காரு வேல்புலு நீகு 1ஸரி (கா)
அனுபல்லவி
2காருகு 3ஜிலகர
ஸம்பா3கந்தரமைனட்டு கானி (கா)
சரணம்
சரணம் 1
4தி3விடிகி தீ3பமு ரீதி
காவேடிகி 5காலுவல ரீதி கானி (கா)
சரணம் 2
6தம்மி வைரிகி தாரகல ரீதி
கம்ம வில்துனிகி காந்தி நருல ரீதி கானி (கா)
சரணம் 3
7ஸாக3ரமுனகு ஸரஸ்ஸு ரீதி
த்யாக3ராஜ வினுத 8த4ரலோ நீகு ஸரி (கா)
பொருள் - சுருக்கம்
- தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- ஆகார், (பிற) தெய்வங்கள் உனக்கு நிகர்
- கார் அரிசிக்கும், சீரக சம்பாவுக்கும் வேறுபாடு இருப்பது போன்று,
- தீவட்டிக்கு, விளக்கு போன்றும்,
- காவேரிக்கு, கால்வாய்கள் போன்றும்,
- தாமரைப் பகைவனுக்கு, தாரைகள் போன்றும்,
- ஒளியில், மலர் வில்லோனுக்கு, மனிதர்கள் போன்றும்,
- கடலுக்கு, ஏரி போன்றே யன்றி,
- கார் அரிசிக்கும், சீரக சம்பாவுக்கும் வேறுபாடு இருப்பது போன்று,
- புவியில், உனக்கு நிகர் ஆகார், (பிற) தெய்வங்கள்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காரு/ வேல்புலு/ நீகு/ ஸரி/ (கா)
ஆகார்/ (பிற) தெய்வங்கள்/ உனக்கு/ நிகர்/
அனுபல்லவி
காருகு/ ஜிலகர/ ஸம்பா3கு-/
கார் (அரிசிக்கும்), சீரக/ சம்பாவுக்கும்/
அந்தரமு/-ஐனட்டு/ கானி/ (கா)
வேறுபாடு/ இருப்பது போன்றே/ யன்றி/ ஆகார்...
சரணம்
சரணம் 1
தி3விடிகி/ தீ3பமு/ ரீதி/
தீவட்டிக்கு/ விளக்கு/ போன்றும்/
காவேடிகி/ காலுவல/ ரீதி/ கானி/ (கா)
காவேரிக்கு/ கால்வாய்கள்/ போன்றே/ யன்றி/ ஆகார்...
சரணம் 2
தம்மி/ வைரிகி/ தாரகல/ ரீதி/
தாமரை/ பகைவனுக்கு/ தாரைகள்/ போன்றும்/
கம்ம/ வில்துனிகி/ காந்தி/ நருல/ ரீதி/ கானி/ (கா)
மலர்/ வில்லோனுக்கு/ ஒளியில்/ மனிதர்கள்/ போன்றே/ யன்றி/ ஆகார்...
சரணம் 3
ஸாக3ரமுனகு/ ஸரஸ்ஸு/ ரீதி/
கடலுக்கு/, ஏரி/ போன்று/,
த்யாக3ராஜ/ வினுத/ த4ரலோ/ நீகு/ ஸரி/ (கா)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ புவியில்/ உனக்கு/ நிகர்/ ஆகார்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸரி - ஸரி காரு.
4 - தி3விடி - தீ3வடி - தி3வடி : சரியான தெலுங்கு சொல் 'தி3விடீ'யாகும். எனவே, 'தி3விடி' ஏற்கப்பட்டது.
5 - காலுவல - காலவல : இரண்டுமே சரியாகும்.
6 - தம்மி - தம்ம : சரியான தெலுங்கு சொல் 'தம்மி'யாகும்.
7 - ஸாக3ரமுனகு - ஸாக3ரானிகி.
8 - த4ரலோ நீகு ஸரி - த4ரலோ ராம நீகு ஸரி.
Top
மேற்கோள்கள்
2 - காரு - கார் அரிசி - தரத்தில் குறைந்த, அதனால் ஏழைகள் விரும்பும், அரிசி ரகம்.
3 - ஜிலகர ஸம்பா3 - சீரக சம்பா - (சீரகம் போன்று மெலிந்த) தரத்தில் உயர்ந்த, செல்வந்தர்கள் விரும்பும், அரிசி ரகம்.
Top
விளக்கம்
தாமரைப் பகைவன் - மதி
மலர் வில்லோன் - மன்மதன்
Top
Updated on 30 May 2010
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
இப்பாடலில் அனுபல்லவி, சரணம் ஆகியவற்றின் முடிவிலுள்ள ‘கானி’ என்னும் சொல் குழப்பத்தைத் தருகிறது. திருப்பதி திருமலை தேவஸ்தான வெளியீட்டில் இது ‘கா3னி’ என்றுள்ளது.
இரண்டும் ஒன்றா?
அனுபல்லவியில் ‘கார் அரிசிக்கும், சீரக சம்பாவுக்கும் வேறுபாடு இருப்பது போன்று’ என்று பொருள் கொடுத்துள்ளீர். கானி என்பது போன்று எனும் பொருள் தருமா? கானி என்ற சொல் இல்லாவிட்டால் கூட இதே பொருள் கிடைக்குமே.
சரணங்கள் ஒன்று மற்றும் இரண்டின் இறுதியில் வரும் ‘கானி’ எனும் சொல்லிற்கு ‘அன்றி’ என்று பொருள் கொடுத்துள்ளீர். இது எதிர்மறையான பொருளைத் தருகிறது.
நான் அறிந்தவரை ‘கானி’ என்பது ஒன்று அல்லது மற்றொன்று என்பதனைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
ஆங்கிலத்தில் கானி என்பதற்கு Much like என்பதனை உபயோகித்துள்ளீர்.
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
'கானி' என்ற தெலுங்கு சொல்லுக்கும், அதற்கு சமமான 'அன்றி' என்ற தமிழ்ச் சொல்லுக்கும் கிட்டத்தட்ட பொருளும் பிரயோகமும் ஒன்றுதான். தாங்கள் கூறுவது போன்று, 'கானி' என்ற சொல் இல்லாமலே, அனுபல்லவியிலும், சரணங்களிலும் பொருள் நிறைவு பெறுகின்றது.
எனக்குத்தெரிந்தவரை, இச்சொல்லினை, metre நிரப்புவதற்காக, தியாகராஜர் பயன்படுத்தியிருக்கலாம். இச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு சரியாகப்படவில்லை.
'கானி' மற்றும் 'கா3னி' இரண்டும் ஒன்றுதான்.
kAni பொருள் நோக்கவும்.
வணக்கம்,
கோவிந்தன்.
Post a Comment