Wednesday, February 25, 2009

தியாகராஜ கிருதி - பரிதாபமு - ராகம் மனோஹரி - Paritaapamu - Raga Manohari

பல்லவி
பரிதாபமு கனியாடி3
பலுகுல மரசிதிவோ நா (பரி)

அனுபல்லவி
ஸரி லேனி ஸீததோ
ஸரயு மத்4யம்பு3ன நா (பரி)

சரணம்
வரமகு33ங்கா3ரு 1வாட3னு
மெரயுசு 2பதி3 பூடலபை
3கருணிஞ்செத3னனுசு 4க்ரே-
கனுல
த்யாக3ராஜுனி (பரி)


பொருள் - சுருக்கம்
சரயு நடுவில், உயர்ந்த பொன்னோடத்தினில்,
நிகரற்ற சீதையுடன் ஒளிர்ந்துகொண்டு,
கடைக் கண்ணினால் தியாகராசனின் பரிதாபத்தினைக் கண்டு,
பத்து வேளைக்குப்பின்னர் கருணித்தேனென,
பகர்ந்த சொற்களை மறந்தனையோ?


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பரிதாபமு/ கனி/-ஆடி3ன/
பரிதாபத்தினை/ கண்டு/ பகர்ந்த/

பலுகுல/ மரசிதிவோ/ நா/ (பரி)
சொற்களை/ மறந்தனையோ/ எனது/


அனுபல்லவி
ஸரி/ லேனி/ ஸீததோ/
நிகர்/ அற்ற/ சீதையுடன்/

ஸரயு/ மத்4யம்பு3ன/ நா/ (பரி)
சரயு/ நடுவில்/ எனது/ பரிதாபத்தினை...


சரணம்
வரமகு3/ ப3ங்கா3ரு/ வாட3னு/
உயர்ந்த/ பொன்/ ஓடத்தினில்/

மெரயுசு/ பதி3/ பூடலபை/
ஒளிர்ந்துகொண்டு/ பத்து/ வேளைக்குப்பின்னர்/

கருணிஞ்செத3னு/-அனுசு/ க்ரே/-
கருணித்தேன்/ என/ கடை/

கனுல/ த்யாக3ராஜுனி/ (பரி)
கண்ணினால்/ தியாகராசனின்/ பரிதாபத்தினை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வாட3னு - வோட3னு : தெலுங்கில் 'வாட', 'ஓட' ஆகிய இரண்டு சொற்களுமே 'ஓடம்' என்று பொருள்படும். தியாகராஜர் 'ஓட' என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தால், 'பங்காரு' என்ற சொல்லுடன் இணைந்து 'வோட' வாகும் (பங்காருவோட).

4 - க்ரே-கனுல - க்ரீ-கனுல : 'க்ரே கனுல' என்றால் 'தாழ்க்கண்' அதாவது 'வெறுப்பு' என்று பொருளாகும். 'க்ரீ கனுல' என்றால் 'கடைக்கண்' எனப்படும் 'கடாட்சம்', 'கருணை' என்று பொருள்படும். இங்கு இதற்குமுன் வரும் 'கருணித்தேன்' என்ற சொல்லினால் 'கடைக்கண்' (க்ரே கனுல) பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
3 - கருணிஞ்செத3 - 'கருணித்தேன்'. தியாகராஜர், இங்கு, பத்து வேளைக்குப்பின்னர் நடக்கும் ஓர் செயலுக்கு, நிகழ்காலத்தினை பயன்படுத்தியுள்ளார். இறைவனுக்கு, 'ஸத்ய ஸங்கல்ப' அல்லது 'ஸித்34 ஸங்கல்ப' என்று பெயராகும். அவன் நினைத்தால் நடந்தேறும்; அதற்கு ஓரு தடங்கலும் கிடையாது. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் (253) நோக்கவும்.

Top

விளக்கம்
2 - பதி3 பூட - இதற்கு சில புத்தகங்களில் பத்து நாளென்றும், மற்ற புத்தகங்களில் ஐந்து நாளென்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'பூட' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'வேளை' என்ற தமிழ்ச் சொல் ஈடாகும். இவ்விரண்டு சொற்களுக்கும் ஒரு குறிப்பிட்ட மணி கணக்கு இல்லை - உதாரணமாக - காலை வேளை, மாலை வேளை, பகல் வேளை, இரவு வேளை யென வரும் சொற்கள். பகல், இரவு இரண்டு வேளைகளைக் கணக்கிட்டு, பத்து வேளைக்கு ஐந்து நாட்களென்றும் பொருள் கொள்ளலாம்.

தலை சிறந்த ஹரிகதை விரிவுரையாளர், திருவாளர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள், தன்னுடைய 'தியாகராஜ ராமாயண'த்தில் கூறுவது, 'தியாகராஜருக்கு இறைவன் வாக்களித்தபடி பத்து நாட்களுக்குப்பின்னர் அவர் தனது பூதவுடலை நீத்தார்' என.

சரயு - அயோத்தி நகரருகில் பாயும் நதி

Top


Updated on 25 Feb 2009

No comments: