Saturday, December 12, 2009

தியாகராஜ கிருதி - கொலுவையுன்னாடே3 - ராகம் தே3வ கா3ந்தா4ரி - Koluvaiyunnaade - Raga Deva Gandhari

பல்லவி
கொலுவையுன்னாடே3 கோத3ண்ட3 பாணி

அனுபல்லவி
ஸ-லலித மதுலை ஸாரெகு ஸீ1லுலை
வலசுசு கோரி வச்சி ஸேவிம்பரே (கொ)

சரணம்
சரணம் 1
ஜனகஜ ப4ரதாது3லதோ மஞ்சி நைவேத்3யம்பு3லு
சனுவுன வேடு3கனாரகி3ஞ்சி மெருபு கோட்ல கேரு
கனக படமு ஸொம்முலனு த4ரிஞ்சி வேதோ3க்தமைன
ஸனக வசனமுலசே தோஷிஞ்சி ஆஸ்1ரிதுல போஷிஞ்சி (கொ)


சரணம் 2
வரமகு3 வாஸனலு பரிமளிம்ப ஸன்னிதி4லோ வெலுகு3சு
ஸுர வார ஸதுலு பா33 நடிம்பனதி3 கா3
பராஸ1ர நாரத3 முனுலெல்ல நுதிம்பயெந்தெந்தோ நெனருன
ஸுர பதி வாகீ3ஸு1லு ஸேவிம்ப மேனு புலகரிம்ப (கொ)


சரணம் 3
உடு3 ராஜ முகு2டு3 ஸே1ஷ ஸ1ய்ய பைனி செலங்க33 கனி
புட3மி குமாரி ஸு-க3ந்த4மு புய்ய நம்மின வாரலகே
கட3 கண்டினி கோரின வரமிய்ய த்யாக3ராஜு நெனருன
அடு33டு3கு3கு மடு3புலனந்தி3ய்ய ஸ்ரீ ராமய்ய (கொ)


பொருள் - சுருக்கம்
  • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி

    • சனகன் மகள், பரதன் ஆகியோருடன், சிறந்த படையல்களை விருப்பொடு, வேடிக்கையாக ஏற்று,
    • மின்னல் கோடிகளைப் பழிக்கும் பொன்னாடையும், அணிகலன்களும் புனைந்து,
    • மறையுரைப்பதான, சனகரின் வசனங்களினால் மகிழ்ந்து,
    • அண்டியோரைப் பேணி,

  • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி;

    • உயர் வாசனைகள் பரிமளிக்க, சன்னிதியில் விளங்கி, வானோர் நடன மடந்தையர் நன்கு நடமிட,
    • பராசரர், நாரத முனிவர் யாவரும் போற்ற,
    • எவ்வளவோ அன்புடன், தேவர் தலைவன், நாமகள் ஈசன் ஆகியோர் சேவிக்க,
    • மேனி புல்லரிக்க,

  • கொலு வீற்றிருக்கின்றானே, கோதண்டபாணி;

    • மதி முகத்தோன், சேடன் அணையின் மீது விளங்கக் கண்டு, புவிமகள் வாசனைச் சந்தனம் பூச,
    • நம்பியவர்களுக்கே கடைக் கண்களினால் கோரிய வரமளிக்க,
    • தியாகராசன், காதலுடன் அடிக்கடி (வெற்றிலை) மடிப்புகளை யளிக்க,

  • மேதகு இராமய்யா, கொலு வீற்றிருக்கின்றானே;

  • கனிந்த மனத்தினராகி, எவ்வமயமும் பண்பினராகி, காதலுடன் கோரி வந்து சேவிப்பீரே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொலுவை-உன்னாடே3/ கோத3ண்ட3/ பாணி/
கொலு வீற்றிருக்கின்றானே/, கோதண்ட/ பாணி/


அனுபல்லவி
ஸ-லலித/ மதுலை/ ஸாரெகு/ ஸீ1லுலை/
கனிந்த/ மனத்தினராகி/ எவ்வமயமும்/ பண்பினராகி/

வலசுசு/ கோரி/ வச்சி/ ஸேவிம்பரே/ (கொ)
காதலுடன்/ கோரி/ வந்து/ சேவிப்பீரே/


சரணம்
சரணம் 1
ஜனகஜ/ ப4ரத/-ஆது3லதோ/ மஞ்சி/ நைவேத்3யம்பு3லு/
சனகன் மகள்/ பரதன்/ ஆகியோருடன்/ சிறந்த/ படையல்களை/

சனுவுன/ வேடு3கனு/-ஆரகி3ஞ்சி/ மெருபு/ கோட்ல/ கேரு/
விருப்பொடு/ வேடிக்கையாக/ ஏற்று/ மின்னல்/ கோடிகளை/ பழிக்கும்/

கனக/ படமு/ ஸொம்முலனு/ த4ரிஞ்சி/ வேத3/-உக்தமைன/
பொன்/ ஆடையும்/ அணிகலன்களும்/ புனைந்து/ மறை/ உரைப்பதான/

ஸனக/ வசனமுலசே/ தோஷிஞ்சி/ ஆஸ்1ரிதுல/ போஷிஞ்சி/ (கொ)
சனகரின்/ வசனங்களினால்/ மகிழ்ந்து/ அண்டியோரை/ பேணி/ கொலு...


சரணம் 2
வரமகு3/ வாஸனலு/ பரிமளிம்ப/ ஸன்னிதி4லோ/ வெலுகு3சு/
உயர்/ வாசனைகள்/ பரிமளிக்க/ சன்னிதியில்/ விளங்கி/

ஸுர/ வார/ ஸதுலு/ பா33/ நடிம்பனு/-அதி3 கா3க/
வானோர்/ நடன/ மடந்தையர்/ நன்கு/ நடமிட/ மேலும்/

பராஸ1ர/ நாரத3/ முனுலு/-எல்ல/ நுதிம்ப/-எந்தெந்தோ/ நெனருன/
பராசரர்/ நாரத/ முனிவர்/ யாவரும்/ போற்ற/ எவ்வளவோ/ அன்புடன்/

ஸுர/ பதி/ வாக்3/-ஈஸு1லு/ ஸேவிம்ப/ மேனு/ புலகரிம்ப/ (கொ)
தேவர்/ தலைவன்/ நாமகள்/ ஈசன் ஆகியோர்/ சேவிக்க/ மேனி/ புல்லரிக்க/ கொலு...


சரணம் 3
உடு3 ராஜ/ முகு2டு3/ ஸே1ஷ/ ஸ1ய்ய/ பைனி/ செலங்க33/ கனி/
தாரைகளின் பதி (மதி)/ முகத்தோன்/ சேடன்/ அணையின்/ மீது/ விளங்க/ கண்டு/

புட3மி/ குமாரி/ ஸு-க3ந்த4மு/ புய்ய/ நம்மின வாரலகே/
புவி/ மகள்/ வாசனை/ சந்தனம்/ பூச/ நம்பியவர்களுக்கே/

கட3/ கண்டினி/ கோரின/ வரமு/-இய்ய/ த்யாக3ராஜு/ நெனருன/
கடை/ கண்களினால்/ கோரிய/ வரம்/ அளிக்க/ தியாகராசன்/ காதலுடன்/

அடு3கு3-அடு3கு3கு/ மடு3புலனு/-அந்தி3ய்ய/ ஸ்ரீ ராமய்ய/ (கொ)
அடிக்கடி/ (வெற்றிலை) மடிப்புகளை/ அளிக்க/ மேதகு ராமய்யா/ கொலு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
சனகன் மகள், புவிமகள் - சீதை
படையல்கள் - நிவேதனைப் பொருள்
சனகர் - சனக முனிவர் - பிரமன் மைந்தர்
தேவர் தலைவன் - இந்திரன்
நாமகள் ஈசன் - பிரமன்
மேனி புல்லரிக்க - காண்போர் மேனி புல்லரிக்க

Top


Updated on 13 Dec 2009

No comments: