Sunday, July 4, 2010

தியாகராஜ கிருதி - மாமவ ரகு4ராம - ராகம் ஸாரங்க - Mamava Raghurama - Raga Saranga

பல்லவி
மாமவ ரகு4ராம மரகத மணி ஸ்1யாம

சரணம்
சரணம் 1
பாமர ஜன பீ4ம பாலித ஸுத்ராம (மா)


சரணம் 2
து3ரிதம்பு3லு போது3 1து3னும மனஸு ராது3 (மா)


சரணம் 3
கலஸா1ம்பு3தி4லோன கருண கரகி3 போயெனா (மா)


சரணம் 4
வினு மரி 2ஸமரமுனா 3விதி41ரமு விரிகெ3னா (மா)


சரணம் 5
4கல ஸத்யமு ஸுகு3ண கானனமுன நிலிசெனா (மா)


சரணம் 6
தி3வ்ய நராபக4ன தை3வத்வமு போயெனா (மா)


சரணம் 7
ராஜாதி4ப த்யாக3ராஜ வினுத பா33 (மா)


பொருள் - சுருக்கம்
  • இரகுராமா! மரகத மணி நீலவண்ணா!
  • தீய மக்களின் அச்சமே! இந்திரனைப் பேணுவோனே!
  • நற்குணத்தோனே!
  • திவ்விய மனித உடலோனே!
  • அரசர்கள் தலைவா! தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்றோனே!

  • என்னைக் காப்பாய்.

  • கேளாய்.
    • (எனது) பாவங்கள் அகலா; (அவற்றைக்) களைய (உனக்கு) மனது வாராது.
    • கலசக்கடலினில் கருணை கரைந்து போனதோ?
    • மேலும், (இலங்கை) போரினில் அந்தப் பிரமாத்திரம் உடைந்ததோ?
    • உள்ள வாக்குறுதியும், கானகத்திலேயே நின்றதோ?
    • (உனது) தெய்வத்தன்மை நீங்கியதோ?


  • நன்கு என்னைக் காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மாம்/ அவ/ ரகு4ராம/ மரகத/ மணி/ ஸ்1யாம/
என்னை/ காப்பாய்/ இரகுராமா/ மரகத/ மணி/ நீலவண்ணா/


சரணம்
சரணம் 1
பாமர/ ஜன/ பீ4ம/ பாலித/ ஸுத்ராம/ (மா)
தீய/ மக்களின்/ அச்சமே/ பேணுவோனே/ இந்திரனை/


சரணம் 2
து3ரிதம்பு3லு/ போது3/ து3னும/ மனஸு/ ராது3/ (மா)
(எனது) பாவங்கள்/ அகலா/ (அவற்றைக்) களைய/ (உனக்கு) மனது/ வாராது/


சரணம் 3
கலஸ1/-அம்பு3தி4லோன/ கருண/ கரகி3/ போயெனா/ (மா)
கலச/ கடலினில்/ கருணை/ கரைந்து/ போனதோ/


சரணம் 4
வினு/ மரி/ ஸமரமுன/-ஆ/ விதி4/ ஸ1ரமு/ விரிகெ3னா/ (மா)
கேளாய்/ மேலும்/ (இலங்கை) போரினில்/ அந்த/ பிரம/ அத்திரம்/ உடைந்ததோ/


சரணம் 5
கல/ ஸத்யமு/ ஸுகு3ண/ கானனமுன/ நிலிசெனா/ (மா)
உள்ள/ வாக்குறுதியும்/ நற்குணத்தோனே/ கானகத்திலேயே/ நின்றதோ/


சரணம் 6
தி3வ்ய/ நர/-அப-க4ன/ தை3வத்வமு/ போயெனா/ (மா)
திவ்விய/ மனித/ உடலோனே/ (உனது) தெய்வத்தன்மை/ நீங்கியதோ/


சரணம் 7
ராஜ/-அதி4ப/ த்யாக3ராஜ/ வினுத/ பா33/ (மா)
அரசர்கள்/ தலைவா/ தியாகராசனால்/ சிறக்கப் போற்றப் பெற்றோனே/ நன்கு/ என்னை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3னும - து3னுமு : இவ்விடத்தில், இச்சொல்லுக்கு, 'களைய' என்று பொருளாகும். அதற்கான தெலுங்கு சொல், 'துனும' ஆகும். ஆனால், எதுகை மோனைகளுக்காக 'து3னும' என்பது சரியாக இருக்கலாம். 'து3னுமு' என்பது தவறாகும்.

2 - ஸமரமுனா (ஸமரமுன+ஆ) - ஸமரமுன.

Top

மேற்கோள்கள்
4 - கல ஸத்யமு - உள்ள வாக்குறுதி - வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 18-வது அத்தியாயம்), சரண் கேட்டு வந்த விபீடணனுக்கும், அவனைப்போல் தன்னிடம் சரண் கோரி வருவோருக்கும், ராமன் கொடுத்த வாக்குறுதி -

"ஒருமுறையாகிலும், 'உன்னுடைய அடைக்கலம் கோருகின்றேன்' என்று எவன் இரக்கின்றானோ,
அவனுக்கு, அனைத்து உயிரினங்களினின்றும், அபயம் அளிக்கின்றேன்; இது என்னுடைய விரதமாம்."(33)

Top

விளக்கம்
3 - விதி41ரமு - பிரம அத்திரம். அனைத்து அத்திரங்களினின்றும் இவ்வத்திரம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படும். 'அந்த அத்திரத்தினை எய்து, எனது பாவங்களைக் களையாததேன்? அஃது போரில் உடைந்து போனதோ?' என்று கேலியாகக் கேட்கின்றார்.

கலசக்கடல் - பாற்கடல்

Top


Updated on 04 Jul 2010

No comments: