Sunday, January 3, 2010

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம ராம ஜக3தா3த்ம - ராகம் பூர்ண சந்த்3ரிக - Sri Rama Rama Jagadaatma - Raga Purna Chandrika

பல்லவி
ஸ்ரீ ராம ராம ஜக3தா3த்ம ராம
ஸ்ரீ ராம ரகு4ராம பாஹி பரமாத்ம

சரணம்
சரணம் 1
ஜ்யோதிர்மயாக2ண்ட3 ரூப ராம
பூ4தேஸ1 வினுதாபஹ்ரு2த ப4க்த தாப (ஸ்ரீ)


சரணம் 2
ஸர்வ க்3ரஹாதா4ர பூ4த ராம
கீ3ர்வாண முனி வந்த்3ய ஸுஜனேஷ்ட தா3த (ஸ்ரீ)


சரணம் 3
யோகி3 ஜன ஹ்ரு23யாப்3ஜ மித்ர ராம
போ4கி3 ஸா1யி 1க்4ரு2ணா ரஸ பூர்ண நேத்ர (ஸ்ரீ)


சரணம் 4
2ஸ்ரீ தா3ந்த ஸா1ந்த நிர்வாண ப2லத3
வேதா3ந்த வேத்3யாவனீ-ஸுர த்ராண (ஸ்ரீ)


சரணம் 5
த்வாம் வினா நான்யத்ர ஜானே ராம
த்வாம் வினா கோ க3திர்ஜானகீ ஜானே (ஸ்ரீ)


சரணம் 6
தீ4ர ப43ஸாக3ரோத்தரண ராம
ஸாரதர ஸ்ரீ த்யாக3ராஜ நுத சரண (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • இராமா! பல்லுலகின் ஆன்மாவே, இராமா! இரகுராமா! பரம்பொருளே!
  • ஒளிமயமான, அகண்ட உருவத்தோனே, இராமா! பூதநாதன் போற்றும், தொண்டர் துயர் களைவோனே!
  • அனைத்து கோள்களுக்கும் ஆதாரமான பொருளே, இராமா! வான் முனிவர் தொழும், நன்மக்கள் வேண்டியதருள்வோனே!
  • யோகியர் உள்ளத் தாமரையினுக்குப் பகலவனே, இராமா! அரவணையோனே! கருணை-ரசம் நிறை கண்களோனே!
  • புலனடக்கம், மனவமைதி உடைத்தோருக்கு வீடருள்வோனே! மறைமுடியை அறிவோனே! அந்தணரைக் காப்போனே!
  • தீரனே! பிறவிக்கடலைத் தாண்டுவிப்போனே, இராமா! சாலச்சிறந்தோனே! தியாகராசன் போற்றும் திருவடிகளோனே!

    • உன்னையன்றி, மற்றெதுவும் அறியேன்;
    • உன்னையன்றி, என்ன கதியென சானகியும் அறிவாளோ!
    • காப்பாய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/ ஜக3த்/-ஆத்ம/ ராம/
ஸ்ரீ ராமா/ இராமா/ பல்லுலகின்/ ஆன்மாவே/ இராமா/

ஸ்ரீ ராம/ ரகு4ராம/ பாஹி/ பரமாத்ம/
ஸ்ரீ ராமா/ இரகுராமா/ காப்பாய்/ பரம்பொருளே/


சரணம்
சரணம் 1
ஜ்யோதிர்மய/-அக2ண்ட3/ ரூப/ ராம/
ஒளிமயமான/ அகண்ட/ உருவத்தோனே/ இராமா/

பூ4த/-ஈஸ1/ வினுத/-அபஹ்ரு2த/ ப4க்த/ தாப/ (ஸ்ரீ)
பூத/ நாதன்/ போற்றும்/ களைவோனே/ தொண்டர்/ துயர்/


சரணம் 2
ஸர்வ/ க்3ரஹ/-ஆதா4ர/ பூ4த/ ராம/
அனைத்து/ கோள்களுக்கும்/ ஆதாரமான/ பொருளே/ இராமா/

கீ3ர்வாண/ முனி/ வந்த்3ய/ ஸுஜன/-இஷ்ட/ தா3த/ (ஸ்ரீ)
வான்/ முனிவர்/ தொழும்/ நன்மக்கள்/ வேண்டியது/ அருள்வோனே/


சரணம் 3
யோகி3 ஜன/ ஹ்ரு23ய/-அப்3ஜ/ மித்ர/ ராம/
யோகியர்/ உள்ள/ தாமரையினுக்கு/ பகலவனே/ இராமா/

போ4கி3/ ஸா1யி/ க்4ரு2ணா/ ரஸ/ பூர்ண/ நேத்ர/ (ஸ்ரீ)
அரவு/ அணையோனே/ கருணை/-ரசம்/ நிறை/ கண்களோனே/


சரணம் 4
ஸ்ரீ தா3ந்த/ ஸா1ந்த/ நிர்வாண/ ப2லத3/
புலனடக்கம்/ மனவமைதி (உடைத்தோருக்கு)/ வீடு/ அருள்வோனே/

வேதா3ந்த/ வேத்3ய/-அவனீ-ஸுர/ த்ராண/ (ஸ்ரீ)
மறைமுடியை/ அறிவோனே/ அந்தணரை/ காப்போனே/


சரணம் 5
த்வாம்/ வினா/ ந-அன்யத்ர ஜானே/ ராம/
உன்னை/ யன்றி/ மற்றெதுவும் அறியேன்/ இராமா/

த்வாம்/ வினா/ கோ/ க3தி:/ ஜானகீ/ ஜானே/ (ஸ்ரீ)
உன்னை/ யன்றி/ என்ன/ கதியென/ சானகியும்/ அறிவாளோ/


சரணம் 6
தீ4ர/ ப4வ/ ஸாக3ர/-உத்தரண/ ராம/
தீரனே/ பிறவி/ கடலை/ தாண்டுவிப்போனே/ இராமா/

ஸாரதர/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ சரண/ (ஸ்ரீ)
சாலச்சிறந்தோனே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ திருவடிகளோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - க்4ரு2ணா - கரு2ணா.
3 - உத்தரண - உத்தரணீ.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஸ்ரீ தா3ந்த ஸா1ந்த நிர்வாண ப2லத3 - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படியே, இதனை ஒரே போற்றியாக ('புலனடக்கம், மனவமைதி உடைத்தோருக்கு வீடருள்வோனே') என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், இதனை மூன்று போற்றிகளாகவும் பிரிக்கலாம். - 'ஸ்ரீ தா3ந்த' - 'ஸா1ந்த' - 'நிர்வாண ப2லத3' ('புலனடக்கமுடைத்தோனே' - 'அமைதியானவனே' - 'வீடு அருள்வோனே') என.

அகண்ட - நீக்கமற்ற
பூதநாதன் - சிவன்
வான் முனிவர் - பிருஹஸ்பதி - வியாழன்
கருணை-ரசம் - நவ ரசங்களிலொன்று

Top


Updated on 03 Jan 2010

No comments: