இதே3 பா4க்3யமு கா3கயேமியுன்னதி3ரா ராம
அனுபல்லவி
ஸதா3 நீ பத3 பங்கஜமுலனு
ஸம்மதமுக3 1பூஜிஞ்சு வாரி(கிதே3)
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர த3ஸ1ரத2 நந்த3ன
ஹ்ரு2த3யாரவிந்த3முன நின்னுஞ்சி 2தானே
ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி அதி3யு கா3க
இந்து3 த4ரு மொத3லந்த3ரினி ஸுர
ப்3ரு2ந்த3 பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல
தானெந்து3 3கனியானந்த3முன
நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 வாரி(கிதே3)
சரணம் 2
ஆஸ1 பாஸ1முல தெக3 கோஸியன்னியு 4மதி3
ரோஸி 5கர்மமு பா3ஸி நின்னு கருணா
வாராஸி1யனி பூஜ ஜேஸி து3ஸ்-ஸங்க3தி
ஜேஸி மேனு கா3ஸி ஜெந்த3க
ஸ்ரீஸ1 தே3வாதீ4ஸ1 நினு
காஸீ1ஸ1 நுதுட3னி ஆஸ1 நீயெட3
கீஸ1 ப4க்தியு ஜேஸின வாரி(கிதே3)
சரணம் 3
போ4கி3 ஸ1யன நீவே க3தியனி பட்டி
6ராகா3து3ல தோட3 பூரித 7ப4வ
ஸாக3ரமுனு தா3டி ஸந்ததமுனு
யாக3 பாலன ஜாக3-ரூக
ஸதா3 க3திஜ ஹித யோகி3 நுத
வேதா3க3மாது3ல வேக3 நுதினிடு3
பா4க3வதுட3கு3 த்யாக3ராஜுனி(கிதே3)
பொருள் - சுருக்கம்
இராமா! அழகிய, தசரதன் மகனே! மா மணாளா! தேவர் தலைவா! அரவணையோனே! வேள்வி காப்போனே! விழிப்புடனிருப்போனே! வாயு மைந்தனுக்கினியோனே! யோகியரால் போற்றப் பெற்றோனே!
- இதுவே பேறல்லாது (வேறு) என்ன உள்ளதய்யா?
- எவ்வமயமும், உனது திருவடித் தாமரையினை, முழு மனதுடன் தொழுவோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- இதயக் கமலத்தினில், உன்னையிருத்தி,
- தானே பரமானந்தத்தினைத் துய்த்து, மேலும்
- பிறையணிவோன் முதலாக, வானோர்கள், அந்தணர்கள் யாவரிலும், தன்னை எங்கும் கண்டு,
- இதயக் கமலத்தினில், உன்னையிருத்தி,
- ஆனந்தமாக, உன்னிடம் உள்ளுணர்வு கொண்டிருப்போருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- ஆசை, பாசங்களை அற வீழ்த்தி,
- யாவும் மனத்தாலும் துறந்து,
- கருமங்களை விடுத்து,
- உன்னை கருணைக் கடலென தொழுது,
- தீய நட்பு கொண்டு உடல் துயருறாது,
- உன்னை, காசி ஈசனால் போற்றப் பெற்றோனென, உன்னிடம் காதலும்,
- ஆசை, பாசங்களை அற வீழ்த்தி,
- அனுமன் (போன்ற) பக்தியும் செய்வோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- நீயே புகலெனப் பற்றி,
- இராகம் ஆகியவற்றின் துணையுடன், நிறை பிறவிக் கடலினைத் தாண்டி,
- நீயே புகலெனப் பற்றி,
- மறைகள், ஆகமங்கள் ஆகியவற்றின் ஊக்கத்துடன், எவ்வமயமும் போற்றி செய்யும், பாகவதனாகிய, தியாகராசனுக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இதே3/ பா4க்3யமு/ கா3க/-ஏமி-/உன்னதி3ரா/ ராம/
இதுவே/ பேறு/ அல்லாது/ (வேறு) என்ன/ உள்ளதய்யா/ இராமா/
அனுபல்லவி
ஸதா3/ நீ/ பத3/ பங்கஜமுலனு/
எவ்வமயமும்/ உனது/ திருவடி/ தாமரையினை/
ஸம்மதமுக3/ பூஜிஞ்சு வாரிகி/-(இதே3)
முழு மனதுடன்/ தொழுவோருக்கு/ இதுவே...
சரணம்
சரணம் 1
ஸுந்த3ர/ த3ஸ1ரத2/ நந்த3ன/
அழகிய/ தசரதன்/ மகனே/
ஹ்ரு2த3ய/-அரவிந்த3முன/ நின்னு/-உஞ்சி/ தானே/
இதய/ கமலத்தினில்/ உன்னை/ இருத்தி/ தானே/
ப்3ரஹ்மானந்த3மு/-அனுப4விஞ்சி/ அதி3யு கா3க/
பரமானந்தத்தினை/ துய்த்து/ மேலும்/
இந்து3/ த4ரு/ மொத3லு/-அந்த3ரினி/
பிறை/ அணிவோன்/ முதலாக/ யாவரிலும்/
ஸுர ப்3ரு2ந்த3/ பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல/
வானோர்கள்/ அந்தணர்கள்/
தானு/-எந்து3/ கனி/-ஆனந்த3முன/
தன்னை/ எங்கும்/ கண்டு/ ஆனந்தமாக/
நீயந்து3/ பா4வன/ ஜெந்து3சு/-உண்டு3 வாரிகி/-(இதே3)
உன்னிடம்/ உள்ளுணர்வு/ கொண்டு/ இருப்போருக்கு/ இதுவே...
சரணம் 2
ஆஸ1/ பாஸ1முல/ தெக3/ கோஸி/-அன்னியு/ மதி3/
ஆசை/ பாசங்களை/ அற/ வீழ்த்தி/ யாவும்/ மனத்தாலும்/
ரோஸி/ கர்மமு/ பா3ஸி/ நின்னு/ கருணா/
துறந்து/ கருமங்களை/ விடுத்து/ உன்னை/ கருணை/
வாராஸி1/-அனி/ பூஜ ஜேஸி/ து3ஸ்/-ஸங்க3தி/
கடல்/ என/ தொழுது/ தீய/ நட்பு/
ஜேஸி/ மேனு/ கா3ஸி/ ஜெந்த3க/
கொண்டு/ உடல்/ துயர்/ உறாது/
ஸ்ரீ/-ஈஸ1/ தே3வ/-அதி4-ஈஸ1/ நினு/
மா/ மணாளா/ தேவர்/ தலைவா/ உன்னை/
காஸி1/-ஈஸ1/ நுதுடு3/-அனி/ ஆஸ1/ நீயெட3/
காசி/ ஈசனால்/ போற்றப் பெற்றோன்/ என/ காதல்/ உன்னிடம்/
கீஸ1/ ப4க்தியு/ ஜேஸின வாரிகி/-(இதே3)
அனுமன் (போன்ற)/ பக்தியும்/ செய்வோருக்கு/ இதுவே...
சரணம் 3
போ4கி3/ ஸ1யன/ நீவே/ க3தி/-அனி/ பட்டி/
அரவு/ அணையோனே/ நீயே/ புகல்/ என/ பற்றி/
ராக3/-ஆது3ல/ தோட3/ பூரித/ ப4வ/
இராகம்/ ஆகியவற்றின்/ துணையுடன்/ நிறை/ பிறவி/
ஸாக3ரமுனு/ தா3டி/ ஸந்ததமுனு/
கடலினை/ தாண்டி/ எவ்வமயமும்/
யாக3/ பாலன/ ஜாக3-ரூக/
வேள்வி/ காப்போனே/ விழிப்புடனிருப்போனே/
ஸதா3 க3திஜ/ ஹித/ யோகி3/ நுத/
வாயு மைந்தனுக்கு/ இனியோனே/ யோகியரால்/ போற்றப் பெற்றோனே/
வேத3/-ஆக3ம/-ஆது3ல/ வேக3/ நுதினி/-இடு3/
மறைகள்/ ஆகமங்கள்/ ஆகியவற்றின்/ ஊக்கத்துடன்/ போற்றி/ செய்யும்/
பா4க3வதுட3கு3/ த்யாக3ராஜுனிகி/-(இதே3)
பாகவதனாகிய/ தியாகராசனுக்கு/ இதுவே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பூஜிஞ்சு - ஸேவிஞ்சு.
3 - கனியானந்த3முன - கனியானந்த3முக.
6 - ராகா3து3ல தோட3 - ராகா3து3ல தோடி3 : இவ்விடத்தில் 'தோட3' என்பதே பொருந்தும். எனவே அங்ஙனமே ஏற்கப்பட்டது.
சரணங்கள் 1-ம், 2-ம், சில புத்தகங்களில் வரிசை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன.
Top
மேற்கோள்கள்
4 - மதி3 ரோஸி - மனத்தினாலும் துறந்து - கண்ணன் கீதையில் (2-வது அத்தியாயம், 59-வது செய்யுள்) கூறியது -
"விடயங்கள், விரதமிருப்போனிடமிருந்து விலகுகின்றன;
(அவற்றின்) அவா (சுவை) விலகுவதில்லை. அவாவும் (சுவையும்), பரம்பொருளினை யறிந்தபின் விலகுகின்றன." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்) (விடயங்கள் - புலன் நுகர்ச்சிப் பொருட்கள்)
Top
5 - கர்மமு பா3ஸி - கர்மங்களைத் துறந்து - கண்ணன் கீதையில் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) கூறுவது -
"அனைத்து தருமங்களையும் துறந்து, என் ஒருவனையே புகலடைவாயாக;
நான், உன்னை, அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
7 - ப4வ ஸாக3ரமுனு தா3டி - பிறவிக் கடலைத் தாண்டி. இது குறித்து நாரத பக்தி சூத்திரம் (46 மற்றும் 50-வது செய்யுட்கள்) கூறுவது -
"எவன் கடக்கின்றான், எவன் கடக்கின்றான், மாயையினை? எவனொருவன் புலன் நாட்டங்களைத் துறக்கின்றானோ, சான்றோர்களுக்கு எவன் சேவை செய்கின்றானோ, எவன் அகந்தையற்றுள்ளானோ, அவனே கடக்கின்றான், அவனே கடக்கின்றான்; அவன் மற்றோரையும் கடத்துவிக்கின்றான்." (ஸ்வாமி தியாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
2 - தானே ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சி, அந்த3ரினி தானெந்து3 3கனி, நீயந்து3 பா4வன ஜெந்து3சுண்டு3 - 'தானே பரமானந்தத்தினைத் துய்த்து', 'தன்னை எங்கும் கண்டு', 'உன்னிடம் உள்ளுணர்வு கொண்டு' - இச்சொற்கள் யாவும் அபரோக்ஷ - நேரடி - அனுபூதியினால் உணரப்படவேண்டியவை. அத்தகைய அனுபூதி பெற்றவர்களே இவற்றிற்கு உண்மையான விளக்கம் தரமுடியும். என்னைப்போன்று, வெறும் கல்வியறிவின் துணை கொண்டு, பொருள் கூறுவது இயலாததும், தவறானதும் கூட.
Top
தன்னை எங்கும் கண்டு - 'தன்னில் கண்டு' என்றும் கொள்ளலாம்.
கருமங்கள் - இச்சைகளுக்காக புரியும் பணிகள்.
காசி ஈசன் - சிவன்.
இராகம் ஆகிய - இசையினைக் குறிக்கும்.
விழிப்புடனிருப்போனே - தொண்டர்களைப் பேணுவதில்.
பாகவதன் - சிறந்த தொண்டன்.
Top
Updated on 26 Nov 2009
3 comments:
அன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே
ஸுந்த3ர த3ஸ1ரத2 நந்த3ன – இதற்கு அழகிய தசரதன் மகனே என்று பொருள் கூறியுள்ளீர். தசரதன் அழகன் என்ற பொருள் தரும். தசரதனின் அழகிய மகனே என்பது தானே பொருள்.அழகனே! தசரதன் மகனே என்பது சரியா?
வணக்கம்
திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,
உங்கள் ஐயத்திற்கிணங்க, 'அழகிய' என்ற சொல்லுக்குப்பின் comma சேர்த்துள்ளேன்.
வணக்கம்
கோவிந்தன்
Post a Comment