Saturday, August 29, 2009

தியாகராஜ கிருதி - எந்து3கீ சலமு - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Enduki Chalamu - Raga Sankarabharanam

பல்லவி
எந்து3கீ 1சலமு நேனெவரிதோ தெல்புது3

அனுபல்லவி
கந்த3ர்ப ஜனக நீகே
காந்த 2செப்பெனோ ஹரி ஹரி (எந்து3)

சரணம்
சரணம் 1
கௌஸல்ய செப்பெனோ நீகே ஸம்மதி லேதோ3
அஹல்ய செப்பெனோ 3நன்னாத3ரிஞ்ச லேவோ (எந்து3)


சரணம் 2
4கப3ரீ-பா4ரிணி ஸீதா காந்த செப்பெனோ லேக
13ரி செப்பெனோ நீது3 ஸா1ந்தமெந்து3 போயெ (எந்து3)


சரணம் 3
5பா3லயௌ 6ஸ்வயம்ப்ரப4 செப்பெனோ
தாள நா தரமா 7ஸ்ரீ த்யாக3ராஜுனிபை நீ(கெந்து3)


பொருள் - சுருக்கம்
மாரனையீன்றோனே!
  • தியாகராசன் மீதுனக்கு எதற்கிந்த வெறுப்பு? நான் எவரிடம் சொல்வேன்?

  • உனக்கெந்த பெண்மணி சொன்னாளோ, ஐயகோ!!

    • கௌசலை சொன்னாளோ?

    • அகலிகை சொன்னாளோ?

    • அளகபாரத்தினள், சீதைப் பெண்ணாள் சொன்னாளோ? அன்றி

    • சபரி சொன்னாளோ?

    • கன்னி சுயம்பிரபை சொன்னாளோ?

  • உனக்கே சம்மதமில்லையோ?

  • என்னையாதரிக்க மாட்டாயோ?

  • உனது மனவமைதி எங்கு போனதோ?

  • பொறுக்க என்னாலியலுமோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3கு/-ஈ/ சலமு/ நேனு/-எவரிதோ/ தெல்புது3/
எதற்கு/ இந்த/ வெறுப்பு/ நான்/ எவரிடம்/ சொல்வேன்/


அனுபல்லவி
கந்த3ர்ப/ ஜனக/ நீகு/-ஏ/
மாரனை/ ஈன்றோனே/ உனக்கு/ எந்த/

காந்த/ செப்பெனோ/ ஹரி ஹரி/ (எந்து3)
பெண்மணி/ சொன்னாளோ/, ஐயகோ/


சரணம்
சரணம் 1
கௌஸல்ய/ செப்பெனோ/ நீகே/ ஸம்மதி/ லேதோ3/
கௌசலை/ சொன்னாளோ/ உனக்கே/ சம்மதம்/ இல்லையோ/

அஹல்ய/ செப்பெனோ/ நன்னு/-ஆத3ரிஞ்ச/ லேவோ/ (எந்து3)
அகலிகை/ சொன்னாளோ/ என்னை/ ஆதரிக்க/ மாட்டாயோ/


சரணம் 2
கப3ரீ-பா4ரிணி/ ஸீதா/ காந்த/ செப்பெனோ/ லேக/
அளகபாரத்தினள்/ சீதை/ பெண்ணாள்/ சொன்னாளோ/ அன்றி/

13ரி/ செப்பெனோ/ நீது3/ ஸா1ந்தமு/-எந்து3/ போயெ/ (எந்து3)
சபரி/ சொன்னாளோ/ உனது/ மனவமைதி/ எங்கு/ போனதோ/


சரணம் 3
பா3லயௌ/ ஸ்வயம்ப்ரப4/ செப்பெனோ/
கன்னி/ சுயம்பிரபை/ சொன்னாளோ/

தாள/ நா/ தரமா/ ஸ்ரீ த்யாக3ராஜுனிபை/ நீகு/-(எந்து3)
பொறுக்க/ என்னால்/ இயலுமோ/ ஸ்ரீ தியாகராசன் மீது/ உனக்கு/ எதற்கிந்த...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - செப்பெனோ - ஜெப்பெனோ - அனுபல்லவியிலும், சரணங்களிலும் வரும் இச்சொல், சில இடங்களில் 'செப்பெனோ' என்றும், மற்ற இடங்களில், 'ஜெப்பெனோ' என்றும் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சீராக இருப்பதற்கென, 'செப்பெனோ' என இங்கு ஏற்கப்பட்டது.

4 - கப3ரீ-பா4ரிணி - கப3ரி-பா4ரிணி : 'கனத்த கூந்தல்' என்று பொருளுடைய 'கவரீ-ப4ர' அல்லது 'கவரீ-பா4ர' என்ற வடமொழிச்சொல், தெலுங்கில் 'கப3ரீ-பா4ரமு' என்று வழங்குகின்றது. தமிழில் 'அளகபாரம்' - 'கூந்தற்பாரம்' என்று வழக்கு

7 - ஸ்ரீ த்யாக3ராஜுனிபை - த்யாக3ராஜுனிபை

Top

மேற்கோள்கள்
6 - ஸ்வயம்ப்ரப4 - சுயம்பிரபை - இராமன் முத்தியளித்த ராமயணத்தினின் ஒரு பாத்திரம். அனுமனும் மற்ற வானரர்களும், சீதையைத் தேடி செல்கையில், ஒரு மாயக் குகையினுள் புகுகின்றனர். அங்கோர், அழகிய மாளிகையையும், அதனைக் காக்கும் மூதாட்டி ஒருத்தியைக் காண்கின்றனர். அவள்தான் 'மேரு ஸாவர்ணி'யின் மகளான 'சுயம்பிரபை' என்னும் கன்னி. அவளைப்பற்றி மேற்கொண்டு விவரங்கள் ஏதும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 51-வது அத்தியாயம் நோக்கவும். 'அத்3யாத்ம ராமாயண'த்தில் (கிஷ்கிந்தா காண்டம், அத்தியாயம் 6), ராமன், அவளுக்கு முத்தி அளித்தான் என்று கூறப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
1 - சலமு - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'சஞ்சலம்', 'பிடிவாதம்', 'வெறுப்பு', 'கெட்ட எண்ணம்' ஆகிய பொருட்களுண்டு. ஆனால், 'கோளுரைத்தாளோ' என்ற பொருளுடைய 'சொன்னாளோ' என்ற சொல்லினைக் கருதி, அங்ஙனம், மற்றோர் தூண்டுதலால் ஏற்படும், 'சினம்' அல்லது 'வெறுப்பு', 'சலமு' என்ற சொல்லுக்குப் பொருளாகலாம். அங்ஙனமே இங்கு ஏற்கப்பட்டது.

3 - ஆத3ரிஞ்ச - இந்த தெலுங்கு சொல்லுக்கு, 'மதித்தல்' என்று பொருளாகும். இது 'ஆதரி' என்ற தமழ்ச்சொல்லினின்றும் சிறிது மாறுபட்டது.

5 - பா3 - கன்னி. தியாகராஜர் 'அப்ப ராம ப3க்தி' என்ற கீர்த்தனையில், சுயம்பிரபையை 'அப3லை' என்று கூறுகின்றார். 'அபலை' என்ற சொல் பொதுவாக 'பெண்' என்றும், குறிப்பாக, 'வலுவற்றவள்' என்றும் பொருளாகும்.

சொன்னாளோ - கோளுரைத்தல்

Top


Updated on 30 Aug 2009

No comments: