Wednesday, November 4, 2009

தியாகராஜ கிருதி - ஸாதி4ஞ்சனே - ராகம் ஆரபி4 - Sadhinchene - Raga Arabhi

பல்லவி
1ஸாதி4ஞ்செனே ஓ மனஸா

அனுபல்லவி
போ3தி4ஞ்சின 2ஸன்மார்க3 வசனமுல
பொ3ங்கு ஜேஸி
தா பட்டின பட்டு (ஸா)

சரணம்
3ஸமயானிகி தகு3 மாடலாடெ3னே


ஸ்வர ஸாஹித்ய 1
4தே3வகி வஸு தே3வுலனேகிஞ்சினடு (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 2
ரங்கே3ஸு1டு3 5ஸத்33ங்கா3 ஜனகுடு3
6ஸங்கீ3த ஸாம்ப்ரதா3யகுடு3 (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 3
7கோ3பீ ஜன மனோரத2மொஸங்க3
லேகனே
கே3லியு 8ஜேஸே வாடு3 (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 4
வனிதல ஸதா3 ஸொக்க ஜேயுசுனு
ம்ரொக்க ஜேஸே பரமாத்முட3தி3யு கா3
யஸோ13 தனயுட3ஞ்சு முத3ம்பு3னனு
9முத்3து3 பெட்ட நவ்வுசுண்டு3 ஹரி (ஸம)


10ஸ்வர ஸாஹித்ய 4A
11ஸாராஸாருடு3 ஸனக ஸனந்த3
ஸன்முனி ஸேவ்யுடு3 ஸகலாதா4ருடு3 (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 5
பரம ப4க்த வத்ஸலுடு3 ஸுகு3
12பாராவாருண்டா3ஜன்மமனகு4டீ3
கலி பா34ல தீர்சுவாட3னுசு நே
13ஹ்ரு23ம்பு3ஜமுன ஜூசுசுண்ட33 (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 6
ஹரே ராம சந்த்3ர ரகு4 குலேஸ1
ம்ரு2து3 ஸுபா4ஷ ஸே1ஷ ஸ1யன
14பர நாரீ ஸோத3ராஜ விராஜ துரக3
ராஜ ராஜ நுத நிராமயாபக4
ஸரஸீருஹ த3ளாக்ஷயனுசு
வேடு3கொன்ன நன்னு தா ப்3ரோவகனு (ஸம)


ஸ்வர ஸாஹித்ய 7
ஸ்ரீ வேங்கடேஸ1 15ஸ்வப்ரகாஸ1
ஸர்வோன்னத ஸஜ்ஜன மானஸ நிகேதன
கனகாம்ப3ர த4ர லஸன்மகுட
குண்ட3ல விராஜித ஹரேயனுசு நே
16பொக33கா3 த்யாக3ராஜ கே3யுடு3
மானவேந்த்3ருடை3ன ராம சந்த்3ருடு3 (ஸம)


caraNam
ஸமயானிகி தகு3 மாடலாடெ3னே
17ஸத்34க்துல நட3தலிட்லனெனே
அமரிககா3 நா பூஜ கொனெனே
அலுக வத்33னெனே
விமுகு2லதோ சேர போகுமனெனே
18வெத கலிகி3 தாளுகொம்மனெனே
193ம ஸ1மாதி3 ஸுக2 தா3யகுட3கு3 ஸ்ரீ
த்யாக3ராஜ நுதுடு3 செந்த ராகனே (ஸா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!
  • சாதித்தானே;

  • போதித்த நன்னெறிச் சொற்களைப் பொய்யாக்கி, தான் பிடித்த பிடியைச் சாதித்தானே;

    • சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • தேவகி, வசு தேவர்களைப் பழித்ததுபோலும், சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • அரங்க நாதன், புனித கங்கையினை ஈன்றோன், இசை பரம்பரையினன், சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • கோபியர்களின் உள்ள விழைவினை யளிக்காது, கேலி செய்பவன், சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • வனிதையரை எவ்வமயமும் சொக்கவைத்து, வணங்கவும் வைக்கும் பரம்பொருள், மேலும் யசோதை, மைந்தனெனக் களிப்புடன் முத்தமிட, நகைத்திருக்கும் அரி, சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • சாரமும் சாரமற்றவையுமானவன், சனகர், சனந்தனர் முதலான உயர் முனிவர்களால் வணங்கப் பட்டவன், யாவற்றிற்கும் ஆதாரமானவன், சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • தொண்டர்களிடம் மிக்கு கனிவுடையோன், நற்குணக் கடல், வாழ்நாள் முழுதும் பாவங்களற்றவன், இக்கலியின் தொல்லைகளைத் தீர்ப்பவனென நான் இதயக் கமலத்தினில் கண்டுகொண்டிருக்க, சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • ஐயா, இராம சந்திரா! இரகு குலத் தலைவா! மென்-இன்-சொல்லோனே! சேடன் அணையோனே! பரை நாரி சோதரனே! பிறவாதவனே! கருடன் மீது விரைவோனே! பேரரசர்களால் போற்றப் பெற்றோனே! நோயற்ற உடலோனே! தாமரையிதழ்க் கண்ணா! இங்ஙனம் வேண்டிக் கொண்ட என்னை அவன் காவாது சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

      • திரு வேங்கடேசா! தன்னொளியோனே! தலைசிறந்தோனே! நன்மக்கள் இதயத்துறையே! பொன்னாடையணிவோனே! ஒளிரும் மகுட, குண்டலங்களுடன் திகழும் அரியே! என நான் போற்றியிருக்க, தியாகராசனால் பாடப்பெற்ற, மானவரின் தலைவனாகிய இராம சந்திரன் சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

    • சமயத்திற்குத் தகு மொழி பகன்றானே!

    • நற்றொண்டர்களின் நடத்தை இவ்விதமென்றானே;

    • தக்கமுறையில் எனது வழிபாட்டினை யேற்றானே;

    • அஞ்சேலென்றானே;

    • (இறைவனை) நோக்காதவருடன் சேர வேண்டாமென்றானே;

    • வேதனையுண்டானாலும் தாளச்சொன்னானே;

  • தமம், சமம் ஆகியவற்றின் சுகத்தை யருள்வோனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோன், அருகில் வாராமலே சாதித்தானே



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாதி4ஞ்செனே/ ஓ மனஸா/
சாதித்தானே/ ஓ மனமே/


அனுபல்லவி
போ3தி4ஞ்சின/ ஸன்மார்க3/ வசனமுல/
போதித்த/ நன்னெறி/ சொற்களை/

பொ3ங்கு ஜேஸி/ தா/ பட்டின/ பட்டு/ (ஸா)
பொய்யாக்கி/ தான்/ பிடித்த/ பிடியை/ சாதித்தானே...


சரணம்
ஸமயானிகி/ தகு3/ மாடலு/-ஆடெ3னே/
சமயத்திற்கு/ தகு/ மொழி/ பகன்றானே/


ஸ்வர ஸாஹித்ய 1
தே3வகி/ வஸு/ தே3வுல/-ஏகிஞ்சின/-அடு/ (ஸம)
தேவகி/ வசு/ தேவர்களை/ பழித்தது/ போலும்/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 2
ரங்க3/-ஈஸு1டு3/ ஸத்3/-க3ங்கா3/ ஜனகுடு3/
அரங்க/ நாதன்/, புனித/ கங்கையினை/ ஈன்றோன்/

ஸங்கீ3த/ ஸாம்ப்ரதா3யகுடு3/ (ஸம)
இசை/ பரம்பரையினன்/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 3
கோ3பீ ஜன/ மனோரத2மு/-
கோபியர்களின்/ உள்ள விழைவினை/

ஒஸங்க3 லேகனே/ கே3லியு/ ஜேஸே வாடு3/ (ஸம)
யளிக்காது/ கேலி/ செய்பவன்/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 4
வனிதல/ ஸதா3/ ஸொக்க ஜேயுசுனு/
வனிதையரை/ எவ்வமயமும்/ சொக்கவைத்து/

ம்ரொக்க/ ஜேஸே/ பரமாத்முடு3/-அதி3யு/ கா3க/
வணங்கவும்/ வைக்கும்/ பரம்பொருள்/ (மேலும்) அஃது/ அன்றி

யஸோ13/ தனயுடு3/-அஞ்சு/ முத3ம்பு3னனு/
யசோதை/ மைந்தன்/ என/ களிப்புடன்/

முத்3து3/ பெட்ட/ நவ்வுசு/-உண்டு3/ ஹரி/ (ஸம)
முத்தம்/ இட/ நகைத்து/ இருக்கும்/ அரி/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 4A
ஸார/-அஸாருடு3/ ஸனக/ ஸனந்த3ன/
சாரமும்/ சாரமற்றவையுமானவன்/ சனகர்/ சனந்தனர்/

ஸன்/-முனி/ ஸேவ்யுடு3/ ஸகல/-ஆதா4ருடு3/ (ஸம)
(முதலான) உயர்/ முனிவர்களால்/ வணங்கப் பட்டவன்/ யாவற்றிற்கும்/ ஆதாரமானவன்/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 5
பரம/ ப4க்த/ வத்ஸலுடு3/ ஸுகு3ண/
மிக்கு/ தொண்டர்களிடம்/ கனிவுடையோன்/ நற்குண/

பாராவாருண்டு3/-ஆஜன்மமு/-அனகு4டு3/-ஈ/
கடல்/ வாழ்நாள் முழுதும்/ பாவங்களற்றவன்/ இந்த/

கலி/ பா34ல/ தீர்சுவாடு3/-அனுசு/ நே/
கலியின்/ தொல்லைகளை/ தீர்ப்பவன்/ என/ நான்/

ஹ்ரு2த்/-அம்பு3ஜமுன/ ஜூசுசு/-உண்ட33/ (ஸம)
இதய/ கமலத்தினில்/ கண்டுகொண்டு/ இருக்க/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 6
ஹரே/ ராம/ சந்த்3ர/ ரகு4/ குல/-ஈஸ1/
ஐயா/ இராம/ சந்திரா/ இரகு/ குல/ தலைவா/

ம்ரு2து3/ ஸு-/பா4ஷ/ ஸே1ஷ/ ஸ1யன/
மென்/-இன்/-சொல்லோனே/ சேடன்/ அணையோனே/

பர/ நாரீ/ ஸோத3ர/-அஜ/ விராஜ/ துரக3/
பரை/ நாரி/ சோதரனே/ பிறவாதவனே/ கருடன்/ (மீது) விரைவோனே/

ராஜ ராஜ/ நுத/ நிராமய/-அபக4ன/
பேரரசர்களால்/ போற்றப் பெற்றோனே/ நோயற்ற/ உடலோனே/

ஸரஸீ/-ருஹ/ த3ள/-அக்ஷ/-அனுசு/
தாமரை/ இதழ்/ கண்ணா/ இங்ஙனம்/

வேடு3கொன்ன/ நன்னு/ தா/ ப்3ரோவகனு/ (ஸம)
வேண்டிக் கொண்ட/ என்னை/ அவன்/ காவாது/ சமயத்திற்கு...


ஸ்வர ஸாஹித்ய 7
ஸ்ரீ வேங்கடேஸ1/ ஸ்வப்ரகாஸ1/
திரு வேங்கடேசா/ தன்னொளியோனே/

ஸர்வ/-உன்னத/ ஸஜ்ஜன/ மானஸ/ நிகேதன/
யாவரிலும் (தலை)/ சிறந்தோனே/ நன்மக்கள்/ இதயத்து/ உறையே/

கனக/-அம்ப3ர/ த4ர/ லஸன்/-மகுட/
பொன்/ ஆடை/ அணிவோனே/ ஒளிரும்/ மகுட/

குண்ட3ல/ விராஜித/ ஹரே/-அனுசு/ நே/
குண்டலங்களுடன்/ திகழும்/ அரியே/ என/ நான்/

பொக33கா3/ த்யாக3ராஜ/ கே3யுடு3/
போற்றியிருக்க/ தியாகராசனால்/ பாடப்பெற்ற/

மானவ/-இந்த்3ருடை3ன/ ராம/ சந்த்3ருடு3/ (ஸம)
மானவரின்/ தலைவனாகிய/ இராம/ சந்திரன்/ சமயத்திற்கு...


சரணம்
ஸமயானிகி /தகு3/ மாடலு/-ஆடெ3னே/
சமயத்திற்கு/ தகு/ மொழி/ பகன்றானே/

ஸத்3-ப4க்துல/ நட3தலு/-இட்லு/-அனெனே/
நற்றொண்டர்களின்/ நடத்தை/ இவ்விதம்/ என்றானே/

அமரிககா3/ நா/ பூஜ/ கொனெனே/
தக்கமுறையில்/ எனது/ வழிபாட்டினை/ யேற்றானே/

அலுக வத்3து3/-அனெனே/
அஞ்சேல்/ என்றானே/

விமுகு2லதோ/ சேர/ போகுமு/-அனெனே/
(இறைவனை) நோக்காதவருடன்/ சேர/ வேண்டாம்/ என்றானே/

வெத/ கலிகி3ன/ தாளுகொம்மு/-அனெனே/
வேதனை/ உண்டானாலும்/ தாள/ சொன்னானே/

3ம/ ஸ1ம/-ஆதி3/ ஸுக2/ தா3யகுட3கு3/ ஸ்ரீ/
தமம்/ சமம்/ ஆகியவற்றின்/ சுகத்தை/ யருள்வோனாகிய/ ஸ்ரீ/

த்யாக3ராஜ/ நுதுடு3/ செந்த/ ராகனே/ (ஸா)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ அருகில்/ வாராமலே/ சாதித்தானே...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸமயானிகி - ஸமயாலகு.

4 - ஏகிஞ்சினடு - ஏகி3ஞ்சினடு : எல்லா புத்தகங்களிலும், 'ஏகி3ஞ்சினடு' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'ஏகு' - 'ஏகு3' என்ற வெவ்வேறு பொருளுடைய, இரண்டு சொற்களுள்ளன. இவ்விடத்தில், 'பழித்தல்' என்ற பொருளுடைய 'ஏகு' என்ற சொல்லே பொருந்தும்.

8 - ஜேஸே - ஜேஸெடு3.

9 - முத்3து3 பெட்ட - முத்3து3 பெட்டு : இவ்விடம், 'முத்3து3 பெட்ட' என்பதே பொருந்தும்.

10 - ஸ்வர ஸாஹித்ய 4A - இந்த ஸ்வர ஸாஹித்யம், திரு கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

Top
15 - ஸ்வப்ரகாஸ1 - ஸுப்ரகாஸ1 : 'ஸ்வப்ரகாஸ1' என்பதே சரியாகும் என்று கருதுகின்றேன்.

16 - பொக33கா3 - பொக333

18 - வெத கலிகி3 - வெத கலிகி3தே.

Top

மேற்கோள்கள்
5 - ஸத்33ங்கா3 ஜனகுடு3 - புனித கங்கையினை ஈன்றவன் - வாமனாவதாரத்தில், இறைவனின் திருவடிகளை, பிரம்மா, தனது கமண்டல நீரினால் கழுவினான். இறைவன் திருவடிகளால் புனிதமடைந்த அந்த நீர், கங்கையாகப் பிறந்து, ஆகாயத்தினின்று இறங்கி, மூவுலகங்களையும் புனிதப்படுத்தியது. பாகவத புராணம் (8-வது புத்தகம், அத்தியாயம் 21, செய்யுள் 4 நோக்கவும்).

6 - ஸங்கீ3த ஸாம்ப்ரதா3யகுடு3 - இசை பரம்பரையினன் - கண்ணனின் குழலிசையில் கோபியரென்ன, உலகமே மயங்கி நின்றது. தியாகராஜர், தனது 'ஸாமஜ வர க3மன' என்ற கீர்த்தனையில், கண்ணனை, 'நாதமெனும் குள்றிலிட்ட விளக்கென'ப் புகழ்கின்றார்.

Top
7 - கோ3பீ ஜன மனோரத2மொஸங்க3 லேகனே - கோபியரின் உள்ள விழைவினை அளிக்கமாலே - கண்ணன், கம்ஸனைக் கொல்ல, மதுரைக்கு செல்லுமுன், ஏங்கி நிற்கும் ஆய்ச்சியரை நோக்கி, தான், திரும்ப வருவதாக, உறுதியளித்தான். (பாகவத புராணம், 10-வது புத்தகம், 39-வது அத்தியாயம், 35-வது செய்யுள் நோக்கவும்.) ஆனால், கண்ணன் கோகுலத்திற்குத் திரும்பவில்லை.

12 - ஆஜன்மமனகு4டு3 - வாழ்நாள் முழுதும் பாவங்களற்றவன் - பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 22-வது அத்தியாயம், செய்யுட்கள் 25,26 - கோபியரின் ஆடைகளைத் திருடும் படலம்) கண்ணன், ஆய்ச்சியரை நோக்கிக் கூறுவது -

"கற்புடையோரே! என்னைத் தொழுவதற்கான உமது ஆசையை நானறிவேன். அது (அந்த ஆசை) முன்னமே என்னால் ஆமோதிக்கப்பட்டது. அது நிறைவேறும். உள்ளத்தினில், என்னிடம் பற்று கொண்டோரின், இன்பம் துய்க்கும் இச்சை, பயிரிட உதவாத, வறுத்த, அவிந்த தானியம் போன்று, புலன் நுகர்ச்சியற்றதாகும்."

Top
17 - ஸத்34க்துல நட3தலு - உண்மையான தொண்டர்களின் நடத்தை - தியாகராஜர் தனது 'கருண ஏலாக3ண்டே' என்ற கீர்த்தனையில், இதனை விவரிக்கின்றார்.

உண்மையான தொண்டன், யாரிடமும் பொய் பகரான்; இழிந்தோரை, மன்னராகிலும், வேண்டான்; பகலவனை மறவான்; புலால் உண்ணான்; மது அருந்தான்; பிறருக்குத் துன்பம் இழையான்; போதனையை மறவான்; மூவாசையினை (மனைவி, மக்கள், செல்வம்) விழையான்; சீவன் முத்தனாகத் திரியும் ஆனந்தத்தினை வெளிப்படுத்தான்; யாரையும் ஏமாற்றான்; உள்ளமோ, அறிவோ, மயங்கினாலும், மெய்ந்நெறியினின்று வழுவான்; தான் சாட்சி மாத்திரமே, என்றுணர்ந்து, தனது நோக்கத்தினின்று மாறான்.

தியாகராஜர், தனது 'மனவினாலகிஞ்ச' என்ற கீர்த்தனையில், 'பிறவிக்கடலில் துயருறும் மானிடருக்காக, நல்லொழுக்கத்தினை, தான் நடந்து காட்டினான்' என்று கூறுகின்றார்.

19 - 3ம ஸ1மாதி - தமம், சமம் - மனம், இந்திரியங்களை அடக்குதல் ஆகிய 'ஷட்3கு3ண ஸம்பத்' எனப்படும் அறுவகையான செல்வங்கள்
Top

விளக்கம்
1 - ஸாதி4ஞ்செனே - சாதித்தானே. இந்த கீர்த்தனையின் கடைசியில், 'அருகினில் வாராது சாதித்தான்' என்று விளக்குகின்றார். இதற்கு, உதாரணங்களை, ஸ்வர ஸாஹித்யங்களில் குறிப்பிட்டு, இறைவன், தொண்டர்களிடம், இங்ஙனமே, அவர்களை சோதிப்பதற்காக, விளையாடுகின்றான், என்று மறைமுகமாகக் கூறுகின்றார்.

2 - ஸன்மார்க3 வசனமுல பொ3ங்கு ஜேஸி - நன்னெறிச் சொற்களைப் பொய்யாக்கி - முதல் நான்கு ஸ்வர ஸாஹித்யங்கள் கண்ணனைப் பற்றி்யதாகும். நடத்தைகளில், கண்ணனுக்கும், ராமனுக்கும் மிக்கு வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கண்ணனின் நடத்தையின் உள் நோக்கத்தினை, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஆண்டாள், மீரா ஆகிய ஞானியரும், பெருந்தொண்டர்களுமே அறிவர். கண்ணனை, தியாகராஜர், இந்த கீர்த்தனையில், குறை கூறினாலும், கண்ணனுடன், கோபியர் சல்லாபித்ததனை (ராஸ் லீலா) விவரிக்கும் 'ஓடக்கதை' எனப்படும் 'நௌக சரித்திரத்தினில்' தியாகராஜர் தெளிவுபடுத்துகின்றார். கண்ணனுடைய நடத்தைகள் மேலுக்குத்தான் முரண்பாடானவை. கண்ணன் கோபியரின் ஆடைகளைத் திருடும் படலம் பற்றிய அன்னி பெஸண்ட் அம்மையாரின் விளக்கம் நோக்கவும்.

Top
3 - ஸமயானிகி தகு3 மாடலாடெ3னே - சமயத்திற்குத் தகுந்த சொற்களைப் பகன்றான் - தியாகராஜர், தனது, 'ஏமனி மாடாடி3திவோ' என்ற கீர்த்தனையில், ராமனின், யாவரையும் கவரும், தருணத்திற்கேற்ற இனிய சொற்றிறனை, வியக்கின்றார். ஆனால் அவர் இங்கு கூறும் 'சமயத்திற்குத் தகுந்த' என்பது, தந்திரமாகப் பேசும் கண்ணனைப் பற்றியதாகும். அதனால்தான், 'நன்னெறிச் சொற்களை பொய்யாக்கி' என்று கூறியுள்ளார்.

4 - தே3வகி வஸு தே3வுலனேகிஞ்சினடு - சில புத்தகங்களில், இச்சொற்களுக்கு, 'தனது பெற்றோரைத் துயரத்திற்குள்ளாக்கினான்' என்று கூறப்பட்டுள்ளது. 'ஏகிஞ்சு' என்று தெலுங்கு சொல்லுக்கு, 'பழித்தல்' என்று பொருளாகும். எனவே, 'பெற்றோரைப் பழித்தது போலும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

Top
9 - முத்3து3 பெட்ட நவ்வுசுண்டு - முத்தமிட நகைத்திருக்கும் - ராமாவதாரத்தில், ராமன், 'தான் ஒரு மனிதனே' என்று வெளிப்படையாகக் கூறி, மனிதருக்கு உகந்த முறையிலேயே தன்னை நடத்திக்கொண்டான். ஆனால், கண்ணனோ, குழவியிலிருந்தே, தனது லீலைகளைக் காட்டத் தொடங்கி, வாழ்நாள் முழுதும், பல விதமாக அனைவருடன் விளையாடினான். எனவே, 'கிருஷ்ணாவதாரம்', 'பூர்ண அவதாரம்' என்று வைணவர்கள் கருதுவர்.(தியாகராஜர், தனது, 'ரகு4பதே ராம' என்ற கீர்த்தனையில், ராமனையே பூர்ண அவதாரம் என்கிறார்.) ஆயினும், யசோதையின் கண்களுக்கு, கண்ணன் ஒரு குழவியே. அதனால், தன்னை உணர்ந்த கண்ணன், தாய் முத்தமிடுகையில், நகைத்திருப்பதாகக் கூறுகின்றார். பாபநாசம் சிவன், தனது, 'என்ன தவம் செய்தனை' என்ற கீர்த்தனையில், 'பர பிரமம் 'அம்மா' என்றழைக்க, என்ன தவம் செய்தனை யசோதா?' என்று பரவசமாகக் கேட்கின்றார்.

11 - ஸாராஸாருடு3 - சாரமானதும் சாரமற்றதுமானவன் - பரம்பொருள், இங்ஙனம் என விவரிக்க இயலாததொன்றாகும். உலகத்தில் காணப்படும் அத்தனை முரண்பாடுகளும் பரம்பொருளில் அடக்கம். அதனால், இறைவனைப் புகழும், 'விஷ்ணு' மற்றும் 'லலிதா' ஸஹஸ்ர நாமங்களில் ஒன்றுக்கொன்று முரணான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன - 'வித்3யா-அவித்3யா' - 'அர்த2-அனர்த2' என. அது போன்றதே 'ஸார-அஸார' என்பதுவும்.

Top
13 - ஹ்ரு23ம்பு3ஜமுன ஜூசுசுண்ட33 - இங்கு, 'இதயக் கமலத்தினில் கண்டுகொண்டிருக்க' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 'இதயக் கமலத்தினில் வழி நோக்கியிருக்க' என்றும் பொருள் கொள்ளலாம். இது, கீர்த்தனையின் கடைசியில் கூறப்பட்ட, 'அருகினில் வாராது சாதித்தானே' என்பதுடன் ஒவ்வும்

14 - பர நாரீ ஸோத3 - பரை நாரி - பார்வதி : புத்தகங்களில், இதற்கு 'பிற பெண்டிருக்கு சோதரன் போன்று' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், 'பர' என்பது பரம்பொருளினையும் குறிக்கும். அங்ஙனம், 'பர நாரி' என்பது பார்வதியைக் குறிக்கும் என நான் கருதுகின்றேன்.

தேவகி, வசு தேவர் - கண்ணனின் பெற்றோர்

Top


Updated on 05 Nov 2009

3 comments:

Anonymous said...

அன்புடைய திரு கோவிந்தன் அவர்களே

இப்பாடலில் ஸ்வ ஸாகித்யம் 5 வரை க்ருஷ்ணனைப் பற்றிய நிந்தாஸ்துதியா? அவ்வாறெனில் ஸ்வ 6 ல் இராமனையும் ஸ்வ 7 ல் வேங்கடேஸனையும் கேலி செய்து பாடுகிறாரா?
’பர நாரி ’என்பதற்கு பரை நாரி என்றும், இது பார்வதியைக் குறிக்கும் என்று பொருள் கொடுத்திருக்கிறீர். தெலுங்கு அல்லது ஸம்ஸ்க்ருதத்தில் பரநாரி என்பது பார்வதியைக் குறிக்குமா. பரை என்பது பேச்சுவழக்கிலுள்ளதா என்று தெரியவில்லை. பரநாரி என்பது பரஸ்த்ரீ அல்லவா? நான் படித்த தமிழ் இலக்கியங்களிலும் இச்சொல்லை எதிர்கொள்ளவில்லை. பராத்பரி என்பது பார்வதியைக் குறிக்கும்.
முன்னமே நான் அனுப்பிய மின் அஞ்சலில் இராமனது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடினைக் குறிக்க, அவன் மாற்றான் மனைவியை (இன்னொருத்தன் பெண்டாட்டி என்பது தான் வழக்கிலுள்ளது) விழையாதவன் என்பதை வலியுறுத்த பரநாரி ஸோதர என்று தியாகராஜர் விளித்துள்ளாரா என்று கேட்டிருந்தேன். திருக்குறளில் பிறனில் விழையாமை என்று ஒரு அதிகாரம் உள்ளது.
நன்றி
கோவிந்தசாமி

R. Solairaj said...

அற்புதமான கீர்தனைக்கு , மிக சிறந்த விளக்கம். மிக்க நன்றி.

Sowmya said...

Can you please send swaras