Sunday, November 1, 2009

தியாகராஜ கிருதி - பதிகி மங்க3ள - ராகம் ஆரபி4 - Patiki Mangala - Raga Arabhi

பல்லவி
பதிகி மங்க3ள ஹாரதிரே
பா4மலார நேடு3 ஸாகேத (ப)

அனுபல்லவி
மதிகி ஸொம்பு கலுக3 ஜேயு ஸத்3-கு3
ததிகி 1மானவதி ஸீதா (ப)

சரணம்
காமாதி3 ரிபு விதா3ரிகி ஹரிகி
ஸாமாதி3 நிக3ம சாரிகி ஸூர்ய
ஸோமாக்ஷுனிகி த்யாக3ராஜ
ப்ரேமாவதாருனிகி கோஸல (ப)


பொருள் - சுருக்கம்
பாவையரே!
  • சாகேத பதிக்கு மங்கள ஆரத்தியடியே இன்று!

    • உள்ளத்திற்குக் களிப்பூட்டும் நற்குணங்கள் நிறைந்தோனுக்கு,

    • கற்புடை சீதையின் பதிக்கு,

    • இச்சை முதலான (உட்) பகையினை யழிப்போனுக்கு,

    • அரிக்கு,

    • சாமம் முதலான மறைகளின் உள்ளுறைவோனுக்கு,

    • பரிதி, மதியினைக் கண்களாயுடையோனுக்கு,

    • தியாகராசனின் காதலாக உருக்கொண்டோனுக்கு,

    • கோசல பதிக்கு,

  • மங்கள ஆரத்தியடியே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பதிகி/ மங்க3ள/ ஹாரதிரே/
பதிக்கு/ மங்கள/ ஆரத்தியடியே/

பா4மலார/ நேடு3/ ஸாகேத/ (ப)
பாவையரே/ இன்று/ சாகேத/ பதிக்கு...


அனுபல்லவி
மதிகி/ ஸொம்பு/ கலுக3 ஜேயு/ ஸத்3-கு3ண/
உள்ளத்திற்கு/ களிப்பு/ ஊட்டும்/ நற்குணங்கள்/

ததிகி/ மானவதி/ ஸீதா/ (ப)
நிறைந்தோனுக்கு/ கற்புடை/ சீதையின்/ பதிக்கு...


சரணம்
காம/-ஆதி3/ ரிபு/ விதா3ரிகி/ ஹரிகி/
இச்சை/ முதலான/ (உட்) பகையினை/ யழிப்போனுக்கு/ அரிக்கு/

ஸாம/-ஆதி3/ நிக3ம/ சாரிகி/ ஸூர்ய/
சாமம்/ முதலான/ மறைகளின்/ உள்ளுறைவோனுக்கு/ பரிதி/

ஸோம/-அக்ஷுனிகி/ த்யாக3ராஜ/
மதியினை/ கண்களாயுடையோனுக்கு/ தியாகராசனின்/

ப்ரேம/-அவதாருனிகி/ கோஸல/ (ப)
காதலாக/ உருக்கொண்டோனுக்கு/ கோசல/ பதிக்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மானவதி ஸீதா - மானவதிகி ஸ்ரீ ஸீதா : ஆரத்தி, கணவன்-மனைவி இருவருக்குமே சேர்த்து எடுத்தல் வழக்கம். எனவே, இவ்விடத்தில், சீதையைக்குறிக்கும் 'மானவதிகி' (கற்புடையவளுக்கு) பொருந்தினாலும், இச்சொல் தனியாக இருப்பதனால், 'மானவதி சீதாபதிக்கு' (கற்புடைய சீதையின் பதிக்கு) என்பதுவே சரியாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
கோசலம் - இராமன் ஆண்ட நாடு

Top


Updated on 01 Nov 2009

2 comments:

Govindaswamy said...

அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
ஹாரதீரே என்பது தான் சரியென்று நான் எண்ணுகிறேன். ஸுரடி ராகத்திலமைந்த பதிகி ஹாரதீரே என்னும் பாடலிலும் இவ்வாறு தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது தியாகராஜரின் பாடல் தானா? திருப்பதி தேவஸ்தான வெளியீட்டில் இது இல்லை.
ஆரத்தியடியே- ஆரத்தியெடு என்பது தான் வழக்கிலுள்ளது.
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

'ஹாரதி' என்றுதான் எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'பதிகி ஹாரதீ' என்ற கீர்த்தனையில், 'ஹாரதீ' என்று புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பல கீர்த்தனைகளில், இந்த குறில்-நெடில் வேறுபாடுகள் காணப்படுகின்றது. இது பாடலின் ஸ்வரங்களை உத்தேசித்து இருக்கலாம். ஆனால் இரண்டுமே சரியென்று நான் கருதுகின்றேன்.

'ஹாரதிரே' என்பது அழைப்பாக நான் கருதுகின்றேன். 'ஆரத்தியெடு' என்பது 'ஹாரதி எத்தவே' என்று வரும்.

வணக்கம்
கோவிந்தன்.