Sunday, November 22, 2009

தியாகராஜ கிருதி - ராம நாமமு ஜன்ம - ராகம் அடா2ணா - Rama Namamu Janma - Raga Athana

பல்லவி
ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு
தாமஸமு ஸேயக ப4ஜிம்பவே மனஸா

அனுபல்லவி
ஸோமாருண நேத்ருடை3ன ஸ்ரீ
ராம சந்த்3ருனிகி ஸரியெவ்வருரா (ராம)

சரணம்
காம கோடி ரூப ராம சந்த்3
காமித ப2லத3 ராம சந்த்3
ஞான ஸ்வரூப ராம சந்த்3
த்யாக3ராஜார்சித ராம சந்த்3ர (ராம)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • இராம நாமம் பிறவியினைக் காக்கும் மந்திரமாகும்;
  • தாமதிக்காது பஜிப்பாய்;

  • சோமன், அருணனைக் கண்களாயுடைய இராம சந்திரனுக்கு ஈடெவரடா?

  • காம கோடி உருவ இராம சந்திரா!
  • விழைந்த பயனருளும் இராம சந்திரா!
  • மெய்யறிவு வடிவ இராம சந்திரா!
  • தியாகராசன் தொழும் இராம சந்திரா!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ நாமமு/ ஜன்ம/ ரக்ஷக/ மந்த்ரமு/
இராம/ நாமம்/ பிறவியினை/ காக்கும்/ மந்திரமாகும்/

தாமஸமு ஸேயக/ ப4ஜிம்பவே/ மனஸா/
தாமதிக்காது/ பஜிப்பாய்/ மனமே/


அனுபல்லவி
ஸோம/-அருண/ நேத்ருடை3ன/ ஸ்ரீ/
சோமன்/ அருணனை/ கண்களாயுடைய/ ஸ்ரீ/

ராம/ சந்த்3ருனிகி/ ஸரி/-எவ்வருரா/ (ராம)
ராம/ சந்திரனுக்கு/ ஈடு/ எவரடா/


சரணம்
காம/ கோடி/ ரூப/ ராம/ சந்த்3ர/
காம/ கோடி/ உருவ/ இராம/ சந்திரா/

காமித/ ப2லத3/ ராம/ சந்த்3ர/
விழைந்த/ பயனருளும்/ இராம/ சந்திரா/

ஞான/ ஸ்வரூப/ ராம/ சந்த்3ர/
மெய்யறிவு/ வடிவ/ இராம/ சந்திரா/

த்யாக3ராஜ/-அர்சித/ ராம/ சந்த்3ர/ (ராம)
தியாகராசன்/ தொழும்/ இராம/ சந்திரா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
திரு TK கோவிந்த ராவ் அவர்களின் ‘Compositions of Tyagaraja’ என்ற புத்தகத்தில், இப்பாடல், தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என்பது ஐயத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இப்பாடல் மேற்கூறிய புத்தகத்தைத் தவிர வேறு புத்தகங்களில் காணப்படவில்லை.

பிறவியினைக் காக்கும் - பிறந்த பயன் வீணாகாது காக்கும் என
சோமன் - மதி
அருணன் - விடியற்காலைப் பரிதி
காம கோடி உருவம் - மதனனைப் போன்ற சிறந்த உருவம்

Top


Updated on 22 Nov 2009

No comments: