கருண 1ஜூட3வய்ய மாயய்ய காவேடி ரங்க3ய்ய
அனுபல்லவி
பரம புருஷ வினு மா பாலி 2பெனு த4னமா
வரத3 நலுகு3ரிலோ வரமொஸகி3 கரமிடி3 (க)
சரணம்
சேரடே3ஸி கனுலசே செலங்கு3ப4ய
3நாச்சாருலதோனு மரி ஸத்3ப4க்துலதோ
4ஆள்வாருலதோ நீவு வர நைவேத்3யமுல-
நாரகி3ஞ்சு வேளல 5ஹரி 6த்யாக3ராஜுனி கரமிடி3 (க)
பொருள் - சுருக்கம்
- எமதய்யா! காவேரி அரங்கய்யா!
- பரம்பொருளே! எமது பங்கிற் பெருஞ்செல்வமே! வரதா!
- அரி!
- கேள்.
- கருணை காட்டுவாயய்யா.
- நால்வரில், வரமளித்து, கைப்பற்றிக் கருணை காட்டுவாயய்யா.
- அகன்ற கண்களுடன் விளங்கும் இரு நாச்சியார்களுடன்,
- மேலும் நற்றொண்டர்களுடனும், ஆழ்வார்களுடனும்,
- நீ உயர் படையல்களினை ஏற்றருளும் வேளையில்,
- அகன்ற கண்களுடன் விளங்கும் இரு நாச்சியார்களுடன்,
- தியாகராசனை, கைப்பற்றி கருணை காட்டுவாயய்யா.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அய்ய/ மா/-அய்ய/ காவேடி/ ரங்க3ய்ய/
கருணை/ காட்டுவாய்/ அய்யா/ எமது/ அய்யா/ காவேரி/ அரங்கய்யா/
அனுபல்லவி
பரம புருஷ/ வினு/ மா/ பாலி/ பெனு/ த4னமா/
பரம்பொருளே/ கேள்/ எமது/ பங்கிற்/ பெருஞ்/ செல்வமே/
வரத3/ நலுகு3ரிலோ/ வரமு/-ஒஸகி3/ கரமு/-இடி3/ (க)
வரதா/ நால்வரில்/ வரம்/ அளித்து/ கை/ பற்றி/ கருணை...
சரணம்
சேரடே3ஸி/ கனுலசே/ செலங்கு3/-உப4ய/
அகன்ற/ கண்களுடன்/ விளங்கும்/ இரு/
நாச்சாருலதோனு/ மரி/ ஸத்3-ப4க்துலதோ/
நாச்சியார்களுடன்/ மேலும்/ நற்றொண்டர்களுடனும்/
ஆள்வாருலதோ/ நீவு/ வர/ நைவேத்3யமுலனு/
ஆழ்வார்களுடனும்/ நீ/ உயர்/ படையல்களினை/
ஆரகி3ஞ்சு/ வேளல/ ஹரி/ த்யாக3ராஜுனி/ கரமு/-இடி3/ (க)
ஏற்றருளும்/ வேளையில்/ அரி/ தியாகராசனை/ கை/ பற்றி/ கருணை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஜூட3வய்ய - ஜூடு3மய்ய.
2 - பெனு த4னமா - பென்னி தா4னமா : 'பென்னி தா4னமா' என்ற சொல் தவறாகும்.
6 - த்யாக3ராஜுனி கரமிடி3 - த்யாக3ராஜுனிபைனி.
Top
மேற்கோள்கள்
3 - நாச்சாருலதோனு - நாச்சியார் - இறைவனின் துணைவி - இரு நாச்சியார்கள் - இலக்குமி, பூதேவி
4 - ஆள்வாருலதோ - ஆழ்வார்களுடன் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் - ஆழ்வார்களின் விவரங்கள்
Top
விளக்கம்
5 - ஹரி - அரி! - இவ்விடத்தில், 'கேட்பதற்கு மன்னிப்பாய்' எனப் பொருள் படும்
நால்வரில் - நாலுபேர் அறிய
Top
Updated on 01 Jul 2010
No comments:
Post a Comment