மோஸ போகு வினவே
ஸத்-ஸஹவாஸமு விட3வகே
அனுபல்லவி
தா3ஸ ஜனார்தி ஹருனி ஸ்ரீ ராமுனி
வாஸவ ஹ்ரு2த3ய நிவாஸுனி தெலியக (மோ)
சரணம்
சரணம் 1
1அல்பாஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு
2கல்பாந்தரமைன போது3 ஸே1ஷ
தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே
ஸங்கல்பமெல்லனீடே3ருனு மனஸா (மோ)
சரணம் 2
த4ன தருணுலகாஸி1ஞ்சுடெல்ல
வெனுக தனுவுகலஸடே கானி
மனஸு சேத ஸேவ்யுனி தலசிதே
ஸு-மன ஸத்வமுனொஸகு3னே மனஸா (மோ)
சரணம் 3
கௌ3ரவ ஹீன த4னிகுல காசுடயு
நேரமுலகெட3மௌனு கானி
கா3ரவிஞ்சு த்யாக3ராஜ ஹ்ரு2த3-
யாகா3ருனி லோகாதா4ருனி தலசக (மோ)
பொருள் - சுருக்கம்
மனமே!
- கேளாயடி!
- மோசம் போகாதே; நல்லிணக்கத்தை விடாதேயடி!
- அடியார்களின் இடர் களைவோனை, இராமனை, வாசவன் இதயத்துறைவோனைத் தெரிந்துகொள்ளாது மோசம் போகாதே.
- அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
- அரவு அணையில் துயில்வோனை முழுதும் நம்பினால், நினைத்தவையெல்லாம் ஈடேறும்;
- செல்வம், மற்றும் பெண்டிருக்கு ஆசைப்படுவதெல்லாம், பின்னர் உடலுக்கு இளைப்பேயன்றி,
- உள்ளத்தினால், வணங்கத்தக்கோனை நினைத்தால், உள்ளத் தூய்மையினை வழங்கிடுவானே;
- கௌரவமற்ற செல்வந்தரிடம் காத்துக்கிடத்தல், தவறுகளுக்கு இடமாகும்;
- எனவே தியாகராசனின் இதயத்தில் குடிகொண்டோனைக் காதலிப்பாய்;
- அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
- உலகத்தின் ஊன்றுகோலினை நினையாது மோசம் போகாதே.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மோஸ/ போகு/ வினவே/
மோசம்/ போகாதே/ கேளாயடி/
ஸத்/-ஸஹவாஸமு/ விட3வகே/
நல்/-இணக்கத்தை/ விடாதேயடி/
அனுபல்லவி
தா3ஸ ஜன/-ஆர்தி/ ஹருனி/ ஸ்ரீ ராமுனி/
அடியார்களின்/ இடர்/ களைவோனை/ ஸ்ரீ ராமனை/
வாஸவ/ ஹ்ரு2த3ய/ நிவாஸுனி/ தெலியக/ (மோ)
வாசவன்/ இதயத்து/ உறைவோனை/ தெரிந்துகொள்ளாது/ மோசம்...
சரணம்
சரணம் 1
அல்ப/-ஆஸ்1ரயமுன/ கல்கு3/ வெஸனமுலு/
அற்ப/ புகலினால்/ உண்டாகும்/ துன்பங்கள்/
கல்ப-அந்தரமு/-ஐன/ போது3/ ஸே1ஷ/
கற்பங்கள் பல/ ஆனாலும்/ தொலையாது/ (அரவு) சேடன்/
தல்ப/ ஸ1யனுனி/ நெர/ நம்மிதே/
அணையில்/ துயில்வோனை/ முழுதும்/ நம்பினால்/
ஸங்கல்பமு/-எல்லனு/-ஈடே3ருனு/ மனஸா/ (மோ)
நினைத்தவை/ யெல்லாம்/ ஈடேறும்/ மனமே/
சரணம் 2
த4ன/ தருணுலகு/-ஆஸி1ஞ்சுட/-எல்ல/
செல்வம்/ (மற்றும்) பெண்டிருக்கு/ ஆசைப்படுவது/ எல்லாம்/
வெனுக/ தனுவுகு/-அலஸடே/ கானி/
பின்னர்/ உடலுக்கு/ இளைப்பே/ யன்றி/
மனஸு சேத/ ஸேவ்யுனி/ தலசிதே/
உள்ளத்தினால்/ வணங்கத்தக்கோனை/ நினைத்தால்/
ஸு-மன/ ஸத்வமுனு/-ஒஸகு3னே/ மனஸா/ (மோ)
உள்ள/ தூய்மையினை/ வழங்கிடுவானே/ மனமே,/
சரணம் 3
கௌ3ரவ/ ஹீன/ த4னிகுல/ காசுடயு/
கௌரவம்/ அற்ற/ செல்வந்தரிடம்/ காத்துக்கிடத்தல்/
நேரமுலகு/-எட3மௌனு/ கானி/
தவறுகளுக்கு/ இடமாகும்/ எனவே/
கா3ரவிஞ்சு/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த3ய/-
காதலிப்பாய்/ தியாகராசனின்/ இதயத்தில்/
ஆகா3ருனி/ லோக/-ஆதா4ருனி/ தலசக/ (மோ)
குடிகொண்டோனை/ உலகத்தின்/ ஊன்றுகோலினை/ நினையாது/ மோசம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - கல்ப - கற்பம் - பிரமனுக்கு ஒரு நாள் - மனிதரின் 43200 கோடி ஆண்டுகள்
Top
விளக்கம்
1 - அல்பாஸ்1ரயமு - அற்பப் புகல் - 3-வது சரணத்தில் கூறிய செல்வந்தர்களைக் குறிக்கும்.
வாசவன் - இந்திரன்
Top
Updated on 07 Dec 2010