Saturday, May 29, 2010

தியாகராஜ கிருதி - கமல ப4வுடு3 - ராகம் கல்யாணி - Kamala Bhavudu - Raga Kalyani - Prahlada Bhakti Vijayam

பல்லவி
கமல ப4வுடு3 வெட3லெ கனுகொ3னரே

அனுபல்லவி
விமல ஹ்ரு23யமுன விஷ்ணுனி தலசுசு (க)

சரணம்
சரணம் 1
3ண்ட3மு பட்டி கமண்ட3லமு பூனி
கொண்டா3டு3சுனு கோத3ண்ட3 பாணினி ஜூட3 (க)


சரணம் 2
ஸாரெகு ஹரி நாம ஸாரமு க்ரோலுசு
தீ4ருடு3 நீரதி4 தீரமுனகு நேடு3 (க)


சரணம் 3
1ஆஜானு-பா3ஹுடு3 அமரேந்த்3ர வினுதுடு3
ராஜீவாக்ஷுனி த்யாக3ராஜ நுதுனி ஜூட3 (க)


பொருள் - சுருக்கம்
காணீரே!

  • கமலத்திலுறைவோன்,
    • தீரன்,
    • முழந்தாள் நீளக் கைகளோன்,
    • அமரர் தலைவனால் போற்றப் பெற்றோன்,

  • தண்டம் பற்றி, கமண்டலமேந்தி,
  • களங்கமற்ற இதயத்தினில், விஷ்ணுவினை நினைத்துக்கொண்டு,
  • இறைவனைக் கொண்டாடிக்கொண்டு,
  • எவ்வமயமும், அரி நாம சாரத்தினைச் சுவைத்துக்கொண்டு,
    • கோதண்டபாணியினை
    • கமலக்கண்ணனை,
    • தியாகராசனால் போற்றப் பெற்றோனைக் காண

  • கடற்கரையினுக்கு, இன்று, புறப்படனன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கமல/ ப4வுடு3/ வெட3லெ/ கனுகொ3னரே/
கமலத்தில்/ உறைவோன்/ புறப்படனன்/ காணீரே/


அனுபல்லவி
விமல/ ஹ்ரு23யமுன/ விஷ்ணுனி/ தலசுசு/ (க)
களங்கமற்ற/ இதயத்தினில்/ விஷ்ணுவினை/ நினைத்துக்கொண்டு/ கமலத்தில்....


சரணம்
சரணம் 1
3ண்ட3மு/ பட்டி/ கமண்ட3லமு/ பூனி/
தண்டம்/ பற்றி/ கமண்டலம்/ ஏந்தி/

கொண்டா3டு3சுனு/ கோத3ண்ட3/ பாணினி/ ஜூட3/ (க)
கொண்டாடிக்கொண்டு/ கோதண்ட/ பாணியினை/ காண/ கமலத்தில்....


சரணம் 2
ஸாரெகு/ ஹரி/ நாம/ ஸாரமு/ க்ரோலுசு/
எவ்வமயமும்/ அரி/ நாம/ சாரத்தினை/ சுவைத்துக்கொண்டு/

தீ4ருடு3/ நீரதி4/ தீரமுனகு/ நேடு3/ (க)
தீரன்/ கடல்/ கரையினுக்கு/ இன்று/ கமலத்தில்....


சரணம் 3
ஆஜானு/-பா3ஹுடு3/ அமர/-இந்த்3ர/ வினுதுடு3/
முழந்தாள் நீள/ கைகளோன்/ அமரர்/ தலைவனால்/ போற்றப் பெற்றோன்/

ராஜீவ/-அக்ஷுனி/ த்யாக3ராஜ/ நுதுனி/ ஜூட3/ (க)
கமல/ கண்ணனை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ காண/ கமலத்தில்....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ஆஜானு-பா3ஹுடு3 அமரேந்த்3ர வினுதுடு3 - முழந்தாள் நீளக் கைகளோன், அமரர் தலைவனால் போற்றப் பெற்றோன் - புத்தகங்களில், இவ்விரண்டும், அரியினைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்குப் பின் வரும், 'ராஜீவாக்ஷுனி', 'த்யாக3ராஜ நுதுனி' (கமலக்கண்ணனை, தியாகராசனால் போற்றப்பெற்றோனை) ஆகிய இரண்டும் 'னி' (ஐ) என்று முடிவடைகின்றன. ஆனால், முற்கூறிய இரண்டும், 'டு3' (ன்) என்று முடிவடைகின்றன. எனவே, இவை பிரமனைக் குறிக்கும்.

இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், தியாகராஜர், அரிக்கும், பிரகலாதனுக்குமிடையே, கடற்கரையினில் நடக்கும் உரையாடலினைக் காண, பிரமன் புறப்பட்டு வருதலைச் சித்திரிக்கின்றார்.
Top

கமலத்திலுறைவோன் - பிரமன்
தீரன் - பிரமனைக் குறிக்கும்
கடற்கரையினுக்கு - அரியும் பிரகலாதனும் உரையாடும் இடம்
முழந்தாள் நீளக் கைகளோன் - பிரமனைக் குறிக்கும்
அமரர் தலைவனால் போற்றப் பெற்றோன் - பிரமனைக் குறிக்கும்
Top


Updated on 29 May 2010

No comments: