Thursday, December 9, 2010

தியாகராஜ கிருதி - ராம ராம க்ரு2ஷ்ணா - ராகம் கௌ3ளிபந்து - Rama Rama Krishna - Raga Gaulipantu

பல்லவி
ராம ராம க்ரு2ஷ்ணாயனரே
ராத்ரி பக3லு மா ஸீதா (ராம)

சரணம்
சரணம் 1
1இதர மார்க3 ஸௌக்2யமுலகு
அதனி ஹ்ரு23யமே ஸாக்ஷியு (ராம)


சரணம் 2
கானி பனுல கோரி கோரி
கரகு3சுண்டு3 மானவுலு (ராம)


சரணம் 3
குத்ஸிதபு மாடலகு
2உத்3து33 பொரலெடு3 ஜனுலு (ராம)


சரணம் 4
3ஸர்வ ஸா1ஸ்த்ரமுலனு சதி3வி
ஆஸ தா3ஸுலயின வாரு (ராம)


சரணம் 5
எது3டி பச்ச ஜூட3 லேக
ஹிதபு மாடலாடு3 ஜனுலு (ராம)


சரணம் 6
சல்லனி வாக்குலு பலிகி
ஸ்வாந்தமனலமைன வாரு (ராம)


சரணம் 7
பலுக நேர்சியடு33 போதே
தெலிவிகி ஹானியைன வாரு (ராம)


சரணம் 8
4ஜாதி ஹீனுலைன வாரு
ஜாணலைனாரதே3 ஸாக்ஷி (ராம)


சரணம் 9
5பாமு பந்தி33ஜ பிஸா1
பாதகாக்3ரேஸருலே
ஸாக்ஷி (ராம)


சரணம் 10
த்யாக3ராஜு தெலுஸுகொன்ன
6தாரகமிஹ பர 7ஸாத4கமு (ராம)


பொருள் - சுருக்கம்
 • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!

 • மற்ற நெறிகளின் சௌக்கியங்களுக்கு, அவரவர் உள்ளமே சாட்சியாகும்;

  • கூடாத பணிகளை விழைந்து, விழைந்து, இளைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களே!
  • கெட்ட சொற்களுக்கு மல்லாடிப் புரளும் மக்களே!
  • அனைத்து சாத்திரங்களைக் கற்றும், ஆசைக்கு அடிமையானோரே!
  • எதிராளியின் செழிப்பைக்காணச் சகியாது, (ஆனால் மேலுக்கு) இன்சொல் கூறுவோரே!
  • (வெளியில்) குளுமையான சொற்கள் கூறி, (ஆனால்) உள்ளுக்குள் வேகுவோரே!
  • பேசக் கற்று, (கேள்வி) கேட்கப் போனால், தெரிவற்றோரே!

 • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!

 • சாதி கெட்டுப்போனோரும் சான்றோராயினர், அஃதே சாட்சி;
 • பாம்பு, பன்றி, யானை, பிசாசு, பாதகர்கள் தலைசிறந்தோரானதே சாட்சி;

 • தியாகராசன் தெரிந்துகொண்ட தாரகம்;
 • இம்மை, மறுமைக்குச் சாதனம் (இதுவே).

 • இரவும் பகலும் 'நமது சீதாராமா, இராமா, கண்ணா' யென்பீர்!பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ க்ரு2ஷ்ணா/-அனரே/
ராமா/ ராமா/ கண்ணா/ யென்பீர்/

ராத்ரி/ பக3லு/ மா/ ஸீதா/ (ராம)
இரவும்/ பகலும்/ 'நமது/ சீதா/ ராமா...


சரணம்
சரணம் 1
இதர/ மார்க3/ ஸௌக்2யமுலகு/
மற்ற/ நெறிகளின்/ சௌக்கியங்களுக்கு/

அதனி/ ஹ்ரு23யமே/ ஸாக்ஷியு/ (ராம)
அவரவர்/ உள்ளமே/ சாட்சியாகும்/


சரணம் 2
கானி/ பனுல/ கோரி/ கோரி/
கூடாத/ பணிகளை/ விழைந்து/ விழைந்து/

கரகு3சு/-உண்டு3/ மானவுலு/ (ராம)
இளைத்துக்கொண்டு/ இருக்கும்/ மனிதர்களே/


சரணம் 3
குத்ஸிதபு/ மாடலகு/
கெட்ட/ சொற்களுக்கு/

உத்3து33/ பொரலெடு3/ ஜனுலு/ (ராம)
மல்லாடி/ புரளும்/ மக்களே


சரணம் 4
ஸர்வ/ ஸா1ஸ்த்ரமுலனு/ சதி3வி/
அனைத்து/ சாத்திரங்களை/ கற்றும்/

ஆஸ/ தா3ஸுலு/-அயின வாரு/ (ராம)
ஆசைக்கு/ அடிமை/ ஆனோரே/


சரணம் 5
எது3டி/ பச்ச/ ஜூட3/ லேக/
எதிராளியின்/ செழிப்பை/ காண/ சகியாது/

ஹிதபு/ மாடலு/-ஆடு3 ஜனுலு/ (ராம)
(ஆனால் மேலுக்கு) இன்/ சொல்/ கூறுவோரே/


சரணம் 6
சல்லனி/ வாக்குலு/ பலிகி/
(வெளியில்) குளுமையான/ சொற்கள்/ /கூறி/

ஸ்வாந்தமு/-அனலமு-ஐன வாரு/ (ராம)
(ஆனால்) உள்ளுக்குள்/ வேகுவோரே/


சரணம் 7
பலுக/ நேர்சி/-அடு33/ போதே/
பேச/ கற்று/ (கேள்வி) கேட்க/ போனால்/

தெலிவிகி/ ஹானி-ஐன வாரு/ (ராம)
தெரிவு/ அற்றோரே/


சரணம் 8
ஜாதி/ ஹீனுலைன வாரு/
சாதி/ கெட்டுப்போனோரும்/

ஜாணலு/-ஐனாரு/-அதே3/ ஸாக்ஷி/ (ராம)
சான்றோர்/ ஆயினர்/ அஃதே/ சாட்சி/


சரணம் 9
பாமு/ பந்தி3/ க3ஜ/ பிஸா1ச/
பாம்பு/ பன்றி/ யானை/ பிசாசு/

பாதக/-அக்3ரேஸருலே/ ஸாக்ஷி/ (ராம)
பாதகர்கள்/ தலைசிறந்தோரானதே/ சாட்சி/


சரணம் 10
த்யாக3ராஜு/ தெலுஸுகொன்ன/
தியாகராசன்/ தெரிந்துகொண்ட/

தாரகமு/-இஹ/ பர/ ஸாத4கமு/ (ராம)
தாரகம்/ இம்மை/ மறுமைக்கு/ சாதனம்/ (இதுவே)


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - உத்3து33 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல் 'உத்3தி3' என்பதன் திரிபு என்று கருதுகின்றேன்.

3 - ஸர்வ ஸா1ஸ்த்ரமுலனு - சால ஸா1ஸ்தரமன்னி : 'சால' மற்றும் 'அன்னி' இவ்விரண்டு சொற்களும் சேர்ந்து வராது என்று கருதுகின்றேன்.

7 - ஸாத4கமு - ஸாத4னமு : இவ்விரண்டு சொற்களுக்கும் பொருள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Top

மேற்கோள்கள்
4 - ஜாதி ஹீனுலு - சாதி கெட்டுப்போனோர் - வால்மீகி முனிவரைக் குறிக்கலாம்.

5 - பாமு - பாம்பு - காளியன் - யமுனையில் கண்ணன் இவன் தலைமீது நடனமாடினான்.

5 - 3 - யானை - கசேந்திரனைக் குறிக்கும்.

5 - பிஸா1 - பிசாசு - விபீடணனைக் குறிக்கலாம்.

Top

விளக்கம்
1 - இதர மார்க3 ஸௌக்2யமு - மற்ற நெறிகள் - பக்தி நெறி தவிர மற்றவை. தியாகராஜர், மற்ற நெறி நிற்போரை கேலி செய்யவில்லை. மாறாக, தாங்கள் அந்நெறியில் பெறும் சுகத்தினை, பக்தி நெறியின் சுகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கின்றார்.

5 - பந்தி3 - பன்றி - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.

5 - பாதக - பாதகர் - யாரைக்குறிக்குமென விளங்கவில்லை.

6 - தாரகமு - தாரகம் - 'ராமா' என்னும் பெயர் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் ஓடம்.

Top


Updated on 09 Dec 2010

No comments: