ஸ்ரீப ப்ரிய 1ஸங்கீ3தோபாஸன
சேயவே ஓ மனஸா
அனுபல்லவி
தாபஸ ஜன மானஸ த4னமு 2த்ரி-
தாப ரஹித ஸப்த ஸ்வர சாரி (ஸ்ரீ)
சரணம்
3ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு
மஞ்ஜுளமகு3னவதாரமுலெத்தி
4மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு
மஹிம தெலியு த்யாக3ராஜ நுதுட3கு3 (ஸ்ரீ)
பொருள் - சுருக்கம்
ஏ மனமே!
- தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, மாமணாளனுக்கு விருப்பமான இசை வழிபாட்டினைச் செய்வாய்;
- தவசிகளின் உள்ளச் செல்வமவன்; முவ்வெம்மைகளற்றவன்; ஏழு சுரங்களிலுறைவோன்.
- களிப்பூட்டும் இராகங்கள், எழிலான வடிவங்களெடுத்து, சதங்கைகள் கலீரென, நடமிடும் பெருமை, தியாகராசன் அறிவான்.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ/ப/ ப்ரிய/ ஸங்கீ3த/-உபாஸன/
மா/ மணாளனுக்கு/ விருப்பமான/ இசை/ வழிபாட்டினை/
சேயவே/ ஓ மனஸா/
செய்வாய்/ ஏ மனமே/
அனுபல்லவி
தாபஸ ஜன/ மானஸ/ த4னமு/
தவசிகளின்/ உள்ள/ செல்வம் (அவன்)/
த்ரி-தாப/ ரஹித/ ஸப்த/ ஸ்வர/ சாரி/ (ஸ்ரீ)
முவ்வெம்மைகள்/ அற்ற/ ஏழு/ சுரங்களில்/ உறையும்/ மாமணாளனுக்கு...
சரணம்
ரஞ்ஜிம்ப ஜேஸெடு3/ ராக3ம்பு3லு/
களிப்பூட்டும்/ இராகங்கள்/
மஞ்ஜுளமகு3/-அவதாரமுலு/-எத்தி/
எழிலான/ வடிவங்கள்/ எடுத்து/
மஞ்ஜீரமு/ க4ல்லனி/ நடிஞ்சு/
சதங்கைகள்/ கலீரென/ நடமிடும்/
மஹிம/ தெலியு/ த்யாக3ராஜ/ நுதுட3கு3/ (ஸ்ரீ)
பெருமை/ அறியும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ மாமணாளனுக்கு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - ஸங்கீ3தோபாஸன - நாதோபாஸனை என்றும் அழைக்கப்படும் இசை வழிபாடு. இது குறித்து மேற்கொண்டு விவரங்கள் அறிய நோக்கவும் - நாதோபாஸன-1; நாதோபாஸன-2
2 - த்ரி-தாப - முவ்வெம்மைகள் - அத்தியாத்துமிகம், ஆதி-தெய்வீகம், ஆதி-பௌதீகம்.
3 - ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு - களிப்பூட்டும் இராகங்கள் - 'ரஞ்ஜயதி இதி ராக3:' (களிப்பூட்டுவது இராகமாகும்) என்பது பழங்காலத்திலிருந்து வழக்கிலுள்ள பொருளாகும். இதனை, தியாகராஜர் இங்கு குறிப்பிடுகின்றார். இராகம் பற்றிய விளக்கங்கள் அறிய - இராகம்-1; இராகம்-2
Top
விளக்கம்
1 - உபாஸன - இதற்கு 'வழிபாடு' என்ற சொல்லுக்கும் மிகுதியான பொருளாகும்.
4 - மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு - சதங்கைகள் கலீரென நடிக்கும். அனைவரும் பங்கேற்கும் பாகவத வழிபாட்டு முறையினைக் குறிக்கும்; இன்றைய கச்சேரி முறைக்கு அப்பாற்பட்டதாகும்.
Top
Updated on 24 Nov 2009
2 comments:
திரு கோவிந்தன் அவர்களே
மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு - சதங்கைகள் கலீரென நடிக்கும்- சத(ல)ங்கைகள் கலீரென (ஒலிக்க) என்பது பொருள். இதற்கு இணையான தெலுங்குச் சொல் ‘க4ல்லென’ அல்லவா? ‘க்ல்லனி’ என்பது சலங்கைகள் கலீரென நடிக்கும் என்று பொருள் தரும். க4ல்லென என்பது க4ல்லனி என்று மறுவிவிட்டதா?
நன்றி
கோவிந்தசாமி
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
தெலுங்கு அகராதியின்படி 'க4ல்லுமனி' என்பது சரியான சொல்லாகும். அதனைத்தான் தியாகராஜர் 'க4ல்லனி' என்று சுருக்கிக் கூறுகின்றார் என்று கருதுகின்றேன்.
எனக்குத் தெரிந்தவரை, 'க4ல்லென' என்பது தவறாகும்.
வணக்கம்
கோவிந்தன்.
Post a Comment