தெர தீயக3 ராதா3 1லோனி
திருபதி வேங்கட ரமண மத்ஸரமனு (தெர)
அனுபல்லவி
பரம புருஷ 2த4ர்மாதி3 மோக்ஷமுல
பார-தோ3லுசுன்னதி3 நா லோனி (தெர)<
சரணம்
சரணம் 1
3மத்ஸ்யமுயாகலி கொனி காலமுசே
மக்3னமைன ரீதினுன்னதி3
அச்சமைன தீ3ப ஸன்னிதி4னி மரு-
க3ட்3ட3ப3டி3 செரசினட்டுன்னதி3 (தெர)
சரணம் 2
இரவொந்த3க3 பு4ஜியிஞ்சு ஸமயமுன
ஈக3 தகு3லு ரீதினுன்னதி3
ஹரி த்4யானமு ஸேயு வேள சித்தமு
அந்த்யஜு வாட3கு போயினட்டுன்னதி3 (தெர)
சரணம் 3
வாகு3ரமனி தெலியக 4ம்ரு2க3 க3ணமுலு
வச்சி தகு3லு ரீதினுன்னதி3
5வேக3மே 6நீ மதமுனனுஸுரிஞ்சின
த்யாக3ராஜ நுத மத3 மத்ஸரமனு (தெர)
பொருள் - சுருக்கம்
- திருப்பதி வேங்கடரமணா!
- பரம்பொருளே!
- உனது நெறியினைக் கடைப்பிடித்த தியாகராசன் போற்றுவோனே!
- காழ்ப்பெனும் (எனது) உள் திரையை நீக்கலாகாதா?
- அறம் முதலாக, வீடு, ஆகியவற்றை (காழ்ப்பு) விரட்டியடிக்கின்றது!
- மீன் பசிகொண்டு, சாவின் மடியில் வீழ்தல் போன்றுள்ளது;
- திறந்த, விளக்கொளிரும் (இறைவன்) சன்னிதியில், திரை குறுக்கிட்டு மறைத்தல் போன்றுள்ளது;
- நன்றாக உண்ணும்போது, (இலையில்) ஈயமர்தல் போன்றுள்ளது;
- அரியைத் தியானிக்கும்போது, மனது சேரிக்குச் சென்றது போன்றுள்ளது;
- கண்ணியென்று அறியாது, மான் கூட்டம் வந்தகப்படுதல் போன்றுள்ளது.
- மீன் பசிகொண்டு, சாவின் மடியில் வீழ்தல் போன்றுள்ளது;
- விரைவில், செருக்கு, காழ்ப்பெனும் (எனது) உள் திரைகளை நீக்கலாகாதா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தெர/ தீயக3 ராதா3/ லோனி/
திரையை/ நீக்கலாகாதா/ (எனது) உள்/
திருபதி/ வேங்கட/ ரமண/ மத்ஸரமு/-அனு/ (தெர)
திருப்பதி/ வேங்கட/ ரமணா/ காழ்ப்பு/ எனும்/ திரையை
அனுபல்லவி
பரம/ புருஷ/ த4ர்ம/-ஆதி3/ மோக்ஷமுல/
பரம்/ பொருளே/ அறம்/ முதலாக/ வீடு ஆகியவற்றை/
பார/-தோ3லுசு-உன்னதி3/ நா/ லோனி/ (தெர)
(காழ்ப்பு) விரட்டி/ யடிக்கின்றது/ எனது/ உள்/ திரையை
சரணம்
சரணம் 1
மத்ஸ்யமு/-ஆகலி/ கொனி/ காலமுசே/
மீன்/ பசி/ கொண்டு/ சாவின் மடியில்/
மக்3னமைன/ ரீதினி/-உன்னதி3/
வீழ்தல்/ போன்று/ உள்ளது/
அச்சமைன/ தீ3ப/ ஸன்னிதி4னி/ மருகு3-/
திறந்த/ விளக்கொளிரும்/ (இறைவன்) சன்னிதியில்/ திரை/
அட்3ட3ப3டி3/ செரசின/-அட்டு/-உன்னதி3/ (தெர)
குறுக்கிட்டு/ மறைத்தல்/ போன்று/ உள்ளது/
சரணம் 2
இரவு-ஒந்த3க3/ பு4ஜியிஞ்சு/ ஸமயமுன/
நன்றாக/ உண்ணும்/ போது/
ஈக3/ தகு3லு/ ரீதினி/-உன்னதி3/
(இலையில்) ஈ/ (அகப்படுதல்) அமர்தல்/ போன்று/ உள்ளது/
ஹரி/ த்4யானமு ஸேயு/ வேள/ சித்தமு/
அரியை/ தியானிக்கும்/ போது/ மனது/
அந்த்யஜு வாட3கு/ போயின/-அட்டு/-உன்னதி3/ (தெர)
தாழ்மக்கள்/ தெருவுக்கு (சேரிக்கு)/ சென்றது/ போன்று/ உள்ளது/
சரணம் 3
வாகு3ரமு/-அனி/ தெலியக/ ம்ரு2க3/ க3ணமுலு/
கண்ணி/ யென்று/ அறியாது/, மான்/ கூட்டம்/
வச்சி/ தகு3லு/ ரீதினி/-உன்னதி3/
வந்து/ அகப்படுதல்/ போன்று/ உள்ளது/
வேக3மே/ நீ/ மதமுனு/-அனுஸுரிஞ்சின/
விரைவில்/ உனது/ நெறியினை/ கடைப்பிடித்த/
த்யாக3ராஜ/ நுத/ மத3/ மத்ஸரமு/-அனு/ (தெர)
தியாகராசன்/ போற்றுவோனே/ செருக்கு/ காழ்ப்பு/ எனும்/ திரைகளை
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மத்ஸ்யமு - மச்சமு : சரியான தெலுங்கு சொல் 'மச்செமு' ஆகும்.
Top
மேற்கோள்கள்
1 - லோனி தெர - உள் திரை - இச்சை, சினம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, காழ்ப்பு எனப்படும் உட்பகைவர் அறுவர்.
2 - த4ர்மாதி3 மோக்ஷமுல - அறம் முதலாக வீடு - புருஷார்த்தங்கள் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு
Top
விளக்கம்
4 - ம்ரு2க3 க3ணமுலு - மிருகக் கூட்டம் - இவ்விடத்தில் 'மிருகம்' என்பது மானைக் குறிக்கும்.
5 - வேக3மே - விரைவில். இச்சொல்லினைப் பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'உனது நெறியினைக் கடைப்பிடத்த' என்பதுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.
Top
6 - நீ மதமு - உனது நெறி - சரணாகதி. கீதையில் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) கண்ணன் உரைத்தது -
"அனைத்து தருமங்களையும் துறந்து என் ஒருவனையே சரணடைவாய்;
நான் உன்னை அனைத்துப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே.
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
மீன் சாவின் மடியில் வீழ்தல் - தூண்டிலிரையை உணவென்றெண்ணி
Top
Updated on 05 Dec 2010
1 comment:
Wonderful translation capturing the spirit of the song. A blessing for people like me who do not know Telugu.
Post a Comment