Saturday, November 27, 2010

தியாகராஜ கிருதி - இந்தனுசு வர்ணிம்ப - ராகம் கு3ண்ட3க்ரிய - Intanuchu Varnimpa - Raga Gundakriya

பல்லவி
இந்தனுசு வர்ணிம்ப தரமா
ப்3ரஹ்மேந்த்3ராது3லகைன

அனுபல்லவி
கந்துனி கன்ன மா சக்கனி
கல்யாண ராம சந்த்3ர நீ 1ஸொக3(ஸிந்த)

சரணம்
சரணம் 1
சல்லனி சூபுல கன்னுலு மரி
ஜாபி3ல்லி களல கேரின ஆனனமு
மெல்லனி மாடலப4ய கரமுலிவி-
யெல்ல ஸஹஜமைன நீ கு3ண(மிந்த)


சரணம் 2
அன்யுல கோரி கோ4ர தபமு-
லென்னென்னோ ஜேஸி வரமுலந்தி3
2மூர்த4ன்யுலைன வாரி மத3ம்பு3
ராஜன்ய லகு4வுனனணசே பராக்ரம(மிந்த)


சரணம் 3
வாகீ3ஸா1தி3 ஸுர கோட்லகு
3வேதா33ம ஸா1ஸ்த்ரமுலகு கன-கூ33னி
நாக3 ராஜ பூ4ஷணுடை34ஸ்ரீ
த்யாக3ராஜ
ஸன்னுத நீது3 மஹிம(லிந்த)


பொருள் - சுருக்கம்
  • காமனையீன்ற எமதினிய கலியாண இராம சந்திரா!
  • மன்னா!
  • அரவரசனை யணிவோனாகிய உயர் தியாகராசன் நற்போற்றி செய்வோனே!

  • இவ்வளவு என வருணிக்கத் தரமா, பிரமன், இந்திராதியருக்காகிலும்?

    • உனது சொகுசு,
    • குளிர்ந்த பார்வையுடைய கண்கள், மதியின் களையைக் கெக்கலிக்கும் வதனம், கனிந்த சொற்கள், அபயமளிக்கும் கரங்கள் - இவை யாவும் இயற்கையான உனது குணங்கள்,
    • மற்ற கடவுளரைக் கோரி, கடுந் தவங்கள் எத்தனையெத்தனையோ இயற்றி, வரங்கள் பெற்று, தலைசிறந்தவரானோரின் செருக்கினை, எளிதாக அடக்கும் (உனது) பேராற்றல்,
    • நாமகள் மணாளன் முதலாக தேவ கோடிகளுக்கும், மறை, ஆகம, சாத்திரங்களுக்கும் காணக்கூடாத, உனது மகிமைகள்,

  • இவ்வளவென வருணிக்கத் தரமா, பிரமன், இந்திராதியருக்காகிலும்?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்த/-அனுசு/ வர்ணிம்ப/ தரமா/
இவ்வளவு/ என/ வருணிக்க/ தரமா/

ப்3ரஹ்மா/-இந்த்3ர-ஆது3லகு/-ஐன/
பிரமன்/ இந்திராதியருக்கு/ ஆகிலும்/


அனுபல்லவி
கந்துனி/ கன்ன/ மா/ சக்கனி/
காமனை/ யீன்ற/ எமது/ இனிய/

கல்யாண/ ராம/ சந்த்3ர/ நீ/ ஸொக3ஸு/-(இந்த)
கலியாண/ இராம/ சந்திரா/ உனது/ சொகுசு/ இவ்வளவு...


சரணம்
சரணம் 1
சல்லனி/ சூபுல/ கன்னுலு/ மரி/
குளிர்ந்த/ பார்வையுடைய/ கண்கள்/ மேலும்/

ஜாபி3ல்லி/ களல/ கேரின/ ஆனனமு/
மதியின்/ களையை/ கெக்கலிக்கும்/ வதனம்/

மெல்லனி/ மாடலு/-அப4ய/ கரமுலு/-இவி/-
கனிந்த/ சொற்கள்/ அபயமளிக்கும்/ கரங்கள்/ - இவை/

எல்ல/ ஸஹஜமைன/ நீ/ கு3ணமு/-(இந்த)
யாவும்/ இயற்கையான/ உனது/ குணங்கள்/ இவ்வளவு...


சரணம் 2
அன்யுல/ கோரி/ கோ4ர/ தபமுலு/-
மற்ற கடவுளரை/ கோரி/ கடுந்/ தவங்கள்/

என்னென்னோ/ ஜேஸி/ வரமுலு/-அந்தி3/
எத்தனையெத்தனையோ/ இயற்றி/ வரங்கள்/ பெற்று/

மூர்த4ன்யுலு/-ஐன வாரி/ மத3ம்பு3ல/
தலைசிறந்தவர்/ ஆனோரின்/ செருக்கினை/

ராஜன்ய/ லகு4வுன/-அணசே/ பராக்ரமமு/-(இந்த)
மன்னா/ எளிதாக/ அடக்கும்/ (உனது) பேராற்றல்/ இவ்வளவு...


சரணம் 3
வாக்3/-ஈஸ1/-ஆதி3/ ஸுர/ கோட்லகு/
நாமகள்/ மணாளன்/ முதலாக/ தேவ/ கோடிகளுக்கும்/

வேத3/-ஆக3ம/ ஸா1ஸ்த்ரமுலகு/ கன/-கூ33னி/
மறை/ ஆகம/ சாத்திரங்களுக்கும்/ காண/ கூடாத/

நாக3/ ராஜ/ பூ4ஷணுடை3ன/ ஸ்ரீ/
அரவு/ அரசனை/ யணிவோனாகிய/ உயர்/

த்யாக3ராஜ/ ஸன்னுத/ நீது3/ மஹிமலு/-(இந்த)
தியாகராசன்/ நற்போற்றி செய்வோனே/ உனது/ மகிமைகள்/ இவ்வளவு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸொக3ஸிந்த - ஸொக3ஸுனிந்த.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - மூர்த4ன்யுலு - தலைசிறந்தோர் - இவ்விடத்தில், ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்ற இராவணைக் குறிக்கும்.

3 - வேதா33ம ஸா1ஸ்த்ரமுலகு கன-கூ33னி - வேத, ஆகம, சாத்திரங்களுக்கும் காணக் கூடாத - புலன்கள், மனம், சிந்தைகளினால் அறியவொண்ணாத, 'மனோ-வாசாமகோ3சரம்' எனப்படும், பரம்பொருளின் இலக்கணம்.

4 - ஸ்ரீ த்யாக3ராஜ - உயர் தியாகராசன் - சிவனைக் குறிக்கும்.

காணக்கூடாத - காண இயலாத என.

Top


Updated on 27 Nov 2010

No comments: