Wednesday, March 11, 2009

தியாகராஜ கிருதி - ராம ப4க்தி - ஸு1த்3த4 ப3ங்கா3ள - Rama Bhakti - Raga Suddha Bangaala

பல்லவி
ராம ப4க்தி ஸாம்ராஜ்யமே
மானவுலகப்3பெ3னோ மனஸா

அனுபல்லவி
ஆ மானவுல ஸந்த3ர்ஸ1ன-
மத்யந்த 1ப்3ரஹ்மானந்த3மே (ரா)

சரணம்
2ஈலாக3னி விவரிம்ப லேனு
சால ஸ்வானுப4வ வேத்3யமே
லீலா ஸ்ரு2ஷ்ட ஜக3த்ரயமனே
கோலாஹல த்யாக3ராஜ நுதுட3கு3 (ரா)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • திருவிளையாடலாக, மூவுலகமெனும் பேராரவாரத்தினைப் படைத்த, தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, இராமனின் பக்திப் பேரரசு எம்மானவருக்கு கிடைத்ததோ!

  • அம்மானவரை தரிசித்தல் (கூட) மட்டற்றப் பேரானந்தமே!

  • இவ்விதமென விவரிக்க இயலேன்; மிக்கு தான் துய்த்து உணர்வதுவே!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ப4க்தி/ ஸாம்ராஜ்யமு/-
இராமனின்/ பக்தி/ பேரரசு/

ஏ/ மானவுலகு/-அப்3பெ3னோ/ மனஸா/
எந்த/ மானவருக்கு/ கிடைத்ததோ/ மனமே/


அனுபல்லவி
ஆ/ மானவுல/ ஸந்த3ர்ஸ1னமு/-
அந்த/ மானவரை/ தரிசித்தல்/

அத்யந்த/ ப்3ரஹ்மானந்த3மே/ (ரா)
மட்டற்ற/ பேரானந்தமே/


சரணம்
ஈலாகு3/-அனி/ விவரிம்ப/ லேனு/
இவ்விதம்/ என/ விவரிக்க/ இயலேன்/

சால/ ஸ்வ/-அனுப4வ/ வேத்3யமே/
மிக்கு/ தான்/ துய்த்து/ உணர்வதுவே/

லீலா/ ஸ்ரு2ஷ்ட/ ஜக3த்-த்ரயமு/-அனே/
திருவிளையாடலாக/ படைத்த/ மூவுலகம்/ எனும்/

கோலாஹல/ த்யாக3ராஜ/ நுதுட3கு3/ (ரா)
பேராரவாரத்தினை/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனாகிய/ இராமனின்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரஹ்மானந்த3மே - ப்3ரஹ்மானந்த3மே மனஸா

மேற்கோள்கள்

விளக்கம்
2 - ஈலாக3னி வர்ணி்ம்ப லேனு - இவ்விதமென விவரிக்க இயலேன் - ராமனின் பக்திப் பேரரசினை. சில புத்தகங்களில், அனுபல்லவியில் கூறப்பட்ட பேரானந்தத்தினை தியாகராஜர் விவரிக்க இயலாது என்பதாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இக்கீர்த்தனை ராமனின் பக்திப் பேரரசினைப் பற்றியதாகும். அப்பேரரசு எத்தகையது என்பதனை எடுத்துக்காட்ட அதனை (பேரரசினை) அடைந்த மேலோரின் தரிசனமே பேரானந்தத்தைத் தருவது என்று கூறி கோடிகாட்டுகின்றார். அத்தகைய மேலோரின் தரிசனமே பேரானந்தத்தினை அளிப்பதென்றால், அந்த பேரரசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? அதனால்தான் சரணத்தில் அதனை 'விவரிக்க இயலாது' என்று கூறுகின்றார்.

Top


Updated on 11 Mar 2009

2 comments:

V Govindan said...

Comments Posted by Sri Govindaswamy -

திரு கோவிந்தன் அவர்களே
பல்லவி முழுமையாக இல்லையே. அனுபல்லவியையும் சேர்த்து பல்லவியாக எடுத்துக் கொள்ளவேண்டுமா?
பின்னால் வந்த பாடகர்கள் பல்லவியை இரண்டாகப் பிரித்து விட்டார்களா.
வணக்கம்
கோவிந்தசாமி

V Govindan said...

திரு கோவிந்தசாமி அவர்களுக்கு,

எனக்குத் தெரிந்தவரையில், பல்லவி முழுமையாக உள்ளது. அதனை ஒரு Exclamation - ஆக எடுத்துக்கொள்ளவேண்டும்.

வணக்கம்
கோவிந்தன்