Thursday, August 6, 2009

தியாகராஜ கிருதி - ப்ராரப்3த4ம் - ராகம் ஸ்வராவளி - Praarabdham - Raga Svaraavali

பல்லவி
1ப்ராரப்34மிட்டுண்ட33னொருலனன
பனி லேது3 நீவுண்ட33

அனுபல்லவி
பா3ல கு3ண ஸீ1ல ஜன பால வரத3
க்ரு2பாலவால காலாதீத ஸூ1ல த4ர வினுத நா (ப்ரா)

சரணம்
உபகாரி நேனைதே 2அபகாருலய்யெத3ரு
க்ரு2ப ஜூசிதே மிகு33நெபமுலெஞ்செத3ரய்ய
சபல சித்துலு ப4க்த வேஷுலை நனு ஜூசி
41த்ருவுலய்யெத3ரு ஸ்ரீ த்யாக3ராஜாப்த நா (ப்ரா)


பொருள் - சுருக்கம்
இளைஞனே! குணசீலனே! மக்களைக் காப்போனே! வரதா! கருணைக் கடலே! காலத்திற்கு புறம்பானவனே! சூலமேந்துவோனால் போற்றப் பெற்றோனே! தியாகராசனுக்கினியோனே!
  • எனது முன்வினை இப்படியிருக்க, பிறரை (குறை) சொல்லத் தேவையில்லை, நீயிருக்க

    • உதவுவோன் நானாகினால், தீங்கிழைப்போராகினர்;

    • கருணை காட்டினால், மிக்கு குற்றங்கள் கண்டனரய்யா;

    • நிலையற்ற உள்ளத்தினர், தொண்டர் வேடமிட்டு, என்னைக் கண்டு, (எனக்கு) பகைவராகினர்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்ராரப்34மு/-இட்டு/-உண்ட33னு/-ஒருலனு/-அன/
முன்வினை/ இப்படி/ இருக்க/ பிறரை/ (குறை) சொல்ல/

பனி/ லேது3/ நீவு/-உண்ட33/
தேவை/ இல்லை/ நீ/ இருக்க/


அனுபல்லவி
பா3ல/ கு3ண/ ஸீ1ல/ ஜன/ பால/ வரத3/
இளைஞனே/ குண/ சீலனே/ மக்களை/ காப்போனே/ வரதா/

க்ரு2பா/-ஆலவால/ கால/-அதீத/ ஸூ1ல/ த4ர/ வினுத/ நா/ (ப்ரா)
கருணை/ கடலே/ காலத்திற்கு/ புறம்பானவனே/ சூலம்/ ஏந்துவோனால்/ போற்றப் பெற்றோனே/ எனது/ முன்வினை...


சரணம்
உபகாரி/ நேனு/-ஐதே/ அபகாருலு/-அய்யெத3ரு/
உதவுவோன்/ நான்/ ஆகினால்/ தீங்கிழைப்போர்/ ஆகினர்/

க்ரு2ப/ ஜூசிதே/ மிகு3ல/ நெபமுலு/-எஞ்செத3ரு/-அய்ய/
கருணை/ காட்டினால்/ மிக்கு/ குற்றங்கள்/ கண்டனர்/ அய்யா/

சபல/ சித்துலு/ ப4க்த/ வேஷுலை/ நனு/ ஜூசி/
நிலையற்ற/ உள்ளத்தினர்/ தொண்டர்/ வேடமிட்டு/ என்னை/ கண்டு/

1த்ருவுலு/-அய்யெத3ரு/ ஸ்ரீ த்யாக3ராஜ/-ஆப்த/ நா/ (ப்ரா)
(எனக்கு) பகைவர்/ ஆகினர்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ இனியோனே/ எனது/ முன்வினை...

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்ராரப்34மிட்டுண்ட33 - ப்ராரப்34மிட்லுண்ட33.

2 - அபகாருலய்யெத3ரு - அபகாருலய்யேரு.

3 - நெபமுலெஞ்செத3ரய்ய - நெபமுலெஞ்சேரய்ய.

4 - 1த்ருவுலய்யெத3ரு - ஸ1த்ருவுலய்யேரு.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
1 - ப்ராரப்34ம் - முன்வினை இருவகைப்படும். இப்பிறவியில் பயனளிக்கத் தொடங்கிய வினைகள் 'ப்ராரப்34ம்' என்றும், பயனளிக்கத் தொடங்காதவை 'ஸஞ்சிதம்' என்றும் கூறுவர்.

சூலமேந்துவோன் - சிவன்

Top


Updated on 06 Aug 2009

No comments: