Wednesday, September 2, 2009

தியாகராஜ கிருதி - ஏமி நேரமு - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Emi Neramu - Raga Sankarabharanam

பல்லவி
ஏமி நேரமு நன்னு ப்3ரோவ
எந்த பா4ரமு 1நாவல்ல (ஏமி)

அனுபல்லவி
ஸாமஜ ராஜ வரது33னி முனு
லஸத்-கீர்தி கல்க3 லேதா3 நாபை (ஏமி)

சரணம்
2தீ3ன ப3ந்து4வனி தே3வ தே3வு-
3ஸமான க4னுட3னி த4ர்மாத்முட3னுசுனு
ஞான த4னுலு கு3ண கா3னமு ஸேய
பி3ரான ஜூட3வு த்யாக3ராஜார்சித நாபை (ஏமி)


பொருள் - சுருக்கம்
தியாகராசனால் தொழப் பெற்றோனே!
  • என்னால் என்ன குற்றம்?

  • என்னைக் காத்தலெத்தனைச் சுமை?

  • கரியரசனுக்கருள்வோனென, முன்னம் பெரும் புகழ் (உனக்கு) கிடைக்கவில்லையா?


    • எளியோரின் சுற்றமென,

    • வானோர் கடவுளென,

    • நிகரற்ற மேலோனென,

    • அறவுளத்தோனென,

  • ஞானச் செல்வர்கள் (உனது) பண்புகளைப் புகழ்ந்தேத்த,

  • விரைவினில் (என்னை) நோக்கமாட்டாய்;

  • என்மீதென்ன குற்றம்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏமி/ நேரமு/ நன்னு/ ப்3ரோவ/
என்ன/ குற்றம்/ என்னை/ காத்தல்/

எந்த/ பா4ரமு/ நாவல்ல/ (ஏமி)
எத்தனை/ சுமை/ என்னால்/


அனுபல்லவி
ஸாமஜ/ ராஜ/ வரது3டு3/-அனி/ முனு/
கரி/ அரசனுக்கு/ அருள்வோன்/ என/ முன்னம்/

லஸத்/-கீர்தி/ கல்க3 லேதா3/ நாபை/ (ஏமி)
பெரும்/ புகழ்/ (உனக்கு) கிடைக்கவில்லையா/ என்மீது/ என்ன...


சரணம்
தீ3ன/ ப3ந்து4வு/-அனி/ தே3வ/ தே3வுடு3/-
எளியோரின்/ சுற்றம்/ என/, வானோர்/ கடவுள்/

அஸமான/ க4னுடு3/-அனி/ த4ர்மாத்முடு3/-அனுசுனு/
நிகரற்ற/ மேலோன்/ என/ அறவுளத்தோன்/ என/

ஞான/ த4னுலு/ கு3ண/ கா3னமு ஸேய/
ஞான/ செல்வர்கள்/ (உனது) பண்புகளை/ புகழ்ந்தேத்த/

பி3ரான/ ஜூட3வு/ த்யாக3ராஜ/-அர்சித/ நாபை/ (ஏமி)
விரைவினில்/ (என்னை) நோக்கமாட்டாய்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ என்மீது/ என்ன...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - தீ3ன ப3ந்து4வனி - தீ3ன ப3ந்து4வு - தீ3ன ப3ந்து4.

மேற்கோள்கள்

விளக்கம்
1 - நாவல்ல - என்னால். இச்சொல் 'எந்த பா4ரமு'-உடன் இணைத்து (எத்தனைச் சுமை என்னால்) என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இதற்குமுன் வரும், 'நன்னு ப்3ரோவ' (என்னைக் காக்க) என்பதில், 'நன்னு' (என்னை) மிகுதியாகும். எனவே, அனுபல்லவியிலும், சரணத்திலும் 'நாபை' என்ற சொல் பல்லவியுடன் இணைப்பது போன்று, 'நாவல்ல' என்பதனையும் 'ஏமி நேரமு' என்பதனுடன் இணைத்து, பொருள் கொள்ளப்பட்டது.

Top


Updated on 02 Sep 2009

No comments: