வராலந்து3கொம்மனி நாயந்து3
வஞ்சன ஸேய ந்யாயமா
அனுபல்லவி
ஸுராஸுர வினுத ராம நா மனஸு
ஸு-ப4க்தினி கோரியுண்ட3க3 நனு (வ)
சரணம்
சரணம் 1
மனஸுன நிஜமுக3 நம்மின வாரி
மனஸு கொஞ்ச ப2லமாஸிஞ்சக3
ராத3னுசு க4னுனி ஜேஸின நீ பி3ருது3கு
கனக கஸி1பு ஸுதுடு3 ஸாக்ஷி காதா3 (வ)
சரணம் 2
அ-விவேகமுதோ தெலிஸி தெலியகனு
ப4வ ஸுக2முலகாஸி1ஞ்சின கானி
த்4ருவமைன ப2லமொஸகு3 நீ ஸ1க்திகி
த்4ருவுடு3 ஸாக்ஷி காதா3 ராம நனு (வ)
சரணம் 3
சராசராத்மக ஸுர பூஜிதயிக
பராகு லேகனு ஸததமு நீ
த3ய ராவலெனனுசு கோரின ஸ்1ரீ த்யாக3-
ராஜுனிபை க்ரு2ப லேக நனு (வ)
பொருள் - சுருக்கம்
- வானோரும் அசுரரும் போற்றும் இராமா!
- சராசர உருவே! வானோர் தொழுவோனே!
- வரங்கள் பெற்றுக்கொள்ளச்சொல்லி, என்னிடம் வஞ்சனை செய்தல் நியாயமா?
- எனதுள்ளம் நற்றொண்டினைக் கோரியிருக்க,
- என்னை வரங்கள் பெற்றுக்கொள்ளச்சொல்லி, என்னிடம் வஞ்சனை செய்தல் நியாயமா?
- உள்ளத்தில் உண்மையாக (உன்னை) நம்பினவர்களின் மனது, அற்பப் பயனை வேண்டப் போகாதென, மேலோனாக்கிய உனது விருதுக்கு, இரணியகசிபுவின் மகன் சாட்சியன்றோ?
- பகுத்தறிவின்றி, தெரிந்தோ, தெரியாமலோ, உலக சுகங்களுக்கு ஆசைப் பட்டாலும், நிலையான பயனளிக்கும் உனதாற்றலுக்கு துருவன் சாட்சியன்றோ?
- இனியும் அசட்டை இல்லாது, என்றைக்கும் உனது தயை வரவேண்டுமெனக் கோரிய தியாகராசனின் மீது கருணையின்றி,
- உள்ளத்தில் உண்மையாக (உன்னை) நம்பினவர்களின் மனது, அற்பப் பயனை வேண்டப் போகாதென, மேலோனாக்கிய உனது விருதுக்கு, இரணியகசிபுவின் மகன் சாட்சியன்றோ?
- என்னை வரங்கள் பெற்றுக்கொள்ளச்சொல்லி, என்னிடம் வஞ்சனை செய்தல் நியாயமா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வராலு/-அந்து3கொம்மு/-அனி/ நாயந்து3/
வரங்கள்/ பெற்றுக்கொள்ள/ சொல்லி/ என்னிடம்/
வஞ்சன/ ஸேய/ ந்யாயமா/
வஞ்சனை/ செய்தல்/ நியாயமா/
அனுபல்லவி
ஸுர/-அஸுர/ வினுத/ ராம/ நா/ மனஸு/
வானோரும்/ அசுரரும்/ போற்றும்/ இராமா/ எனது/ உள்ளம்/
ஸு-ப4க்தினி/ கோரி/-உண்ட3க3/ நனு/ (வ)
நற்றொண்டினை/ கோரி/ யிருக்க/ என்னை/ வரங்கள்...
சரணம்
சரணம் 1
மனஸுன/ நிஜமுக3/ நம்மின வாரி/
உள்ளத்தில்/ உண்மையாக/ (உன்னை) நம்பினவர்களின்/
மனஸு/ கொஞ்ச/ ப2லமு/-ஆஸிஞ்சக3/
மனது/ அற்ப/ பயனை/ வேண்ட/
ராது3/-அனுசு/ க4னுனி/ ஜேஸின/ நீ/ பி3ருது3கு/
போகாது/ என/ மேலோன்/ ஆக்கிய/ உனது/ விருதுக்கு/
கனக/ கஸி1பு/ ஸுதுடு3/ ஸாக்ஷி/ காதா3/ (வ)
இரணிய/ கசிபுவின்/ மகன்/ சாட்சி/ யன்றோ/
சரணம் 2
அ-விவேகமுதோ/ தெலிஸி/ தெலியகனு/
பகுத்தறிவின்றி/ தெரிந்தோ/ தெரியாமலோ/
ப4வ/ ஸுக2முலகு/-ஆஸி1ஞ்சின கானி/
உலக/ சுகங்களுக்கு/ ஆசைப் பட்டாலும்/
த்4ருவமைன/ ப2லமு/-ஒஸகு3/ நீ/ ஸ1க்திகி/
நிலையான/ பயன்/ அளிக்கும்/ உனது/ ஆற்றலுக்கு/
த்4ருவுடு3/ ஸாக்ஷி/ காதா3/ ராம/ நனு/ (வ)
துருவன்/ சாட்சி/ யன்றோ/ இராமா/ (ஆகவே) என்னை/ வரங்கள்...
சரணம் 3
சர/-அசர/-ஆத்மக/ ஸுர/ பூஜித/-இக/
சர/ அசர/ உருவே/ வானோர்/ தொழுவோனே/ இனியும்/
பராகு/ லேகனு/ ஸததமு/ நீ/
அசட்டை/ இல்லாது/ என்றைக்கும்/ உனது/
த3ய/ ராவலெ/-அனுசு/ கோரின/
தயை/ வரவேண்டும்/ என/ கோரிய/
ஸ்ரீ த்யாக3ராஜுனிபை/ க்ரு2ப/ லேக/ நனு/ (வ)
ஸ்ரீ தியாகராசனின் மீது/ கருணை/ யின்றி/ என்னை/ வரங்கள்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
இரணியகசிபுவின் மகன் - பிரகலாதன்
சராசரம் - அசைவன மற்றும் அசையாதன
Top
Updated on 26 Nov 2010
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
சரணம் 1 ல் “ஆஸிஞ்சக3 ராது3 அனுசு” என்பதற்கு ’வேண்டப் போகாதென ’ என்று பொருள் கொடுத்துள்ளீர். ”அற்பப் பயனுக்கு ஆசைப்பகூடாது3 என்று கூறி மேலோன் ஆக்கிய” என்று பொருள் கொள்ளலாமே. அனுசு என்பதற்கு என்று கூறி என்றுபொருள் அல்லவா?
வணக்கம்
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
பிரகலாதனை, இறைவன் 'வரங்கள் கேள்' என்றான். ஆனால் பிரகலாதனோ, தனக்கு இறைவனின் பக்தியொன்றைத் தவிர வேறெதுவும் வேண்டாமென்றும், இறைவனைத் தூற்றிய தனது தந்தையை மன்னித்தால் போதும் என்றும் வேண்டினான். இதனால் நமக்குத் தெரிவது, இறைவனை முழுதுமாக நம்பினவர் உள்ளம், வரங்கள் வேண்டப் போகாது என்பதுதான். அதனால், வரங்களுக்கு ஆசைப்படக் கூடாது என்று கூறுவது இந்த சூழ்நிலையில் பொருந்தாது.
வணக்கம்
வே கோவிந்தன்
Post a Comment