Thursday, March 3, 2011

தியாகராஜ கிருதி - பாஹி பாஹி தீ3ன ப3ந்தோ4 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Pahi Pahi Dina Bandho - Raga Saurashtram

பல்லவி
பாஹி பாஹி தீ3ன ப3ந்தோ4 மாம்
பாஹி பரானந்த3 ஸிந்தோ4

சரணம்
சரணம் 1
1தாரகாஸுர 2வைரி நுத ராம
தாரக ஸு14-கர சரித (பா)


சரணம் 2
ப்3ரஹ்ம ருத்3ராதி3 ஸபே4ஸா1ரீப4
ஸிம்ஹானன ஜித பே41 (பா)


சரணம் 3
1க்ராரி ஜனக ஸம்ஹரண ஸ1ங்க2
சக்ராதி3 34ராஸ்1ரித சரண (பா)


சரணம் 4
ராக4வான்வய ஸுப்ரதீ3ப ஸு-
கராக4 வன குடா2ர ரூப (பா)


சரணம் 5
1ர ஸ14ஜக3தா3தா4
அகி2லாஸ1ர ஸ1ரதா3ஸு13 தீ4ர (பா)


சரணம் 6
குவலய த3ள ஸம நேத்ர பாலித
குவலய த3ளிதாமித்ர (பா)


சரணம் 7
கமலா ஹித கு3ண ப4ரித ராம
கமலாஹித த4ர வினுத (பா)


சரணம் 8
த்யாக3ராஜ நுத சரண
நித்யாக3 ராஜ த4ர ஸுகு3ண (பா)


பொருள் - சுருக்கம்
  • எளியோர் சுற்றமே! பேரானந்தக் கடலே!
  • தாரகாசுரன் பகைவன் போற்றும் இராமா! (பிறவிக் கடலைத்) தாண்டுவிப்போனே! நலமருளும் சரிதத்தோனே!
  • பிரமன், ருத்திராதியர் அவைத்தலைவனே! பகையெனும் யானைக்கு சிங்கமே! தாரை யரசனை வெல்லும் முகத்தோனே!
  • இந்திரன் பகைவன் தந்தையை வதைத்தோனே! சங்கு, சக்கிரம் ஆகியவை யேந்துவோனே! சார்ந்தோர் புகல் திருவடிகளோனே!
  • இரகு குல ஒளி விளக்கே! நலன் அருள்வோனே! பாவ அடவியை யழிக்கும் கோடரி உருவே!
  • புல் பாணத்தோனே! அண்டத்தின் ஆதாரமே! அனைத்து அரக்கரெனும் முகிலை விரட்டும் புயலே! தீரனே!
  • தாமரையிதழ் நிகர் கண்ணா! குவலயத்தினைப் பேணுவோனே! பகைவரை வெட்டி வீழ்த்துவோனே!
  • கமலைக்கு இனியவனே! குணங்கள் நிறைந்த இராமா! கமலப் பகை (பிறை) சூடுவோன் போற்றுவோனே!
  • தியாகராசன் போற்றும் திருவடிகளோனே! அழிவற்றோனே! மலை யரசனைச் சுமந்தோனே! நற்குணத்தோனே!

    • காப்பாய், காப்பாய் என்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ பாஹி/ தீ3ன/ ப3ந்தோ4/ மாம்/
காப்பாய்/ காப்பாய்/ எளியோர்/ சுற்றமே/ என்னை/

பாஹி/ பர-ஆனந்த3/ ஸிந்தோ4/
காப்பாய்/ பேரானந்த/ கடலே/


சரணம்
சரணம் 1
தாரக-அஸுர/ வைரி/ நுத/ ராம/
தாரகாசுரன்/ பகைவன்/ போற்றும்/ இராமா/

தாரக/ ஸு14/-கர/ சரித/ (பா)
(பிறவிக் கடலைத்) தாண்டுவிப்போனே/ நலம்/ அருளும்/ சரிதத்தோனே/


சரணம் 2
ப்3ரஹ்ம/ ருத்3ர-ஆதி3/ ஸபா4/-ஈஸ1/-அரி/-இப4/
பிரமன்/ ருத்திராதியர்/ அவை/ தலைவனே/ பகையெனும்/ யானைக்கு/

ஸிம்ஹ/-ஆனன/ ஜித/ ப4/-ஈஸ1/ (பா)
சிங்கமே/ முகம்/ வெல்லும்/ தாரை/ யரசனை/


சரணம் 3
1க்ர/-அரி/ ஜனக/ ஸம்ஹரண/ ஸ1ங்க2/
இந்திரன்/ பகைவன்/ தந்தையை/ வதைத்தோனே/ சங்கு/

சக்ர/-ஆதி3/ த4ர/-ஆஸ்1ரித/ சரண/ (பா)
சக்கிரம்/ ஆகியவை/ யேந்துவோனே/ சார்ந்தோர்/ புகல்/ திருவடிகளோனே/


சரணம் 4
ராக4வ/-அன்வய/ ஸுப்ரதீ3ப/ ஸு/-
இரகு/ குல/ ஒளி விளக்கே/ நலன்/

கர/-அக4/ வன/ குடா2ர/ ரூப/ (பா)
அருள்வோனே/ பாவ/ அடவியை/ (யழிக்கும்) கோடரி/ உருவே/


சரணம் 5
1ர/ ஸ1ர/ ஜக3த்/-ஆதா4ர/ அகி2ல/-
புல்/ பாணத்தோனே/ அண்டத்தின்/ ஆதாரமே/ அனைத்து/

ஆஸ1ர/ ஸ1ரத3/-ஆஸு13/ தீ4ர/ (பா)
அரக்கரெனும்/ முகிலை/ விரட்டும்/ புயலே/ தீரனே/


சரணம் 6
குவலய/ த3ள/ ஸம/ நேத்ர/ பாலித/
தாமரை/ யிதழ்/ நிகர்/ கண்ணா/ பேணுவோனே/

குவலய/ த3ளித/-அமித்ர/ (பா)
குவலயத்தினை/ வெட்டி வீழ்த்துவோனே/ பகைவரை/


சரணம் 7
கமலா/ ஹித/ கு3ண/ ப4ரித/ ராம/
கமலைக்கு/ இனியவனே/ குணங்கள்/ நிறைந்த/ இராமா/

கமல/-அஹித/ த4ர/ வினுத/ (பா)
கமல/ பகை (பிறை)/ சூடுவோன்/ போற்றுவோனே/


சரணம் 8
த்யாக3ராஜ/ நுத/ சரண/
தியாகராசன்/ போற்றும்/ திருவடிகளோனே/

நித்ய/-அக3/ ராஜ/ த4ர/ ஸுகு3ண/ (பா)
அழிவற்றோனே/ மலை/ யரசனை/ சுமந்தோனே/ நற்குணத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வைரி நுத - வைரி வினுத.

4 - ஜக3தா3தா4 - ஆதா4ர.

Top

மேற்கோள்கள்
1 - தாரகாஸுர - முருகனால் கொல்லப்பட்ட அசுரன்.

Top

விளக்கம்
3 - ஆஸ்1ரித சரண - இங்ஙனமே அனைத்து புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 'சரண' என்பதற்கு பதிலாக, 'ஸ1ரண' என்று இருக்கவேண்டுமென நான் கருதுகின்றேன்.

தாரகாசுரன் பகைவன், பிறை சூடுவோன் - சிவன்
தாரை யரசன் - மதி
இந்திரன் பகைவன் - இந்திரசித்து
இந்திரன் பகைவன் தந்தை - இராவணன்
புல் பாணம் - காக்கை யரக்கனை அழித்த நிகழ்ச்சி
குவலயம் - புவி
கமலை - இலக்குமி
கமலப் பகை - மதி
மலையரசன் - மந்தர மலை

Top


Updated on 03 Mar 2011

No comments: