ப4ஜன ஸேய ராதா3 ராம
அனுபல்லவி
அஜ ருத்3ராது3லகு ஸததமாத்ம மந்த்ரமைன ராம (ப4)
சரணம்
சரணம் 1
கரகு3 ப3ங்கா3ரு வல்வ கடினெந்தோ மெரயக3
சிரு நவ்வுலு-க3ல 1முக2முனு சிந்திஞ்சி சிந்திஞ்சி (ப4)
சரணம் 2
அருணாபா4த4ரமுனு ஸுருசிர த3ந்தாவளினி
மெரயு கபோல யுக3முனு நிரதமுனனு தலசி தலசி (ப4)
சரணம் 3
பா3கு3க3 மானஸ ப4வ ஸாக3ரமுனனு தரிம்ப
த்யாக3ராஜு மனவினி வினி தாரகமகு3 ராம நாம (ப4)
பொருள் - சுருக்கம்
மனமே!
- இராம பஜனை செய்யலாகாதா?
- பிறவிக் கடலினைக் கடக்க, தியாகராசனின் வேண்டுகோளினை யேற்று,
- பிரமன், உருத்திராதியருக்கு, எவ்வமயமும், தமது மந்திரமான,
- பிறவிக் கடலினைக் கடக்க, தியாகராசனின் வேண்டுகோளினை யேற்று,
- தாரகமாகிய, இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
- உருக்கிய பொன்னாடை இடையில் மிக்கொளிர, புன்சிரிப்பு திகழும் முகத்தினைச் சிந்தித்துச் சிந்தித்து,
- மிளிரும் சிவந்த உதடுகளை, அழகிய பல்வரிசைகளை, பளபளக்கும் கன்ன இணையினை, என்றும் நினைந்து நினைந்து,
- உருக்கிய பொன்னாடை இடையில் மிக்கொளிர, புன்சிரிப்பு திகழும் முகத்தினைச் சிந்தித்துச் சிந்தித்து,
- இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப4ஜன/ ஸேய ராதா3/ ராம/
பஜனை/ செய்யலாகாதா/ இராம/
அனுபல்லவி
அஜ/ ருத்3ர-ஆது3லகு/ ஸததமு/-ஆத்ம/ மந்த்ரமைன/ ராம/ (ப4)
பிரமன்/ உருத்திராதியருக்கு/ எவ்வமயமும்/ தமது/ மந்திரமான/ இராம/ பஜனை...
சரணம்
சரணம் 1
கரகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கடினி/-எந்தோ/ மெரயக3/
உருக்கிய/ பொன்/ ஆடை/ இடையில்/ மிக்கு/ ஒளிர/
சிரு நவ்வுலு/-க3ல/ முக2முனு/ சிந்திஞ்சி/ சிந்திஞ்சி/ (ப4)
புன்சிரிப்பு/ திகழும்/ முகத்தினை/ சிந்தித்து/ சிந்தித்து/ (இராம) பஜனை...
சரணம் 2
அருண/-ஆப4/-அத4ரமுனு/ ஸுருசிர/ த3ந்த/-ஆவளினி/
சிவந்த/ மிளிரும்/ உதடுகளை/ அழகிய/ பல்/ வரிசைகளை/
மெரயு/ கபோல/ யுக3முனு/ நிரதமுனனு/ தலசி/ தலசி/ (ப4)
பளபளக்கும்/ கன்ன/ இணையினை/ என்றும்/ நினைந்து/ நினைந்து/ (இராம) பஜனை...
சரணம் 3
பா3கு3க3/ மானஸ/ ப4வ/ ஸாக3ரமுனனு/ தரிம்ப/
நன்கு/ மனமே/ பிறவி/ கடலினை/ கடக்க/
த்யாக3ராஜு/ மனவினி/ வினி/ தாரகமகு3/ ராம/ நாம/ (ப4)
தியாகராசனின்/ வேண்டுகோளினை/ யேற்று/ தாரகமாகிய/ இராம/ நாமத்தினை/ பஜனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - முக2முனு - மொக4முனு : 'முக2' என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லின் தெலுங்கு வடிவம் 'மொக2மு' ஆகும்.
மேற்கோள்கள்
விளக்கம்
தாரகம் - படகு - பிரணவத்திற்கீடான இராம நாமம்
Top
Updated on 20 Nov 2009
No comments:
Post a Comment