Showing posts with label Deva Gandhari Raga. Show all posts
Showing posts with label Deva Gandhari Raga. Show all posts

Wednesday, December 23, 2009

தியாகராஜ கிருதி - க்ஷீர ஸாக3ர ஸ1யன - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Kshira Saagara Sayana - Raga Deva Gandhari

பல்லவி
க்ஷீர ஸாக3ர ஸ1யன நன்னு சிந்தல பெட்ட வலெனா ராம

அனுபல்லவி
1வாரண ராஜுனு ப்3ரோவனு வேக3மே வச்சினதி3 வின்னானுரா ராம (க்ஷீ)

சரணம்
2நாரீ மணிகி சீரலிச்சினதி3 நாடே3 நே 3வின்னானுரா
தீ4ருடௌ3 4ராம தா3ஸுனி ப3ந்த4மு தீர்சினதி3 3வின்னானுரா
நீரஜாக்ஷிகை நீரதி4 தா3டின நீ கீர்தினி 3வின்னானுரா
தாரக நாம த்யாக3ராஜ நுத 53யதோனேலுகோரா ராம (க்ஷீ)


பொருள் - சுருக்கம்
பாற்கடற்றுயில்வோனே! இராமா! தாரக நாமத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • என்னைக் கவலையில் இருத்த வேணுமோ?
    • வாரண அரசனைக் காக்க, வேகமாய் வந்ததனைக் கேட்டேனய்யா
    • பெண்மணிக்குச் சேலைகளளித்ததனை, அன்றே நான் கேட்டேனய்யா;
    • தீரனாகிய இராம தாசனின் கைதினைத் தீர்த்ததனைக் கேட்டேனய்யா;
    • கமலக் கண்ணாளுக்காக கடலைத் தாண்டிய உனது புகழைக் கேட்டேனய்யா;

  • தயையுடன் ஆள்வாயய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீர/ ஸாக3ர/ ஸ1யன/ நன்னு/ சிந்தல/ பெட்ட/ வலெனா/ ராம/
பால்/ கடல்/ துயில்வோனே/ என்னை/ கவலையில்/ இருத்த/ வேணுமோ/ இராமா/


அனுபல்லவி
வாரண/ ராஜுனு/ ப்3ரோவனு/ வேக3மே/ வச்சினதி3/ வின்னானுரா/ ராம/ (க்ஷீ)
வாரண/ அரசனை/ காக்க/ வேகமாய்/ வந்ததனை/ கேட்டேனய்யா/ இராமா/


சரணம்
நாரீ/ மணிகி/ சீரலு/-இச்சினதி3/ நாடே3/ நே/ வின்னானுரா/
பெண்/ மணிக்கு/ சேலைகள்/ அளித்ததனை/ அன்றே/ நான்/ கேட்டேனய்யா/

தீ4ருடௌ3/ ராம/ தா3ஸுனி/ ப3ந்த4மு/ தீர்சினதி3/ வின்னானுரா/
தீரனாகிய/ இராம/ தாசனின்/ கைதினை/ தீர்த்ததனை/ கேட்டேனய்யா/

நீரஜ/-அக்ஷிகை/ நீரதி4/ தா3டின/ நீ/ கீர்தினி/ வின்னானுரா/
கமல/ கண்ணாளுக்காக/ கடலை/ தாண்டிய/ உனது/ புகழை/ கேட்டேனய்யா/

தாரக/ நாம/ த்யாக3ராஜ/ நுத/ த3யதோனு/-ஏலுகோரா/ ராம/ (க்ஷீ)
தாரக/ நாமத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தயையுடன்/ ஆள்வாயய்யா/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - வின்னானுரா - வின்னானுரா ராம.

5 - ஏலுகோரா - ஏலுகோர : இதற்கு முன் வரும், மூன்று வரிகளிலும் உள்ள, 'வின்னானுரா' என்று சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'ஏலுகோரா' எற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
1 - வாரண ராஜு - வாரண அரசன் - கஜேந்திரன்

2 - நாரீ மணி - பெண்மணி - துரோபதையினைத் துகிலுரிதல் - பாரதம் (2-வது புத்தகம் - சபா பருவம் - 67-வது அத்தியாயம்).

4 - ராம தா3ஸு - பத்திராசலம் இராம தாசர் - கோல்கொண்டா (பின்னர் ஐதராபாத் நிஜாம்) முஸ்லீம் ஆளுனரிடம் தாசில்தாரராகப் பணி புரிந்தார்

Top

விளக்கம்
கமலக்கண்ணாள் - சீதை
தாரக நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிக்கும் 'இராமா' எனும் நாமம்

Top


Updated on 23 Dec 2009

Tuesday, December 22, 2009

தியாகராஜ கிருதி - ஸீதா வர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Sita Vara - Raga Deva Gandhari

பல்லவி
ஸீதா வர ஸங்கீ3த ஞானமு
தா41வ்ராயவலெரா

அனுபல்லவி
கீ3தாத்3யகி2லோபநிஷத்-ஸார 2பூ4
ஜீவன்முக்துட3கு3டகு
(ஸீ)

சரணம்
3ஆகாஸ11ரீரமு ப்3ரஹ்மமனே
4ஆத்மா ராமுனி தா 5ஸரி ஜூசுசு
லோகாது3லு சின்மயமனு ஸுஸ்வர
லோலுடௌ3 த்யாக3ராஜ ஸன்னுத (ஸீ)


பொருள் - சுருக்கம்
  • (வெட்ட) வெளி மெய், பிரமமெனும், ஆன்மா ராமனை, தான் சரிகண்டுகொண்டு,
  • உலகங்கள் சின்மயமெனும்,
  • இனிய சுரங்களில் திளைக்கும்,
  • தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்ற, சீதை மணாளா!

    • கீதை முதலாக, அனைத்து உபநிடத சாரமாகிய, பூத சீவன் முத்தனாகுதற்கு,
    • இசையறிவு, தாதை எழுதவேண்டுமய்யா;



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸீதா/ வர/ ஸங்கீ3த/ ஞானமு/
    சீதை/ மணாளா/ இசை/ அறிவு/

    தா4த/ வ்ராயவலெரா/
    தாதை/ எழுதவேண்டுமய்யா/


    அனுபல்லவி
    கீ3தா/-ஆதி3/-அகி2ல/-உபநிஷத்/-ஸார/ பூ4த/
    கீதை/ முதலாக/ அனைத்து/ உபநிடத/ சாரமாகிய/ பூத/

    ஜீவன்/-முக்துடு3/-அகு3டகு/ (ஸீ)
    சீவன்/ முத்தன்/ ஆகுதற்கு/ சீதை...


    சரணம்
    ஆகாஸ1/ ஸ1ரீரமு/ ப்3ரஹ்மமு/-அனே/
    (வெட்ட) வெளி/ மெய்/ பிரமம்/ எனும்/

    ஆத்மா/ ராமுனி/ தா/ ஸரி/ ஜூசுசு/
    ஆன்மா/ ராமனை/ தான்/ சரி/ கண்டுகொண்டு/

    லோக-ஆது3லு/ சின்மயமு/-அனு/ ஸுஸ்வர/
    உலகங்கள்/ சின்மயம்/ எனும்/ இனிய சுரங்களில்/

    லோலுடௌ3/ த்யாக3ராஜ/ ஸன்னுத/ (ஸீ)
    திளைக்கும்/ தியாகராசனால்/ சிறக்கப் போற்றப் பெற்ற/ சீதை...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - வ்ராயவலெரா - வ்ராயவலெரா ராம.

    Top

    மேற்கோள்கள்
    2 - பூ4த ஜீவன்முக்துட3கு3டகு - பூத சீவன் முத்தன் - உடலுடன் இருக்கையில் முத்தி பெறுதல் - 'பூ4த ஜீவன்' என்ற சொல்லுக்கு, கீதையில் (15-வது அத்தியாயம், 7-வது செய்யுளில்) கண்ணன் உரைத்த விளக்கத்தினை நோக்கவும் -

    "என்னுடையதோர் பகுதி, உயிரினங்களில், அழிவற்ற சீவனாகி,
    மனம் முதலான ஆறு புலன்களை, தன்னுள் ஈர்த்துக்கொண்டு, பிரகிருதியில் (இயற்கை) உறைகின்றது."
    (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

    தியாகராஜர், தமது 'மோக்ஷமு க3லதா3' என்ற கீர்த்தனையில் 'பக்தியுடன் கூடிய, இசையறிவுடைத்தோர்கள், சீவன் முத்தராகி, வீடு பெறுகின்றனர்' என்று கூறுகின்றார். அதாவது, அப்படிப்பட்ட இசையறிவற்றோர், சீவன் முத்தராகாததனால், வீடு பெறுவதில்லை, என்று பொருளாகும்.

    தியாகராஜர், 'நாதோபாஸனை' எனப்படும் இசைவழிபாட்டினைப் பற்றி மட்டுமே கூறியுள்ளார். சீவன் முத்தராவதற்கு, கீதையில், கண்ணன் கூறிய, 'கரும', 'ஞான', 'பக்தி' மற்றும் 'ராஜ' யோக முறைகளைப் பற்றி விமரிசிக்கவில்லை.

    ஆதி சங்கரர் இயற்றிய 'ஜீவன்-முக்தானந்த லஹரி' நோக்கவும்.

    Top

    விளக்கம்
    1 - வ்ராயவலெரா - பிறந்த குழந்தையின் தலையில், மண்டையோடுகள் சேரும் இடத்தில், தோல் மடிப்புகள், நெளிந்த கோடுகளாகக் காணப்படும். இந்த கோடுகள், தெலுங்கில் 'தல வ்ராத' என்றும், தமிழில் 'தலையெழுத்து' என்றும் வழங்கும். இந்த கோடுகள், ஒருவனுடைய விதியினைக் குறிப்பதாகக் கருதப்படும். நெற்றியிலுள்ள கோடுகளும், அங்ஙனமே விதியினைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.

    3 - ஆகாஸ11ரீரமு ப்3ரஹ்மமு - லோகாது3லு சின்மயமு - வெட்டவெளியே பிரமத்தின் மெய்யாக - உலகங்கள் சின்மயமாக. இதுபற்றி தியாகராஜர் மற்ற கீர்த்தனைகளில் கூறியுள்ளவை -

    • 'சதாசிவ மயமாகிய நாதோங்காரம்' - கிருதி 'ராக3 ஸுதா4 ரஸ'
    • 'நாதத்தினையே தனது உடலாக உடைத்த சங்கரன்' - கிருதி 'நாத3 தனுமனிஸ`ம்'
    • 'பிரணவ நாதம், உயிர்மூச்சு மற்றும் வெம்மையின் சேர்க்கையினால், ஏழு சுரங்களாகித் திகழும்' - கிருதி 'மோக்ஷமு க3லதா3'


    தியாகராஜர் இந்த கீர்த்தனையில் கூறுவதன் சாரம் -
    இசையறிவினால் ஒருவன் சீவன்முத்தனாகலாம். சீவன் முத்தன் என்பது -
    • உள்ளுறை இறைவனை, வெட்டவெளியே மெய்யாக உடைத்த, பரம்பொருளென (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) நேரிடையாக உணர்வதும்,
    • பரம்பொருளின் மெய்யாகிய இவ்வுலகங்கள், சின்மயமானது என்று அறிவதும் ஆகும்.


    4 - ஆத்மா ராமுனி - ஆன்மா ராமன் - உள்ளுறை இறைவன் - 'ஆத்மாராம' என்ற சொல்லுக்கு 'தன்னுள்ளோ, பரம்பொருளினிலோ களிப்புறுதல்' என்று பொருளாகும். இவ்விடத்தில், இந்தக் களிப்பினை, உருவகப்படுத்தி, 'ஆன்மா ராமன்' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

    Top

    5 - ஸரி ஜூசுசு - சரி கண்டுகொண்டு - இச்சொல்லுக்கு 'ஒப்பிட்டு நோக்கல்' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில் கூறப்பட்டுள்ள, 'வெட்டவெளி மெய் பிரமமெனும், ஆன்மா ராமனை சரி கண்டுகொண்டு' என்பது, மேலே கூறிய 'அபரோக்ஷ ஞானம்' எனும் 'தத்-த்வம்-அஸி' (அது நீயென்றறி), 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நானே பிரமம்), 'ப்3ரஹ்மைவாஹம்' (பிரமமே நான்), 'ஸோஹம்' (அவனே நான்), 'ஹம்ஸஸ்ஸோஹம்' (நானே அவன்; அவனே நான்) என்ற மகா வாக்கியங்களின் உட்பொருளினை நேரிடையாக உணர்தலைக் குறிக்கின்றது.

    இந்த கீர்த்தனையில், தியாகராஜர், மனித வாழ்வின் நோக்கமாகிய, 'முக்தி' எனும் தன்னையுணர்தலைப் பற்றி, தான் அவற்றினை நேரிடையாக உணர்ந்து, பாடியுள்ளார். இவற்றிற்கு, அத்தகைய அனுபவமின்றி, வெறும் ஏட்டறிவினால் மட்டுமே, பொருள் கூறுவது, 'ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது' என்ற பழமொழியினை நி்ரூபிப்பதாக அமையும். எனவே, எனது சிற்றறிவுக்கு எட்டியவரை நான் எழுதியவற்றில் தவறுகள் இருந்தால், மன்னிக்க வேண்டுகின்றேன்.

    தாதை - பிரமன்
    வெட்ட வெளி மெய் - வெட்டவெளியே உடலாக
    சின்மயம் - ஞானமயம் அல்லது பிரஞ்ஞை (உணர்வு) மயம்
    இனிய சுரங்கள் - இசையின் ஏழு சுரங்கள்

    Top


    Updated on 23 Dec 2009
  • Monday, December 21, 2009

    தியாகராஜ கிருதி - ஸ்ரீ ரகு4வர கருணாகர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Sri Raghuvara Karunakara - Raga Deva Gandhari

    பல்லவி
    ஸ்ரீ ரகு4வர கருணாகர நீ பத3
    சிந்தனமே ஜீவனமு

    அனுபல்லவி
    வாரண ரக்ஷக ப4க்த ஜனாக4
    நிவாரண ஸன்-ம்ரு2து3 பா4ஷண ஸத்3-கு3ண (ஸ்ரீ)

    சரணம்
    சரணம் 1
    மார மார நுத நா மனவினி
    வினுமா ரமா ரமண மரவகுரா
    ஸுகுமார மா ரஸனமுன நீ நாமமு
    மாரு மாரு பல்கனு த3ய ஸேயுமு (ஸ்ரீ)


    சரணம் 2
    வாரி வாரி மஞ்சிகி தகி3னட்டு
    வாரி வாரி பா4க்3யமுலீவா
    தே3வாரி வாரிதா3னில 11ம்ப3
    ஜீவாரி
    வாரிஜாஸன ஜனக ஹரே (ஸ்ரீ)


    சரணம் 3
    ராஜ ராஜ வந்தி3த பத3 யுக3 தி3
    ராஜ ராஜ நயன பாலிதாமர
    ராஜ ராஜ பூஜித ஸ்ரீ த்யாக3ராஜ
    ராஜ ராக4வ நனு ப்3ரோவுமு (ஸ்ரீ)


    பொருள் - சுருக்கம்
    • இரகுவரா! கருணாகரா!
    • கரியைக் காத்தோனே! தொண்டர்களின் பாவங்களைக் களைவோனே! மென் சொல்லோனே! நற்குணத்தோனே!
    • மாரனை எரித்தோனால் போற்றப் பெற்றோனே! இரமை மணாளா! சுகுமாரா!
    • தேவர் பகைவரெனும் முகிலினை விரட்டும் புயலே! சம்பரனின் உயிர்ப் பகைவனையும் மலரோனையும் ஈன்ற அரியே!
    • பேரரசர்கள் வந்திக்கும் திருவடி இணையோனே! பகலவன், மதி கண்களோனே! அமரர் தலைவனைக் காத்தோனே! அரசர்களால் தொழப்பெற்றோனே! தியாகராசனின் தலைவா! இராகவா!

      • உனது திருவடிச் சிந்தனையே பிழைப்பு;
      • எனது வேண்டுதலைக் கேளுமய்யா;
      • என்னை மறவாதீருமய்யா;
      • எனது நாவினில் உனது நாமம் திரும்பத் திரும்ப உரைக்க தயை புரிவாயய்யா;
      • அவரவர்கள் நற்செயலுக் கேற்றவாறு அவரவர்களின் நற்பயனருள்வதில்லையோ?
      • என்னைக் காப்பாய்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸ்ரீ ரகு4வர/ கருணாகர/ நீ/ பத3/
    ஸ்ரீ ரகுவரா/ கருணாகரா/ உனது/ திருவடி/

    சிந்தனமே/ ஜீவனமு/
    சிந்தனையே/ பிழைப்பு/


    அனுபல்லவி
    வாரண/ ரக்ஷக/ ப4க்த ஜன/-அக4/
    கரியை/ காத்தோனே/ தொண்டர்களின்/ பாவங்களை/

    நிவாரண/ ஸன்-ம்ரு2து3/ பா4ஷண/ ஸத்3-கு3ண/ (ஸ்ரீ)
    களைவோனே/ மென்/ சொல்லோனே/ நற்குணத்தோனே/


    சரணம்
    சரணம் 1
    மார/ மார/ நுத/ நா/ மனவினி/
    மாரனை/ எரித்தோனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ வேண்டுதலை/

    வினுமா/ ரமா/ ரமண/ மரவகுரா/
    கேளுமய்யா/ இரமை/ மணாளா/ (என்னை) மறவாதீருமய்யா/

    ஸுகுமார/ மா/ ரஸனமுன/ நீ/ நாமமு/
    சுகுமாரா/ எனது/ நாவினில்/ உனது/ நாமம்/

    மாரு/ மாரு/ பல்கனு/ த3ய/ ஸேயுமு/ (ஸ்ரீ)
    திரும்ப/ திரும்ப/ உரைக்க/ தயை/ புரிவாயய்யா/


    சரணம் 2
    வாரி வாரி/ மஞ்சிகி/ தகி3னட்டு/
    அவரவர்கள்/ நற்செயலுக்கு/ ஏற்றவாறு/

    வாரி வாரி/ பா4க்3யமுலு/-ஈவா/
    அவரவர்களின்/ நற்பயன்/ அருள்வதில்லையோ/

    தே3வ/-அரி/ வாரித3/-அனில/ ஸ1ம்ப3ர/
    தேவர்/ பகைவரெனும்/ முகிலினை/ (விரட்டும்) புயலே/ சம்பரனின்/

    ஜீவ/-அரி/ வாரிஜ-ஆஸன/ ஜனக/ ஹரே/ (ஸ்ரீ)
    உயிர்/ பகைவனையும்/ மலரோனையும்/ ஈன்ற/ அரியே/


    சரணம் 3
    ராஜ ராஜ/ வந்தி3த/ பத3/ யுக3/ தி3ன ராஜ/
    பேரரசர்கள்/ வந்திக்கும்/ திருவடி/ இணையோனே/ பகலவன்/

    ராஜ/ நயன/ பாலித/-அமர/ ராஜ/
    மதி/ கண்களோனே/ காத்தோனே/ அமரர்/ தலைவனை/

    ராஜ/ பூஜித/ ஸ்ரீ த்யாக3ராஜ/
    அரசர்களால்/ தொழப்பெற்றோனே/ ஸ்ரீ தியாகராசனின்/

    ராஜ/ ராக4வ/ நனு/ ப்3ரோவுமு/ (ஸ்ரீ)
    தலைவா/ இராகவா/ என்னை/ காப்பாய்/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    1 - 1ம்ப3ர ஜீவாரி - சம்பரனின் உயிர்ப் பகைவன் - காமனின் மறுபிறப்பு எனப்படும் பிரத்தியும்நன் - கண்ணனின் மகன்

    விளக்கம்
    இப்பாடல் சில புத்தகங்களில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

    மாரனை எரித்தோன் - சிவன்
    மலரோன் - பிரமன்
    அமரர் தலைவன் - இந்திரன்

    Top


    Updated on 21 Dec 2009

    Sunday, December 20, 2009

    தியாகராஜ கிருதி - ஸ்ரீ துளஸம்ம - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Sri Tulasamma - Raga Deva Gandhari

    பல்லவி
    ஸ்ரீ துளஸம்ம மாயிண்ட நெலகொனவம்ம
    ஈ மஹினி நீ ஸமானமெவரம்ம ப3ங்கா3ரு பொ3ம்ம

    சரணம்
    சரணம் 1
    1கரகு3 ஸுவர்ணபு ஸொம்முலு பெட்டி
    ஸரிகெ3 சீர முத்3து3 குரியக3 கட்டி
    கருண ஜூசி ஸிருலனு 2ஒடி3 கட்டி
    வரது3னி கரமுனனு பட்டி (ஸ்ரீ)


    சரணம் 2
    உரமுன முத்யபு ஸருலஸியாட3
    ஸுர தருணுலு நின்னு கனி கொனியாட3
    வர முனுலஷ்ட தி3கீ3ஸு1லு வேட3
    வரது3டு3 நின்னு ப்ரேம ஜூட3 (ஸ்ரீ)


    சரணம் 3
    3மருவக பாரிஜாத ஸரோஜ
    குருவக வகுள ஸுக3ந்த4 ராஜ
    வர ஸுமமுலசே த்யாக3ராஜ
    4வரதே3 நினு பூஜ ஸேது (ஸ்ரீ)


    பொருள் - சுருக்கம்
    அம்மா துளசி! பொற்பதுமையே! தியாகராசனுக்கு அருள்பவளே!

    • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;
    • இப்புவியினில் உனக்கீடு எவரம்மா?

      • உருக்கிய தங்க நகைகளணிந்து,
      • சரிகை சேலையினை எழில் வழியக் கட்டி,
      • கருணை கூர்ந்து, சீர் சிறப்புகளினை தலைப்பினில் முடிந்து,
      • வரதனைக் கைப்பற்றி,

    • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;

      • மார்பினில் முத்துச் சரங்கள் அசைந்தாட,
      • வான்மடந்தையர் உன்னைக் கண்டு புகழ்பாட,
      • உயர் முனிவர்களும், எண்டிசைப்பாலரும் வேண்ட,
      • வரதன் உன்னைக் காதலுடன் நோக்க,

    • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா;

      • மருவகம், பவளமல்லி, தாமரை, மருதாணி, மகுலம், சம்பங்கி, ஆகிய தூய மலர்கொடு, உன்னைத் தொழுவேன்;

    • எமதில்லத்தினில் நிலை பெறுவாயம்மா.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஸ்ரீ துளஸம்ம/ மா/-இண்ட/ நெலகொனு/-அம்ம/
    ஸ்ரீ துளசி அம்மா/ எமது/ இல்லத்தினில்/ நிலை பெறுவாய்/ அம்மா/

    ஈ/ மஹினி/ நீ/ ஸமானமு/-எவரு/-அம்ம/ ப3ங்கா3ரு/ பொ3ம்ம/
    இந்த/ புவியினில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ பொன்/ பதுமையே/


    சரணம்
    சரணம் 1
    கரகு3/ ஸுவர்ணபு/ ஸொம்முலு/ பெட்டி/
    உருக்கிய/ தங்க/ நகைகள்/ அணிந்து/

    ஸரிகெ3/ சீர/ முத்3து3/ குரியக3/ கட்டி/
    சரிகை/ சேலையினை/ எழில்/ வழிய/ கட்டி/

    கருண/ ஜூசி/ ஸிருலனு/ ஒடி3/ கட்டி/
    கருணை/ கூர்ந்து/ சீர் சிறப்புகளினை/ தலைப்பினில்/ முடிந்து/

    வரது3னி/ கரமுனனு/ பட்டி/ (ஸ்ரீ)
    வரதனை/ கை/ பற்றி/ அம்மா துளசி...


    சரணம் 2
    உரமுன/ முத்யபு/ ஸருலு/-அஸியாட3/
    மார்பினில்/ முத்து/ சரங்கள்/ அசைந்தாட/

    ஸுர/ தருணுலு/ நின்னு/ கனி/ கொனியாட3/
    வான்/ மடந்தையர்/ உன்னை/ கண்டு/ புகழ்பாட/

    வர/ முனுலு/-அஷ்ட/ தி3க்/-ஈஸு1லு/ வேட3/
    உயர்/ முனிவர்களும்/ எண்/ திசை/ பாலரும்/ வேண்ட/

    வரது3டு3/ நின்னு/ ப்ரேம/ ஜூட3/ (ஸ்ரீ)
    வரதன்/ உன்னை/ காதலுடன்/ நோக்க/ அம்மா துளசி...


    சரணம் 3
    மருவக/ பாரிஜாத/ ஸரோஜ/
    மருவகம்/ பவளமல்லி/ தாமரை/

    குருவக/ வகுள/ ஸுக3ந்த4 ராஜ/
    மருதாணி/ மகுலம்/ சம்பங்கி/

    வர/ ஸுமமுலசே/ த்யாக3ராஜ/
    (ஆகிய) தூய/ மலர்கொடு/ தியாகராசனுக்கு/

    வரதே3/ நினு/ பூஜ/ ஸேது/ (ஸ்ரீ)
    அருள்பவளே/ உன்னை/ தொழுவேன்/ அம்மா துளசி...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - கரகு3 - கரகு : தெலுங்கில் இவையிரண்டும் வெவ்வேறு சொற்களாகும். இவ்விடத்தில் 'கரகு3' என்ற சொல்லே பொருந்தும்.

    3 - மருவக - மரவக.

    4 - வரதே3 - வரத3 : இவ்விடத்தில் 'வரதே3' என்ற சொல் அதிகம் பொருந்தும்.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    2 - ஒடி3 கட்டி - தலைப்பினில் முடிந்து. சுமங்கலிப் பெண்கள், தங்களுக்கு அளிக்கப்படும் கௌரவப் பொருட்களை, சேலைத் தலைப்பினில் முடிந்து எடுத்துச் செல்வது பரம்பரையான வழக்கமாகும்.

    மகுலம் - மகிழம்பூ

    Top


    Updated on 20 Dec 2009

    Saturday, December 19, 2009

    தியாகராஜ கிருதி - வின ராதா3 - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Vina Raada - Raga Deva Gandhari

    பல்லவி
    வின ராதா3 1நா மனவி

    அனுபல்லவி
    2கனகாங்க3 காவேடி ரங்க3 ஸ்ரீ
    காந்த காந்தலெல்ல காமிஞ்சி 3பிலிசிதே (வி)

    சரணம்
    சரணம் 1
    தேஜினெக்கி பா33 தெருவுன ராக
    4ராஜ ஸதுலு ஜூசி ரம்மனி 3பிலிசிதே (வி)


    சரணம் 2
    பா43தே4ய வைபோ43 ரங்க3 ஸ்ரீ
    த்யாக3ராஜ நுத தருணுலு 3பிலிசிதே (வி)


    பொருள் - சுருக்கம்
    பொன்னங்கத்தோனே! காவேரியின் அரங்கா! இலக்குமி மணாளா! எமது பேறாகிய, பெருஞ்சிறப்புடை, அரங்கா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • கேளலாகாதா, எனது விண்ணப்பத்தினை?
    • பெண்கள் யாவரும், இச்சித்து அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?
    • குதிரையேறி, அழகாக, தெருவினில் (நீ) வர, அரச மடந்தையர் கண்டு, வாருமென்று அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?
    • வனிதையர் அழைத்தால், கேளலாகாதா, எமது விண்ணப்பத்தினை?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    வின/ ராதா3/ நா/ மனவி/
    கேளல்/ ஆகாதா/ எனது/ விண்ணப்பத்தினை/


    அனுபல்லவி
    கனக/-அங்க3/ காவேடி/ ரங்க3/ ஸ்ரீ/
    பொன்/ அங்கத்தோனே/ காவேரியின்/ அரங்கா/ இலக்குமி/

    காந்த/ காந்தலு/-எல்ல/ காமிஞ்சி/ பிலிசிதே/ (வி)
    மணாளா/ பெண்கள்/ யாவரும்/ இச்சித்து/ அழைத்தால்/ கேளலாகாதா...


    சரணம்
    சரணம் 1
    தேஜினி/-எக்கி/ பா33/ தெருவுன/ ராக/
    குதிரை/ ஏறி/ அழகாக/ தெருவினில்/ (நீ) வர/

    ராஜ/ ஸதுலு/ ஜூசி/ ரம்மு/-அனி/ பிலிசிதே/ (வி)
    அரச/ மடந்தையர்/ கண்டு/ வாரும்/ என்று/ அழைத்தால்/ கேளலாகாதா...


    சரணம் 2
    பா43தே4ய/ வைபோ43/ ரங்க3/ ஸ்ரீ/
    எமது/ பேறாகிய/ பெருஞ்சிறப்புடை/ அரங்கா/ ஸ்ரீ/

    த்யாக3ராஜ/ நுத/ தருணுலு/ பிலிசிதே/ (வி)
    தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ வனிதையர்/ அழைத்தால்/ கேளலாகாதா...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - மனவி - மனவினி.

    சில புத்தகங்களில், அனுபல்லவியை முதலாவது சரணமாகக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த புத்தகங்களில் மூன்று சரணங்கள் உள்ளன.

    3 - பிலிசிதே - பிலசிதே : 'பிலிசிதே' என்பதே சரியான சொல் என்று கருதுகின்றேன்.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    1 - நா மனவி - 'நா' (எனது) என்ற சொல் ஒருமையாகும். ஆனால், அனுபல்லவியும் சரணங்களும் பன்மையில் உள்ளன. எனவே, அனுபல்லவி மற்றும் சரணங்களை பல்லவியுடன் இணைக்கையில், பன்மையில் 'எமது' என்று கொள்ளப்பட்டது.

    2 - கனகாங்க3 - பொன்னங்கத்தோனே. முதலாவது சரணத்தினில், 'குதிரையேறி தெருவினில் வர' என்று தியாகராஜர் கூறுகின்றார். எனவே, இச்சொல் (பொன்னங்கத்தோனே) உற்சவ மூர்த்தியினைக் குறிக்கும்.

    4 - ராஜ ஸதுலு - அரச மடந்தையர். இந்த கீர்த்தனை 'நாயகி பாவனை'யில் உள்ளது. எனவே, இச்சொல் (அரச மடந்தையர்), பெரும் தொண்டர்களை (பாகவதர்களை) குறிக்கும். அங்ஙனமே, அனுபல்லவி மற்றும் 2-வது சரணத்தினில், 'மடந்தையர்' மற்றும் 'வனிதையர்' என்ற சொற்களும் தொண்டர்களையே குறிக்கும்.

    Top


    Updated on 19 Dec 2009

    Friday, December 18, 2009

    தியாகராஜ கிருதி - மரவகரா - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Maravakara - Raga Deva Gandhari

    பல்லவி
    மரவகரா நவ மன்மத2 ரூபுனி

    சரணம்
    சரணம் 1
    நீடோ மெல்லனி மாடோ கன்னுல
    தேடோ மரி 1வலெ-வாடோ மனஸா (ம)


    சரணம் 2
    குலுகோ 2பாவல கி3லுகோ கபுரபு
    பலுகோ செக்குல தளுகோ மனஸா (ம)


    சரணம் 3
    வில்லோ க4ண்டல க4ல்லோ ஸுமமுல
    இல்லோ ஸேவபு கொல்லோ மனஸா (ம)


    சரணம் 4
    கேலோவுங்க3ராலோ 33ங்கா3(ரு)ய்யாலோ
    செந்தனில்லாலோ மனஸா (ம)


    சரணம் 5
    1ரமோ கனகாம்ப3ரமோ ஸ்ரீ-கர
    உரமோ ப்3ரோசு து3ரமோ மனஸா (ம)


    சரணம் 6
    ஆ-ஜன்மமு 4ஹ்ரு2த்3ராஜீவமுதோ
    பூஜிந்துர த்யாக3ராஜ நுதுனி மனஸா (ம)


    பொருள் - சுருக்கம்
    ஏ மனமே!
    • மறக்காதேயடா, இள மன்மத உருவத்தோனை;
      • ஒய்யாரமோ!
      • மென்மையான சொல்லோ!
      • கண்களின் தெளிவோ!
      • மேலாடையின் ஒயிலோ!

      • குலுக்கோ!
      • காலணிகளின் கிலுகிலுப்போ!
      • கற்பூரம் நிகர் (மணக்கும்) உரையோ!
      • கன்னங்களின் மினுக்கோ!

      • வில்லோ!
      • (வில்லின்) மணியோசையோ!
      • மலர்களின் இல்லமோ!
      • சேவைகளின் கொள்ளையோ!

      • கைகளோ!
      • மோதிரங்களோ!
      • பொன்னூஞ்சலோ!
      • உடனுறை இல்லாளோ!

      • அம்புகளோ!
      • பொன்னாடைகளோ!
      • சீரருளும் (இலக்குமியுறை) மார்போ!
      • காக்கும் ஊக்கமோ!


    • வாழ்நாள் முழுதும், இதயக் கமலம்கொடு வழிபடுவேன், தியாகராசனால் போற்றப் பெற்றோனை.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    மரவகரா/ நவ/ மன்மத2/ ரூபுனி/
    மறக்காதேயடா/ இள/ மன்மத/ உருவத்தோனை/


    சரணம்
    சரணம் 1
    நீடோ/ மெல்லனி/ மாடோ/ கன்னுல/
    ஒய்யாரமோ/ மென்மையான/ சொல்லோ/ கண்களின்/

    தேடோ/ மரி/ வலெ/-வாடோ/ மனஸா/ (ம)
    தெளிவோ/ அன்றியும்/ மேலாடையின்/ ஒயிலோ/ ஏ மனமே/...


    சரணம் 2
    குலுகோ/ பாவல/ கி3லுகோ/ கபுரபு/
    குலுக்கோ/ காலணிகளின்/ கிலுகிலுப்போ/ கற்பூரம் நிகர்/

    பலுகோ/ செக்குல/ தளுகோ/ மனஸா/ (ம)
    (மணக்கும்) உரையோ/ கன்னங்களின்/ மினுக்கோ/ ஏ மனமே/...


    சரணம் 3
    வில்லோ/ க4ண்டல/ க4ல்லோ/ ஸுமமுல/
    வில்லோ/ (வில்லின்) மணி/ ஓசையோ/ மலர்களின்/

    இல்லோ/ ஸேவபு/ கொல்லோ/ மனஸா/ (ம)
    இல்லமோ/ சேவைகளின்/ கொள்ளையோ/ ஏ மனமே/...


    சரணம் 4
    கேலோ/-உங்க3ராலோ/ ப3ங்கா3ரு/-உய்யாலோ/
    கைகளோ/ மோதிரங்களோ/ பொன்/ ஊஞ்சலோ/

    செந்த/-இல்லாலோ/ மனஸா/ (ம)
    உடனுறை/ இல்லாளோ/ ஏ மனமே/...


    சரணம் 5
    1ரமோ/ கனக/-அம்ப3ரமோ/ ஸ்ரீ/-கர/
    அம்புகளோ/ பொன்/ ஆடைகளோ/ சீர்/ அருளும்/

    உரமோ/ ப்3ரோசு/ து3ரமோ/ மனஸா/ (ம)
    (இலக்குமியுறை) மார்போ/ காக்கும்/ ஊக்கமோ/ ஏ மனமே/...


    சரணம் 6
    ஆ-ஜன்மமு/ ஹ்ரு2த்/-ராஜீவமுதோ/
    வாழ்நாள் முழுதும்/ இதய/ கமலம்கொடு/

    பூஜிந்துர/ த்யாக3ராஜ/ நுதுனி/ மனஸா/ (ம)
    வழிபடுவேன்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ ஏ மனமே/...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - வலெ-வாடோ - வலுவாடோ : தெலுங்கு அகராதியின்படி 'வலெ-வாடு' அல்லது 'வல்லெ-வாடு' என்பவைதான் சரியான சொற்களாகும். எனவே 'வலெ-வாடோ' ஏற்கப்பட்டது.

    2 - பாவல - பாவுல : தெலுங்கு அகராதியின்படி 'பாவ' என்பதுதான் சரியான சொல்லாகும். எனவே 'பாவல' ஏற்கப்பட்டது.

    3 - 3ங்கா3(ரு)ய்யாலோ - ப3ங்க3(ரு)ய்யாலோ.

    Top

    மேற்கோள்கள்
    4 - ஹ்ரு2த்3ராஜீவமுதோ - இதயக் கமலம்கொடு. ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (செய்யுள் 9) கூறப்படுவது -

    "ஆழந்த தாமரைக்குளங்களுக்கும், மக்களற்ற கொடிய காடுகளுக்கும்,
    விரிந்த மலைகளுக்கும், மலர்களுக்காகத் திரிவர் முட்டாட்கள்;
    உமை மணாளா! உனக்குத் தமதோர் இதயக் கமலத்தினை சமர்ப்பித்து,
    சுகமாக இருக்க, அந்தோ! அவர் அறியமாட்டார் ஏனோ?"
    (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

    Top

    விளக்கம்



    Updated on 19 Dec 2009

    Wednesday, December 16, 2009

    தியாகராஜ கிருதி - பாலய ஸ்ரீ ரகு4வீர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Paalaya Sri Raghuvira - Raga Deva Gandhari

    பல்லவி
    பாலய ஸ்ரீ ரகு4வீர
    ஸு-க்ரு2பாலய ராஜ குமார மாம் (பா)

    சரணம்
    சரணம் 1
    தாராதீ41 வத3ன ராம
    1தாராதீ313மன மாம் (பா)


    சரணம் 2
    ஹிம கர கோடி நிபா4ங்க3
    ஏஹி 2மகர ஹரண நிஸ்ஸங்க3 மாம் (பா)


    சரணம் 3
    ராக்ஷஸ ஜன க3ண தூ3
    3மகராக்ஷ ஸமர ஹர ஸூ1ர மாம் (பா)


    சரணம் 4
    ஸ்ரீ த31ரத2 குல ஸ1ரண ராம
    ஸ்ரீ-த3 41ரதி4 மத3 ஹரண மாம் (பா)


    சரணம் 5
    கு-மனோ ஜன க3ண பீ4ம ராம
    ஸு-மனோ வாரிதி4 ஸோம மாம் (பா)


    சரணம் 6
    5ஜய விஜயாக4 விராம
    6ரவிஜ யம லாலித நாம மாம் (பா)


    சரணம் 7
    த்யாக3ராஜ நுத சரண
    7நித்யாக3 ராஜ த4 ஸுகு3ண மாம் (பா)


    பொருள் - சுருக்கம்
    • இரகுவீரா! நற்கருணையின் உறைவிடமே! இளவரசே!
    • தாராதிபன் வதனத்தோனே, இராமா! தாரை முதலானோர் மணாளனை வதைத்தோனே!
    • மதிகள் கோடி நிகருடலோனே! முதலையை வதைத்தோனே! பற்றற்றோனே!
    • அரக்கர் கூட்டத்தினின்றும் விலகியோனே! மகராட்சனைப் போரில் வென்ற சூரனே!
    • தசரதன் குலத்தினைக் காப்போனே, இராமா! சீரருள்வோனே! கடலின் செருக்கினை அடக்கியோனே!
    • தீய உள்ளத்தோருக்கு அச்சம் விளைவிப்போனே, இராமா! நல்லுள்ளத்தோர் கடலின் மதியே!
    • ஜய, விஜயர்களின் பாவங்களைப் போக்கியவனே! சுக்கிரீவன் மற்றும் நமனால் மதிக்கப்பெற்றப் பெயரோனே!
    • தியாகராசனால் போற்றப் பெற்ற திருவடியோனே! அழிவற்றோனே! மலையரசனைச் சுமந்தோனே!

      • என்னைக்காப்பாய்.
      • வாராய்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    பாலய/ ஸ்ரீ ரகு4வீர/
    காப்பாய்/ ஸ்ரீ ரகுவீரா/

    ஸு-க்ரு2பா/-ஆலய/ ராஜ குமார/ மாம்/ (பா)
    நற்கருணையின்/ உறைவிடமே/ இளவரசே/ என்னை/ காப்பாய்...


    சரணம்
    சரணம் 1
    தாரா/-அதி4-ஈஸ1/ வத3ன/ ராம/
    தாரா/ அதிபன்/ வதனத்தோனே/ இராமா/

    தாரா/-அதி3/-ஈஸ1/ த3மன/ மாம்/ (பா)
    தாரை/ முதலானோர்/ மணாளனை/ வதைத்தோனே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 2
    ஹிம கர/ கோடி/ நிப4/-அங்க3/
    மதிகள்/ கோடி/ நிகர்/ உடலோனே/

    ஏஹி/ மகர/ ஹரண/ நிஸ்-ஸங்க3/ மாம்/ (பா)
    வாராய்/ முதலையை/ வதைத்தோனே/ பற்றற்றோனே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 3
    ராக்ஷஸ/ ஜன க3ண/ தூ3ர/
    அரக்கர்/ கூட்டத்தினின்றும்/ விலகியோனே/

    மகர-அக்ஷ/ ஸமர/ ஹர/ ஸூ1ர/ மாம்/ (பா)
    மகராட்சனை/ போரில்/ வென்ற/ சூரனே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 4
    ஸ்ரீ த31ரத2/ குல/ ஸ1ரண/ ராம/
    ஸ்ரீ தசரதன்/ குலத்தினை/ காப்போனே/ இராமா/

    ஸ்ரீ/-த3/ ஸ1ரதி4/ மத3/ ஹரண/ மாம்/ (பா)
    சீ்ர்/ அருள்வோனே/ கடலின்/ செருக்கினை/ அடக்கியோனே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 5
    கு-மனோ ஜன க3ண/ பீ4ம/ ராம/
    தீய உள்ளத்தோருக்கு/ அச்சம் விளைவிப்போனே/ இராமா/

    ஸு-மனோ/ வாரிதி4/ ஸோம/ மாம்/ (பா)
    நல்லுள்ளத்தோர்/ கடலின்/ மதியே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 6
    ஜய/ விஜய/-அக4/ விராம/
    ஜய/ விஜயர்களின்/ பாவங்களை/ போக்கியவனே/

    ரவிஜ/ யம/ லாலித/ நாம/ மாம்/ (பா)
    சுக்கிரீவன்/ மற்றும் நமனால்/ மதிக்கப்பெற்ற/ பெயரோனே/ என்னை/ காப்பாய்...


    சரணம் 7
    த்யாக3ராஜ/ நுத/ சரண/
    தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ திருவடியோனே/

    நித்ய/-அக3/ ராஜ/ த4ர/ ஸுகு3ண/ மாம்/ (பா)
    அழிவற்றோனே/ மலை/ யரசனை/ சுமந்தோனே/ என்னை/ காப்பாய்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    சில புத்தகங்களில் சரணங்கள் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

    மேற்கோள்கள்
    1 - தாரா - தாரை - வாலியின் மனைவி.

    2 - மகர - முதலை - கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து அரி விடுவித்தல் - இதனை சங்கு அரக்கனென்றும் கொள்ளலாம். 'பாஞ்சஜன' என்ற சங்கு அரக்கனை கண்ணன் வதைத்த கதை. பாகவத புராணம், 10-வது புத்தகம், 45-வது அத்தியாயம் மற்றும் விஷ்ணு புராணம், 5-வது புத்தகம், 21-வது அத்தியாயம் நோக்கவும்.

    3 - மகராக்ஷ - மகராட்சன் - தண்டகாரண்யத்தில், இராமனால் கொல்லப்பட்ட 'கரன்' என்ற அரக்கனின் மகன் - இவன் இலங்கைப் போரில் இராமனால் கொல்லப்பட்டான்.

    Top

    4 - 1ரதி4 மத3 ஹரண - இலங்கைக்கு செல்ல, கடலின் மீது வாராவதி அமைக்க எண்ணி, இராமன், கடலரசனை வேண்டினான். ஆனால், கடலரசன் கவனியாது இருந்ததனால், சினமுற்று, இராமன், கடலரசன் மீது, பிரமாத்திரத்தினை ஏவினான். உடனே, கடலரசன் புகலடைந்து, வாராவதி கட்ட உதவினான்.

    5 - ஜய விஜய - ஜய, விஜயர்கள் - வைகுண்டத்தின் காவற்காரர்கள். இவர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு, தானவர்களாகப் பிறக்க நேர்ந்தது - இரண்யாட்சன் - இரணியகசிபு, இராவணன் - கும்பகர்ணன் மற்றும் கம்ஸன் - சிசுபாலன் என. அவர்கள் யாவரையும், விஷ்ணு சாபத்தினின்றும் விடுவிப்பதெற்கென்றே அவதரித்தார்.

    7 - அக3 ராஜ த4 - மலையரசன் - மந்தர மலை. பாற்கடலினின்று, அமிழ்து பெறவேண்டி, மந்தரமலையை மத்தாக்கி, தேவர்களும், தானவர்களும் கடைந்தனர். அப்போது, மந்தர மலை கடலில் மூழ்க, விஷ்ணு, ஆமையாக அவதரித்து, மந்தர மலையைச் சுமந்தார்.

    Top

    விளக்கம்
    6 - ரவிஜ யம லாலித நாம - சுக்கிரீவன் மற்றும் யமன் இருவருமே சூரியனின் புதல்வர்கள். தியாகராஜர், தன்னுடை கீர்த்தனைகளில், 'ரவிஜ' என்ற சொல்லினை சுக்கிரீவனைக் குறிக்க பயன்படுத்துகின்றார். அதனால் இதனை 'சுக்கிரீவன்' மற்றும் 'நமன்' என்றோ அல்லது 'சூரியன்மகன் நமன்' என்றோ கொள்ளலாம்.

    தாராதிபன் - மதி

    Top


    Updated on 17 Dec 2009

    Tuesday, December 15, 2009

    தியாகராஜ கிருதி - நா மொராலகிம்ப - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Naa Moralakimpa - Raga Deva Gandhari

    பல்லவி
    நா மொராலகிம்பவேமி ஸ்ரீ ராம

    அனுபல்லவி
    நீ மஹிமலு வினி வினி நேனெந்தோ நெர நம்மிதி (நா)

    சரணம்
    சரணம் 1
    ஒக வன சருட3ல நாடு3 ஸஹோத3ர பா34லு
    தாளக மொரலிட3 ப்3ரோசிதிவி தனகு 1ஸு-க்3ரீவமு காதா3 (நா)


    சரணம் 2
    ஒக நிஸி1 சருட3ன்ன மாடலோர்வக 21ரணனகா3
    ஸு1க வசனமுலகு
    நாது3 பலுகுலன்னி 3விபீ4ஷணமா (நா)


    சரணம் 3
    பூஸலு கூர்சினயடுவலெ பூனி ப4ஜிஞ்சக3
    ஆஸலு க3ல த்யாக3ராஜு தா3ஸுட3னுசு தெலிஸி (நா)


    பொருள் - சுருக்கம்
    இராமா!
    • எனது முறையீட்டினைக் கேளாயேனோ?
    • உனது மகிமைகளைக் கேட்டுக் கேட்டு நான் முழுதும் நம்பினேன்;

      • ஒரு வனவாசி, அன்று சோதரனின் தொல்லைகளைத் தாளாது முறையிட, காத்தனை;
      • எனக்கும் இனிய தொண்டையன்றோ?

      • ஒரு இரவில் சரிப்போன், அண்ணனின் சொறகளைத் தாளாது, புகலென,
      • அந்த கிளி சொற்களுக்கு, எனது மொழிகள் யாவும் கத்தலோ?


    • மணிகளைக் கோர்த்தது போன்று, விரதம் பூண்டு பஜனை செய்ய,
    • ஆசைகளுடைய, தியாகராசன் தொண்டனெனத் தெரிந்தும்,
    • எனது முறையீட்டினைக் கேளாயேனோ?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    நா/ மொர/-ஆலகிம்பவு/-ஏமி/ ஸ்ரீ ராம/
    எனது/ முறையீட்டினை/ கேளாய்/ ஏனோ/ ஸ்ரீ ராமா/


    அனுபல்லவி
    நீ/ மஹிமலு/ வினி/ வினி/ நேனு/-எந்தோ நெர/ நம்மிதி/ (நா)
    உனது/ மகிமைகளை/ கேட்டு/ கேட்டு/ நான்/ முழுதும்/ நம்பினேன்/


    சரணம்
    சரணம் 1
    ஒக/ வன/ சருடு3/-அல நாடு3/ ஸஹோத3ர/ பா34லு/
    ஒரு/ வன/ வாசி/ அன்று/ சோதரனின்/ தொல்லைகளை/

    தாளக/ மொரலு-இட3/ ப்3ரோசிதிவி/ தனகு/ ஸு-க்3ரீவமு/ காதா3/ (நா)
    தாளாது/ முறையிட/ காத்தனை/ எனக்கும்/ இனிய தொண்டை/ அன்றோ/


    சரணம் 2
    ஒக/ நிஸி1/ சருடு3/-அன்ன/ மாடலு/-ஓர்வக/ ஸ1ரணு/-அனக3/-ஆ/
    ஒரு/ இரவில்/ சரிப்போன்/ அண்ணனின்/ சொறகளை/ தாளாது/ புகல்/ என/ அந்த/

    ஸு1க/ வசனமுலகு/ நாது3/ பலுகுலு/-அன்னி/ விபீ4ஷணமா/ (நா)
    கிளி/ சொற்களுக்கு/ எனது/ மொழிகள்/ யாவும்/ கத்தலோ/


    சரணம் 3
    பூஸலு/ கூர்சின/-அடுவலெ/ பூனி/ ப4ஜிஞ்சக3/
    மணிகளை/ கோர்த்தது/ போன்று/ விரதம் பூண்டு/ பஜனை செய்ய/

    ஆஸலு/ க3ல/ த்யாக3ராஜு/ தா3ஸுடு3/-அனுசு/ தெலிஸி/ (நா)
    ஆசைகள்/ உடைய/ தியாகராசன்/ தொண்டன்/ என/ தெரிந்தும்/ எனது...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    2 - 1ரணனகா3 ஸு1க வசனமுலகு - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலகு3 - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலோ - ஸ1ரணனகா3 ஸு1க வசனமுலோலவி : 'வசனமுலகு3' என்பது சரியானால் 'கிளிபோன்ற எனது மொழிகள் யாவும் கத்தலோ?' என மொழிபெயர்க்கப்படும்.

    Top

    மேற்கோள்கள்


    விளக்கம்
    1 - ஸு-க்3ரீவ - எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு 'இனிய குரல்' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு அகராதிகளின்படி, 'க்3ரீவ' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. ஆயினும், இவ்விடத்தில் 'இனிய தொண்டை' அல்லது 'இனிய குரல்' என்ற பொருள்தான் பொருந்தும். எனவே அங்ஙனமே மொழிபெயர்க்கப்பட்டது.

    1 - ஸு-க்3ரீவ - 3 - விபீ4ஷண - தியாகராஜர் 'ஸுக்3ரீவ' - 'விபீ4ஷண' என்ற பெயர்களின் பொருளுடன் விளையாடுகின்றார்.

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மேற்கோள்களிலுமே, 'அண்ணனின் தொல்லை' என்று கூறப்படுவதனால், தியாகராஜர், தனக்கும், தனது அண்ணனால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றி, மறைமுகமாக, இறைவனிடம் முறையிடுகின்றாரா, என்பது விளங்கவில்லை. அவருடைய 'ஆ த3ய ஸ்ரீ ரகு4வர' என்ற 'ஆஹிரி' ராகப் பாடலில், தன் அண்ணன் தன்னை துன்புறுத்தியதனைப்பற்றி இறைவனிடம் கூறுகின்றார்.

    Top

    வனவாசி - சுக்கிரீவன் - அழகிய கழுத்து (தொண்டை) உடையவன்
    எனக்கும் இனிய தொண்டை - இனிய குரலென
    இரவில் சரிப்போன் -அரக்கன் - விபீடணன் - பயங்கரமான குரலுடையவன்

    Top


    Updated on 15 Dec 2009

    Monday, December 14, 2009

    தியாகராஜ கிருதி - தனலோனே த்4யானிஞ்சி - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Tanalone Dhyaninci - Raga Deva Gandhari - Prahlada Bhakti Vijayam

    பல்லவி
    தன லோனே த்4யானிஞ்சி 1தன்மயமே காவலெரா

    அனுபல்லவி
    தன கு3ஹலோ தானுண்டெ3டு3 தாவுனு தெலியக3 வலெரா (த)

    சரணம்
    சரணம் 1
    நீ மர்மமா க்ஷணமே நிஸ்1சயமை தெலுஸுனுரா (த)


    சரணம் 2
    ஏனனு மாயா 2வேளனே வங்கோ தெலியது3ரா (த)


    சரணம் 3
    தொலி கர்மமே ப3லமு தோய கூட3து3 விதி4கி (த)


    சரணம் 4
    3ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு ப்ரஜ்வலிஞ்சுசுனுண்டு3 (த)


    சரணம் 5
    லக்ஷ்யமு ஜேயரு மதி3லோ லக்ஷாந்தரமுலகைன (த)


    சரணம் 6
    4ம்ரிங்கி3ன கள்ளகு ருசுல மேலு கனே வாரெவரு (த)


    சரணம் 7
    பூ4தமுலைது3னு நீவு 5பொரல ஜேயுசுன்னாவு (த)


    சரணம் 8
    6நிரவதி41ய்யபை நீவு நித்யானந்த3முனுன்னாவு (த)


    சரணம் 9
    ஸ்ரீ த்யாக3ராஜுனி 7சே பட்டி ரக்ஷிஞ்செத3வு (த)


    பொருள் - சுருக்கம்
    • தன்னுள்ளே தியானித்து, தன்மயமேயாக வேண்டுமய்யா;

    • தனது குகையினில் தானிருக்குமிடத்தினை அறியவேண்டுமய்யா;
    • உனது மருமம், அந்நொடியே உறுதியாகத் தெரியுமய்யா;
    • 'நான்' எனும் மாயை, அவ்வேளை, எம்மூலையிலோ, தெரியாதய்யா;

    • முன்வினையே (என்னை) வலிய தள்ளக்கூடாது, விதிக்கு;

    • இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும்;
    • (ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை செய்யார், மதியினில், இலட்சம் இடைவெளிகளாயினும்;

    • விழுங்கிய கண்களுக்கு, சுவைகளின் மேன்மையைக் காண்பவர் யாரே?
    • (ஏனெனில்) பூதங்களைந்தினையும் நீ புரளச் செய்கின்றாய்;

    • அனந்த அணையின்மீது நீ அழிவற்ற ஆனந்தத்தினிலுள்ளாய்;
    • தியாகராசனைக் கைப்பற்றிக் காத்தனை.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    தன/ லோனே/ த்4யானிஞ்சி/ தன்மயமே/ காவலெரா/
    தன்/ உள்ளே/ தியானித்து/ தன்மயமேயாக/ வேண்டுமய்யா/


    அனுபல்லவி
    தன/ கு3ஹலோ/ தானு/-உண்டெ3டு3/ தாவுனு/ தெலியக3/ வலெரா/ (த)
    தனது/ குகையினில்/ தான்/ இருக்கும்/ இடத்தினை/ அறிய/ வேண்டுமய்யா/


    சரணம்
    சரணம் 1
    நீ/ மர்மமு/-ஆ/ க்ஷணமே/ நிஸ்1சயமை/ தெலுஸுனுரா/ (த)
    உனது/ மருமம்/ அந்த/ நொடியே/ உறுதியாக/ தெரியுமய்யா/


    சரணம் 2
    ஏனு/-அனு/ மாய/-ஆ/ வேளனு/-ஏ/ வங்கோ/ தெலியது3ரா/ (த)
    'நான்'/ எனும்/ மாயை/ அந்த/ வேளை/ எந்த/ மூலையிலோ/ தெரியாதய்யா/


    சரணம் 3
    தொலி/ கர்மமே/ ப3லமு/ தோய/ கூட3து3/ விதி4கி/ (த)
    முன்/ வினையே/ (என்னை) வலிய/ தள்ள/ கூடாது/ விதிக்கு/


    சரணம் 4
    ப்ரக்ரு2தி/ ஸ்வபா4வமுலு/ ப்ரஜ்வலிஞ்சுசுனு/-உண்டு3/ (த)
    இயற்கை/ தன்மைகள்/ சுடர்விட்டுக்கொண்டு/ இருக்கும்/


    சரணம் 5
    லக்ஷ்யமு/ ஜேயரு/ மதி3லோ/ லக்ஷ/-அந்தரமுலகைன/ (த)
    (ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை/ செய்யார்/ மதியினில்/ இலட்சம்/ இடைவெளிகளாயினும்/


    சரணம் 6
    ம்ரிங்கி3ன/ கள்ளகு/ ருசுல/ மேலு/ கனே வாரு/-எவரு/ (த)
    விழுங்கிய/ கண்களுக்கு/ சுவைகளின்/ மேன்மையை/ காண்பவர்/ யாரே/


    சரணம் 7
    பூ4தமுலு/-ஐது3னு/ நீவு/ பொரல/ ஜேயுசு-உன்னாவு/ (த)
    (ஏனெனில்) பூதங்கள்/ ஐந்தினையும்/ நீ/ புரள/ செய்கின்றாய்/


    சரணம் 8
    நிரவதி4/ ஸ1ய்யபை/ நீவு/ நித்ய/-ஆனந்த3முன/-உன்னாவு/ (த)
    அனந்த/ அணையின்மீது/ நீ/ அழிவற்ற/ ஆனந்தத்தினில்/ உள்ளாய்/


    சரணம் 9
    ஸ்ரீ த்யாக3ராஜுனி/ சே/ பட்டி/ ரக்ஷிஞ்செத3வு/ (த)
    ஸ்ரீ தியாகராசனை/ கை/ பற்றி/ காத்தனை/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    3 - ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு ப்ரஜ்வலிஞ்சுசுனுண்டு3 - இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் - கீதையில் (18-வது அத்தியாயம், 11-வது செய்யுள்) கண்ணன் கூறியது -

    "உடலெடுத்தோனால் கருமங்களை முழுவதுமாகத் துறக்கவியலாது.
    ஆனால் கருமங்களின் பலன்களை எவன் துறக்கின்றானோ அவன் 'தியாகி' எனப்படுவான்."

    Top

    4 - ம்ரிங்கி3ன கள்ளகு - விழுங்கிய கண்களுக்கு - பகுதி மூடிய கண்களுடன் தியானத்தில் மூழ்கியோர் - கீதையில் (6-வது அத்தியாயம், 13-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -

    (தியானம் செய்பவன்)
    "உடல், தலை மற்றும் கழுத்தினை நேராக வைத்துக்கொண்டு, அசையாது, நிலையாக இருக்கட்டும்.
    கண்களை நாசியின் நுனியில் கோர்த்து, தான் அங்கும் இங்கும் நோக்காதிருக்கட்டும்."
    (கண்கள், தியானத்தில், பகுதி மூடி, விழிகள் அசையாதிருந்தால், பார்வை நாசியின் நுனியில் நிலைக்கும்.)

    Top

    5 - பொரல ஜேயுசுன்னாவு - புரளச் செய்தல் - ஆட்டுவித்தல் - கீதையில் (9-வது அத்தியாயம், 10-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -

    "என்னுடைய அண்மையினால் பிரகிருதி (இயற்கை) சராசரங்களை அசைவிக்கின்றது.
    குந்தி மகனே! அந்த காரணத்தினால்தான் இவ்வுலகம் சுழல்கின்றது."
    (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களின் தமிழாக்கம்.)

    Top

    விளக்கம்
    1 - தன்மயமே - தன்மயம் - வழிபடும் உருவத்துடன் ஒன்றுதல்

    2 - ஏ வங்கோ தெலியது3ரா - எம்மூலையிலோ தெரியாது - தியானத்தில் ஆழ்ந்தவன், தியானத்தின் இலக்குடன் ஒன்றுவதனால், அவனுடைய அகங்காரம் செயலிழக்கின்றது. ஆனால், தியானம் முடிந்தபின்னர், அகங்காரம் மறுபடியும் எழுகின்றது. இதனை, தியாகராஜர் 'அகங்காரம் எந்த மூலையிலோ' என்று கூறுகின்றார்.

    6 - நிரவதி41ய்ய - 'நிரவதி4' என்ற சொல்லுக்கு,'கால வரையற்ற' (அனந்த) என்று பொருளாகும். அதனால், இவ்விடத்தில் 'நிரவதி4' என்ற சொல் 'அனந்த சேடன்' எனும் அணையினைக் குறிக்கும்.
    Top

    7 - சே பட்டி - கைப் பற்றி - கைப்பற்றுதல் என்பது திருமணத்தினைக் குறிக்கும். இது நாயகி பாவமாகும்.

    அனுபல்லவி மற்றும் சரணங்கள் 1 மற்றும் 2-னைச் சேர்த்தாலே, சரியான பொருள் கொள்ளவியலும்.

    அங்ஙனமே, சரணங்கள் 4 மற்றும் 5-னை சேர்த்தே பொருள் கொள்ளவியலும். சரணங்கள் 6 மற்றும் 7-ம் அப்படியே.

    சரணங்கள் 3 முதல் 6-வரை மிகவும் சுருக்கமாக இயற்றப்பட்டுள்ளன. அதனால், இவற்றின் பொருள் சரிவர கொள்ளப்பட்டுள்ளதா, என ஐயம் உள்ளது. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    Top

    இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல், பிரகலாதன், இறைவனை நோக்கிப் பாடுவதாக.

    குகை - உடல் எனும் குகை
    தானிருக்குமிடத்தினை - உள்ளுறை இறைவன் இருக்குமிடம்.
    விதி - பிரமன்
    இயற்கை - ஐம்பூதங்கள், மனம் முதலானவை
    சுவைகள் - புலன் நுகர்ச்சியின் சுவை

    Top


    Updated on 15 Dec 2009

    Saturday, December 12, 2009

    தியாகராஜ கிருதி - கொலுவையுன்னாடே3 - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Koluvaiyunnaade - Raga Deva Gandhari

    பல்லவி
    கொலுவையுன்னாடே3 கோத3ண்ட3 பாணி

    அனுபல்லவி
    ஸ-லலித மதுலை ஸாரெகு ஸீ1லுலை
    வலசுசு கோரி வச்சி ஸேவிம்பரே (கொ)

    சரணம்
    சரணம் 1
    ஜனகஜ ப4ரதாது3லதோ மஞ்சி நைவேத்3யம்பு3லு
    சனுவுன வேடு3கனாரகி3ஞ்சி மெருபு கோட்ல கேரு
    கனக படமு ஸொம்முலனு த4ரிஞ்சி வேதோ3க்தமைன
    ஸனக வசனமுலசே தோஷிஞ்சி ஆஸ்1ரிதுல போஷிஞ்சி (கொ)


    சரணம் 2
    வரமகு3 வாஸனலு பரிமளிம்ப ஸன்னிதி4லோ வெலுகு3சு
    ஸுர வார ஸதுலு பா33 நடிம்பனதி3 கா3
    பராஸ1ர நாரத3 முனுலெல்ல நுதிம்பயெந்தெந்தோ நெனருன
    ஸுர பதி வாகீ3ஸு1லு ஸேவிம்ப மேனு புலகரிம்ப (கொ)


    சரணம் 3
    உடு3 ராஜ முகு2டு3 ஸே1ஷ ஸ1ய்ய பைனி செலங்க33 கனி
    புட3மி குமாரி ஸு-க3ந்த4மு புய்ய நம்மின வாரலகே
    கட3 கண்டினி கோரின வரமிய்ய த்யாக3ராஜு நெனருன
    அடு33டு3கு3கு மடு3புலனந்தி3ய்ய ஸ்ரீ ராமய்ய (கொ)


    பொருள் - சுருக்கம்
    • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி

      • சனகன் மகள், பரதன் ஆகியோருடன், சிறந்த படையல்களை விருப்பொடு, வேடிக்கையாக ஏற்று,
      • மின்னல் கோடிகளைப் பழிக்கும் பொன்னாடையும், அணிகலன்களும் புனைந்து,
      • மறையுரைப்பதான, சனகரின் வசனங்களினால் மகிழ்ந்து,
      • அண்டியோரைப் பேணி,

    • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி;

      • உயர் வாசனைகள் பரிமளிக்க, சன்னிதியில் விளங்கி, வானோர் நடன மடந்தையர் நன்கு நடமிட,
      • பராசரர், நாரத முனிவர் யாவரும் போற்ற,
      • எவ்வளவோ அன்புடன், தேவர் தலைவன், நாமகள் ஈசன் ஆகியோர் சேவிக்க,
      • மேனி புல்லரிக்க,

    • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி;

      • மதி முகத்தோன், சேடன் அணையின் மீது விளங்கக் கண்டு, புவிமகள் வாசனைச் சந்தனம் பூச,
      • நம்பியவர்களுக்கே கடைக் கண்களினால் கோரிய வரமளிக்க,
      • தியாகராசன், காதலுடன் அடிக்கடி (வெற்றிலை) மடிப்புகளை யளிக்க,

    • மேதகு இராமய்யா, கொலு வீற்றிருக்கின்றானே;

    • கனிந்த மனத்தினராகி, எவ்வமயமும் பண்பினராகி, காதலுடன் கோரி வந்து சேவிப்பீரே.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கொலுவை-உன்னாடே3/ கோத3ண்ட3/ பாணி/
    கொலு வீற்றிருக்கின்றானே/, கோதண்ட/ பாணி/


    அனுபல்லவி
    ஸ-லலித/ மதுலை/ ஸாரெகு/ ஸீ1லுலை/
    கனிந்த/ மனத்தினராகி/ எவ்வமயமும்/ பண்பினராகி/

    வலசுசு/ கோரி/ வச்சி/ ஸேவிம்பரே/ (கொ)
    காதலுடன்/ கோரி/ வந்து/ சேவிப்பீரே/


    சரணம்
    சரணம் 1
    ஜனகஜ/ ப4ரத/-ஆது3லதோ/ மஞ்சி/ நைவேத்3யம்பு3லு/
    சனகன் மகள்/ பரதன்/ ஆகியோருடன்/ சிறந்த/ படையல்களை/

    சனுவுன/ வேடு3கனு/-ஆரகி3ஞ்சி/ மெருபு/ கோட்ல/ கேரு/
    விருப்பொடு/ வேடிக்கையாக/ ஏற்று/ மின்னல்/ கோடிகளை/ பழிக்கும்/

    கனக/ படமு/ ஸொம்முலனு/ த4ரிஞ்சி/ வேத3/-உக்தமைன/
    பொன்/ ஆடையும்/ அணிகலன்களும்/ புனைந்து/ மறை/ உரைப்பதான/

    ஸனக/ வசனமுலசே/ தோஷிஞ்சி/ ஆஸ்1ரிதுல/ போஷிஞ்சி/ (கொ)
    சனகரின்/ வசனங்களினால்/ மகிழ்ந்து/ அண்டியோரை/ பேணி/ கொலு...


    சரணம் 2
    வரமகு3/ வாஸனலு/ பரிமளிம்ப/ ஸன்னிதி4லோ/ வெலுகு3சு/
    உயர்/ வாசனைகள்/ பரிமளிக்க/ சன்னிதியில்/ விளங்கி/

    ஸுர/ வார/ ஸதுலு/ பா33/ நடிம்பனு/-அதி3 கா3க/
    வானோர்/ நடன/ மடந்தையர்/ நன்கு/ நடமிட/ மேலும்/

    பராஸ1ர/ நாரத3/ முனுலு/-எல்ல/ நுதிம்ப/-எந்தெந்தோ/ நெனருன/
    பராசரர்/ நாரத/ முனிவர்/ யாவரும்/ போற்ற/ எவ்வளவோ/ அன்புடன்/

    ஸுர/ பதி/ வாக்3/-ஈஸு1லு/ ஸேவிம்ப/ மேனு/ புலகரிம்ப/ (கொ)
    தேவர்/ தலைவன்/ நாமகள்/ ஈசன் ஆகியோர்/ சேவிக்க/ மேனி/ புல்லரிக்க/ கொலு...


    சரணம் 3
    உடு3 ராஜ/ முகு2டு3/ ஸே1ஷ/ ஸ1ய்ய/ பைனி/ செலங்க33/ கனி/
    தாரைகளின் பதி (மதி)/ முகத்தோன்/ சேடன்/ அணையின்/ மீது/ விளங்க/ கண்டு/

    புட3மி/ குமாரி/ ஸு-க3ந்த4மு/ புய்ய/ நம்மின வாரலகே/
    புவி/ மகள்/ வாசனை/ சந்தனம்/ பூச/ நம்பியவர்களுக்கே/

    கட3/ கண்டினி/ கோரின/ வரமு/-இய்ய/ த்யாக3ராஜு/ நெனருன/
    கடை/ கண்களினால்/ கோரிய/ வரம்/ அளிக்க/ தியாகராசன்/ காதலுடன்/

    அடு3கு3-அடு3கு3கு/ மடு3புலனு/-அந்தி3ய்ய/ ஸ்ரீ ராமய்ய/ (கொ)
    அடிக்கடி/ (வெற்றிலை) மடிப்புகளை/ அளிக்க/ மேதகு ராமய்யா/ கொலு...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்

    விளக்கம்
    சனகன் மகள், புவிமகள் - சீதை
    படையல்கள் - நிவேதனைப் பொருள்
    சனகர் - சனக முனிவர் - பிரமன் மைந்தர்
    தேவர் தலைவன் - இந்திரன்
    நாமகள் ஈசன் - பிரமன்
    மேனி புல்லரிக்க - காண்போர் மேனி புல்லரிக்க

    Top


    Updated on 13 Dec 2009

    Friday, December 11, 2009

    தியாகராஜ கிருதி - கருணா ஸமுத்3ர - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Karuna Samudra - Raga Deva Gandhari

    பல்லவி
    கருணா ஸமுத்3ர நனு
    காவவே ஸ்ரீ ராம ப4த்3

    அனுபல்லவி
    1ரணாக3த ஹ்ரு2ச்சி2த்3
    1மன 1நிர்ஜித நித்3 (க)

    சரணம்
    நா பாபமு நாதோனுண்டே
    ஸ்ரீ-ப நீ பி3ருது3கேமி ப்3ரதுகு
    ஏ பாபுல ஸா1பமோ
    எந்து3கீ சலமு த்யாக3ராஜ நுத (க)


    பொருள் - சுருக்கம்
  • கருணைக் கடலே! மேதகு இராமா! சரணடைந்தோரின் உள்ளக்குமுறலைத் தணிப்போனே! உறக்கத்தை வென்றோனே! மாமணாளா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • என்னைக் காப்பாய்.
    • எனது பாவங்கள் என்னுடனேயிருந்தால், உனது விருதுக்கென்ன பிழைப்பு?
    • எப்பாவிகளின் சாபமோ?
    • எதற்கிந்த பிடிவாதம்?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கருணா/ ஸமுத்3ர/ நனு/
    கருணை/ கடலே/ என்னை/

    காவவே/ ஸ்ரீ ராம/ ப4த்3ர/
    காப்பாய்/ ஸ்ரீ ராமா/ மேதகு/


    அனுபல்லவி
    1ரணு/-ஆக3த/ ஹ்ரு2த்/-சி2த்3ர/
    சரண்/ அடைந்தோரின்/ உள்ள/ குமுறலை/

    1மன/ நிர்ஜித/ நித்3ர/ (க)
    தணிப்போனே/ வென்றோனே/ உறக்கத்தை/


    சரணம்
    நா/ பாபமு/ நாதோனு/-உண்டே/
    எனது/ பாவங்கள்/ என்னுடனே/ யிருந்தால்/

    ஸ்ரீ/-ப/ நீ/ பி3ருது3கு/-ஏமி/ ப்3ரதுகு/
    மா/ மணாளா/ உனது/ விருதுக்கு/ என்ன/ பிழைப்பு/

    ஏ/ பாபுல/ ஸா1பமோ/
    எந்த/ பாவிகளின்/ சாபமோ/

    எந்து3கு/-ஈ/ சலமு/ த்யாக3ராஜ/ நுத/ (க)
    எதற்கு/ இந்த/ பிடிவாதம்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    1 - நிர்ஜித நித்3 - உறக்கத்தினை வென்றோன் - இறைவன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். எனவே, இந்த புகழுரை, இராமனுக்கும், இலக்குவனுக்கும், விசுவாமித்திரர் புகட்டிய, 'பலை-அதிபலை' என்ற மந்திரங்களைக்குறிக்கும். இந்த மந்திரங்களை ஜபித்தலால் ஊண் உறக்கத்தினை வெல்லமுடியும் என்பதனால் அம்முனிவர் அவர்களுக்கு உபதேசித்தார். வால்மீகி ராமாயணம், பால காண்டம் - 22-வது அத்தியாயம் நோக்கவும்.

    Top

    விளக்கம்
    என்னுடனேயிருந்தால் - என்னை விட்டகலாதிருந்தால்

    விருது - வீழ்ந்தோரைப் புனிதராக்கும் விருது

    Top


    Updated on 12 Dec 2009
  • Thursday, December 10, 2009

    தியாகராஜ கிருதி - எவரு மனகு - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Evaru Manaku - Raga Deva Gandhari, Nauka Charitram

    பல்லவி
    எவரு மனகு ஸமானமிலலோனிந்துலார நேடு3

    அனுபல்லவி
    1அவனி ஹரி ஹர ப்3ரஹ்மாதி3
    ஸுருலாஸசே மோஸ போயிரி க3னுகனு (எ)

    சரணம்
    2நலுவ தனயபை மோஹமு ஜெந்தி3 நாடே3 தகி3லி போயெ
    முத்3து3லொலுகு ஸ்ரீ ஹரி வலசுசு 3ப்3ரு2ந்தா3 லோலுடை3 போயெ
    சிலுவ பூ4ஷணுடு3 4தா3ருகா வனபு செலுல பாலாயெ
    கோ3குலமுன த்யாக3ராஜ நுதுடு3 மன
    வலல தகி3லி போயெ க3னுகனு (எ)


    பொருள் - சுருக்கம்
    வனிதையரே!
    • யார் நமக்கீடு புவியினிலே, இன்று?
    • ஆகுமென, அரி, அரன், பிரமன் முதலான வானோர் (பெண்) ஆசையினால் மோசம் போயினர்;
      • நான்முகன், மகளின் மீது மோகம் கொண்டு அன்றே சிக்கினான்;
      • எழில் சொட்டும் அரி, காதல் கொண்டு, பிருந்தா லோலனாகினான்;
      • அரவணிவோன், தாருகா வனப்பெண்டிர் வசமாகினான்;
      • கோகுலத்தினில், தியாகராசனால் போற்றப் பெற்றோன், நமது வலையில் அகப்பட்டனன்;

    • எனவே, யார் நமக்கீடு புவியினிலே, இன்று?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    எவரு/ மனகு/ ஸமானமு/-இலலோனு/-இந்துலார/ நேடு3/
    யார்/ நமக்கு/ ஈடு/ புவியினிலே/ வனிதையரே/ இன்று/


    அனுபல்லவி
    அவு/-அனி/ ஹரி/ ஹர/ ப்3ரஹ்மா/-ஆதி3/
    ஆகும்/ என/ அரி/ அரன்/ பிரமன்/ முதலான/

    ஸுருலு/-ஆஸசே/ மோஸ/ போயிரி/ க3னுகனு/ (எ)
    வானோர்/ (பெண்) ஆசையினால்/ மோசம்/ போயினர்/ எனவே, யார்...


    சரணம்
    நலுவ/ தனயபை/ மோஹமு/ ஜெந்தி3/ நாடே3/ தகி3லி போயெ/
    நான்முகன்/ மகளின் மீது/ மோகம்/ கொண்டு/ அன்றே/ சிக்கினான்/

    முத்3து3லு/-ஒலுகு/ ஸ்ரீ ஹரி/ வலசுசு/ ப்3ரு2ந்தா3/ லோலுடை3 போயெ/
    எழில்/ சொட்டும்/ ஸ்ரீ ஹரி/ காதல் கொண்டு/ பிருந்தா/ லோலன் ஆகினான்/

    சிலுவ/ பூ4ஷணுடு3/ தா3ருகா/ வனபு/ செலுல/ பாலாயெ/
    அரவு/ அணிவோன்/ தாருகா/ வன/ பெண்டிர்/ வசமாகினான்/

    கோ3குலமுன/ த்யாக3ராஜ/ நுதுடு3/ மன/
    கோகுலத்தினில்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ நமது/

    வலல/ தகி3லி போயெ/ க3னுகனு/ (எ)
    வலையில்/ அகப்பட்டனன்/ எனவே/ யார்...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    2 - நலுவ தனயபை மோஹமு ஜெந்தி3 - நான்முகன், மகளின் மீது மோகம் கொண்டு - கலைவாணி, பிரமனுக்குப் பிறந்தவள் எனப்படும்.'ப்3ரு2ஹதா3ரண்ய உபநிடத'த்தினில் (I.iv.3,4), இவ்வுலகத்தின் படைப்பினைப் பற்றி விவரிக்கையில், பிரமன், படைப்பின் தொடக்கத்தினில், தான் மட்டுமே தனியாக இருப்பதனை உணர்ந்து, தனிமைக்கு அஞ்சி, தான், ஒரு ஆணும், பெண்ணும் அரவணைப்பினில் இருப்பது போன்று மாறி, அவ்வணைப்பிலுள்ள உடலை இரண்டாகப் பிரித்து - ஒரு பகுதி ஆணாகவும், மறு பகுதி பெண்ணாகவும் படைப்பித்தான். அந்த முதல் தம்பதிகளிலிருந்து, மற்ற படைப்பு நிகழ்ந்ததெனக் கூறப்படும். பிரமன் தன்னிடமிருந்து தோன்றிய பெண்ணை, தானே புணர்ந்ததனால், 'மகளின் மீது மோகம் கொண்டு' என்று தியாகராஜர் கேலி செய்கின்றார்.

    Top

    3 - ப்3ரு2ந்தா3 லோலுடை3 - பிருந்தா லோலன் - துளசியின் கதை நோக்கவும். துளசி முற்பிறவியில் 'பிருந்தா' எனப்படுவாள். அப்பெண், விஷ்ணுவை தனது கணவனாக அடைய, பலகாலம் தவமிருந்தாள். அவளுக்கு அங்ஙனமே வரம் கிடைத்தது. ஆனால், அவளுக்கு இவ்வுலக இன்ப நுகர்ச்சிகளின் சுவை மிகுதியிருந்ததனால், 'சங்கசூடன்' என்ற அரக்க மன்னனை மணந்து பலகாலம் இன்புற்றிருந்தாள். அவ்வரக்கன், சிவனுடன் போரில் கொல்லப்பட்டான். போர் நடக்கையில், விஷ்ணு அவளிடம், அவளுடைய கணவனுடைய வேடந்தரித்து வந்து, அவளுடன் புணர்ந்தான். இதனை பின்னர் உணர்ந்த பிருந்தா, விஷ்ணுவுக்கு சாபமிட்டாள். விஷ்ணு, அவளுடைய உண்மையான கோரிக்கை என்ன என்பதனை நினைவூட்டி, அவளை தன்னுடைய மனைவியாக வரும்படி கூறுகின்றார். இதனைத்தான் தியாகராஜர் 'பிருந்தா லோலனாகினான்' என்று கேலியாகக் கூறுகின்றார்.

    Top

    4 - தா3ருகா வனபு செலுல - தாருகா வனப்பெண்டிர் - இருடியரின் மனைவியர் - சிவனின் பிட்சாடனர் வேடம். தாருகா வன இருடியர்கள், கடவுளே இல்லையென்றும், கருமங்களே உண்டென்றும், செருக்குற்றிருந்தனர். அவர்களுடைய செருக்கினை அடக்க, சிவனும், விஷ்ணுவும், ஆணும், பெண்ணாக வேடந்தரித்து, இருவரும் நிர்வாணமாக, அவ்வனத்திற்குச் சென்றனர். மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவைக்கண்டு, இருடியர்கள் மயல் கொண்டு, அவளைத் தொடர்ந்தனர். பிட்சாடனராக வேடமணிந்த சிவனைக்கண்டு, இருடியரின் மனைவியர் மயல் கொண்டு, சிவனைப் பின்தொடர்ந்தனர். பின்னர், இதனை உணர்ந்த இருடியர், சிவனுக்கு சாபமிட்டு, மான் முதலானவற்றை ஏவினர். சிவன், அவற்றை வென்று, தன்னுடைய அணிகலன்களாக ஏற்றான். இந்நிகழ்ச்சியினைத் தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.

    Top

    விளக்கம்
    1 - அவனி - இச்சொல்லின் மொழிபெயர்ப்பு ஐயத்திற்குரியது. இச்சொல்லின் நேரிடைப்பொருள் 'புவி' என்பதாகும். ஆனால், இவ்விடத்தில் இச்சொல்லின் வடிவம் சரியில்லை. எனவே, இச்சொல்லினை 'அவு+அனி' எனப் பிரித்து, 'ஆகுமென' (ஒவ்வுமென) பொருள் கொள்ளப்பட்டது.

    இப்பாடல், 'நௌக சரித்திரம்' எனப்படும் 'ஓடக்கதை'யினில் வருவது.

    பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனை நதிக்கரையில், கண்ணனைக் கலந்து இன்புற்றனர். அந்த மயக்கத்தினில், அப்பேர்ப்பட்ட கண்ணனே தமது வயப்பட்டதனால், தமக்கு எவரும் ஈடில்லை என செருக்குற்றனர். அந்த செருக்கினை வெளிப்படுத்தும் பாடல் இது. இப்பாடல், கோகுலத்தில், ஆய்ச்சியர் பாடுவதாக.

    அரவணிவோன் - சிவன்
    தியாகராசனால் போற்றப் பெற்றோன் - கண்ணனைக் குறிக்கும்

    Top


    Updated on 11 Dec 2009