Wednesday, March 11, 2009

தியாகராஜ கிருதி - பு4வினி தா3ஸுட3னே - ராகம் ஸ்ரீ ரஞ்ஜனி - Bhuvini Daasudane - Raga Sri Ranjani

பல்லவி
பு4வினி தா3ஸுட3னே பேராஸசே
பொ3ங்குலாடி3தினா பு34 மனோ-ஹர

அனுபல்லவி
அவிவேக மானவுல கோரி கோரி
அட்33 த்3ரோவ த்ரொக்கிதினா
ப்3ரோவவே (பு4)

சரணம்
சால ஸௌக்2யமோ கஷ்டமோ நேனு
ஜாலி ஜெந்தி3தினா ஸரி வாரிலோ
1பால முஞ்சின நீட முஞ்சின
பத3முலே க3தி த்யாக3ராஜ நுத (பு4)


பொருள் - சுருக்கம்
அறிஞருள்ளம் கவர்வோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
  • புவியில் (உனது) அடியவன் எனப்பட, பேராசையினால் பொய்ப் பகர்ந்தேனா?

  • பகுத்தறிவற்ற மனிதரை மிக்கு விழைந்து, குறுக்கு வழி சென்றேனா?

  • மிக்கு இன்பமோ, துன்பமோ, நான் துயருற்றேனா?

  • ஈடானோரில், உயர்த்தினாலும், தாழ்த்தினாலும், திருவடிகளே புகல்.

காப்பாயய்யா.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பு4வினி/ தா3ஸுடு3/-அனே/ பேராஸசே/
புவியில்/ அடியவன்/ எனப்பட/ பேராசையினால்/

பொ3ங்குலு/-ஆடி3தினா/ பு34/ மனோ/-ஹர/
பொய்/ பகர்ந்தேனா/ அறிஞர்/ உள்ளம்/ கவர்வோனே/


அனுபல்லவி
அவிவேக/ மானவுல/ கோரி கோரி/
பகுத்தறிவற்ற/ மனிதரை/ மிக்கு விழைந்து/

அட்33/ த்3ரோவ/ த்ரொக்கிதினா/ ப்3ரோவவே/ (பு4)
குறுக்கு/ வழி/ சென்றேனா/ காப்பாயய்யா/


சரணம்
சால/ ஸௌக்2யமோ/ கஷ்டமோ/ நேனு/
மிக்கு/ இன்பமோ/ துன்பமோ/ நான்/

ஜாலி/ ஜெந்தி3தினா/ ஸரி வாரிலோ/
துயர்/ உற்றேனா/ ஈடானோரில்/

பால/ முஞ்சின/ நீட/ முஞ்சின/
பாலில்/ அமிழ்த்தினாலும்/ நீரில்/ அமிழ்த்தினாலும்/

பத3முலே/ க3தி/ த்யாக3ராஜ/ நுத/ (பு4)
திருவடிகளே/ புகல்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - பால முஞ்சின நீட முஞ்சின - பாலில் அமிழ்த்தினாலும் நீரில் அமிழ்த்தினாலும் - இஃதொரு தெலுங்கு வழக்கு என்று கருதுகின்றேன். இதன் நேரிடையான பொருள் விளங்கவில்லை. ஆயினும், இந்த சந்தர்ப்பத்தினை கருத்தில் கொண்டு, 'உயர்த்தினாலும், தாழ்த்தினாலும்' என்று பொருள் கொள்ளப்பட்டது

Top


Updated on 12 Mar 2009

No comments: