மும்மூர்துலு கு3மி கூடி3 பொக3டே3 முச்சட வினுகோரே
அனுபல்லவி
ஸம்மதிக3 ராஜு கொடு3கனக3 வினி
ஸம்ஸ1யமு தீரக ஸ்ரீ ராமுனி (மு)
சரணம்
ரோஸமுதோ ரகு4ராமுனி கு3ணமுல
ரூடி3க3 தம கு3ணமுலனடு வ்ராஸி
த்ராஸுனனிட3 ஸரி நில்வ லேத3னி
1த்யாக3ராஜ நுதுடெ3வடோ3யனுசுனு (மு)
பொருள் - சுருக்கம்
- அரச குமாரனென கேள்விப்பட்டு,
- ஐயம் தீராது, நாணமுற்று,
- இரகுராமனின் குணங்களையும், உலகறிந்த தமது குணங்களையும் எழுதி யங்கு
- தராசிலிட, (தட்டுகள்) சரி நிற்கவில்லையென,
- 'தியாகராசனால் போற்றப் பெற்றோன் யாரே' யென (வியந்து),
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மும்மூர்துலு/ கு3மி கூடி3/ பொக3டே3/ முச்சட/ வினுகோரே/
மும்மூர்த்திகள்/ ஒருமித்து/ புகழும்/ பேச்சினை/ கேளீரே/
அனுபல்லவி
ஸம்மதிக3/ ராஜு/ கொடு3கு/-அனக3/ வினி/
முழுமனதுடன்/ அரச/ குமாரன்/ என/ கேள்விப்பட்டு/
ஸம்ஸ1யமு/ தீரக/ ஸ்ரீ ராமுனி/ (மு)
ஐயம்/ தீராது/ ஸ்ரீ ராமனை/ மும்மூர்த்திகள்...
சரணம்
ரோஸமுதோ/ ரகு4ராமுனி/ கு3ணமுல/
நாணமுற்று/ இரகுராமனின்/ குணங்களையும்/
ரூடி3க3/ தம/ கு3ணமுலனு/-அடு/ வ்ராஸி/
உலகறிந்த/ தமது/ குணங்களையும்/ அங்கு/ எழுதி/
த்ராஸுன/-இட3/ ஸரி/ நில்வ லேது3/-அனி/
தராசில்/ இட/ (தட்டுகள்) சரி/ நிற்கவில்லை/ என/
த்யாக3ராஜ/ நுதுடு3/-எவடோ3/-அனுசுனு/ (மு)
தியாகராசனால்/ போற்றப் பெற்றோன்/ யாரே/ என (வியந்து)/ மும்மூர்த்திகள்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - த்யாக3ராஜ நுதுடெ3வடோ3 - தியாகராசனால் போற்றப் பெற்றோன் யாரே - தியாகராஜர், தமது, 'எவரனி நிர்ணயிஞ்சிரி' என்ற கீர்த்தனையில், இதே கேள்வியினைக் கேட்டு, விடையும் தருகின்றார்.
அனுபல்லவி மட்டும் தனியாக, பொருள் நிறைவுறவில்லை. அனுபல்லவியுடன் சரணத்தினையும் சேர்த்தே முழுமையான பொருள் கொள்ளவியலும்.
Top
Updated on 21 Nov 2009
No comments:
Post a Comment