க்ஷீர ஸாக3ர ஸ1யன நன்னு சிந்தல பெட்ட வலெனா ராம
அனுபல்லவி
1வாரண ராஜுனு ப்3ரோவனு வேக3மே வச்சினதி3 வின்னானுரா ராம (க்ஷீ)
சரணம்
2நாரீ மணிகி சீரலிச்சினதி3 நாடே3 நே 3வின்னானுரா
தீ4ருடௌ3 4ராம தா3ஸுனி ப3ந்த4மு தீர்சினதி3 3வின்னானுரா
நீரஜாக்ஷிகை நீரதி4 தா3டின நீ கீர்தினி 3வின்னானுரா
தாரக நாம த்யாக3ராஜ நுத 5த3யதோனேலுகோரா ராம (க்ஷீ)
பொருள் - சுருக்கம்
பாற்கடற்றுயில்வோனே! இராமா! தாரக நாமத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- என்னைக் கவலையில் இருத்த வேணுமோ?
- வாரண அரசனைக் காக்க, வேகமாய் வந்ததனைக் கேட்டேனய்யா
- பெண்மணிக்குச் சேலைகளளித்ததனை, அன்றே நான் கேட்டேனய்யா;
- தீரனாகிய இராம தாசனின் கைதினைத் தீர்த்ததனைக் கேட்டேனய்யா;
- கமலக் கண்ணாளுக்காக கடலைத் தாண்டிய உனது புகழைக் கேட்டேனய்யா;
- வாரண அரசனைக் காக்க, வேகமாய் வந்ததனைக் கேட்டேனய்யா
- தயையுடன் ஆள்வாயய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீர/ ஸாக3ர/ ஸ1யன/ நன்னு/ சிந்தல/ பெட்ட/ வலெனா/ ராம/
பால்/ கடல்/ துயில்வோனே/ என்னை/ கவலையில்/ இருத்த/ வேணுமோ/ இராமா/
அனுபல்லவி
வாரண/ ராஜுனு/ ப்3ரோவனு/ வேக3மே/ வச்சினதி3/ வின்னானுரா/ ராம/ (க்ஷீ)
வாரண/ அரசனை/ காக்க/ வேகமாய்/ வந்ததனை/ கேட்டேனய்யா/ இராமா/
சரணம்
நாரீ/ மணிகி/ சீரலு/-இச்சினதி3/ நாடே3/ நே/ வின்னானுரா/
பெண்/ மணிக்கு/ சேலைகள்/ அளித்ததனை/ அன்றே/ நான்/ கேட்டேனய்யா/
தீ4ருடௌ3/ ராம/ தா3ஸுனி/ ப3ந்த4மு/ தீர்சினதி3/ வின்னானுரா/
தீரனாகிய/ இராம/ தாசனின்/ கைதினை/ தீர்த்ததனை/ கேட்டேனய்யா/
நீரஜ/-அக்ஷிகை/ நீரதி4/ தா3டின/ நீ/ கீர்தினி/ வின்னானுரா/
கமல/ கண்ணாளுக்காக/ கடலை/ தாண்டிய/ உனது/ புகழை/ கேட்டேனய்யா/
தாரக/ நாம/ த்யாக3ராஜ/ நுத/ த3யதோனு/-ஏலுகோரா/ ராம/ (க்ஷீ)
தாரக/ நாமத்தோனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ தயையுடன்/ ஆள்வாயய்யா/ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - வின்னானுரா - வின்னானுரா ராம.
5 - ஏலுகோரா - ஏலுகோர : இதற்கு முன் வரும், மூன்று வரிகளிலும் உள்ள, 'வின்னானுரா' என்று சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'ஏலுகோரா' எற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - வாரண ராஜு - வாரண அரசன் - கஜேந்திரன்
2 - நாரீ மணி - பெண்மணி - துரோபதையினைத் துகிலுரிதல் - பாரதம் (2-வது புத்தகம் - சபா பருவம் - 67-வது அத்தியாயம்).
4 - ராம தா3ஸு - பத்திராசலம் இராம தாசர் - கோல்கொண்டா (பின்னர் ஐதராபாத் நிஜாம்) முஸ்லீம் ஆளுனரிடம் தாசில்தாரராகப் பணி புரிந்தார்
Top
விளக்கம்
கமலக்கண்ணாள் - சீதை
தாரக நாமம் - பிறவிக் கடலைக் கடத்துவிக்கும் 'இராமா' எனும் நாமம்
Top
Updated on 23 Dec 2009
1 comment:
Good translation which makes one understand and appreciate the krithi better
Post a Comment