Friday, March 4, 2011

தியாகராஜ கிருதி - பாஹி மாம் ஹரே - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Pahi Mam Hare - Raga Saurashtram

பல்லவி
1பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4

சரணம்
சரணம் 1
பாஹி ராமயனுசு ரேயு பக3லு கொலிசிதி
பாஹி ராம 2நீவனு ஸம்பத3னு வலசிதி (பா)


சரணம் 2
பாஹி ராமயனுசு பாரி பாரி கோரிதி
பாஹி ராம நாம 3முக்தா ப2லமுலேரிதி (பா)


சரணம் 3
பாஹி ராமயனுசு பு4வினி பா33 புட்டிதி
பாஹி ராமயனுசு 43ட்டி பட்டு பட்டிதி (பா)


சரணம் 4
பாஹி ராமயனுசு நீது3 பத3மு நம்மிதி
பாஹி ராமயனுசு 5மனஸு பா33 க்3ரம்மிதி (பா)


சரணம் 5
பாஹி ராமயனுசு 6நீது3 பத3மு பாடி3தி
பாஹி ராமயனுசு பரம பத3மு வேடி3தி (பா)


சரணம் 6
பாஹி ராமயனுசு த்4யான பருட3னைதினி
பாஹி த்யாக3ராஜ வினுத ப4க்துடை3தினி (பா)


பொருள் - சுருக்கம்
  • ஓ பெருந்தகையே, ராகவா!
  • இராமா!
  • தியாகராசன் போற்றுவோனே!

  • காப்பாய், காப்பாயென்னை.

    • 'காப்பாய், இராமா' யென இராப்பகலாய் சேவித்தேன்;
    • நீயெனும் செல்வம் விரும்பினேன்;

    • 'காப்பாய், இராமா' யெனத் திரும்பத் திரும்பக் கோரினேன்;
    • இராம நாம முக்திப் பழங்களைப் பொறுக்கினேன்;

    • 'காப்பாய், இராமா' யெனப் புவியில் சிறக்கப் பிறந்தேன்;
    • 'காப்பாய், இராமா' யென கெட்டியான பிடி பிடித்தேன்;

    • 'காப்பாய், இராமா' யென உனது திருவடிகளை நம்பினேன்;
    • 'காப்பாய், இராமா' யென மனத்தினை நன்கு நிறைத்தேன்;

    • 'காப்பாய், இராமா' யென உனது பாடல்களைப் பாடினேன்;
    • 'காப்பாய், இராமா' யென பரம பதம் வேண்டினேன்;

    • 'காப்பாய், இராமா' யென தியான பரனாகினேன்;
    • தொண்டனாகினேன்.


  • காப்பாய், காப்பாயென்னை.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பாஹி/ மாம்/ ஹரே/ மஹானுபா4வ/ ராக4வ/
காப்பாய்/ என்னை/ ஓ/ பெருந்தகையே/ ராகவா/


சரணம்
சரணம் 1
பாஹி/ ராம/-அனுசு/ ரேயு/ பக3லு/ கொலிசிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ இரா/ பகலாய்/ சேவித்தேன்/

பாஹி/ ராம/ நீவு/-அனு/ ஸம்பத3னு/ வலசிதி/ (பா)
காப்பாய்/ இராமா/ நீ/ யெனும்/ செல்வம்/ விரும்பினேன்/


சரணம் 2
பாஹி/ ராம/-அனுசு/ பாரி/ பாரி/ கோரிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ திரும்ப/ திரும்ப/ கோரினேன்/

பாஹி/ ராம/ நாம/ முக்தா/ ப2லமுலு/-ஏரிதி/ (பா)
காப்பாய்/ இராம/ நாம/ முக்தி/ பழங்களை/ பொறுக்கினேன்/


சரணம் 3
பாஹி/ ராம/-அனுசு/ பு4வினி/ பா33/ புட்டிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ புவியில்/ சிறக்க/ பிறந்தேன்/

பாஹி/ ராம/-அனுசு/ க3ட்டி/ பட்டு/ பட்டிதி/ (பா)
'காப்பாய்/ இராமா/ யென/ கெட்டியான/ பிடி/ பிடித்தேன்/


சரணம் 4
பாஹி/ ராம/-அனுசு/ நீது3/ பத3மு/ நம்மிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ உனது/ திருவடிகளை/ நம்பினேன்/

பாஹி/ ராம/-அனுசு/ மனஸு/ பா33/ க்3ரம்மிதி/
'காப்பாய்/ இராமா/ யென/ மனத்தினை/ நன்கு/ நிறைத்தேன்/ (பா)


சரணம் 5
பாஹி/ ராம/-அனுசு/ நீது3/ பத3மு/ பாடி3தி/
'காப்பாய்/ இராமா/ யென/ உனது/ (திருவடியினை) பாடல்களை/ பாடினேன்/

பாஹி/ ராம/-அனுசு/ பரம/ பத3மு/ வேடி3தி/ (பா)
'காப்பாய்/ இராமா/ யென/ பரம/ பதம்/ வேண்டினேன்/


சரணம் 6
பாஹி/ ராம/-அனுசு/ த்4யான/ பருட3னு/-ஐதினி/
'காப்பாய்/ இராமா/ யென/ தியான/ பரன்/ ஆகினேன்/

பாஹி/ த்யாக3ராஜ/ வினுத/ ப4க்துடு3/-ஐதினி/ (பா)
காப்பாய்/ தியாகராசன்/ போற்றுவோனே/ தொண்டன்/ ஆகினேன்/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பாஹி மாம் ஹரே மஹானுபா4வ ராக4 - சில புத்தகங்களில், பல்லவி இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

2 - நீவனு ஸம்பத3னு - நீவனுசு ஸம்பத3னு : பிற்கூறியது சரியெனப்படவில்லை.

4 - 3ட்டி பட்டு பட்டிதி - க3ட்டி பட்டு க3ட்டிதி : பிற்கூறியது சரியெனப்படவில்லை.

5 - மனஸு பா33 க்3ரம்மிதி - மனஸு பா3கு3 க்3ரம்மிதி - மனஸு பா3கு33 நம்மிதி : சரணத்தின் முதற்பகுதியில் 'நம்மிதி' கொடுக்கப்பட்டுள்ளதால் 'க்3ரம்மிதி' ஏற்கப்பட்டது. ஆனால், 'பா33' - 'பா3கு3' - 'பா3கு33' - இவற்றில் எது சரியெனத் தெரியவில்லை. 'பா33' மற்றும் 'பா3கு33' - இவ்விரண்டிற்கும் பொருள் ஒன்றுதான். ஆனால், 'பா3கு3' என்பது சரியானால், 'மனத்தின் நலன் பெற்றேன்' என்று மொழிபெயர்க்கப்படும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்
3 - முக்தா ப2லமுல - 'முக்தா' என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு, 'முத்து' என்றும் 'முக்தி' என்றும் பொருள்கள் உண்டு. இவ்விடத்தில், இச்சொல்லை, தியாகராஜர், சிலேடையாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே 'முக்திப் பழங்கள்' என்று பொருள் கொள்ளப்பட்டது. 'ராம' எனும் நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் 'தாரகம்' எனப்படும். 'ராம' - தாரக நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம்

6 - நீது3 பத3மு பாடி3தி - உனது பாடல்களைப் பாடினேன் - 'உனது திருவடியினைப் பாடினேன்' என்றும் கொள்ளலாம்.

பரம பதம் - வைகுண்டம்
தியான பரன் - தியானத்தில் முழுதும் ஈடுபட்டோன்
தியாகராசன் போற்றுவோன் - இராமன்

Top


Updated on 04 Mar 2011

No comments: