Sunday, March 13, 2011

தியாகராஜ கிருதி - ராரா நன்னேலுகோரா - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Rara Nannelukora - Raga Saurashtram

பல்லவி
ராரா நன்னேலுகோரா ஸ்ரீ ரகு4-
வீர நன்னேச மேரா (ரா)

அனுபல்லவி
ஸாராஸாரோதா3ர அகி2-
லாதா4ராத்3பு4த கு3ண தா4ராளமுக3 (ரா)

சரணம்
சரணம் 1
தா4ரா த4ராப41ரீர நாயெட3 நீவு
நேரமென்னகயாது3கோரா ஸ்ரீ ராம
ஸம்ஸார கானன விஹாருடை3ன நாகு
ஸாரமௌ நாமமே தாரகமௌரா (ரா)


சரணம் 2
ஸீதா ஹ்ரு2த்-கமல க2த்3யோதாப்த ஜன பாரி-
ஜாதாக4 வனதி4 போதாப்3ஜ ஹித குல
ஜாத ரக்ஷிஞ்சு விதா4த ஜனக இஷ்ட
தா3தவைன ஸாகேதாகா3ர (ரா)


சரணம் 3
ரா ஜாகே314ர ஜாமாதவை
நா
ஜாலெரிகி3 ஓ ஆ-ஜானு பா3ஹுட3
2விராஜமான த்3விஜ ராஜானன ஸுர
ராஜார்சித த்யாக3ராஜ நுதாஜ (ரா)


பொருள் - சுருக்கம்
  • இரகுவீரா!
  • சார-சாரமற்ற பொருளே! உதார குணத்தோனே! பல்லுலக ஆதாரமே! வியத்தகு குணங்களோனே!
  • கார்முகில் நிகருடலோனே! இராமா!
  • சீதையின் இதயக்கமலத்தின் பகலவனே! வேண்டியவர்களின் பாரிசாதமே! பாவக் கடலின் கலமே! கமல நண்பன் குலத் தோன்றலே! நான்முகனை யீன்றோனே! விரும்பியது அருள்வோனாகிய, சாகேத நகருறைவோனே!
  • முழந்தாள் நீளக் கைகளோனே! ஒளிர்விடும் மதி முகத்தோனே! வானோர் தலைவன் வழிபடும், தியாகராசன் போற்றும், பிறவாதவனே!

  • வாருமய்யா, என்னையாளுமய்யா.
  • என்னைத் துன்புறுத்தல் முறையோ?

    • என்னிடம் நீ தவறுகளை எண்ணாது ஆதரியுமய்யா.
    • சமுசாரமெனும் அடவியில் உறைவோனாகிய எனக்கு சாரமான (உனது) நாமமே (அதனைக்) கடத்துவிப்பதாகுமய்யா.
    • காப்பாய்.
    • பூமியின் மருகனாகி, எனது துயரறிந்தும், தாமதமேன்?


  • தாராளமாக வாருமய்யா.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராரா/ நன்னு/-ஏலுகோரா/
வாருமய்யா/ என்னை/ யாளுமய்யா/

ஸ்ரீ ரகு4வீர/ நன்னு/-ஏச/ மேரா/ (ரா)
ஸ்ரீ ரகுவீரா/ என்னை/ துன்புறுத்தல்/ முறையோ/


அனுபல்லவி
ஸார/-அஸார/-உதா3ர/ அகி2ல/-
சார/-சாரமற்ற பொருளே/ உதார குணத்தோனே/ பல்லுலக/

ஆதா4ர/-அத்3பு4த/ கு3ண/ தா4ராளமுக3/ (ரா)
ஆதாரமே/ வியத்தகு/ குணங்களோனே/ தாராளமாக/ வாருமய்யா...


சரணம்
சரணம் 1
தா4ரா த4ர/-ஆப4/ ஸ1ரீர/ நாயெட3/ நீவு/
கார்முகில்/ நிகர்/ உடலோனே/ என்னிடம்/ நீ/

நேரமு/-என்னக/-ஆது3கோரா/ ஸ்ரீ ராம/
தவறுகளை/ எண்ணாது/ ஆதரியுமய்யா/ ஸ்ரீ ராமா/

ஸம்ஸார/ கானன/ விஹாருடை3ன/ நாகு/
சமுசாரமெனும்/ அடவியில்/ உறைவோனாகிய/ எனக்கு/

ஸாரமௌ/ நாமமே/ தாரகமு/-ஔரா/ (ரா)
சாரமான/ (உனது) நாமமே/ (அதனைக்) கடத்துவிப்பது/ ஆகுமய்யா/


சரணம் 2
ஸீதா/ ஹ்ரு2த்/-கமல/ க2த்3யோத/-ஆப்த ஜன/
சீதையின்/ இதய/ கமலத்தின்/ பகலவனே/ வேண்டியவர்களின்/

பாரிஜாத/-அக4/ வனதி4/ போத/-அப்3ஜ/ ஹித/ குல/
பாரிசாதமே/ பாவ/ கடலின்/ கலமே/ கமல/ நண்பன் (பரிதி)/ குல/

ஜாத/ ரக்ஷிஞ்சு/ விதா4த/ ஜனக/ இஷ்ட/
தோன்றலே/ காப்பாய்/ நான்முகனை/ யீன்றோனே/ விரும்பியது/

தா3தவைன/ ஸாகேத/-ஆகா3ர/ (ரா)
அருள்வோனாகிய/ சாகேத நகர்/ உறைவோனே/


சரணம் 3
ரா/ ஜாகு3/-ஏல/ த4ர/ ஜாமாதவை/
வாருமய்யா/ தாமதம்/ ஏன்/ பூமியின்/ மருகனாகி/

நா/ ஜாலி/-எரிகி3/ ஓ/ ஆ-ஜானு/ பா3ஹுட3/
எனது/ துயர்/ அறிந்தும்/ ஓ/ முழந்தாள் நீள/ கைகளோனே/

விராஜமான/ த்3விஜ ராஜ/-ஆனன/ ஸுர/
ஒளிர்விடும்/ மதி/ முகத்தோனே/ வானோர்/

ராஜ/-அர்சித/ த்யாக3ராஜ/ நுத/-அஜ/ (ரா)
தலைவன்/ வழிபடும்/ தியாகராசன்/ போற்றும்/ பிறவாதவனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - 4ர ஜாமாதவை நா - புத்தகங்களில் 'த4ர ஜாமாதவைன' என்றும் 'த4ர ஜாமாதவை ந' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும், 'ஜாலெரிகி3' (துயர் அறிந்து) என்பதுடன் இணைப்பதற்கு, 'நா' எனது என்றிருக்கவேண்டும். எனவே, 'த4ர ஜாமாதவை நா' என்று ஏற்கப்பட்டது. எதுகை-மோனைகளை நோக்கினால், அதுவே பொருந்துமெனத் தோன்றுகின்றது.

Top

மேற்கோள்கள்
2 - த்3விஜ ராஜ - இருமுறை பிறந்த - பறவைக்கும் (முட்டையாகவும், மறுபடி குஞ்சாகவும் பிறப்பதனால்) சந்திரனுக்கும் (அத்ரி ரிஷி - அனுசூயாவுக்கும், பின்னர் பாற்கடலைக் கடைந்தபோதும் பிறந்ததனால்), இந்தப் பெயர் பொருந்தும். சந்திரன், அத்ரி ரிஷிக்குப் பிறந்த கதை.

Top

விளக்கம்
2 - விராஜமான த்3விஜ ராஜானன - தியாகராஜர், 'விராஜ' என்ற சொல்லை, 'கருடனை'க் குறிக்க, பல கீர்த்தனைகளில் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இவ்விடத்தில், இது, 'விராஜமான' (ஒளிர்விடும்) என்ற தெலுங்கு சொல்லாகும். மேற்கூறியபடி, 'த்3விஜ ராஜ' என்பது கருடனையும், சந்திரனையும் குறிக்கும். ஆனால், அடுத்து வரும் 'ஆனன' (முகத்தோன்) என்ற சொல்லினால், 'சந்திரன்' என்ற பொருளே பொருந்தும்.

சார-சாரமற்ற பொருள் - பரம்பொருளின் இலக்கணம்
இதயக்கமலத்தின் பகலவன் - மலரச்செய்வதனால்
பாரிசாதம் - விரும்பியதை வழங்கும் வானோர் தரு
கடலின் கலம் - கடலைக் கடத்துவிப்பதற்கு
கமல நண்பன் - பரிதி

Top


Updated on 14 Mar 2011

No comments: