1ப்3ரோசேவாரெவரே ரகு4 பதீ
சரணம்
சரணம் 1
நினு வினா (ப்3ரோ)
சரணம் 2
ஸ்ரீ ராம நெனருன (ப்3ரோ)
சரணம் 3
ஸகல லோக நாயக (ப்3ரோ)
சரணம் 4
நர வர நீ ஸரி (ப்3ரோ)
சரணம் 5
தே3வேந்த்3ராது3லு மெச்சுடகு லங்க
த3யதோ தா3னமொஸங்கி3 ஸதா3 (ப்3ரோ)
சரணம் 6
முனி 2ஸவம்பு3 ஜூட3 வெண்ட சனி 3க2ல
மாரீசாது3ல ஹதம்பு3 ஜேஸி (ப்3ரோ)
சரணம் 7
வாலினொக்க கோலனேஸி ரவி
பா3லுனி ராஜுக3 காவிஞ்சி ஜூசி (ப்3ரோ)
சரணம் 8
ப4வாப்3தி4 தரணோபாயமு 4நேரனி
த்யாக3ராஜுனி கரம்பி3டி3 (ப்3ரோ)
பொருள் - சுருக்கம்
இரகுபதீ! இராமா! மானவரிற் சிறந்தோனே! பல்லுலகிற்கும் தலைவா!
- காப்பவர் யாரே?
- உன்னையன்றி, காப்பவர் யாரே?
- அன்புடன், காப்பவர் யாரே?
- உனக்கு நிகர் காப்பவர் யாரே?
- தேவேந்திரன் முதலானோர் மெச்ச, இலங்கையினை தயையுடன் கொடையளித்து, எவ்வமயமும் காப்பவர் யாரே?
- முனிவனின் வேள்வியைக் காக்க, (அவர்) பின் சென்று, கொடிய மாரீசன் முதலானோரை யழித்து, காப்பவர் யாரே?
- வாலியை ஓரம்பெய்து (கொன்று), பரிதி மைந்தனை யரசனாக ஆக்கிக் கண்டு, காப்பவர் யாரே?
- பிறவிக் கடலைத் தாண்டும் வழிமுறை யறியாத தியாகராசனினின் கைப் பற்றி, காப்பவர் யாரே?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்3ரோசேவாரு/-எவரே/ ரகு4 பதீ/
காப்பவர்/ யாரே/ இரகுபதீ
சரணம்
சரணம் 1
நினு/ வினா/ (ப்3ரோ)
உன்னை/ யன்றி/ காப்பவர்...
சரணம் 2
ஸ்ரீ ராம/ நெனருன/ (ப்3ரோ)
ஸ்ரீ ராமா/ அன்புடன்/ காப்பவர்...
சரணம் 3
ஸகல லோக/ நாயக/ (ப்3ரோ)
பல்லுலகிற்கும்/ தலைவா/ காப்பவர்...
சரணம் 4
நர/ வர/ நீ/ ஸரி/ (ப்3ரோ)
மானவரிற்/ சிறந்தோனே/ உனக்கு/ நிகர்/ காப்பவர்...
சரணம் 5
தே3வ-இந்த்3ர/-ஆது3லு/ மெச்சுடகு/ லங்க/
தேவேந்திரன்/ முதலானோர்/ மெச்ச/ இலங்கையினை/
த3யதோ/ தா3னமு/-ஒஸங்கி3/ ஸதா3/ (ப்3ரோ)
தயையுடன்/ கொடை/ யளித்து/ எவ்வமயமும்/ காப்பவர்....
சரணம் 6
முனி/ ஸவம்பு3/ ஜூட3/ வெண்ட/ சனி/ க2ல/
முனிவனின்/ வேள்வியை/ காண (காக்க)/ (அவர்) பின்/ சென்று/ கொடிய/
மாரீச/-ஆது3ல/ ஹதம்பு3 ஜேஸி/ (ப்3ரோ)
மாரீசன்/ முதலானோரை/ யழித்து/ காப்பவர்
சரணம் 7
வாலினி/-ஒக்க/ கோலனு/-ஏஸி/ ரவி/
வாலியை/ ஓர்/ அம்பு/ எய்து (கொன்று)/ பரிதி
பா3லுனி/ ராஜுக3/ காவிஞ்சி/ ஜூசி/ (ப்3ரோ)
மைந்தனை/ யரசனாக/ ஆக்கி/ கண்டு/ காப்பவர்...
சரணம் 8
ப4வ/-அப்3தி4/ தரண/-உபாயமு/ நேரனி/
பிறவி/ கடலை/ தாண்டும்/ வழிமுறை/ யறியாத/
த்யாக3ராஜுனி/ கரம்பு3/-இடி3/ (ப்3ரோ)
தியாகராசனினின்/ கை/ பற்றி/ காப்பவர்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ப்3ரோசேவாரெவரே - ப்3ரோசுவாரெவரே
2 - ஸவம்பு3 - ஸவனமு : 'ஸவமு', 'ஸவனமு' - இரண்டு சொற்களுக்குமே 'வேள்வி' என்று பொருள்
3 - க2ல - கல : 'கல' - தவறாகும்
4 - நேரனி - லேரனி : 'லேரனி' - தவறாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இலங்கையினை கொடையளித்து - விபீடணனுக்கு
முனிவன் - விசுவாமித்திரர்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
Top
Updated on 12 Mar 2009
No comments:
Post a Comment