Sunday, January 3, 2010

தியாகராஜ கிருதி - கி3ரி ராஜ - ராகம் ப3ங்கா3ள - Giri Raja - Raga Bangala

பல்லவி
கி3ரி ராஜ ஸுதா தனய ஸத3

அனுபல்லவி
ஸுர நாத2 முகா2ர்சித பாத3 யுக3
பரிபாலய மாம் இப4 ராஜ முக2 (கி3)

சரணம்
3ண நாத2 பராத்பர 11ங்கராக3
வாரி நிதி4 ரஜனீ-கர

2ணி ராஜ கங்கண விக்4
நிவாரண ஸா1ம்ப4வ ஸ்ரீ த்யாக3ராஜ நுத (கி3)


பொருள் - சுருக்கம்
  • மலையரசன் மகள் மகனே! கருணையுள்ளத்தோனே!
  • இந்திரன் ஆகிய தலைவர் தொழும் திருவடி இணையோனே! வேழ (மன்னன்) முகத்தோனே!
  • கண நாதா! பரம்பொருளே! சிவாகமங்களெனும் கடலின் மதியே! அரவரசன் கங்கணத்தோனே! இடையூறுகளைக் களைவோனே! சம்புவின் மகனே! தியாகராசன் போற்றும் மலையரசன் மகள் மகனே!

    • பேணுவாய் என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கி3ரி/ ராஜ/ ஸுதா/ தனய/ ஸத3ய/
மலை/ அரசன்/ மகள்/ மகனே/ கருணையுள்ளத்தோனே/


அனுபல்லவி
ஸுர/ நாத2/ முக2-/அர்சித/ பாத3/ யுக3/
தேவர்/ தலைவன் (இந்திரன்) (ஆகிய) தலைவர்/ தொழும்/ திருவடி/ இணையோனே/

பரிபாலய/ மாம்/ இப4/ ராஜ/ முக2/ (கி3)
பேணுவாய்/ என்னை/ வேழ/ மன்னன்/ முகத்தோனே/


சரணம்
3ண/ நாத2/ பராத்பர/ ஸ1ங்கர/-ஆக3ம/
கண/ நாதா/ பரம்பொருளே/ மங்களமருள்வோனே (சிவ)/ ஆகமங்களெனும்/

வாரி நிதி4/ ரஜனீ-கர/
கடலின்/ மதியே/

2ணி/ ராஜ/ கங்கண/ விக்4ன/
அரவு/ அரசன்/ கங்கணத்தோனே/ இடையூறுகளை/

நிவாரண/ ஸா1ம்ப4வ/ ஸ்ரீ த்யாக3ராஜ/ நுத/ (கி3)
களைவோனே/ சம்புவின் மகனே/ ஸ்ரீ தியாகராசன்/ போற்றும்/ மலையரசன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - 1ங்கராக3ம வாரி நிதி4 ரஜனீ-கர - சிவாகமங்களெனும் கடலின் மதியே - இதனை 'மங்களமருள்வோனே' என்றும் 'ஆகமங்களெனும் கடலின் மதியே' என்றும் பிரித்து பொருள் கொள்ளலாம்.

மலையரசன் மகள் - பார்வதி
மலையரசன் மகள் மகன் - விநாயகன்
வேழம் - யானை
அரவரசன் - சேடன்
சம்பு - சிவன்

Top


Updated on 04 Jan 2010

No comments: