Thursday, January 22, 2009

தியாகராஜ கிருதி - ராம லோப4மேல - ராகம் த3ர்பா3ரு - Rama Lobhamela - Raga Darbaaru

பல்லவி
ராம லோப4மேல நனு
ரக்ஷிஞ்சுபட்ல நீகிந்த ஸ்ரீ (ராம)

அனுபல்லவி
ஸோமார்க லோசன ஸுகு3
ஸுத்ராமாது3லெல்ல நவ்வரா (ராம)

சரணம்
சரணம் 1
1ரணனுகொன்ன 1காகாஸுருனி 2ராவணுனி
ஸோத3ருனி
ப்3ரோவ லேதா3 ஸரகு3ன கரினி காசின ஸ்ரீ (ராம)

சரணம் 2
3தி லேனி வேள 3த்3ரௌபதி3 4வேக3மே க்ரு2ஷ்ணாயன
அதி ப்ரேமதோ வேஞ்சேஸின மதி நேடெ3ந்து3 போயெனோ (ராம)

சரணம் 3
5டே33கை மேனொஸங்கு3 ராக4வான்வயமுன
பா33 ஜன்மிஞ்சின த்யாக3ராஜ நுத ஸ்ரீ (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! மதி, பரிதிக் கண்களோனே! நற்குணத்தோனே! உடனே கரியைக் காத்த இராமா! பருந்துக்கு உடலளிக்கும், இரகு குலத்தில் சிறக்கத் தோன்றிய, தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
  • கஞ்சத்தனமேன் இத்தனை, என்னைக் காப்பதென்றாலுனக்கு?

  • இந்திரன் முதலான யாவரும் நகைப்பரன்றோ?

  • தஞ்சமென்ற காகாசுரனை, இராவணனின் சோதரனைக் காக்கவில்லையா?

  • போக்கற்ற வேளை, துரோபதை 'கண்ணா'யென, மிக்கன்புடன் விரைவாக எழுந்தருளிய உள்ளமின்றெங்கு போனதோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ லோப4மு/-ஏல/ நனு/
இராமா/ கஞ்சத்தனம்/ ஏன்/ என்னை/

ரக்ஷிஞ்சுபட்ல/ நீகு/-இந்த/ ஸ்ரீ/ (ராம)
காப்பதென்றால்/ உனக்கு/ இத்தனை/ ஸ்ரீ/ ராமா...


அனுபல்லவி
ஸோம/-அர்க/ லோசன/ ஸுகு3ண/
மதி/ பரிதி/ கண்களோனே/ நற்குணத்தோனே/

ஸுத்ராம/-ஆது3லு/-எல்ல/ நவ்வரா/ (ராம)
இந்திரன்/ முதலான/ யாவரும்/ நகைப்பரன்றோ/


சரணம்
சரணம் 1
1ரணு/-அனுகொன்ன/ காக/-அஸுருனி/ ராவணுனி/
தஞ்சம்/ என்ற/ காக்கை/ அசுரனை/ இராவணனின்/

ஸோத3ருனி/ ப்3ரோவ லேதா3/ ஸரகு3ன/ கரினி/ காசின/ ஸ்ரீ/ (ராம)
சோதரனை/ காக்கவில்லையா/ உடனே/ கரியை/ காத்த/ ஸ்ரீ/ ராமா...


சரணம் 2
3தி/ லேனி/ வேள/ த்3ரௌபதி3/ வேக3மே/ க்ரு2ஷ்ணா/-அன/
போக்கு/ அற்ற/ வேளை/ துரோபதை/ விரைவாக/ 'கண்ணா'/ யென

அதி/ ப்ரேமதோ/ வேஞ்சேஸின/ மதி/ நேடு3/-எந்து3/ போயெனோ/ (ராம)
மிக்கு/ அன்புடன்/ எழுந்தருளிய/ உள்ளம்/ இன்று/ எங்கு/ போனதோ/


சரணம் 3
டே33கை/ மேனு/-ஒஸங்கு3/ ராக4வ/-அன்வயமுன/
பருந்துக்கு/ உடல்/ அளிக்கும்/ இரகு/ குலத்தில்/

பா33/ ஜன்மிஞ்சின/ த்யாக3ராஜ/ நுத/ ஸ்ரீ/ (ராம)
சிறக்க/ தோன்றிய/ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ ஸ்ரீ/ ராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - காகாஸுருனி - காகாசுரன் - காக்கையுருவ அரக்கன் - வால்மீகி ராமாயணம் - ஸுந்தர காண்டம் - அத்தியாயம் 38 நோக்குக.

2 - ராவணுனி ஸோத3ருனி - இராவணனின் சோதரன் - விபீடணன் - வால்மீகி ராமாயணம் - யுத்த காண்டம் - அத்தியாயம் 18 நோக்குக.

3 - த்3ரௌபதி3 - துரோபதை - ஐம்பாண்டவர் இல்லாள் - மகாபாரதம் - மூன்றாவது புத்தகம் - வன பர்வம் - த்3ரௌபதி3 ஹரண பர்வம் - அத்தியாயம் 261 நோக்குக.

5 - டே33கை மேனொஸங்கு3 - பருந்துக்கு உடலளித்த - சிபி - இராமனின் முன்னோர் - வால்மீகி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - அத்தியாயம் 12, (செய்யுள் 43) மற்றும் யுத்த காண்டம் - அத்தியாயம் 18 (செய்யுள் 24-25) நோக்குக.
மகாபாரதத்திலும் இக்கதை காணப்படுகின்றது - சிபியும் பருந்தும்-1; சிபியும் பருந்தும்-2. இக்கதையின் சீன, ஜப்பானிய மாற்றங்கள்

Top

விளக்கம்
4 - வேக3மே - விரைவாக - இச்சொல் தோன்றும் இடத்தை நோக்கில், துரோபதையை குறிக்கவேண்டும். ஆனால் இத்தருணத்தில் (context), 'விரைவாக' துரோபதையின் மானத்தைக் காத்த இறைவனுக்கு மிக்கு பொருந்தும்.

கரியைக் காத்த - கஜேந்திரனை மீட்டது

Top


Updated on 22 Jan 2009

No comments: