வினயமுனனு கௌஸி1குனி வெண்ட
சனினாங்க்4ருலனு ஜூசுனதெ3ன்னடிகோ அந்து3
வெனுக ராதினி நாதி ஜேஸின
சரணமுலனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம்
சரணம் 1
க4னமைன 1ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின
பாத3முனு ஜூசுனதெ3ன்னடிகோ 2ஆ
ஜனக ராஜு 3பால கடி3கி3னயா
காள்ளனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 2
சனுவுன ஸீதனு பொ3ட்டு கட்டின
கரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
கோபமுன ப்4ரு2கு3 ஸுது 4சாப ப3லமந்து3கொன்ன
5பா3ஹுவு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 3
வனமுன சனி விராது4னி சம்பின
சேதுலனு ஜூசுனதெ3ன்னடிகோ அல்ல
முனி ஜனுலனு கனி அப4யமிச்சின
ஹஸ்தமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 4
6தனகு தானே காகாஸுருனி காசின
ஸ1ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
க்ஷணமுன ப3ஹு 7ரத2முல பொடி3 சேஸின-
யஸ்த்ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 5
க4ன ப3லுடை3ன வாலினி சம்பின
பா3ணமுனு ஜூசுனதெ3ன்னடிகோ ஆ
8வனதி4 மத3 க3ர்வமணசின
ஸாயகமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 6
கனி கரமுன விபீ4ஷணுனி ஜூசின
கன்னுலனு ஜூசுனதெ3ன்னடிகோ
ராவணுனி கொட்டி 9பேத3 கபுலு லேவ ஜூசு
த்3ரு2ஷ்டினி ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 7
வன சராதி4புனி சல்லக3 ஜூசின
நேத்ரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ
10தி3னமுனு லங்க வர்தி4ல்லனு ஜூசு
லோசனமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 8
க4னமைன புஷ்பகமுன ராஜில்லின
ஸொக3ஸுனு ஜூசுனதெ3ன்னடிகோ
ப4ரதுனி கனி 11சே பட்டுகொனி வச்சின
வேடு3கனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 9
12கனக ஸிம்ஹாஸனமுன நெலகொன்ன
டீ2வினி ஜூசுனதெ3ன்னடிகோ 13வர
முனுலு ராஜுலு கூடி3 ஸேயு
அலங்காரமுனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம் 10
ஆக3ம வினுதுனி ஆனந்த3 கந்து3னி
பா3க3 ஜூசுனதெ3ன்னடோ3 பரம
பா4க3வத ப்ரியுனி நிர்விகாருனி
14ராக ஜூசுனதெ3ன்னடோ3 (வி)
சரணம் 11
ஸாக3ர ஸ1யனுனி கருணா 15ஜல நிதி4னி
வேக3 ஜூசுனதெ3ன்னடோ3 வர
16த்யாக3ராஜாதி3 தே3வதலு பொக3டு3கொன்ன
லாகு3 ஜூசுனதெ3ன்னடோ3 (வி)
பொருள் - சுருக்கம்
- பணிவுடன் கௌசிகரின் பின் சென்ற திருவடிகளைக் காண்பதென்றைக்கோ?
- அதன் பின்னர், கல்லைப் பெண்ணாக்கிய சரணங்களைக் காண்பதென்றைக்கோ?
- பெருத்த, சிவனின் வில்லை முறித்த பாதங்களைக் காண்பதென்றைக்கோ?
- அந்த சனக மன்னன் பாலினால் கழுவிய அந்தக் கால்களைக் காண்பதென்றைக்கோ?
- காதலுடன் சீதைக்குத் தாலி கட்டிய கரங்களைக் காண்பதென்றைக்கோ?
- கோபத்துடன், பிருகு மைந்தன் வில் பலத்தைப் பறித்துக்கொண்ட கைகளைக் காண்பதென்றைக்கோ?
- வனத்திற்குச் சென்று, விராதனை வதைத்த கைகளைக் காண்பதென்றைக்கோ?
- அந்த முனிவர்களையும் கண்டு அபயமளித்த கரத்தினைக் காண்பதென்றைக்கோ?
- தனக்குத் தானே காக்கையசுரனைக் காத்த அம்பினைக் காண்பதென்றைக்கோ?
- நொடியில் எண்ணற்ற தேர்களைப் பொடி செய்த அத்திரத்தினைக் காண்பதென்றைக்கோ?
- பெரும் பலவானாகிய வாலியைக் கொன்ற கணையினைக் காண்பதென்றைக்கோ?
- அந்த கடலரசனின் மத கருவத்தினை அடக்கிய சாயகத்தினைக் காண்பதென்றைக்கோ?
- அன்புடன் விபீடணனை நோக்கிய கண்களைக் காண்பதென்றைக்கோ?
- இராவணனைக் கொன்று, ஏழைக் குரங்குகளெழக் காணும் பார்வையினைக் காண்பதென்றைக்கோ?
- வானரர் தலைவனைக் குளுமையாக நோக்கிய நேத்திரங்களைக் காண்பதென்றைக்கோ?
- தினமும் இலங்கை செழித்திடக் காணும் கண்களைக் காண்பதென்றைக்கோ?
- சிறந்த புட்பகத்தினில் திகழ்ந்த ஒயிலினைக் காண்பதென்றைக்கோ?
- பரதனைக் கண்டு, கைப் பிடித்துக் கொண்டு வந்த வேடிக்கையைக் காண்பதென்றைக்கோ?
- தங்க சிங்காதனத்தில் நிலைபெற்ற மாட்சிமையினைக் காண்பதென்றைக்கோ?
- உயர் முனிவர்களும், அரசர்களும் குழுமியுள்ள அலங்காரத்தினைக் காண்பதென்றைக்கோ?
- ஆகமங்கள் போற்றுவோனை, ஆனந்தக் கிழங்கனை, நன்கு காண்பதென்றோ?
- பரம பாகவதர்களுக்கு இனியோனின், மாற்றமற்றோனின் வருகையைக் காண்பதென்றோ?
- (பாற்) கடற்றுயில்வோனை, கருணைக் கடலினை, வேகமே காண்பதென்றோ?
- உயர் தியாகராசன் முதலான தேவதைகள், புகழந்துகொண்ட வகையினைக் காண்பதென்றோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினயமுனனு/ கௌஸி1குனி/ வெண்ட/
பணிவுடன்/ கௌசிகரின்/ பின்/
சனின/-அங்க்4ருலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ அந்து3/
சென்ற/ திருவடிகளை/ காண்பது/ என்றைக்கோ/ அதன்/
வெனுக/ ராதினி/ நாதி/ ஜேஸின/
பின்னர்/ கல்லை/ பெண்/ ஆக்கிய/
சரணமுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
சரணங்களை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம்
சரணம் 1
க4னமைன/ ஸி1வுனி/ சாபமு/ த்3ருஞ்சின/
பெருத்த/ சிவனின்/ வில்லை/ முறித்த/
பாத3முனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ ஆ/
பாதங்களை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/
ஜனக/ ராஜு/ பால/ கடி3கி3ன/-ஆ/
சனக/ மன்னன்/ பாலினால்/ கழுவிய/ அந்த/
காள்ளனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கால்களை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 2
சனுவுன/ ஸீதனு/ பொ3ட்டு/ கட்டின/
காதலுடன்/ சீதைக்கு/ தாலி/ கட்டிய/
கரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
கரங்களை/ காண்பது/ என்றைக்கோ/
கோபமுன/ ப்4ரு2கு3/ ஸுது/ சாப/ ப3லமு/-அந்து3கொன்ன/
கோபத்துடன்/ பிருகு/ மைந்தன்/ வில்/ பலத்தை/ பறித்துக்கொண்ட/
பா3ஹுவு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கைகளை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 3
வனமுன/ சனி/ விராது4னி/ சம்பின/
வனத்திற்கு/ சென்று/ விராதனை/ வதைத்த/
சேதுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ அல்ல/
கைகளை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/
முனி ஜனுலனு/ கனி/ அப4யமு/-இச்சின/
முனிவர்களையும்/ கண்டு/ அபயம்/ அளித்த/
ஹஸ்தமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 4
தனகு/ தானே/ காக/-அஸுருனி/ காசின/
தனக்கு/ தானே/ காக்கை/ யசுரனை/ காத்த/
ஸ1ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
அம்பினை/ காண்பது/ என்றைக்கோ/
க்ஷணமுன/ ப3ஹு/ ரத2முல/ பொடி3/ சேஸின/-
நொடியில்/ எண்ணற்ற/ தேர்களை/ பொடி/ செய்த/
அஸ்த்ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
அத்திரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 5
க4ன/ ப3லுடை3ன/ வாலினி/ சம்பின/
பெரும்/ பலவானாகிய/ வாலியை/ கொன்ற/
பா3ணமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ ஆ/
கணையினை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/
வனதி4/ மத3/ க3ர்வமு/-அணசின/
கடலரசனின்/ மத/ கருவத்தினை/ அடக்கிய/
ஸாயகமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
சாயகத்தினை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 6
கனி கரமுன/ விபீ4ஷணுனி/ ஜூசின/
அன்புடன்/ விபீடணனை நோக்கிய/
கன்னுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
கண்களை/ காண்பது/ என்றைக்கோ/
ராவணுனி/ கொட்டி/ பேத3/ கபுலு/ லேவ/ ஜூசு/
இராவணனை/ கொன்று/ ஏழை/ குரங்குகள்/ எழ/ காணும்/
த்3ரு2ஷ்டினி/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
பார்வையினை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 7
வன சர/-அதி4புனி/ சல்லக3/ ஜூசின/
வானரர்/ தலைவனை/ குளுமையாக/ நோக்கிய/
நேத்ரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
நேத்திரங்களை/ காண்பது/ என்றைக்கோ/
தி3னமுனு/ லங்க/ வர்தி4ல்லனு/ ஜூசு/
தினமும்/ இலங்கை/ செழித்திட/ காணும்/
லோசனமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கண்களை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 8
க4னமைன/ புஷ்பகமுன/ ராஜில்லின/
சிறந்த/ புட்பகத்தினில்/ திகழ்ந்த/
ஸொக3ஸுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/
ஒயிலினை/ காண்பது/ என்றைக்கோ/
ப4ரதுனி/ கனி/ சே/ பட்டுகொனி/ வச்சின/
பரதனை/ கண்டு/ கை/ பிடித்துக் கொண்டு/ வந்த/
வேடு3கனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
வேடிக்கையை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 9
கனக/ ஸிம்ஹ/-ஆஸனமுன/ நெலகொன்ன/
தங்க/ சிங்காதனத்தில்/ நிலைபெற்ற/
டீ2வினி/ ஜூசுனதி3/-என்னடிகோ/ வர/
மாட்சிமையினை/ காண்பது/ என்றைக்கோ/ உயர்/
முனுலு/ ராஜுலு/ கூடி3/ ஸேயு/
முனிவர்களும்/ அரசர்களும்/ குழுமி/ (யுள்ள) செய்யும்/
அலங்காரமுனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
அலங்காரத்தினை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம் 10
ஆக3ம/ வினுதுனி/ ஆனந்த3/ கந்து3னி/
ஆகமங்கள்/ போற்றுவோனை/ ஆனந்த/ கிழங்கனை/
பா3க3/ ஜூசுனதி3/-என்னடோ3/ பரம/
நன்கு/ காண்பது/ என்றோ/ பரம/
பா4க3வத/ ப்ரியுனி/ நிர்விகாருனி/
பாகவதர்களுக்கு/ இனியோனின்/ மாற்றமற்றோனின்/
ராக/ ஜூசுனதி3/-என்னடோ3/ (வி)
வருகையை/ காண்பது/ என்றோ/
சரணம் 11
ஸாக3ர/ ஸ1யனுனி/ கருணா/ ஜல நிதி4னி/
(பாற்) கடல்/ துயில்வோனை/ கருணை/ கடலினை/
வேக3/ ஜூசுனதி3/-என்னடோ3/ வர/
வேகமே/ காண்பது/ என்றோ/ உயர்/
த்யாக3ராஜ/-ஆதி3/ தே3வதலு/ பொக3டு3கொன்ன/
தியாகராசன்/ முதலான/ தேவதைகள்/ புகழந்துகொண்ட/
லாகு3/ ஜூசுனதி3/-என்னடோ3/ (வி)
வகையினை/ காண்பது/ என்றோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
பல்லவி மற்றும் முதல் 9 சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடிகோ - ஜூசேதெ3ன்னடிகோ.
10 மற்றும் 11-வது சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடோ3 - ஜூசேதெ3ன்னடோ3.
1 - சாபமு - சாபமுனு.
2 - ஆ ஜனக - ஜனக.
5 - பா3ஹுவு - பா3ஹுனு.
8 - வனதி4 - வன நிதி4.
10 - தி3னமுனு - அனு தி3னமு.
11 - சே பட்டுகொனி - செயி பட்டுகொனி - சை பட்டுகொனி : 'சை' என்பது சரியென்று தோன்றவில்லை.
12 - கனக - கனகபு.
13 - வர முனுலு - வன முனுலு : இவ்விடத்தில் 'வர' என்பதே பொருந்தும்.
15 - ஜல நிதி4னி - ஜலதி4னி.
16 - த்யாக3ராஜாதி3 தே3வதலு - த்யாக3ராஜாதி4 தே3வதலு : 'த்யாக3ராஜாதி3 தே3வதலு' என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
1 - ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின பாத3முனு - வால்மீகி ராமாயணத்தின்படி (பால காண்டம், 67-வது அத்தியாயம்), ராமன், வில்லின் நடுப்பகுதியைப் பிடித்து, நாணேற்றி, வில்லை வளைக்க, அது நடுவில் முறிந்தது. நாணேற்றுவதற்கும், வில்லை வளைப்பதற்கும், காலினால் அதனை அழுத்துதல் முறை என்று நினைக்கின்றேன். எனவேதான், தியாகராஜர், 'வில்லை முறித்த கால்' என்று குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, 'ஸ்ரீ ராம ரகு4ராம' என்ற யதுகுல காம்போஜி கீர்த்தனையிலும், 'ராமனின் திருவடிகளைத் தொட, சிவனின் வில் என்ன தவம் செய்ததோ?' என்று கேட்கின்றார்.
4 - சாப ப3லமந்து3கொன்ன - வால்மீகி ராமாயணம் (பால காண்டம், 76-வது அத்தியாயம்) நோக்கவும். பரசுராமனின் வில், விஷ்ணுவின் வில்லாகும். பத்ம புராணத்தில் கூறப்பட்டபடி -
"தேவி, இங்ஙனம் கூறி, விஷ்ணுவின் சக்தியுினை, பணிவுடனும், விளையாட்டாகவும், விஷ்ணுவின் வில்லுடன் பறித்துக்கொண்டான்."
பரசுராமனின் வில்லினைப் பறித்தல்
Top
7 - ரத2முல பொடி3 சேஸின - தேர்களைப் பொடி செய்த - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 26-30 அத்தியாயங்கள் நோக்கவும்.
8 - வனதி4 மத3 க3ர்வமு - கடலரசனின் மத செருக்கு - பரசுராமனைத் தோற்கடித்தபின், ராமன், அந்த விஷ்ணு வில்லினை, கடலரசனிடம், பாதுகாப்பதற்காக, ஒப்படைத்தான். எனவே, கடலரசனுக்கு, ராமனின் வல்லமை என்னவென்று தெரியும். ஆயினும், கடல்மீது பாலம் அமைக்க, கடலரசனின் உதவியினை ராமன் வேண்டியும், அவன் கண்டுகொள்ளாமல் இருந்ததனால், ராமன், கோபம் கொண்டு, கடலரசன் மீது பிரமாத்திரத்தினை ஏவினான். அதன் பின்னரே, கடலரசன் ராமனிடம் சரணடைந்து, பாலம் கட்டுவதற்கு உதவ இசைந்தான். வால்மீகி ராமாயாணம், யுத்த காண்டம், 21, 22-வது அத்தியாயங்கள் நோக்கவும்.
9 - பேத3 கபுலு லேவ ஜூசு - ஏழைக் குரங்குகள் உயிர்த்தெழக் காணும். ராமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திரன், போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த குரங்குகளை, உயிர்த்தெழச் செய்தான். வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 120-வது அத்தியாயம் நோக்கவும்.
வால்மீகி ராமாயணம் - மொழிபெயர்ப்பு
Top
விளக்கம்
3 - பால கடி3கி3ன - பாலினால் கழுவிய - வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஏதும் கூறப்படவில்லை. ஆயினும், திருமணத்தின்போது, பாணிக்கிரகணத்திற்கு முன், 'வர பூஜை' எனப்படும் சடங்கில் மணமகனின் கால்களை, பெண்ணின் தந்தை, பாலினால் கழுவி அழைத்துச் செல்வார். அதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.
6 - தனகு தானே காகாஸுருனி காசின - தனக்குத் தானே காக்கை அசுரனைக் காத்த. சீதையின் தனங்களைக் கொத்திய காக்கை அசுரன் மீது, ராமன் பிரமாத்திரம் தொடுத்தான். காக்கையசுரன், மூவுலகங்களிலும், தன்னைக் காப்பவர் யாருமில்லை எனத் தெரிந்து, ராமனிடமே சரணடைந்தான். ராமன், அவனைக் கொல்லாது. அந்த அத்திரம், அவனுடைய ஒரு கண்ணை மட்டும் பறிக்கச் செய்தான்.
14 - ராக ஜூசுனதி3 - வருகையைக் காண்பது - இதனை, ராமன் 'வருவதனைக் காண்பது' என்றோ, 'வருகையினை எதிர்நோக்குவது' என்றோ பொருள் கொள்ளலாம். பிற்கூறியதே, அதிகம் பொருந்தும்.
16 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் சிவனைக் குறிக்கும்.
Top
கௌசிகர் - விசுவாமித்திரர்
பெண்ணாக்கிய - அகலிகையைக் குறிக்கும்
பிருகு மைந்தன் - பரசுராமன்
சாயகம் - அம்பு
குரங்குகளெழ - குரங்குகள் உயிர்த்தெழ
வானரர் தலைவன் - சுக்கிரீவன்
புட்பகம் - விமானம்
தியாகராசன் - இங்கு (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்
Top
Updated on 20 Mar 2011