Showing posts with label Kaaru Velpulu. Show all posts
Showing posts with label Kaaru Velpulu. Show all posts

Saturday, May 29, 2010

தியாகராஜ கிருதி - காரு வேல்புலு - ராகம் கல்யாணி - Kaaru Velpulu - Raga Kalyani

பல்லவி
காரு வேல்புலு நீகு 1ஸரி (கா)

அனுபல்லவி
2காருகு 3ஜிலகர
ஸம்பா3
கந்தரமைனட்டு கானி (கா)

சரணம்
சரணம் 1
4தி3விடிகி தீ3பமு ரீதி
காவேடிகி 5காலுவல ரீதி கானி (கா)


சரணம் 2
6தம்மி வைரிகி தாரகல ரீதி
கம்ம வில்துனிகி காந்தி நருல ரீதி கானி (கா)


சரணம் 3
7ஸாக3ரமுனகு ஸரஸ்ஸு ரீதி
த்யாக3ராஜ வினுத 84ரலோ நீகு ஸரி (கா)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

  • ஆகார், (பிற) தெய்வங்கள் உனக்கு நிகர்

    • கார் அரிசிக்கும், சீரக சம்பாவுக்கும் வேறுபாடு இருப்பது போன்று,
    • தீவட்டிக்கு, விளக்கு போன்றும்,
    • காவேரிக்கு, கால்வாய்கள் போன்றும்,
    • தாமரைப் பகைவனுக்கு, தாரைகள் போன்றும்,
    • ஒளியில், மலர் வில்லோனுக்கு, மனிதர்கள் போன்றும்,
    • கடலுக்கு, ஏரி போன்றே யன்றி,

  • புவியில், உனக்கு நிகர் ஆகார், (பிற) தெய்வங்கள்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காரு/ வேல்புலு/ நீகு/ ஸரி/ (கா)
ஆகார்/ (பிற) தெய்வங்கள்/ உனக்கு/ நிகர்/


அனுபல்லவி
காருகு/ ஜிலகர/ ஸம்பா3கு-/
கார் (அரிசிக்கும்), சீரக/ சம்பாவுக்கும்/

அந்தரமு/-ஐனட்டு/ கானி/ (கா)
வேறுபாடு/ இருப்பது போன்றே/ யன்றி/ ஆகார்...


சரணம்
சரணம் 1
தி3விடிகி/ தீ3பமு/ ரீதி/
தீவட்டிக்கு/ விளக்கு/ போன்றும்/

காவேடிகி/ காலுவல/ ரீதி/ கானி/ (கா)
காவேரிக்கு/ கால்வாய்கள்/ போன்றே/ யன்றி/ ஆகார்...


சரணம் 2
தம்மி/ வைரிகி/ தாரகல/ ரீதி/
தாமரை/ பகைவனுக்கு/ தாரைகள்/ போன்றும்/

கம்ம/ வில்துனிகி/ காந்தி/ நருல/ ரீதி/ கானி/ (கா)
மலர்/ வில்லோனுக்கு/ ஒளியில்/ மனிதர்கள்/ போன்றே/ யன்றி/ ஆகார்...


சரணம் 3
ஸாக3ரமுனகு/ ஸரஸ்ஸு/ ரீதி/
கடலுக்கு/, ஏரி/ போன்று/,

த்யாக3ராஜ/ வினுத/ த4ரலோ/ நீகு/ ஸரி/ (கா)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ புவியில்/ உனக்கு/ நிகர்/ ஆகார்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸரி - ஸரி காரு.

4 - தி3விடி - தீ3வடி - தி3வடி : சரியான தெலுங்கு சொல் 'தி3விடீ'யாகும். எனவே, 'தி3விடி' ஏற்கப்பட்டது.

5 - காலுவல - காலவல : இரண்டுமே சரியாகும்.

6 - தம்மி - தம்ம : சரியான தெலுங்கு சொல் 'தம்மி'யாகும்.

7 - ஸாக3ரமுனகு - ஸாக3ரானிகி.

8 - 4ரலோ நீகு ஸரி - த4ரலோ ராம நீகு ஸரி.

Top

மேற்கோள்கள்
2 - காரு - கார் அரிசி - தரத்தில் குறைந்த, அதனால் ஏழைகள் விரும்பும், அரிசி ரகம்.

3 - ஜிலகர ஸம்பா3 - சீரக சம்பா - (சீரகம் போன்று மெலிந்த) தரத்தில் உயர்ந்த, செல்வந்தர்கள் விரும்பும், அரிசி ரகம்.

Top

விளக்கம்
தாமரைப் பகைவன் - மதி
மலர் வில்லோன் - மன்மதன்
Top


Updated on 30 May 2010