Showing posts with label Gaulipantu Raga. Show all posts
Showing posts with label Gaulipantu Raga. Show all posts

Thursday, December 9, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம க்ரு2ஷ்ணா - ராகம் கௌ3ளிபந்து - Rama Rama Krishna - Raga Gaulipantu

பல்லவி
ராம ராம க்ரு2ஷ்ணாயனரே
ராத்ரி பக3லு மா ஸீதா (ராம)

சரணம்
சரணம் 1
1இதர மார்க3 ஸௌக்2யமுலகு
அதனி ஹ்ரு23யமே ஸாக்ஷியு (ராம)


சரணம் 2
கானி பனுல கோரி கோரி
கரகு3சுண்டு3 மானவுலு (ராம)


சரணம் 3
குத்ஸிதபு மாடலகு
2உத்3து33 பொரலெடு3 ஜனுலு (ராம)


சரணம் 4
3ஸர்வ ஸா1ஸ்த்ரமுலனு சதி3வி
ஆஸ தா3ஸுலயின வாரு (ராம)


சரணம் 5
எது3டி பச்ச ஜூட3 லேக
ஹிதபு மாடலாடு3 ஜனுலு (ராம)


சரணம் 6
சல்லனி வாக்குலு பலிகி
ஸ்வாந்தமனலமைன வாரு (ராம)


சரணம் 7
பலுக நேர்சியடு33 போதே
தெலிவிகி ஹானியைன வாரு (ராம)


சரணம் 8
4ஜாதி ஹீனுலைன வாரு
ஜாணலைனாரதே3 ஸாக்ஷி (ராம)


சரணம் 9
5பாமு பந்தி33ஜ பிஸா1
பாதகாக்3ரேஸருலே
ஸாக்ஷி (ராம)


சரணம் 10
த்யாக3ராஜு தெலுஸுகொன்ன
6தாரகமிஹ பர 7ஸாத4கமு (ராம)


பொருள் - சுருக்கம்
  • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!

  • மற்ற நெறிகளின் சௌக்கியங்களுக்கு, அவரவர் உள்ளமே சாட்சியாகும்;

    • கூடாத பணிகளை விழைந்து, விழைந்து, இளைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களே!
    • கெட்ட சொற்களுக்கு மல்லாடிப் புரளும் மக்களே!
    • அனைத்து சாத்திரங்களைக் கற்றும், ஆசைக்கு அடிமையானோரே!
    • எதிராளியின் செழிப்பைக்காணச் சகியாது, (ஆனால் மேலுக்கு) இன்சொல் கூறுவோரே!
    • (வெளியில்) குளுமையான சொற்கள் கூறி, (ஆனால்) உள்ளுக்குள் வேகுவோரே!
    • பேசக் கற்று, (கேள்வி) கேட்கப் போனால், தெரிவற்றோரே!

  • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!

  • சாதி கெட்டுப்போனோரும் சான்றோராயினர், அஃதே சாட்சி;
  • பாம்பு, பன்றி, யானை, பிசாசு, பாதகர்கள் தலைசிறந்தோரானதே சாட்சி;

  • தியாகராசன் தெரிந்துகொண்ட தாரகம்;
  • இம்மை, மறுமைக்குச் சாதனம் (இதுவே).

  • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ க்ரு2ஷ்ணா/-அனரே/
ராமா/ ராமா/ கண்ணா/ யென்பீர்/

ராத்ரி/ பக3லு/ மா/ ஸீதா/ (ராம)
இரவும்/ பகலும்/ 'நமது/ சீதா/ ராமா...


சரணம்
சரணம் 1
இதர/ மார்க3/ ஸௌக்2யமுலகு/
மற்ற/ நெறிகளின்/ சௌக்கியங்களுக்கு/

அதனி/ ஹ்ரு23யமே/ ஸாக்ஷியு/ (ராம)
அவரவர்/ உள்ளமே/ சாட்சியாகும்/


சரணம் 2
கானி/ பனுல/ கோரி/ கோரி/
கூடாத/ பணிகளை/ விழைந்து/ விழைந்து/

கரகு3சு/-உண்டு3/ மானவுலு/ (ராம)
இளைத்துக்கொண்டு/ இருக்கும்/ மனிதர்களே/


சரணம் 3
குத்ஸிதபு/ மாடலகு/
கெட்ட/ சொற்களுக்கு/

உத்3து33/ பொரலெடு3/ ஜனுலு/ (ராம)
மல்லாடி/ புரளும்/ மக்களே


சரணம் 4
ஸர்வ/ ஸா1ஸ்த்ரமுலனு/ சதி3வி/
அனைத்து/ சாத்திரங்களை/ கற்றும்/

ஆஸ/ தா3ஸுலு/-அயின வாரு/ (ராம)
ஆசைக்கு/ அடிமை/ ஆனோரே/


சரணம் 5
எது3டி/ பச்ச/ ஜூட3/ லேக/
எதிராளியின்/ செழிப்பை/ காண/ சகியாது/

ஹிதபு/ மாடலு/-ஆடு3 ஜனுலு/ (ராம)
(ஆனால் மேலுக்கு) இன்/ சொல்/ கூறுவோரே/


சரணம் 6
சல்லனி/ வாக்குலு/ பலிகி/
(வெளியில்) குளுமையான/ சொற்கள்/ /கூறி/

ஸ்வாந்தமு/-அனலமு-ஐன வாரு/ (ராம)
(ஆனால்) உள்ளுக்குள்/ வேகுவோரே/


சரணம் 7
பலுக/ நேர்சி/-அடு33/ போதே/
பேச/ கற்று/ (கேள்வி) கேட்க/ போனால்/

தெலிவிகி/ ஹானி-ஐன வாரு/ (ராம)
தெரிவு/ அற்றோரே/


சரணம் 8
ஜாதி/ ஹீனுலைன வாரு/
சாதி/ கெட்டுப்போனோரும்/

ஜாணலு/-ஐனாரு/-அதே3/ ஸாக்ஷி/ (ராம)
சான்றோர்/ ஆயினர்/ அஃதே/ சாட்சி/


சரணம் 9
பாமு/ பந்தி3/ க3ஜ/ பிஸா1ச/
பாம்பு/ பன்றி/ யானை/ பிசாசு/

பாதக/-அக்3ரேஸருலே/ ஸாக்ஷி/ (ராம)
பாதகர்கள்/ தலைசிறந்தோரானதே/ சாட்சி/


சரணம் 10
த்யாக3ராஜு/ தெலுஸுகொன்ன/
தியாகராசன்/ தெரிந்துகொண்ட/

தாரகமு/-இஹ/ பர/ ஸாத4கமு/ (ராம)
தாரகம்/ இம்மை/ மறுமைக்கு/ சாதனம்/ (இதுவே)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உத்3து33 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல் 'உத்3தி3' என்பதன் திரிபு என்று கருதுகின்றேன்.

3 - ஸர்வ ஸா1ஸ்த்ரமுலனு - சால ஸா1ஸ்தரமன்னி : 'சால' மற்றும் 'அன்னி' இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து வராது என்று கருதுகின்றேன்.

7 - ஸாத4கமு - ஸாத4னமு : இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Top

மேற்கோள்கள்
4 - ஜாதி ஹீனுலு - சாதி கெட்டுப்போனோர் - வால்மீகி முனிவரைக் குறிக்கலாம்.

5 - பாமு - பாம்பு - காளியன் - யமுனையில் கண்ணன் இவன் தலைமீது நடனமாடினான்.

5 - 3 - யானை - கசேந்திரனைக் குறிக்கும்.

5 - பிஸா1 - பிசாசு - விபீடணனைக் குறிக்கலாம்.

Top

விளக்கம்
1 - இதர மார்க3 ஸௌக்2யமு - மற்ற நெறிகள் - பக்தி நெறி தவிர மற்றவை. தியாகராஜர், மற்ற நெறி நிற்போரை கேலி செய்யவில்லை. மாறாக, தாங்கள் அந்நெறியில் பெறும் சுகத்தினை, பக்தி நெறியின் சுகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கின்றார்.

5 - பந்தி3 - பன்றி - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.

5 - பாதக - பாதகர் - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.

6 - தாரகமு - தாரகம் - 'ராமா' என்னும் பெயர் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் ஓடம்.

Top


Updated on 09 Dec 2010

Tuesday, December 7, 2010

தியாகராஜ கிருதி - மோஸ போகு - ராகம் கௌ3ளிபந்து - Mosa Poku - Raga Gaulipantu

பல்லவி
மோஸ போகு வினவே
ஸத்-ஸஹவாஸமு விட3வகே

அனுபல்லவி
தா3ஸ ஜனார்தி ஹருனி ஸ்ரீ ராமுனி
வாஸவ ஹ்ரு23ய நிவாஸுனி தெலியக (மோ)

சரணம்
சரணம் 1
1அல்பாஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு
2கல்பாந்தரமைன போது3 ஸே1
தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே
ஸங்கல்பமெல்லனீடே3ருனு மனஸா (மோ)


சரணம் 2
4ன தருணுலகாஸி1ஞ்சுடெல்ல
வெனுக தனுவுகலஸடே கானி
மனஸு சேத ஸேவ்யுனி தலசிதே
ஸு-மன ஸத்வமுனொஸகு3னே மனஸா (மோ)


சரணம் 3
கௌ3ரவ ஹீன த4னிகுல காசுடயு
நேரமுலகெட3மௌனு கானி
கா3ரவிஞ்சு த்யாக3ராஜ ஹ்ரு23-
யாகா3ருனி லோகாதா4ருனி தலசக (மோ)


பொருள் - சுருக்கம்
மனமே!

  • கேளாயடி!
  • மோசம் போகாதே; நல்லிணக்கத்தை விடாதேயடி!

  • அடியார்களின் இடர் களைவோனை, இராமனை, வாசவன் இதயத்துறைவோனைத் தெரிந்துகொள்ளாது மோசம் போகாதே.

    • அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
    • அரவு அணையில் துயில்வோனை முழுதும் நம்பினால், நினைத்தவையெல்லாம் ஈடேறும்;

    • செல்வம், மற்றும் பெண்டிருக்கு ஆசைப்படுவதெல்லாம், பின்னர் உடலுக்கு இளைப்பேயன்றி,
    • உள்ளத்தினால், வணங்கத்தக்கோனை நினைத்தால், உள்ளத் தூய்மையினை வழங்கிடுவானே;

    • கௌரவமற்ற செல்வந்தரிடம் காத்துக்கிடத்தல், தவறுகளுக்கு இடமாகும்;
    • எனவே தியாகராசனின் இதயத்தில் குடிகொண்டோனைக் காதலிப்பாய்;


  • உலகத்தின் ஊன்றுகோலினை நினையாது மோசம் போகாதே.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஸ/ போகு/ வினவே/
மோசம்/ போகாதே/ கேளாயடி/

ஸத்/-ஸஹவாஸமு/ விட3வகே/
நல்/-இணக்கத்தை/ விடாதேயடி/


அனுபல்லவி
தா3ஸ ஜன/-ஆர்தி/ ஹருனி/ ஸ்ரீ ராமுனி/
அடியார்களின்/ இடர்/ களைவோனை/ ஸ்ரீ ராமனை/

வாஸவ/ ஹ்ரு23ய/ நிவாஸுனி/ தெலியக/ (மோ)
வாசவன்/ இதயத்து/ உறைவோனை/ தெரிந்துகொள்ளாது/ மோசம்...


சரணம்
சரணம் 1
அல்ப/-ஆஸ்1ரயமுன/ கல்கு3/ வெஸனமுலு/
அற்ப/ புகலினால்/ உண்டாகும்/ துன்பங்கள்/

கல்ப-அந்தரமு/-ஐன/ போது3/ ஸே1ஷ/
கற்பங்கள் பல/ ஆனாலும்/ தொலையாது/ (அரவு) சேடன்/

தல்ப/ ஸ1யனுனி/ நெர/ நம்மிதே/
அணையில்/ துயில்வோனை/ முழுதும்/ நம்பினால்/

ஸங்கல்பமு/-எல்லனு/-ஈடே3ருனு/ மனஸா/ (மோ)
நினைத்தவை/ யெல்லாம்/ ஈடேறும்/ மனமே/


சரணம் 2
4ன/ தருணுலகு/-ஆஸி1ஞ்சுட/-எல்ல/
செல்வம்/ (மற்றும்) பெண்டிருக்கு/ ஆசைப்படுவது/ எல்லாம்/

வெனுக/ தனுவுகு/-அலஸடே/ கானி/
பின்னர்/ உடலுக்கு/ இளைப்பே/ யன்றி/

மனஸு சேத/ ஸேவ்யுனி/ தலசிதே/
உள்ளத்தினால்/ வணங்கத்தக்கோனை/ நினைத்தால்/

ஸு-மன/ ஸத்வமுனு/-ஒஸகு3னே/ மனஸா/ (மோ)
உள்ள/ தூய்மையினை/ வழங்கிடுவானே/ மனமே,/


சரணம் 3
கௌ3ரவ/ ஹீன/ த4னிகுல/ காசுடயு/
கௌரவம்/ அற்ற/ செல்வந்தரிடம்/ காத்துக்கிடத்தல்/

நேரமுலகு/-எட3மௌனு/ கானி/
தவறுகளுக்கு/ இடமாகும்/ எனவே/

கா3ரவிஞ்சு/ த்யாக3ராஜ/ ஹ்ரு23ய/-
காதலிப்பாய்/ தியாகராசனின்/ இதயத்தில்/

ஆகா3ருனி/ லோக/-ஆதா4ருனி/ தலசக/ (மோ)
குடிகொண்டோனை/ உலகத்தின்/ ஊன்றுகோலினை/ நினையாது/ மோசம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - கல்ப - கற்பம் - பிரமனுக்கு ஒரு நாள் - மனிதரின் 43200 கோடி ஆண்டுகள்
Top

விளக்கம்
1 - அல்பாஸ்1ரயமு - அற்பப் புகல் - 3-வது சரணத்தில் கூறிய செல்வந்தர்களைக் குறிக்கும்.

வாசவன் - இந்திரன்
Top


Updated on 07 Dec 2010

Sunday, December 5, 2010

தியாகராஜ கிருதி - தெர தீயக3 - ராகம் கௌ3ளிபந்து - Tera Teeyaga - Raga Gaulipantu

பல்லவி
தெர தீயக3 ராதா3 1லோனி
திருபதி வேங்கட ரமண மத்ஸரமனு (தெர)

அனுபல்லவி
பரம புருஷ 24ர்மாதி3 மோக்ஷமுல
பார-தோ3லுசுன்னதி3 நா லோனி (தெர)<

சரணம்
சரணம் 1
3மத்ஸ்யமுயாகலி கொனி காலமுசே
மக்3னமைன ரீதினுன்னதி3
அச்சமைன தீ3ப ஸன்னிதி4னி மரு-
3ட்333டி3 செரசினட்டுன்னதி3 (தெர)


சரணம் 2
இரவொந்த33 பு4ஜியிஞ்சு ஸமயமுன
ஈக3 தகு3லு ரீதினுன்னதி3
ஹரி த்4யானமு ஸேயு வேள சித்தமு
அந்த்யஜு வாட3கு போயினட்டுன்னதி3 (தெர)


சரணம் 3
வாகு3ரமனி தெலியக 4ம்ரு233ணமுலு
வச்சி தகு3லு ரீதினுன்னதி3
5வேக3மே 6நீ மதமுனனுஸுரிஞ்சின
த்யாக3ராஜ நுத மத3 மத்ஸரமனு (தெர)


பொருள் - சுருக்கம்
  • திருப்பதி வேங்கடரமணா!
  • பரம்பொருளே!
  • உனது நெறியினைக் கடைப்பிடித்த தியாகராசன் போற்றுவோனே!

  • காழ்ப்பெனும் (எனது) உள் திரையை நீக்கலாகாதா?

  • அறம் முதலாக, வீடு, ஆகியவற்றை (காழ்ப்பு) விரட்டியடிக்கின்றது!

    • மீன் பசிகொண்டு, சாவின் மடியில் வீழ்தல் போன்றுள்ளது;
    • திறந்த, விளக்கொளிரும் (இறைவன்) சன்னிதியில், திரை குறுக்கிட்டு மறைத்தல் போன்றுள்ளது;
    • நன்றாக உண்ணும்போது, (இலையில்) ஈயமர்தல் போன்றுள்ளது;
    • அரியைத் தியானிக்கும்போது, மனது சேரிக்குச் சென்றது போன்றுள்ளது;
    • கண்ணியென்று அறியாது, மான் கூட்டம் வந்தகப்படுதல் போன்றுள்ளது.


  • விரைவில், செருக்கு, காழ்ப்பெனும் (எனது) உள் திரைகளை நீக்கலாகாதா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தெர/ தீயக3 ராதா3/ லோனி/
திரையை/ நீக்கலாகாதா/ (எனது) உள்/

திருபதி/ வேங்கட/ ரமண/ மத்ஸரமு/-அனு/ (தெர)
திருப்பதி/ வேங்கட/ ரமணா/ காழ்ப்பு/ எனும்/ திரையை


அனுபல்லவி
பரம/ புருஷ/ த4ர்ம/-ஆதி3/ மோக்ஷமுல/
பரம்/ பொருளே/ அறம்/ முதலாக/ வீடு ஆகியவற்றை/

பார/-தோ3லுசு-உன்னதி3/ நா/ லோனி/ (தெர)
(காழ்ப்பு) விரட்டி/ யடிக்கின்றது/ எனது/ உள்/ திரையை


சரணம்
சரணம் 1
மத்ஸ்யமு/-ஆகலி/ கொனி/ காலமுசே/
மீன்/ பசி/ கொண்டு/ சாவின் மடியில்/

மக்3னமைன/ ரீதினி/-உன்னதி3/
வீழ்தல்/ போன்று/ உள்ளது/

அச்சமைன/ தீ3ப/ ஸன்னிதி4னி/ மருகு3-/
திறந்த/ விளக்கொளிரும்/ (இறைவன்) சன்னிதியில்/ திரை/

அட்333டி3/ செரசின/-அட்டு/-உன்னதி3/ (தெர)
குறுக்கிட்டு/ மறைத்தல்/ போன்று/ உள்ளது/


சரணம் 2
இரவு-ஒந்த33/ பு4ஜியிஞ்சு/ ஸமயமுன/
நன்றாக/ உண்ணும்/ போது/

ஈக3/ தகு3லு/ ரீதினி/-உன்னதி3/
(இலையில்) ஈ/ (அகப்படுதல்) அமர்தல்/ போன்று/ உள்ளது/

ஹரி/ த்4யானமு ஸேயு/ வேள/ சித்தமு/
அரியை/ தியானிக்கும்/ போது/ மனது/

அந்த்யஜு வாட3கு/ போயின/-அட்டு/-உன்னதி3/ (தெர)
தாழ்மக்கள்/ தெருவுக்கு (சேரிக்கு)/ சென்றது/ போன்று/ உள்ளது/


சரணம் 3
வாகு3ரமு/-அனி/ தெலியக/ ம்ரு23/ க3ணமுலு/
கண்ணி/ யென்று/ அறியாது/, மான்/ கூட்டம்/

வச்சி/ தகு3லு/ ரீதினி/-உன்னதி3/
வந்து/ அகப்படுதல்/ போன்று/ உள்ளது/

வேக3மே/ நீ/ மதமுனு/-அனுஸுரிஞ்சின/
விரைவில்/ உனது/ நெறியினை/ கடைப்பிடித்த/

த்யாக3ராஜ/ நுத/ மத3/ மத்ஸரமு/-அனு/ (தெர)
தியாகராசன்/ போற்றுவோனே/ செருக்கு/ காழ்ப்பு/ எனும்/ திரைகளை


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - மத்ஸ்யமு - மச்சமு : சரியான தெலுங்கு சொல் 'மச்செமு' ஆகும்.

Top

மேற்கோள்கள்
1 - லோனி தெர - உள் திரை - இச்சை, சினம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, காழ்ப்பு எனப்படும் உட்பகைவர் அறுவர்.

2 - 4ர்மாதி3 மோக்ஷமுல - அறம் முதலாக வீடு - புருஷார்த்தங்கள் எனப்படும் அறம், பொருள், இன்பம், வீடு

Top

விளக்கம்
4 - ம்ரு233ணமுலு - மிருகக் கூட்டம் - இவ்விடத்தில் 'மிருகம்' என்பது மானைக் குறிக்கும்.

5 - வேக3மே - விரைவில். இச்சொல்லினைப் பல்லவியுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'உனது நெறியினைக் கடைப்பிடத்த' என்பதுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

Top

6 - நீ மதமு - உனது நெறி - சரணாகதி. கீதையில் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) கண்ணன் உரைத்தது -

"அனைத்து தருமங்களையும் துறந்து என் ஒருவனையே சரணடைவாய்;
நான் உன்னை அனைத்துப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே.
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

மீன் சாவின் மடியில் வீழ்தல் - தூண்டிலிரையை உணவென்றெண்ணி

Top


Updated on 05 Dec 2010

Wednesday, December 1, 2010

தியாகராஜ கிருதி - காஸிச்சேதே3 - ராகம் கௌ3ளிபந்து - Kaasicchede - Raga Gaulipantu

பல்லவி
காஸிச்சேதே3 கொ3ப்பாயெனுரா கலிலோ ராஜுலகு

அனுபல்லவி
1ஹரி தா3ஸுலு ஸேவிம்பரனுசு ப்ரபு4வுலு
3ய மானிரி பரமெஞ்சக போயிரி (கா)

சரணம்
2ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ
ராஜஸுலை ஸன்மார்க3மெருக3க பராகு ஸேய க4னமோ
ஆஜன்மமு கொலிசே விப்ர வருலகானந்த3மு க3லதோ3
த்யாக3ராஜ வினுத நீ மாய கானி நீரஜ நயன
ஸுஜனாக4 விமோசன (கா)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் போற்றுவோனே! கமலக்கண்ணா! நல்லோர் பாவம் களைவோனே!

  • காசு கொடுப்பதே பெரிதானதய்யா, கலியில், அரசர்களுக்கு.

    • அரியின் தொண்டர்கள் வணங்கமாட்டாரென, பிரபுக்கள் தயையைக் கைவிட்டனர்;
    • மறுமையை யெண்ணாமற் போயினர்.

    • அரசாங்கத்திற்காக நான்கு சாதியினரைப் பேணுதல் மறுமைக்குச் சுகமோ?
    • இராசத நெறியோராகி, நன்னெறி யறியாது, அசட்டை செய்தல் மேன்மையோ?
    • வாழ்நாள் முழுதும் (பிரபுக்களைப்) புகழும் அந்தணரிற் சிறந்தோருக்கு ஆனந்தம் உண்டோ?


  • (யாவும்) உன் மாயை யன்றோ!

  • காசு கொடுப்பதே பெரிதானதய்யா, கலியில், அரசர்களுக்கு.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காஸு/-இச்சேதே3/ கொ3ப்ப/-ஆயெனுரா/ கலிலோ/ ராஜுலகு/
காசு/ கொடுப்பதே/ பெரிது/ ஆனதய்யா/ கலியில்/ அரசர்களுக்கு/


அனுபல்லவி
ஹரி/ தா3ஸுலு/ ஸேவிம்பரு/-அனுசு/ ப்ரபு4வுலு/
அரியின்/ தொண்டர்கள்/ வணங்கமாட்டார்/ என/ பிரபுக்கள்/

3ய/ மானிரி/ பரமு/-எஞ்சக/ போயிரி/ (கா)
தயையை/ கைவிட்டனர்/ மறுமையை/ யெண்ணாமற்/ போயினர்/


சரணம்
ராஜாங்க3மு கொரகு/ நால்கு3/ ஜாதுல/ ரக்ஷண/ பர/ ஸுக2மோ/
அரசாங்கத்திற்காக/ நான்கு/ சாதியினரை/ பேணுதல்/ மறுமைக்கு/ சுகமோ/

ராஜஸுலை/ ஸன்-மார்க3மு/-எருக3க/ பராகு/ ஸேய/ க4னமோ/
இராசத நெறியோராகி/ நன்னெறி/ யறியாது/ அசட்டை/ செய்தல்/ மேன்மையோ/

ஆஜன்மமு/ கொலிசே/ விப்ர/ வருலகு/-ஆனந்த3மு/ க3லதோ3/
வாழ்நாள் முழுதும்/ (பிரபுக்களைப்) புகழும்/ அந்தணரிற்/ சிறந்தோருக்கு/ ஆனந்தம்/ உண்டோ/

த்யாக3ராஜ/ வினுத/ நீ/ மாய/ கானி/ நீரஜ/ நயன/
தியாகராசன்/ போற்றுவோனே/ (யாவும்) உன்/ மாயை/ யன்றோ/ கமல/ கண்ணா/

ஸுஜன/-அக4/ விமோசன/ (கா)
நல்லோர்/ பாவம்/ களைவோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ - அரசாங்கத்திற்காக நான்கு சாதியினரைப் பேணுதல் மறுமைக்குச் சுகமோ? இது குறித்து மனு கூறியது (rAja dharma) நோக்கவும்.

".....அதனால் குடிமக்களை அரசன், தன் குழந்தைகளைப் போன்று மகிழ்விக்கட்டும். மக்களும், அரசன், மந்திரிகள், மற்ற அதிகாரிகளை, தங்களைக் காப்போர் என மதிக்கட்டும். ஏனெனில், உழவர்களும் மற்ற செல்வம் படைப்போருமே அரசனின் உண்மையான வல்லமையாகும். அரசன், அவர்களின் பாதுகாவலன். குடிமக்கள் இல்லையெனில், அவன் யாருக்கு அரசனெனப்படுவான்? மாறாக அரசன் இல்லையேல், யாருடைய குடிமக்கள் எனப்படுவர்? எனவே, ஆள்வோரும், ஆளப்படுவோரும் தத்தம் கடமைகளை இயற்றுவதில் சுதந்திரமாக இருக்கட்டும். ஆனால் எவற்றினில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவையோ அவற்றினில் ஒருவருக்கொருவர் பணிந்து நடக்கட்டும். ஆள்வோர், மக்களின் குரலுக்கு எதிராக நடக்காதிருக்கட்டும். மக்களும், மந்திரிகளும் மன்னனின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்யாதிருக்கட்டும்.....".

அரச தருமத்தினைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 100-வது அத்தியாயம்), ராமன் விரிவாகக் கூறியதனையும் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - ஹரி - பல புத்தகங்களில் இச்சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கீர்த்தனயில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் புத்தகங்களில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பல்லவியிலும், அனுபல்லவியிலும் கூறியவற்றை (காசு கொடுப்பது பெரிதானது - அரியின் தொண்டர்கள் தன்னை வணங்கமாட்டார்) நோக்குகையில், மக்களிடம் தயை காட்டுதல், மன்னனின் கடமையாகும் எனவும், அரசனைப் புகழ்ந்தால்தான், அரசன் அவர்களுக்குக் கொடையளிப்பான் என்பது தவறாகும் என்றும் தியாகராஜர் கருதுகின்றார். பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுவது கொடையாகாது.

Top

தயை - பயன் கருதாத கொடையும், பேணுதலும்
அரசாங்கத்திற்காக - அரசாங்கத் தேவைகளுக்காக.
இராசத நெறி - இச்சை, புகழுக்காக இயற்றப்படும் செயல்கள்.
நன்னெறி யறியாது - நன்னெறி நிற்காது என.
அந்தணருக்கு - 'கற்றறிந்தோருக்கு' என்றும் கொள்ளலாம்.

Top


Updated on 02 Dec 2010

Monday, November 29, 2010

தியாகராஜ கிருதி - எந்த பாபினைதி - ராகம் கௌ3ளிபந்து - Enta Paapinaiti - Raga Gaulipantu - Prahlada Bhakti Vijayam

பல்லவி
எந்த பாபினைதினேமி ஸேயுது3 ஹா
ஏலாகு3 தாளுது3னே ஓ ராம

அனுபல்லவி
அந்த து3:க2முலனு தீர்சு ஹரினி ஜூசி
எந்த வாரைனனு பா3ய ஸஹிந்துரே (எ)

சரணம்
சரணம் 1
மச்சிகதோ தானு முச்சடாடி3 மோஸ
பு3ச்சியேச மதி3 வச்செனோ கடகடா (எ)


சரணம் 2
ஆஸ மிஞ்சி ஆயாஸ பட3னு விதி4
வ்ராஸுனா நா முத்3து3 வேஸுனி கானமே (எ)


சரணம் 3
ஸேவ ஜேயுடே ஜீவனமனியுண்டி
தை3வமா நா பாலி பா4க்3யமிட்லாயெனே (எ)


சரணம் 4
ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜு தா பொங்கு3சு
பூஜிஞ்சு ஸ்ரீ ரகு4 ராஜிந்து3 லேனந்து3(கெந்த)


பொருள் - சுருக்கம்

  • எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?

    • அனைத்துத் துயரங்களையும் தீர்க்கும் அரியைக் கண்டு, எப்படிப்பட்டவரும் (அவனைப்) பிரிய சகிப்பரோ?
    • கனிவுடன், தான் உரையாடி, (பிறகு) மோசம் செய்து ஏய்க்க மனது வந்ததோ? ஐயையோ!
    • ஆசை மிகுந்து, அயர்ச்சி யடைய, பிரமன் (தலையில்) எழுதுவானா? எனதினிய வேடத்தோனைக் காணோமே!
    • சேவை செய்வதுவே பிழைப்பென இருந்தேன்; என்பங்கிற் பேறு இப்படியானதே!


  • திகழும் தியாகராஜன், தான் பேருவகையுடன் தொழும் ரகுராஜன் இங்கு இல்லாததற்கு, எத்தனைப் பாவியானேன்?
  • என்செய்வேன்? ஐயகோ! எவ்விதம் தாங்குவேன்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த/ பாபி/-ஐதினி/-ஏமி/ ஸேயுது3/ ஹா/
எத்தனை/ பாவி/ யானேன்/ என்/ செய்வேன்/ ஐயகோ/

ஏலாகு3/ தாளுது3னே/ ஓ ராம/
எவ்விதம்/ தாங்குவேன்/ ஓ இராமா/


அனுபல்லவி
அந்த/ து3:க2முலனு/ தீர்சு/ ஹரினி/ ஜூசி/
அனைத்து/ துயரங்களையும்/ தீர்க்கும்/ அரியை/ கண்டு/

எந்த வாரைனனு/ பா3ய/ ஸஹிந்துரே/ (எ)
எப்படிப்பட்டவரும்/ (அவனைப்) பிரிய/ சகிப்பரோ/


சரணம்
சரணம் 1
மச்சிகதோ/ தானு/ முச்சட-ஆடி3/ மோஸ/
கனிவுடன்/ தான்/ உரையாடி/ (பிறகு) மோசம்/

பு3ச்சி/-ஏச/ மதி3/ வச்செனோ/ கடகடா/ (எ)
செய்து/ ஏய்க்க/ மனது/ வந்ததோ/ ஐயையோ/


சரணம் 2
ஆஸ/ மிஞ்சி/ ஆயாஸ/ பட3னு/ விதி4/
ஆசை/ மிகுந்து/ அயர்ச்சி/ யடைய/ பிரமன்/ (தலையில்)

வ்ராஸுனா/ நா/ முத்3து3/ வேஸுனி/ கானமே/ (எ)
எழுதுவானா/ எனது/ இனிய/ வேடத்தோனை/ காணோமே/


சரணம் 3
ஸேவ/ ஜேயுடே/ ஜீவனமு/-அனி/-உண்டி/
சேவை/ செய்வதுவே/ பிழைப்பு/ என/ இருந்தேன்/

தை3வமா/ நா/ பாலி/ பா4க்3யமு/-இட்லு/-ஆயெனே/ (எ)
தெய்வமே/ என்/ பங்கிற்/ பேறு/ இப்படி/ யானதே/


சரணம் 4
ராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜு/ தா/ பொங்கு3சு/
திகழும்/ ஸ்ரீ தியாகராஜன்/ தான்/ பேருவகையுடன்/

பூஜிஞ்சு/ ஸ்ரீ ரகு4 ராஜு/-இந்து3/ லேனி-அந்து3கு/-(எந்த)
தொழும்/ ஸ்ரீ ரகு ராஜன்/ இங்கு/ இல்லாததற்கு/ எத்தனை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.
இப்பாடலில், பிரகலாதன் அரியை மறுபடியும் காண முறையிடுவதாக

Top


Updated on 30 Nov 2010