காலவியமன் - நமன்
இராசதம் - முக்குணங்களிலொன்று
மிருகராசன் - சிங்கம்
Top


Updated on 13 Jan 2009

No comments: