Tuesday, March 8, 2011

தியாகராஜ கிருதி - மேலு மேலு ராம நாம - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Melu Melu Rama Nama - Raga Saurashtram

பல்லவி
மேலு மேலு ராம நாம ஸுக2மீ த4ரலோ மனஸா
பா2ல லோசன வால்மீகாதி3
1பா3லானிலஜாது3லு ஸாக்ஷிக3

சரணம்
சரணம் 1
நிண்டு3 தா3ஹமு கொன்ன மனுஜுலகு
நீரு த்ராகி3ன ஸுக2ம்பு3 கண்டே
சண்ட3 தா3ரித்3ர மனுஜுலகு த4
பா4ண்ட3மப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 2
2தாபமு ஸைரிஞ்சனி ஜனுலகம்ரு2
வாபியப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே 33ரி
தா3பு
லேக ப4யமந்து3 வேளல
தை4ர்யமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 3
ஆகலி வேளல 4பஞ்ச ப4க்ஷ்ய
பரமான்ன
மப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே
ஸ்ரீ கருடௌ3 ஸ்ரீ ராமுனி 5மனஸுன
சிந்திஞ்சு
ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 4
ஸார ஹீனமௌ க்ரோத4 ஸமயமுன
ஸா1ந்தமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
நேரனி மூடு4லகு ஸகல வித்3யா
பாரமு தெலியு ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 5
ராமுனிபை நிஜ ப4க்தி கலிகி3 கா3
ரஸமு தெலிஸின ஸுக2ம்பு3 கண்டே
பாமர செலிமி ஸேயனி வாரி
பா4வமு லோனி ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 6
சேய தகு3 வேதா3ந்த விசாரண
சேயக3 கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
6பா3யக நிர்கு3ண பா4வமு க3ல பர-
ப்3ரஹ்மானுப4
ஸுக2ம்பு3 கண்டே (மே)


சரணம் 7
7ராஜஸ தாமஸ கு3ணமு லேனி
பூஜலு
கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே
8ராஜ ஸி1கா2 மணியைன த்யாக3-
ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3
கண்டே (மே)


பொருள் - சுருக்கம்
  • மனமே!

  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.

    • மிக்கு நீர் வேட்கை கொண்ட மனிதர்களுக்கு நீரருந்தின சுகத்தினை விட,
    • மிக்கு வறிய மனிதர்களுக்கு, செல்வப் பெட்டகம் கிடைத்த சுகத்தினை விட,

    • (முவ்)வெம்மை தாங்காத மக்களுக்கு அமிழ்தக் குளம் கிடைத்த சுகத்தினை விட,
    • போக்கு, புகலின்றி அச்சமுறுவமயம், துணிவுண்டாகும் சுகத்தினை விட,

    • பசி வேளையில், ஐவகை உண்டியும், பாயசமும் கிடைத்த சுகத்தினை விட,
    • நலனருளும், இராமனை மனத்தினில் சிந்திக்கும் சுகத்தினை விட,

    • சாரமற்ற சீற்ற சமயத்தில் சாந்தம் உண்டாகும் சுகத்தினை விட,
    • கல்லாத மூடர்களுக்கு, அனைத்து வித்தைகளிலும் கரைகாணத் தெரியும் சுகத்தினை விட,

    • இராமனிடம் உண்மையான பக்தி உண்டாகி, இசை ரசனையும் தெரியும் சுகத்தினை விட,
    • பாமரர்களின் இணக்கம் கொள்ளாதவரின் இயல்பினிலுள்ள சுகத்தினை விட,

    • செயத்தகு வேதாந்த விசாரணை செய்வதினால் உண்டாகும் சுகத்தினை விட,
    • இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவ சுகத்தினை விட,

    • இராசத, தாமத குணங்களற்ற வழிபாடு ஏற்படும் சுகத்தினை விட,
    • பிறையணிவோனாகிய தியாகராசனுக்கு (இராமன்) வழங்கும் சுகத்தினை விட,

  • மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.

  • நெற்றிக்கண்ணன், வால்மீகி முதலாக, பார்வதி, அனுமன் ஆகியோர் சாட்சியாக.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலு/ மேலு/ ராம/ நாம/ ஸுக2மு/-ஈ/ த4ரலோ/ மனஸா/
மேலாம்/ மேலாம்/ இராம/ நாம/ சுகம்/ இந்த/ புவியில்/ மனமே/

பா2ல/ லோசன/ வால்மீகி/-ஆதி3/
நெற்றி/ கண்ணன்/ வால்மீகி/ முதலாக/

பா3லா/-அனிலஜ/-ஆது3லு/ ஸாக்ஷிக3/
பார்வதி/ அனுமன்/ ஆகியோர்/ சாட்சியாக/


சரணம்
சரணம் 1
நிண்டு3/ தா3ஹமு/ கொன்ன/ மனுஜுலகு/
மிக்கு/ நீர் வேட்கை/ கொண்ட/ மனிதர்களுக்கு/

நீரு/ த்ராகி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/
நீர்/ அருந்தின/ சுகத்தினை/ விட/

சண்ட3/ தா3ரித்3ர/ மனுஜுலகு/ த4ன/
மிக்கு/ வறிய/ மனிதர்களுக்கு/ செல்வ/

பா4ண்ட3மு/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
பெட்டகம்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 2
தாபமு/ ஸைரிஞ்சனி/ ஜனுலகு/-அம்ரு2த/
(முவ்)வெம்மை/ தாங்காத/ மக்களுக்கு/ அமிழ்த/

வாபி/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/ த3ரி/
குளம்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/ போக்கு/

தா3பு/ லேக/ ப4யமு/-அந்து3/ வேளல/
புகல்/ இன்றி/ அச்சம்/ உறு/ அமயம்/

தை4ர்யமு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
துணிவு/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 3
ஆகலி/ வேளல/ பஞ்ச/ ப4க்ஷ்ய/
பசி/ வேளையில்/ ஐவகை/ உண்டியும்/

பரமான்னமு/-அப்3பி3ன/ ஸுக2ம்பு3/ கண்டே/
பாயசமும்/ கிடைத்த/ சுகத்தினை/ விட/

ஸ்ரீ/ கருடௌ3/ ஸ்ரீ ராமுனி/ மனஸுன/
நலன்/ அருளும்/ ஸ்ரீ ராமனை/ மனத்தினில்/

சிந்திஞ்சு/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
சிந்திக்கும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 4
ஸார/ ஹீனமௌ/ க்ரோத4/ ஸமயமுன/
சாரம்/ அற்ற/ சீற்ற/ சமயத்தில்/

ஸா1ந்தமு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
சாந்தம்/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/

நேரனி/ மூடு4லகு/ ஸகல/ வித்3யா/
கல்லாத/ மூடர்களுக்கு/ அனைத்து/ வித்தைகளிலும்/

பாரமு/ தெலியு/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
கரைகாண/ தெரியும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 5
ராமுனிபை/ நிஜ/ ப4க்தி/ கலிகி3/ கா3ன/
இராமனிடம்/ உண்மையான/ பக்தி/ உண்டாகி/ இசை/

ரஸமு/ தெலிஸின/ ஸுக2ம்பு3/ கண்டே/
ரசனையும்/ தெரியும்/ சுகத்தினை/ விட/

பாமர/ செலிமி/ ஸேயனி வாரி/
பாமரர்களின்/ இணக்கம்/ கொள்ளாதவரின்/

பா4வமு லோனி/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
இயல்பினிலுள்ள/ சுகத்தினை/ விட/ மேலாம்...


சரணம் 6
சேய/ தகு3/ வேதா3ந்த/ விசாரண/
செய/ தகு/ வேதாந்த/ விசாரணை/

சேயக3/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
செய்வதினால்/ உண்டாகும்/ சுகத்தினை/ விட/

பா3யக/ நிர்கு3ண/ பா4வமு/ க3ல/
இடையறாது/ நிர்க்குண/ இயல்பு/ உள்ள/

பர-ப்3ரஹ்ம/-அனுப4வ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
பரம்பொருளின்/ அனுபவ/ சுகத்தினை/ விட/, மேலாம்...


சரணம் 7
ராஜஸ/ தாமஸ/ கு3ணமு/ லேனி/
இராசத/ தாமத/ குணங்கள்/ அற்ற/

பூஜலு/ கல்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/
வழிபாடு/ ஏற்படும்/ சுகத்தினை/ விட/

ராஜ/ ஸி1கா2 மணியைன/ த்யாக3ராஜுகு/
மதி/ (பிறை) யணிவோனாகிய/ தியாகராசனுக்கு/

ஒஸங்கு3/ ஸுக2ம்பு3/ கண்டே/ (மே)
(இராமன்) வழங்கும்/ சுகத்தினை/ விட/ மேலாம்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - 3ரி தா3பு - தா3பு.

Top

மேற்கோள்கள்
1 - பா3லா - 16 வயதுக்குட்பட்ட பெண். மகா திரிபுர சுந்தரியின் 9 வயதுடைய மகள். அவள் பண்டாசுரனை வதைத்தாள். லலிதா ஸஹஸ்ர நாமம் (74 மற்றும் 965) நோக்கவும்.

4 - பஞ்ச ப4க்ஷ்ய - ஐவகை உண்டி - இது ஐந்து விதமாக - குதப்பி, சப்பி, நக்கி, உறிஞ்சி, குடித்து - அருந்தப்படும் உணவு வகைகளினை, அல்லது அறு சுவை உண்டிகளை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவற்றினை - குறிக்கும். இவற்றில், இனிப்பு, தனியாக, 'பரமான்னம்' (பாயசம்) என்று கொடுக்கப்பட்டுள்ளது.

Top

விளக்கம்
2 - தாபமு - இதற்கு, 'வெம்மை' என்று பொருளாகும். வெறும் வெம்மையானால், மழை அல்லது நீரினால் தணியும். ஆனால், இங்கு, தியாகராஜர் 'அமிழ்துக் குளம்' என்று கொடுத்திருப்பதனால், இச்சொல், 'ஆத்யாத்மிக' (தன்னால்), 'ஆதிதைவிக' (தெய்வத்தினால்), 'ஆதிபௌதிக' (இயற்கையினால்) உண்டாகும் முவ்வெம்மையினைக் குறிக்கும் என நம்புகின்றேன்.

4 - பஞ்ச ப4க்ஷ்ய பரமான்னம் - இது தென்னாட்டில் பெரும் விருந்தினைக் குறிக்கும்.

5 - மனஸுன சிந்திஞ்சு - மனதினில் சிந்திக்கும் சுகத்தினை விட - இராம தியானம் செய்வதனைக்கூட, தியாகராஜர், நாமம் உரைப்பதினும் தாழ்ந்ததாகக் கருதுவது வியக்கத் தக்கது.

Top

6 - பா3யக நிர்கு3ண பா4வமு க3ல பர-ப்3ரஹ்மானுப4 - இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவம் - இத்தகைய அனுபவம், புவியில், பெரும் பேறு படைத்த சிலருக்கே கிட்டியுள்ளது. எனவே, இதனை, அறிவு பூர்வமாக வருணிக்க இயலாததுடன், அத்தகைய முயற்சி, அந்த அனுபவத்தினை இழிவு படுத்துவதாகும் என்று நான் கருதுகின்றேன்.

7 - ராஜஸ தாமஸ கு3ணமு லேனி பூஜலு - இராசத குண வழிபாடு - இச்சைகளுக்காக இயற்றப்படுபவை; தாமத குண வழிபாடு - பிறருக்குக் கேடு செய்ய இயற்றப்படுபவை

Top

8 - ராஜ ஸி1கா2 மணியைன த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - சில கீர்த்தனைகளில், தியாகராஜர், தனது 'தியாகராஜ' என்ற முத்திரையினை, (திருவாரூர்) சிவனைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியுள்ளார்.

8 - த்யாக3ராஜுகொஸங்கு3 ஸுக2ம்பு3 - காசியில் மரணம் அடைவோருக்கு, சிவன், அவர்கள் காதுகளில், 'ராம' என்ற 'தாரக நாம'த்தினை ஓதுவதாக முக்திகா உபநிடதம் கூறும்.

நெற்றிக்கண்ணன் - சிவன்
பிறையணிவோனாகிய தியாகராசன் - சிவன்

Top


Updated on 08 Mar 2011

No comments: