Friday, October 31, 2008

மனஸு லோனி மர்மமு - ராகம் ஹிந்தோ3ளம் - Manasuloni Marmamunu - Raga Hindolam

பல்லவி
மனஸு லோனி 1மர்மமுனு தெலுஸுகோ
மான ரக்ஷக மரகதாங்க3 நா (மனஸு)

அனுபல்லவி
இன குலாப்த 2நீவே கானி
வேரெவரு லேரு
ஆனந்த3 ஹ்ரு23ய (மனஸு)

சரணம்
முனுபு ப்ரேம-க3ல தொ3ரவை ஸதா3
சனுவுனேலினதி3 கொ3ப்ப காத3ய்ய
கனிகரம்பு3தோனீ வேள 3நா
கரமு பட்டு
த்யாக3ராஜ வினுத (மனஸு)


பொருள் - சுருக்கம்
மானத்தைக் காப்போனே! மரகத (நிற) உடலோனே!பரிதி குலத்திற்கினியோனே! ஆனந்தமான இதயத்தோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

எனது மனத்தின் உள் மருமத்தினையறிந்துகொள்வாய்; நீயே யன்றி வேறெவருமிலர்;

முன்பு, அன்புடைத் தலைவனாகி எவ்வமயமும் பிரியமுடன், ஆண்டது பெரிதன்றய்யா; கனிவுடன் இவ்வேளை யெனது கரம் பற்றுவாய்.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனஸு/ லோனி/ மர்மமுனு/ தெலுஸுகோ/
மனத்தின்/ உள்/ மருமத்தினை/ அறிந்துகொள்வாய்/

மான/ ரக்ஷக/ மரகத/-அங்க3/ நா/ (மனஸு)
மானத்தை/ காப்போனே/ மரகத (நிற)/ உடலோனே/ எனது/ மனத்தின் ...

அனுபல்லவி
இன/ குல/-ஆப்த/ நீவே/ கானி/
பரிதி/ குலத்திற்கு/ இனியோனே/ நீயே/ அன்றி/

வேரு/-எவரு/ லேரு/ ஆனந்த3/ ஹ்ரு23ய/
வேறு/ எவரும்/ இலர்/ ஆனந்தமான/ இதயத்தோனே/

சரணம்
முனுபு/ ப்ரேம-க3ல/ தொ3ரவை/ ஸதா3/
முன்பு/ அன்புடை/ தலைவனாகி/ எவ்வமயமும்/

சனுவுன/-ஏலினதி3/ கொ3ப்ப காது3/-அய்ய/
பிரியமுடன்/ ஆண்டது/ பெரிதன்று/ அய்யா/

கனிகரம்பு3தோனு/-ஈ வேள/ நா/
கனிவுடன்/ இவ்வேளை/ எனது/

கரமு/ பட்டு/ த்யாக3ராஜ/ வினுத/
கரம்/ பற்றுவாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/

குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மர்மமுனு - மர்மமுலு

மேற்கோள்கள்

விளக்கம்
2 - நீவே கானி வேரெவரு லேரு - 'நீயேயன்றி வேறெவருமிலர்' - இதனை 'என்னைக் காப்பவர் உன்னையன்றி வேறு யாருமிலர்' என்றோ 'என் மனதில் உன்னையன்றி வேறெவருமிலர்' என்றோ பொருள் கொள்ளலாம். இந்தப் பாடல் 'நாயகி' பாவத்தில் உள்ளதால் இரண்டாவது பொருள் மிகு பொருந்தும்

3 - நா கரமு பட்டு - 'கரம் பற்றுவாய்' - இது நாயகி நாயகனை நோக்கிப் பகரும் சொல்லாகும். அதனால் இந்தப் பாடல் 'நாயகி' பாவத்தில் உள்ளது எனக் கொள்ளலாம்.
Top


No comments: