நீவாட3 நே கா3ன நிகி2ல லோக நிதா3ன
நிமிஷமோர்வ கலனா
அனுபல்லவி
தே3வாதி3 தே3வ பூ4-தே3வ வர பக்ஷ
ராஜீவாக்ஷ ஸாது4 ஜன ஜீவன ஸனாதன (நீ)
சரணம்
ஸத்யம்பு3 நித்யம்பு3 ஸமரமுன ஸௌ1ர்யம்பு3
அத்யந்த ரூபம்பு3 அமித ப3லமு
நித்யோத்ஸவம்பு3 கல நீகு நிஜ தா3ஸுட3னி
1தத்2யம்பு3 பல்கு ஸ்ரீ த்யாக3ராஜார்சித (நீ)
பொருள் - சுருக்கம்
- அனைத்துலகக் காரணமே!
- தேவாதி தேவா! அந்தணர்பால் உள்ள மேலோனே ! கமலக்கண்ணா! சாதுக்களின் வாழ்வே! என்றுமிருப்போனே!
- தியாகராசனால் தொழப் பெற்றோனே!
- உன்னவன் நானல்லாது, நிமிடமும் பொறுக்க இயல்வேனா?
- வாய்மையே என்றைக்கும், களத்தினில் சூரத்தனம், மிகச்சிறந்த உருவம், அளவற்ற வலிமை, என்றும் திருவிழாவும் உடைய
- உனக்கு உண்மைத் தொண்டனென ஆமோதிப்பாய்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீவாட3/ நே/ கா3ன/ நிகி2ல/ லோக/ நிதா3ன/
உன்னவன்/ நான்/ அல்லாது/ அனைத்து/ உலக/ காரணமே/
நிமிஷமு/-ஓர்வ/ கலனா/
நிமிடமும்/ பொறுக்க/ இயல்வேனா/
அனுபல்லவி
தே3வ/-ஆதி3/ தே3வ/ பூ4-தே3வ/ வர/ பக்ஷ/
தேவரின்/ ஆதி/ தேவா/ அந்தணர்/ மேலோனே/ பால் உள்ள/
ராஜீவ/-அக்ஷ/ ஸாது4 ஜன/ ஜீவன/ ஸனாதன/ (நீ)
கமல/ கண்ணா/ சாதுக்களின்/ வாழ்வே/ என்றுமிருப்போனே/
சரணம்
ஸத்யம்பு3/ நித்யம்பு3/ ஸமரமுன/ ஸௌ1ர்யம்பு3/
வாய்மையே/ என்றைக்கும்/ களத்தினில்/ சூரத்தனம்/
அத்யந்த/ ரூபம்பு3/ அமித/ ப3லமு/
மிகச்சிறந்த/ உருவம்/ அளவற்ற/ வலிமை/
நித்ய/-உத்ஸவம்பு3/ கல/ நீகு/ நிஜ/ தா3ஸுடு3/-அனி/
என்றும்/ திருவிழாவும்/ உடைய/ உனக்கு/ உண்மை/ தொண்டன்/ என/
தத்2யம்பு3 பல்கு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-அர்சித/ (நீ)
ஆமோதிப்பாய்/ ஸ்ரீ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - தத்2யம்பு3 பல்கு - ஆமோதிப்பாய். சமஸ்கிருதச் சொல் 'ததா2ஸ்து' (அப்படியே ஆகட்டும்) என்பது 'தத்2யம்பு3' என்று தெலுங்கில் வழங்கும்.
புத்தகங்களில், 'தத்2யம்பு3 பல்கு' என்பது, தியாகராஜர், தான், இறைவனுக்கு உண்மையான தொண்டனென, அடித்துச் சொல்வதாகக் கொள்ளப்பட்டுள்ளது. வார்த்தைகளின் கோர்வையினைக் கருத்திற்கொண்டு, அங்ஙனம் பொருள் கொள்ள இயலாது. தியாகராஜர், இறைவனை, தான் உண்மைத் தொண்டனென, ஆமோதிக்கும்படி கேட்கின்றார்.
என்றும் திருவிழா - இறைவனின் செயல்கள் யாவும் கொண்டாடத்தக்கவையென
Top
Updated on 03 Jul 2010