Saturday, July 3, 2010

தியாகராஜ கிருதி - நீவாட3 நே கா3ன - ராகம் ஸாரங்க - Neevaada Ne Gaana - Raga Saranga

பல்லவி
நீவாட3 நே கா3ன நிகி2ல லோக நிதா3
நிமிஷமோர்வ கலனா

அனுபல்லவி
தே3வாதி3 தே3வ பூ4-தே3வ வர பக்ஷ
ராஜீவாக்ஷ ஸாது4 ஜன ஜீவன ஸனாதன (நீ)

சரணம்
ஸத்யம்பு3 நித்யம்பு3 ஸமரமுன ஸௌ1ர்யம்பு3
அத்யந்த ரூபம்பு3 அமித ப3லமு
நித்யோத்ஸவம்பு3 கல நீகு நிஜ தா3ஸுட3னி
1தத்2யம்பு3 பல்கு ஸ்ரீ த்யாக3ராஜார்சித (நீ)


பொருள் - சுருக்கம்
  • அனைத்துலகக் காரணமே!
  • தேவாதி தேவா! அந்தணர்பால் உள்ள மேலோனே ! கமலக்கண்ணா! சாதுக்களின் வாழ்வே! என்றுமிருப்போனே!
  • தியாகராசனால் தொழப் பெற்றோனே!

  • உன்னவன் நானல்லாது, நிமிடமும் பொறுக்க இயல்வேனா?

    • வாய்மையே என்றைக்கும், களத்தினில் சூரத்தனம், மிகச்சிறந்த உருவம், அளவற்ற வலிமை, என்றும் திருவிழாவும் உடைய

  • உனக்கு உண்மைத் தொண்டனென ஆமோதிப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவாட3/ நே/ கா3ன/ நிகி2ல/ லோக/ நிதா3ன/
உன்னவன்/ நான்/ அல்லாது/ அனைத்து/ உலக/ காரணமே/

நிமிஷமு/-ஓர்வ/ கலனா/
நிமிடமும்/ பொறுக்க/ இயல்வேனா/


அனுபல்லவி
தே3வ/-ஆதி3/ தே3வ/ பூ4-தே3வ/ வர/ பக்ஷ/
தேவரின்/ ஆதி/ தேவா/ அந்தணர்/ மேலோனே/ பால் உள்ள/

ராஜீவ/-அக்ஷ/ ஸாது4 ஜன/ ஜீவன/ ஸனாதன/ (நீ)
கமல/ கண்ணா/ சாதுக்களின்/ வாழ்வே/ என்றுமிருப்போனே/


சரணம்
ஸத்யம்பு3/ நித்யம்பு3/ ஸமரமுன/ ஸௌ1ர்யம்பு3/
வாய்மையே/ என்றைக்கும்/ களத்தினில்/ சூரத்தனம்/

அத்யந்த/ ரூபம்பு3/ அமித/ ப3லமு/
மிகச்சிறந்த/ உருவம்/ அளவற்ற/ வலிமை/

நித்ய/-உத்ஸவம்பு3/ கல/ நீகு/ நிஜ/ தா3ஸுடு3/-அனி/
என்றும்/ திருவிழாவும்/ உடைய/ உனக்கு/ உண்மை/ தொண்டன்/ என/

தத்2யம்பு3 பல்கு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ (நீ)
ஆமோதிப்பாய்/ ஸ்ரீ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - தத்2யம்பு3 பல்கு - ஆமோதிப்பாய். சமஸ்கிருதச் சொல் 'ததா2ஸ்து' (அப்படியே ஆகட்டும்) என்பது 'தத்2யம்பு3' என்று தெலுங்கில் வழங்கும்.

புத்தகங்களில், 'தத்2யம்பு3 பல்கு' என்பது, தியாகராஜர், தான், இறைவனுக்கு உண்மையான தொண்டனென, அடித்துச் சொல்வதாகக் கொள்ளப்பட்டுள்ளது. வார்த்தைகளின் கோர்வையினைக் கருத்திற்கொண்டு, அங்ஙனம் பொருள் கொள்ள இயலாது. தியாகராஜர், இறைவனை, தான் உண்மைத் தொண்டனென, ஆமோதிக்கும்படி கேட்கின்றார்.

என்றும் திருவிழா - இறைவனின் செயல்கள் யாவும் கொண்டாடத்தக்கவையென

Top


Updated on 03 Jul 2010

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே

பல்லவியில் நீவாட +நே என்று பிரித்துப் பொருள் கொடுத்துள்ளீர். நீவாடனே என்றால் உன்னுடையவனே என்று பொருள் தராதா. ”உனக்கு உண்மைத் தொண்டனென ஆமோதிப்பாய்” என்று சரணத்தில் கூறியதோடு இது ஒத்துப் போகின்றது.
'தத்2யம்பு3 பல்கு' என்பதோடு ’ நிமிஷமோர்வ கலனா’ என்பதைச் சேர்த்துப் பொருள் கொள்ளக்கூடாதா.
உன்னவன் நானல்லாது, நிமிடமும் பொறுக்க இயல்வேனா? என்று பொருள் கொடுத்துள்ளீர். நானல்லாது என்பதற்கு நே கா3க என்றல்லவா இருக்கவேண்டும்.
திருப்பதி தேவஸ்தான பதிப்பில் பல்லவியில் நிமிஷமோர்வக2 க3லனா என்றுள்ளது.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

இந்த கீர்த்தனையின் பல்லவியின் சொற்கள் மிகவும் சுருக்கமாக இருப்பதனால் பொருள் கூறுவது கடினமாக உள்ளது. 'நீவாட3 நே கா3ன' என்பதனை 'நீவாட3னே கா3ன' என்றும் சேர்த்து பொருள் கொள்ளலாம்.

அடுத்த சொல் 'கா3ன' என்பதற்கு பதிலாக 'கா3னா' என்றிருந்தால், அதனை கேள்வியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அனைத்து புத்தகங்களிலும் 'நீ வாட3 நே கா3ன' என்றே கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெளியீட்டில் உள்ள 'நிமிஷமோர்வக3' என்பது எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருளையும் கலந்தாலோசித்த பின்னரே நான் இங்கு பொருள் கொடுத்துள்ளேன்.

பிறர், மாறான பொருள் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

வணக்கம்,
கோவிந்தன்