Saturday, October 31, 2009

தியாகராஜ கிருதி - பலுகவேமி பதித பாவன - ராகம் ஆரபி4 - Palukavemi Patita Paavana - Raga Arabhi

பல்லவி
பலுகவேமி பதித பாவன கருண
ஜில்கவேமி ஸுஜன ஜீவன

சரணம்
சரணம் 1
ஓர்சின தாபமார்சின
அங்க3லார்சின எந்த நேர்சின (ப)


சரணம் 2
தலசின நின்னு கொலிசினயெந்த
வலசின பா33 பிலிசின (ப)


சரணம் 3
தெலிபின மனஸு நிலிபின பூஜ
ஸலிபின மதமு கலிபின (ப)


சரணம் 4
காஞ்சின நின்னு ப4ஜிஞ்சின 1மத3மு
வஞ்சின
உரமுனனுஞ்சின (ப)


சரணம் 5
பட்டின எந்த திட்டின நின்னு
ஜுட்டின பத3மு பட்டின (ப)


சரணம் 6
ஆடி3ன நின்னு பாடி3னயெந்த
வேடி3ன கொனியாடி3ன (ப)


சரணம் 7
கோரின மருகு3 ஜேரின நின்னு
தூ3ரினயெந்த போரின (ப)


சரணம் 8
தெலிஸின பு3த்3தி4 கலஸின ஜூசி
ஸொலஸின பேரு தெலிஸின (ப)


சரணம் 9
ம்ரொக்கின 2நீ சே ஜிக்கினயெந்தோ
ஸொக்கின நீகே த3க்கின (ப)


சரணம் 10
நாக3 ராஜ ஸ1யன வேக3 ரா ஸ்ரீ
த்யாக3ராஜ நுத க்4ரு2ணா ஸாக3ர (ப)


பொருள் - சுருக்கம்
வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே! நல்லோரின் வாழ்வே! அரவரசன் அணையோனே! தியாகராசன் போற்றும் கருணைக் கடலே!
  • பேசமாட்டாயோ?

  • கருணை பொழியமாட்டாயோ?


    • பொறுத்தாலும், வெம்மை தணித்தாலும்,

    • ஓலமிட்டாலும், எவ்வளவு கற்றறிந்தாலும்,

    • நினைத்தாலும், உன்னைத் தொழுதாலும்,

    • எவ்வளவு காதலித்தாலும், நன்றாக அழைத்தாலும்,

    • தெரிவித்தாலும், மனதையடக்கினாலும்,

    • வழிபாடு செய்தாலும், எண்ணமொருமித்தாலும்,

    • கண்டாலும், உன்னை பஜித்தாலும்,

    • செருக்கை யடக்கினாலும், நெஞ்சிலிருத்தினாலும்,

    • பிடித்தாலும், எவ்வளவு திட்டினாலும்,

    • உன்னைச் சுற்றினாலும், திருவடியினைப் பற்றினாலும்,

    • பேசினாலும், உன்னைப் பாடினாலும்,

    • எவ்வளவு வேண்டினாலும், புகழ்ந்தாலும்,

    • கோரினாலும், மறைவில் சென்றாலும்,

    • உன்னைத் தூற்றினாலும், எவ்வளவு போராடினாலும்,

    • தெரிந்துகொண்டாலும், அறிவு கலந்தாலும்,

    • (வழி) நோக்கிக் களைத்தாலும், பெயரையறிந்தாலும்,

    • வணங்கினாலும், உனது கையில் சிக்கினாலும்,

    • எவ்வளவோ சொக்கினாலும், உனக்கே பணிந்தாலும்,

  • பேசமாட்டாயோ?

  • விரைவில் வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பலுகவு-ஏமி/ பதித/ பாவன/ கருண/
பேசமாட்டாயோ/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துவோனே/ கருணை/

ஜில்கவு-ஏமி/ ஸுஜன/ ஜீவன/
பொழியமாட்டாயோ/ நல்லோரின்/ வாழ்வே/


சரணம்
சரணம் 1
ஓர்சின/ தாபமு/-ஆர்சின/
பொறுத்தாலும்/ வெம்மை/ தணித்தாலும்/

அங்க3லார்சின/ எந்த/ நேர்சின/ (ப)
ஓலமிட்டாலும்/ எவ்வளவு/ கற்றறிந்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 2
தலசின/ நின்னு/ கொலிசின/-எந்த/
நினைத்தாலும்/ உன்னை/ தொழுதாலும்/ எவ்வளவு/

வலசின/ பா33/ பிலிசின/ (ப)
காதலித்தாலும்/ நன்றாக/ அழைத்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 3
தெலிபின/ மனஸு/ நிலிபின/ பூஜ/
தெரிவித்தாலும்/ மனதை/ அடக்கினாலும்/ வழிபாடு/

ஸலிபின/ மதமு/ கலிபின/ (ப)
செய்தாலும்/ எண்ணம்/ ஒருமித்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 4
காஞ்சின/ நின்னு/ ப4ஜிஞ்சின/ மத3மு/
கண்டாலும்/ உன்னை/ பஜித்தாலும்/ செருக்கை/

வஞ்சின/ உரமுனனு/-உஞ்சின/ (ப)
அடக்கினாலும்/ நெஞ்சில்/ இருத்தினாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 5
பட்டின/ எந்த/ திட்டின/ நின்னு/
பிடித்தாலும்/ எவ்வளவு/ திட்டினாலும்/ உன்னை/

ஜுட்டின/ பத3மு/ பட்டின/ (ப)
சுற்றினாலும்/ திருவடியினை/ பற்றினாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 6
ஆடி3ன/ நின்னு/ பாடி3ன/-எந்த/
பேசினாலும்/ உன்னை/ பாடினாலும்/ எவ்வளவு/

வேடி3ன/ கொனியாடி3ன/ (ப)
வேண்டினாலும்/ புகழ்ந்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 7
கோரின/ மருகு3/ ஜேரின/ நின்னு/
கோரினாலும்/ மறைவில்/ சென்றாலும்/ உன்னை/

தூ3ரின/-எந்த/ போரின/ (ப)
தூற்றினாலும்/ எவ்வளவு/ போராடினாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 8
தெலிஸின/ பு3த்3தி4/ கலஸின/ ஜூசி/
தெரிந்துகொண்டாலும்/ அறிவு/ கலந்தாலும்/ (வழி) நோக்கி/

ஸொலஸின/ பேரு/ தெலிஸின/ (ப)
களைத்தாலும்/ பெயரை/ அறிந்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 9
ம்ரொக்கின/ நீ/ சே/ ஜிக்கின/-எந்தோ/
வணங்கினாலும்/ உனது/ கையில்/ சிக்கினாலும்/ எவ்வளவோ/

ஸொக்கின/ நீகே/ த3க்கின/ (ப)
சொக்கினாலும்/ உனக்கே/ பணிந்தாலும்/ பேசமாட்டாயோ...


சரணம் 10
நாக3/ ராஜ/ ஸ1யன/ வேக3/ ரா/ ஸ்ரீ/
அரவு/ அரசன்/ அணையோனே/ விரைவில்/ வாராய்/ ஸ்ரீ/

த்யாக3ராஜ/ நுத/ க்4ரு2ணா/ ஸாக3ர/ (ப)
தியாகராசன்/ போற்றும்/ கருணை/ கடலே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 'ராம' என்ற சொல் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

1 - மத3மு வஞ்சின - முத3மு வஞ்சின : 'மத3மு வஞ்சின' என்பதே சரியாகும்.

2 - நீ சே ஜிக்கின - நீகே ஜிக்கின : 'நீ சே ஜிக்கின' என்பதே சரியாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
பெயரையறிந்தாலும் - பெயரின் பெருமையை அறிந்தாலும்

Top


Updated on 31 Oct 2009

No comments: