பலுகவேமி நா தை3வமா
பருலு நவ்வேதி3 ந்யாயமா
அனுபல்லவி
அலுக3 காரணமேமிரா ராம
1நீவாடி3ஞ்சினட்லுயாடி3ன நாதோ (ப)
சரணம்
தல்லி தண்ட்3ரி ப4க்தினொஸகி3 ரக்ஷிஞ்சிரி
தக்கின வாரலெந்தோ ஹிம்ஸிஞ்சிரி
தெலிஸியூரகுண்டே3தி3யென்னாள்ளுரா
தே3வாதி3 தே3வ த்யாக3ராஜுனிதோ (ப)
பொருள் - சுருக்கம்
எனதிறைவா! இராமா! வானோர் தலைவா!
- பேசமாட்டாயோ?
- பிறர் நகைத்தல் நியாயமா?
- சினமுறக் காரணமென்னவய்யா?
- நீ ஆட்டிவைத்தபடி ஆடின என்னுடன் பேசமாட்டாயோ?
- தாய் தந்தையர், பக்தியை அருளி, காத்தனர்;
- மற்றவர்கள் (என்னை) மிக்கு துன்புறுத்தினர்;
- தெரிந்தும், சும்மாயிருப்பது எத்தனை நாளைக்கய்யா?
- சினமுறக் காரணமென்னவய்யா?
- தியாகராசனிடம் பேசமாட்டாயோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகவு-ஏமி/ நா/ தை3வமா/
பேசமாட்டாயோ/ எனது/ இறைவா/
பருலு/ நவ்வேதி3/ ந்யாயமா/
பிறர்/ நகைத்தல்/ நியாயமா/
அனுபல்லவி
அலுக3/ காரணமு/-ஏமிரா/ ராம/
சினமுற/ காரணம்/ என்னவய்யா/ இராமா/
நீவு/-ஆடி3ஞ்சின/-அட்லு/-ஆடி3ன/ நாதோ/ (ப)
நீ/ ஆட்டிவைத்தபடி/ ஆடின/ என்னுடன்/ பேசமாட்டாயோ...
சரணம்
தல்லி/ தண்ட்3ரி/ ப4க்தினி/-ஒஸகி3/ ரக்ஷிஞ்சிரி/
தாய்/ தந்தையர்/ பக்தியை/ அருளி/ காத்தனர்/
தக்கின வாரலு/-எந்தோ/ ஹிம்ஸிஞ்சிரி/
மற்றவர்கள்/ (என்னை) மிக்கு/ துன்புறுத்தினர்/
தெலிஸி/-ஊரக/-உண்டே3தி3/-என்னாள்ளுரா/
தெரிந்தும்/ சும்மா/ இருப்பது/ எத்தனை நாளைக்கய்யா/
தே3வ-ஆதி3/ தே3வ/ த்யாக3ராஜுனிதோ/ (ப)
வானோர்/ தலைவா/ தியாகராசனிடம்/ பேசமாட்டாயோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஆடி3ஞ்சினட்லு - ஆடி3ஞ்சினடு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
Updated on 02 Jan 2010
No comments:
Post a Comment