Monday, November 23, 2009

தியாகராஜ கிருதி - ராரா ரகு4வீர - ராகம் அடா2ணா - Raara Raghuvira - Raga Athana

பல்லவி
ராரா ரகு4வீர வெண்ட ராரா தோடு3 (ராரா)

சரணம்
சரணம் 1
அனுதி3னமு நினு மனஸுன கனுகொ3னி
ஆனந்த3மாயெ த3யாளோ (ராரா)


சரணம் 2
ஸகல ஸுஜனுலு கொலுசு ஸன்னிதி4 கனி
சல்லனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 3
பலு வித4 செடு3 து3ர்விஷய
சயமுலெட3பா3யனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 4
தொட3ரியடு33டு3கு3கிதி3 பு3த்3தி4யனி
ஸந்தோஷமாயெ த3யாளோ (ராரா)


சரணம் 5
ஸுமுக2முனனு திலகமு செலக33 கனி
ஸொக்கனாயெ த3யாளோ (ராரா)


சரணம் 6
1கவகொ3னி ப4வமுன பொரலக நீது3
கார்யமாயெ த3யாளோ (ராரா)


சரணம் 7
31ரத2 தனய ஸு14 சரித பாலித
த்யாக3ராஜ த3யாளோ (ராரா)


பொருள் - சுருக்கம்
இரகுவீரா! தயாளா! தசரதன் மைந்தா! நற்சரிதத்தோனே! தியாகராசனைப் பேணுவோனே!
  • வாருமய்யா, உடன் வாருமய்யா, துணையாக.

    • அனுதினமும் உன்னை மனதினில் கண்டுகொண்டு, ஆனந்தமாயிற்று.

    • அனைத்து நல்லோரும் தொழும் சன்னிதியைக் கண்டு (உள்ளம்) குளிர்ந்தது.

    • பல விதமான, கேடுறும், தீய புலன் நாட்டங்களைக் கைவிட முடிந்தது.

    • (பின்) தொடர்ந்து, ஒவ்வோரடியிலும் (நீ) 'இஃதுகந்தது' என, மகிழ்வாகியது.

    • (உனது) இனிய முகத்தினில் திலகம் திகழக் கண்டு சொக்கினேன்.

    • தொந்தத்தினில் சிக்கி, பிறவிக்கடலினில் உழலாது, உனது பணிக்கானேன்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ ரகு4வீர/ வெண்ட/ ராரா/ தோடு3/ (ராரா)
வாருமய்யா/ இரகுவீரா/ உடன்/ வாருமய்யா/ துணையாக/


சரணம்
சரணம் 1
அனுதி3னமு/ நினு/ மனஸுன/ கனுகொ3னி/
அனுதினமும்/ உன்னை/ மனதினில்/ கண்டுகொண்டு/

ஆனந்த3மாயெ/ த3யாளோ/ (ராரா)
ஆனந்தமாயிற்று/ தயாளா/


சரணம் 2
ஸகல/ ஸுஜனுலு/ கொலுசு/ ஸன்னிதி4/ கனி/
அனைத்து/ நல்லோரும்/ தொழும்/ சன்னிதியை/ கண்டு/

சல்லனாயெ/ த3யாளோ/ (ராரா)
(உள்ளம்) குளிர்ந்தது/ தயாளா/


சரணம் 3
பலு/ வித4/ செடு3/ து3ர்/-விஷய சயமுல/-
பல/ விதமான/ கேடுறும்/ தீய/ புலன் நாட்டங்களை/

எட3பா3யனாயெ/ த3யாளோ/ (ராரா)
கைவிட முடிந்தது/ தயாளா/


சரணம் 4
தொட3ரி/-அடு33டு3கு3கு/-இதி3/ பு3த்3தி4/-அனி/
(பின்) தொடர்ந்து/ ஒவ்வோரடியிலும்/ (நீ) 'இஃது/ உகந்தது'/ என/

ஸந்தோஷமாயெ/ த3யாளோ/ (ராரா)
மகிழ்வாகியது/ தயாளா/


சரணம் 5
ஸுமுக2முனனு/ திலகமு/ செலக33/ கனி/
(உனது) இனிய முகத்தினில்/ திலகம்/ திகழ/ கண்டு/

ஸொக்கனாயெ/ த3யாளோ/ (ராரா)
சொக்கினேன்/ தயாளா/


சரணம் 6
கவகொ3னி/ ப4வமுன/ பொரலக/ நீது3/
தொந்தத்தினில் சிக்கி/ பிறவிக்கடலினில்/ உழலாது/ உனது/

கார்யமாயெ/ த3யாளோ/ (ராரா)
பணிக்கானேன்/ தயாளா/


சரணம் 7
31ரத2/ தனய/ ஸு14 சரித/ பாலித/
தசரதன்/ மைந்தா/ நற்சரிதத்தோனே/ பேணுவோனே/

த்யாக3ராஜ/ த3யாளோ/ (ராரா)
தியாகராசனை/ தயாளா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1 - கவ - தொந்தம் - இரட்டை - இன்பம்-துன்பம் முதலானவை. இது குறித்து கீதையில் (5-வது அத்தியாயம், செய்யுள் 3) கண்ணன் கூறுவது -

"விருப்பு, வெறுப்பற்றவன் எவனோ, அவன், 'நித்தியத் துறவி' என அறியப்படுவான்; ஏனெனில், ஓ பெருந்தோள்களோனே! (இன்பம்-துன்பம் ஆகிய) இரட்டைகளினின்று விடுபட்டு, எளிதாக, (பிறவியெனும்) தளையினின்றும் அவன் விடுவிக்கப்பெறுகின்றான்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

Top

விளக்கம்



Updated on 23 Nov 2009

No comments: