Tuesday, June 1, 2010

தியாகராஜ கிருதி - நம்மி வச்சின - ராகம் கல்யாணி - Nammi Vacchina - Raga Kalyani

பல்லவி
நம்மி வச்சின நன்னு நயமுக3 ப்3ரோவவே 1நின்னு (ந)

அனுபல்லவி
கொம்மனி 2வரமுலனொஸகே3 3கோவூரி ஸுந்த3ரேஸ1 (ந)

சரணம்
4வேத3 புராணாக3 ஸா1ஸ்த்ராது3லு கு3மி கூடி3
பாத3முலனு கன ஜாலக 53திமாலி வேட3
நாத3 ரூப ஸ்ரீ ஸௌந்த3ர்ய நாயகீ பதே 6பே43
வாத3 ரஹித
த்யாக3ராஜ வரத3 7ஸுந்த3ரேஸ1 நினு (ந)


பொருள் - சுருக்கம்
  • 'பெற்றுக்கொள்' என வரங்களையளிக்கும் கோவூர் சுந்தரேசா!
  • நாத உருவே! சௌந்தரிய நாயகி உடனுறையே! வேற்றுமைகள், வாதங்களுக்கு மேற்பட்ட, தியாகராசனுக்கருளும் சுந்தரேசா!

    • வேத, புராண, ஆகம, சாத்திரங்கள் ஆகியவை ஒன்று கூடி, திருவடிகளைக் காண இயலாது, இரந்து வேண்ட!

    • உன்னை நம்பி வந்த என்னை சிறக்கக் காப்பாயய்யா



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நம்மி/ வச்சின/ நன்னு/ நயமுக3/ ப்3ரோவவே/ நின்னு/ (ந)
நம்பி/ வந்த/ என்னை/ சிறக்க/ காப்பாயய்யா/ உன்னை/


அனுபல்லவி
கொம்மு/-அனி/ வரமுலனு/-ஒஸகே3/ கோவூரி/ ஸுந்த3ரேஸ1/ (ந)
'பெற்றுக்கொள்'/ என/ வரங்களை/ யளிக்கும்/ கோவூர்/ சுந்தரேசா/


சரணம்
வேத3/ புராண/-ஆக3ம/ ஸா1ஸ்த்ர/-ஆது3லு/ கு3மி/ கூடி3/
வேத/ புராண/ ஆகம/ சாத்திரங்கள்/ ஆகியவை/ ஒன்று/ கூடி/

பாத3முலனு/ கன/ ஜாலக/ ப3திமாலி/ வேட3/
திருவடிகளை/ காண/ இயலாது/ இரந்து/ வேண்ட/

நாத3/ ரூப/ ஸ்ரீ ஸௌந்த3ர்ய/ நாயகீ/ பதே/ பே43/
நாத/ உருவே/ ஸ்ரீ சௌந்தரிய/ நாயகி/ உடனுறையே/ வேற்றுமைகள்/

வாத3/ ரஹித/ த்யாக3ராஜ/ வரத3/ ஸுந்த3ரேஸ1/ நினு/ (ந)
வாதங்களுக்கு/ மேற்பட்ட/ தியாகராசனுக்கு/ அருளும்/ சுந்தரேசா/ உன்னை/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நின்னு - நினு - சில புத்தகங்களி்ல் இச்சொல் கொடுக்கப்படவில்லை.

2 - வரமுலனொஸகே3 - வரமுலனொஸகு3.

7 - ஸுந்த3ரேஸ1 - ஸுந்த3ரேஸ்1வர : அனுபல்லவியில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று, 'ஸுந்த3ரேஸ1' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
3 - கோவூரி ஸுந்த3ரேஸ1 - கோவூர் சுந்தரேசா - காஞ்சீபுரம் அருகில் உள்ள சைவத்தலம் - இறைவன் பெயர் - சுந்தரேசர். இறைவி சௌந்தரிய நாயகி.

4 - வேத3 புராணாக3 - வேத புராண ஆகமங்கள் இரந்து வேண்ட - சிவனுடைய முடி, அடியினைக் காண, பிரமன் அன்னமாகவும், விஷ்ணு பன்றியாகவும் உருவங்கொண்டு, எவ்வளவு தேடியும் காணாது திரும்பியது பற்றி, லிங்க புராணம் - முதல் பாகத்தில், மற்றும் சிவன் தன்னைப்பற்றி தெய்வங்களுக்குக் கூறுவது பற்றி, லிங்க புராணம் - ஐந்தாவது பாகத்திலும் காணலாம்.

Top

விளக்கம்
5 - 3திமாலி வேட3 - இரந்து வேண்ட! - வேதங்களே அறிவொண்ணாத அத்தகைய உனக்கு, 'நான் எம்மாத்திரம்' என்ற பொருள்பட.

6 - பே43 வாத3 ரஹித - வேற்றுமைகள், வாதங்களுக்கு மேற்பட்ட. இதனை, 'பேத வாதம்' எனப்படும் 'துவைதம்' என்றும் கொள்ளலாம். ஆனால் புத்தகங்களில் முற்கூறிய வகையிலேயே பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அதுவே பொருத்தமானது. மத்வாசாரியாரின் 'பேத வாதம்' பற்றி அறிய.

Top


Updated on 01 Jun 2010

No comments: