Sunday, August 30, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கு பெத்3தல - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Enduku Peddala - Raga Sankarabharanam

பல்லவி
எந்து3கு 1பெத்33ல வலெ பு3த்3தி4 2இய்யவு
எந்து3 போது3னய்ய ராமய்ய

அனுபல்லவி
அந்த3ரி வலெ 3தா3டி தா3டி வத3ரிதி
4அந்த3 ரானி பண்டா3யெ கத3ரா (எந்து3கு)

சரணம்
வேத3 ஸா1ஸ்த்ர தத்வார்த2முலு தெலிஸி
5பே43 ரஹித 6வேதா3ந்தமுலு தெலிஸி
7நாத3 வித்3 மர்மம்பு3லனு 8தெலிஸி
நாத2 த்யாக3ராஜ நுத நிஜமுக3 (எந்து3கு)


பொருள் - சுருக்கம்
இராமய்யா! நாதா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • ஏன் சான்றோர் போன்று அறிவருளாயோ? எங்கு செல்வேனய்யா?

  • எல்லோரையும் போன்று, தாண்டித் தாண்டி உளறினேன்;

  • எட்டாத கனியானதன்றோ, ஐயா?

    • மறைகள், சாத்திரங்களின் உட்பொருளறிந்தும்,

    • பேதமற்ற வேதாந்தத்தினையறிந்தும்,

    • நாத வித்தையின் மருமங்களையறிந்தும்,

  • உண்மையாக ஏன் சான்றோர் போன்று அறிவருளாயோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/ பெத்33ல/ வலெ/ பு3த்3தி4/ இய்யவு/
ஏன்/ சான்றோர்/ போன்று/ அறிவு/ அருளாயோ/

எந்து3/ போது3னு/-அய்ய/ ராமய்ய/
எங்கு/ செல்வேன்/ அய்யா/ இராமய்யா/


அனுபல்லவி
அந்த3ரி/ வலெ/ தா3டி/ தா3டி/ வத3ரிதி/
எல்லோரையும்/ போன்று/ தாண்டி/ தாண்டி/ உளறினேன்/

அந்த3 ரானி/ பண்டு3/-ஆயெ/ கத3ரா/ (எந்து3கு)
எட்டாத/ கனி/ ஆனது/ அன்றோ, ஐயா/


சரணம்
வேத3/ ஸா1ஸ்த்ர/ தத்வ-அர்த2முலு/ தெலிஸி/
மறைகள்/ சாத்திரங்களின்/ உட்பொருள்/ அறிந்தும்/

பே43/ ரஹித/ வேதா3ந்தமுலு/ தெலிஸி/
பேதம்/ அற்ற/ வேதாந்தத்தினை/ அறிந்தும்/

நாத3/ வித்3ய/ மர்மம்பு3லனு/ தெலிஸி/
நாத/ வித்தையின்/ மருமங்களை/ அறிந்தும்/

நாத2/ த்யாக3ராஜ/ நுத/ நிஜமுக3/ (எந்து3கு)
நாதா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ உண்மையாக/ ஏன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - இய்யவு - ஈயவு.

6 - வேதா3ந்தமுலு - வேதா3ந்தமுனு : பொதுவாக, 'வேதா3ந்தமு' என்ற சொல், ஒருமையில்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இதுபோன்ற மற்ற சொற்களாகிய 'தத்வார்த2முலு' மற்றும் 'மர்மம்பு3லனு' ஆகியவற்றினைக் கருத்திற்கொண்டு, இங்கும் 'வேதா3ந்தமுலு' ஏற்கப்பட்டது.

Top

மேற்கோள்கள்
4 - அந்த3 ரானி பண்டு3 - எட்டாத கனி - சிறாருக்கு கூறப்படும் நீதிக் கதைகளில், 'சீ சீ இந்த திராட்சைப்பழம் புளிக்கும்' என்ற நரியின் கதையினை, தியாகராஜர் குறிப்பிடுவதாகத் தோன்றுகின்றது.

5 - பே43 ரஹித வேதா3ந்த - பேதமற்ற வேதாந்தம் - சீவனும் பரம்பொருளும் ஒன்றேயெனல். மத்3வாசாரியார் விளக்கிய த்3வைதம், 'பே4த வாத3ம்' (சீவனும், பரம்பொரும் வேறாகும் எனல்) எனப்படும். த்3வைதம் மற்றும் மத்3வாசாரியாரைப் பற்றிய விவரங்கள் நோக்கவும்.

Top

விளக்கம்
1 - பெத்33ல வலெ - இவ்விடம் நாரதர் போன்றவர்களைக் குறிக்கும்.

3 - தா3டி தா3டி வத3ரிதி - தாண்டித் தாண்டி உளறினேன் - இச்சொற்களின் பொருளும், நோக்கமும் சரிவர விளங்கவில்லை.

7 - நாத3 வித்3 - நாத வித்தை - இவ்விடத்தில், 'நாதோபாஸனை' எனப்படும் இசை வழிபாட்டினைக் குறிக்கும்.

8 - தெலிஸி - அறிந்து - சில புத்தகங்களில், இதனை, சான்றோரைக் குறிப்பதாக - "மறைகள், சாத்திரங்களின் உட்பொருள், பேதமற்ற வேதாந்தத்தம் மற்றும் நாத வித்தையின் மருமங்களையறிந்த சான்றோர் போன்று" - என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அப்படியாகில், இச்சொல், 'தெலிஸின' என்றிருக்கவேண்டும். மேலும், மனிதனின் முயற்சிகள் இறைவனின் கருணையில்லாது நிறைவுறாது. அந்தக் கருணை பெறாது, எவ்வளவு கற்றாலும், ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்குமேயொழிய, அந்தக் கல்வியின் பயன் கிட்டாது. அந்தக் கருணையைத்தான் 'நிஜமுக3' - உண்மையாக - என்ற சொல்லினால் தியாகராஜர் சுட்டுகின்றார்.

Top


Updated on 31 Aug 2009

2 comments:

Govindaswamy said...

திரு கோவிந்தன் அவர்களே
தா3டி தா3டி வத3ரிதி - தாண்டித் தாண்டி உளறினேன் - இச்சொற்களின் பொருளும், நோக்கமும் சரிவர விளங்கவில்லை என்று கூறுகிறீர்.
முன்பே ஆங்கிலத்தில் வதரிதி என்பது வத3லிதி என்று மறுவியிருக்கலாமா என்ற
கேள்வியை எழுப்பினேன். ”அறிவைப் பெறுவதற்காகத் தாண்டித் தாண்டி (என் முயற்சியைக்) கை விட்டேன்” என்ற பொருள் தராதா?

நன்றி
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்கள்க்கு,

தியாகராஜர் தமது 'ப4க்தி பி3ச்சமிய்யவே' என்ற கீர்த்தனையில் தமக்கு 'ஸாத்வீக ப4க்தியினை அருள வேண்டுகின்றார். அந்த கீர்த்தனையில், நான் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலும், எனக்குத் தெரிந்தவரை கொடுத்துள்ளேன். அதாவது, 'கௌ3ண ப4க்தி' வரையில் மனிதனுடைய முயற்சி தேவையென்றும், தியாகராஜர், 'ஸாத்வீக ப4க்தி' என்றழைக்கும் 'முக்2ய ப4க்தி'க்கு இறைவனுடைய அருள் தேவையென்றும்.

அநத் கீர்த்தனையையும் தாங்கள் நோக்கவும். இரண்டும், கிட்டத்தட்ட, ஒரே மாதிரியான நோக்கமுடையவை.

இறைவனுடைய அருளின்றி கிடைக்கமாட்டாத 'முக்2ய ப4க்தி'யும், இந்த கீர்த்தனையில் கூறப்படும் 'நிஜமுக3 பெத்3த3லவலெ பு3த்3தி4' என்பதும், எனது சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றேயாகும்.

'வத3லிதி' என்ற சொல் எந்த புத்தகத்திலும் காணப்படவில்லை.

வணக்கம்
கோவிந்தன்