Showing posts with label Sahana Raga. Show all posts
Showing posts with label Sahana Raga. Show all posts

Wednesday, May 20, 2009

தியாகராஜ கிருதி - ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம - ராகம் ஸ1ஹான - Sri Rama Sri Rama - Raga Sahana

பல்லவி
ஸ்ரீ ராம ஸ்ரீ ராம ஸ்ரீ மனோ-ஹரமா

சரணம்
சரணம் 1
ஏலரா நீ த3ய இந்தைன 1ராத3யா (ஸ்ரீ)


சரணம் 2
சாலதா3 ஸத3ய 2ஸாமி 3தாளத3யா (ஸ்ரீ)


சரணம் 3
இப்புடே3 லேத3ட இகனு ப்3ரோதுவட (ஸ்ரீ)


சரணம் 4
எப்புடோ3 கடகட இக த3யாளுவட (ஸ்ரீ)


சரணம் 5
இங்கயீ 4மர்மமா இதி3 நீகு த4ர்மமா (ஸ்ரீ)


சரணம் 6
பங்கஜ வத3னமா பா3கு3க3 ஜூடு3மா (ஸ்ரீ)


சரணம் 7
ஏ ஜன்ம பாபமோ எவ்வரி ஸா1பமோ (ஸ்ரீ)


சரணம் 8
ஏ நாடி கோபமோ நெரிய நா பாபமோ (ஸ்ரீ)


சரணம் 9
என்னாள்ளீ தீ3னத இதி3 நீகு யோக்3யதா (ஸ்ரீ)


சரணம் 10
பலிகி பொ3ங்கவட பரம ஸா1ந்துட3வட (ஸ்ரீ)


சரணம் 11
ப4க்த காந்துட3ட பத்3ம நேத்ருட3ட (ஸ்ரீ)


சரணம் 12
ஸர்வமு நீவட ஸத்ய ரூபுட3ட (ஸ்ரீ)


சரணம் 13
ராக3 விரஹித த்யாக3ராஜ நுத (ஸ்ரீ)


பொருள் - சுருக்கம்
  • ஸ்ரீ ராமா! இலக்குமி மனம் கவர்வோனே!

  • கனிவுடையோனே! சாமி!

  • தாமரை வதனத்தோனே!

  • பற்றற்றவனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!


  • (நீ) தயாளனாம்;

  • சொல் தவறமாட்டாயாம்;

  • மிக்கு அமைதியானவனாம்;

  • தொண்டர்களின் கணவனாம்;

  • தாமரைக் கண்ணனாம்;

  • யாவும் நீயாம்;

  • உண்மையின் உருவாம்.


    • ஏனய்யா, உனது கருணை சிறிதாகிலும் வாராதய்யா?

    • போதாதா, தாளாதய்யா;

    • இப்போதே இல்லையாம்; இனிமேல் காப்பாயாம்; எப்போழ்தோ, ஐயகோ!

    • இனியும் இந்த மருமமா? இஃதுனக்கு தருமமா?

    • நன்கு (என்னை) நோக்குவாய்;

    • எப்பிறவியின் பாவமோ? எவருடைய சாபமோ?

    • என்றைய கோபமோ? அல்லது மிக்கு எனது பாவமோ?

    • எத்தனை நாள் இந்த இழிவு? இஃதுனக்கு தகுமா?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஸ்ரீ ராம/ ஸ்ரீ/ மனோ/-ஹரமா/
ஸ்ரீ ராமா/ ஸ்ரீ ராமா/ இலக்குமி/ மனம்/ கவர்வோனே/


சரணம்
சரணம் 1
ஏலரா/ நீ/ த3ய/ இந்த-ஐன/ ராது3-/அயா/ (ஸ்ரீ)
ஏனய்யா/ உனது/ கருணை/ சிறிதாகிலும்/ வாராது/ அய்யா/


சரணம் 2
சாலதா3/ ஸத3ய/ ஸாமி/ தாளது3/-அயா/ (ஸ்ரீ)
போதாதா/ கனிவுடையோனே/ சாமி/ தாளாது/ அய்யா/


சரணம் 3
இப்புடே3/ லேது3-அட/ இகனு/ ப்3ரோதுவு-அட/ (ஸ்ரீ)
இப்போதே/ இல்லையாம்/ இனிமேல்/ காப்பாயாம்/


சரணம் 4
எப்புடோ3/ கடகட/ இக/ த3யாளுவு-அட/ (ஸ்ரீ)
எப்போழ்தோ/ ஐயகோ/ ஆயினும்/ (நீ) தயாளனாம்/


சரணம் 5
இங்க/-ஈ/ மர்மமா/ இதி3/ நீகு/ த4ர்மமா/ (ஸ்ரீ)
இனியும்/ இந்த/ மருமமா/ இஃது/ உனக்கு/ தருமமா/


சரணம் 6
பங்கஜ/ வத3னமா/ பா3கு3க3/ ஜூடு3மா/ (ஸ்ரீ)
தாமரை/ வதனத்தோனே/ நன்கு/ (என்னை) நோக்குவாய்/


சரணம் 7
ஏ/ ஜன்ம/ பாபமோ/ எவ்வரி/ ஸா1பமோ/ (ஸ்ரீ)
எந்த/ பிறவியின்/ பாவமோ/ எவருடைய/ சாபமோ/


சரணம் 8
ஏ நாடி/ கோபமோ/ நெரிய/ நா/ பாபமோ/ (ஸ்ரீ)
என்றைய/ கோபமோ/ (அல்லது) மிக்கு/ எனது/ பாவமோ/


சரணம் 9
என்னாள்ளு/-ஈ/ தீ3னத/ இதி3/ நீகு/ யோக்3யதா/ (ஸ்ரீ)
எத்தனை நாள்/ இந்த/ இழிவு/ இஃது/ உனக்கு/ தகுமா/


சரணம் 10
பலிகி/ பொ3ங்கவு-அட/ பரம/ ஸா1ந்துட3வு-அட/ (ஸ்ரீ)
சொல்/ தவறமாட்டாயாம்/ மிக்கு/ அமைதியானவனாம்/


சரணம் 11
ப4க்த/ காந்துடு3-அட/ பத்3ம/ நேத்ருடு3-அட/ (ஸ்ரீ)
தொண்டர்களின்/ கணவனாம்/ தாமரை/ கண்ணனாம்/


சரணம் 12
ஸர்வமு/ நீவு-அட/ ஸத்ய/ ரூபுடு3-அட/ (ஸ்ரீ)
யாவும்/ நீயாம்/ உண்மையின்/ உருவாம்/


சரணம் 13
ராக3/ விரஹித/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ்ரீ)
பற்று/ அற்றவனே/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ராத3யா - ராத3ய

2 - ஸாமி - ஸ்வாமி

3 - தாளத3யா - தாளத3ய

4 - மர்மமா - கர்மமா

சில புத்தகங்களில் 4 மற்றும் 5-வது சரணங்கள் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளன. பொருளின் கோர்வையை நோக்குகையில் அங்ஙனம் மாற்றினால் தவறாகும்.

Top

மேற்கோள்கள்

விளக்கம்



Updated on 20 May 2009

Tuesday, May 19, 2009

தியாகராஜ கிருதி - வந்த3னமு - ராகம் ஸ1ஹான - Vandanamu - Raga Sahana - Prahlada Bhakti Vijayam

பல்லவி
வந்த3னமு ரகு4 நந்த3ன ஸேது
ப3ந்த4ன ப4க்த 1சந்த3ன ராம

சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா நாதோ வாத3மா நே
பே4த3மா இதி3 மோத3மா ராம (வ)


சரணம் 2
ஸ்ரீ ரமா ஹ்ரு2ச்சாரமா ப்3ரோவ
பா4ரமா 2ராய-பா4ரமா ராம (வ)


சரணம் 3
விண்டினி நம்முகொண்டினி
ஸ1ரணண்டினி ரம்மண்டினி ராம (வ)


சரணம் 4
ஓட3னு ப4க்தி வீட3னு ஒருல
வேட3னு நீ-வாட3னு ராம (வ)


சரணம் 5
கம்மனி விடெ3மிம்மனி வரமு
கொம்மனி 3பலுகு ரம்மனி ராம (வ)


சரணம் 6
ந்யாயமா நீகாதா3யமா 4இங்க
ஹேயமா முனி கே3யமா ராம (வ)


சரணம் 7
சூடு3மீ காபாடு3மீ மம்மு
போடி3மிகா3 கூடு3மீ ராம (வ)


சரணம் 8
க்ஷேமமு தி3வ்ய தா4மமு நித்ய
நேமமு ராம நாமமு ராம (வ)


சரணம் 9
வேக3 ரா கருணா ஸாக3ரா ஸ்ரீ
5த்யாக3ராஜ 6ஹ்ரு2த3யாகா3ரா ராம (வ)


பொருள் - சுருக்கம்
  • இரகு நந்தனா! அணை கட்டியவனே! தொண்டருக்கு விரும்பியதருளும் இராமா!

  • சீரருள்வோனே!

  • இலக்குமி உள்ளத்துறையே!

  • முனிவர்களால் பாடப் பெற்றோனே!

  • கருணைக் கடலே! தியாகராசனின் இதயத்தில் குடி கொண்டவனே!


    • வந்தனம்.

    • என்னுடன் வாதமோ? நான் (உன்னின்றும்) வேறோ? இஃதுனக்கு மகிழ்ச்சியோ?

    • காத்தல் பளுவோ? இஃதென்ன பேரமோ?

    • செவி மடுத்தேன், நம்பினேன், சரணம் என்றேன், (உன்னை) வர வேண்டினேன்.

    • பின் வாங்கேன், பக்தியை வீடேன், பிறரை வேண்டேன், உன்னவன் நான்.

    • மணக்கும் வீடிகையளிப்பாயென, வரம் பெறுவாயென, சொல்வாய் வாயென.

    • நியாயமோ? உனக்காதாயமோ? இனியும் வெறுப்போ?

    • எம்மை நோக்குவாய், காப்பாய், தக்கமுறையில் கூடுவாய்.

    • நலனும், புனித உறைவிடமும், நாளும் விரதமும் இராமனின் நாமமே.

    • வேகமாய் வாராய்.



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வந்த3னமு/ ரகு4/ நந்த3ன/ ஸேது/
வந்தனம்/ இரகு/ நந்தனா/ அணை/

ப3ந்த4ன/ ப4க்த/ சந்த3ன/ ராம/
கட்டியவனே/ தொண்டருக்கு/ விரும்பியதருளும்/ இராமா/


சரணம்
சரணம் 1
ஸ்ரீ-த3மா/ நாதோ/ வாத3மா/ நே/
சீரருள்வோனே/ என்னுடன்/ வாதமோ/ நான்/

பே4த3மா/ இதி3/ மோத3மா/ ராம/ (வ)
(உன்னின்றும்) வேறோ/ இஃது (உனக்கு)/ மகிழ்ச்சியோ/ இராமா/


சரணம் 2
ஸ்ரீ ரமா/ ஹ்ரு2த்/-சாரமா/ ப்3ரோவ/
இலக்குமி/ உள்ளத்து/ உறையே/ காத்தல்/

பா4ரமா/ ராய-பா4ரமா/ ராம/ (வ)
பளுவோ/ (இஃதென்ன) பேரமோ/ இராமா/


சரணம் 3
விண்டினி/ நம்முகொண்டினி/
செவி மடுத்தேன்/ நம்பினேன்/

ஸ1ரணு/-அண்டினி/ ரம்மு/-அண்டினி/ ராம/ (வ)
சரணம்/ என்றேன்/, (உன்னை) வர/ வேண்டினேன்/ இராமா/


சரணம் 4
ஓட3னு/ ப4க்தி/ வீட3னு/ ஒருல/
பின் வாங்கேன்/ பக்தியை/ வீடேன்/ பிறரை/

வேட3னு/ நீ-வாட3னு/ ராம/ (வ)
வேண்டேன்/ உன்னவன் (நான்)/ இராமா/


சரணம் 5
கம்மனி/ விடெ3மு/-இம்மு/-அனி/ வரமு/
மணக்கும்/ வீடிகை/ அளிப்பாய்/ என/ வரம்/

கொம்மு/-அனி/ பலுகு/ ரம்மு/-அனி/ ராம/ (வ)
பெறுவாய்/ என/ சொல்வாய்/ வா/ என/ இராமா/


சரணம் 6
ந்யாயமா/ நீகு/-ஆதா3யமா/ இங்க/
நியாயமோ/ உனக்கு/ ஆதாயமோ/ இனியும்/

ஹேயமா/ முனி/ கே3யமா/ ராம/ (வ)
வெறுப்போ/ முனிவர்களால்/ பாடப் பெற்ற/ இராமா/


சரணம் 7
சூடு3மீ/ காபாடு3மீ/ மம்மு/
நோக்குவாய்/ காப்பாய்/ எம்மை/

போடி3மிகா3/ கூடு3மீ/ ராம/ (வ)
தக்கமுறையில்/ கூடுவாய்/ இராமா/


சரணம் 8
க்ஷேமமு/ தி3வ்ய/ தா4மமு/ நித்ய/
நலனும்/ புனித/ உறைவிடமும்/ நாளும்/

நேமமு/ ராம/ நாமமு/ ராம/ (வ)
விரதமும்/ இராமனின்/ நாமமே/ இராமா/


சரணம் 9
வேக3/ ரா/ கருணா/ ஸாக3ரா/
வேகமாய்/ வாராய்/ கருணை/ கடலே/

ஸ்ரீ த்யாக3ராஜ/ ஹ்ரு2த3ய/-ஆகா3ரா/ ராம/ (வ)
தியாகராசனின்/ இதயத்தில்/ குடி கொண்டவனே/ இராமா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

3 - பலுகு ரம்மனி - பலுக ரம்மனி : இவ்விடத்தில் 'பலுகு ரம்மனி' பொருந்தும்.

4 - இங்க - இந்த

5 - த்யாக3ராஜ - த்யாக3ராஜுனி

6 - ஹ்ரு2த3யாகா3ரா - ஹ்ரு2த3யாகாரா : எல்லா புத்தகங்களிலும், இச்சொல்லுக்கு, 'இதயத்துறையே' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 'ஹ்ரு2த3யாகா3ரா' பொருந்தும்

சில புத்தகங்களில் 7-வது சரணம் கொடுக்கப்படவில்லை.

Top

மேற்கோள்கள்


விளக்கம்
1 - சந்த3ன - தியாகராஜர் பல கீர்த்தனைகளில் 'ப4க்த மந்தா3ர', 'ப4க்த பாரிஜாத' முதலிய சொற்களை பயன்படுத்துகின்றார். விரும்பியதையளிக்கும், ஐந்து வானோர் தருக்களாவன - மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கற்பகம், ஹரி சந்தனம். எனவே இவ்விடத்தில் 'சந்த3ன' என்ற சொல்லுக்கு 'விரும்பியதையருளும்' என்று பொருள் கொள்ளப்பட்டது.

2 - ராய-பா4ரமா - இச்சொல்லுக்கு, 'உன்னிடம் எனது குறைகளைச் சொல்ல தூதுவன் வேண்டுமோ?' என்று பொருள்படவும் கொள்ளலாம்.

இப்பாடல் 'பிரஹ்லாத3 ப4க்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலின் சொற்கள், பிரகலாதன் இறைவனை நோக்கிப் பாடுவதாக.

அணை - கடலுக்கு

வீடிகை - தாம்பூலம்

Top


Updated on 19 May 2009

Monday, May 18, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம லாலி - ராகம் ஸ1ஹான - Rama Rama Rama Laali - Raga Sahana

பல்லவி
ராம ராம ராம லாலி ஸ்ரீ ராம
ராம ராம லாவண்ய லாலி

சரணம்
சரணம் 1
தொ3ரக-ரானி நிதி4 ராரா தொ3ரகு
தொ3ரவு நீவு தொட்லலோ ராரா (ராம)


சரணம் 2
வரமைனட்டி நா பட்டி ராரா வர
ஸுருலகு அருதை3ன ஸுந்த3ர ராரா (ராம)


சரணம் 3
தொலி ஜேஸின நோமு ப2லமா ராம
இலனு வெலயு 1மா இன குல த4னமா (ராம)


சரணம் 4
கல கலமனி ராவு செந்த
ஆகலி கொண்டிவோ லேக கருணா ஸ்வாந்த (ராம)

சரணம் 5
மத3 க3ஜ க3மன நா ஸ்வாமி ஓ
ஸத3யுட3 நீ-லோனி ஜாலி தெல்புமீ (ராம)


சரணம் 6
ஸரி பா3லுலாட3 ரம்மனிரி ஆடி3
வரத3 நீவு ரா-வத்3து3 பொம்மனிரி (ராம)


சரணம் 7
எவரு நின்னு ஏமனிரி
ராக4வ நீயெட3 தப்பு கனி ரா-வத்3த3னிரி (ராம)


சரணம் 8
கனுலு மூஸியாடி3னாரு
கரமுனகணக3னி நேத்ரமனி கஸரெத3ரு (ராம)


சரணம் 9
கலுவ ரேகுலனு போலு கனுலு
கலக3னேல நன்னு கன்ன த3யாளோ (ராம)


சரணம் 10
தேட கன்னுலனு மூஸெத3ரு நா
2தோடி3 வாருலெல்ல போ-வத்3த3னெத3ரு (ராம)


சரணம் 11
நுது3டனு ஸ்1ரம ஜலமேல ஆ
கத2யேமி தெலுபவே கருணாலவால (ராம)


சரணம் 12
சிந்தசே தா3கு3து3 வேரே மேனி
காந்திசே தகி3லிதே கர்மமனெரே (ராம)


சரணம் 13
முத்யால ஸருல சிக்கேமி ஓ
ஸத்ய ஸந்த4 பாத3 ஸருல நொக்கேமி (ராம)


சரணம் 14
முத3முன நே பட்டு வேள
நா பத3முன வ்ராலெத3ரு பலுமாரா வேள (ராம)


சரணம் 15
நின்னேமனி பிலுசுகொனிரி ராம
மன்னனதோனேமனி எஞ்சுகொனிரி (ராம)


சரணம் 16
பா3க3 ஸாக்ஷி ரம்மனிரி வர
த்யாக3ராஜ நுத தை3வமாயனிரி (ராம)


பொருள் - சுருக்கம்
  • இந்தப் பாடல் குழந்தை இராமனுக்கும் தாய் கௌசலைக்கும் நடக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.

    • தாய் -

      • முன்செய் நோன்பின் பயனே! புவியிலொளிரும் எமது பரிதி குலச் செல்வமே!

      • கருணையுள்ளத்தோனே! மதகரி நடையோனே! என் தெய்வமே! ஓ தயாளா!

      • வரதா! இராகவா! என்னையீன்ற தயாளா! கருணைக் கடலே! ஓ சொல் தவறாதவனே!


      • இராமா! தாலேலோ!

      • இராமா! அழகா! தாலேலோ!

      • கிடைக்க மாட்டாத செல்வமே, வாடா!

      • துரைக்கு துரையே, நீ தொட்டிலில் வாடா!

      • பேறுபோலும் என் குழந்தாய், வாடா!

      • உயர் வானோருக்கும் அரிதான சுந்தரா, வாடா!


    • தாய் -
      • கலகலப்பாக வாராயேனோ, அருகினில்? பசியெடுத்ததோ? அன்றி, உனதுள்ளத் துயரத்தினைச் சொல்வாய்;

    • இராமன் -
      • ஒத்த சிறுவர்கள் விளையாட வாயென்றனர்; ஆடியபின், நீ வரவேண்டாம், போயென்றனர்;

    • தாய் -
      • எவருன்னை என்ன சொன்னார்கள்? உன்னிடம் தவறு கண்டா வரவேண்டாமென்றனர்?

    • இராமன் -
      • கண்களை மூடி ஆடினார்கள்; கைக்குள் கொள்ளாக் கண்களென குறை சொன்னார்கள்;

    • தாய் -
      • தாமரையிதழ் போலும் கண்கள் அமைந்ததேனோ?

    • இராமன் -
      • திறந்த கண்களை மூடினர்; எனது தோழர்களெல்லோரும் போகவேண்டாமென்றனர்;

    • தாய் -
      • நெற்றியில் வியர்வைத் துளிகளேன்? அந்த கதையென்ன, சொல்வாய்;

    • இராமன் -
      • 'ஒளிந்துகொண்டாயென்று வைத்துக்கொள்; பின்னர் (உனது) உடலொளியினால் அகப்பட்டால் தொல்லை', என்றனரே;

    • தாய் -
      • முத்துச்சரங்கள் பின்னிக்கொன்டதென்ன? கால் (கொலுசு) சரங்கள் நசுங்கினதென்ன?

    • இராமன் -
      • களிப்புடன் நான் பிடிக்கும்போழ்து, எனது கால்களில் விழுந்தனர், பலமுறை, அவ்வேளை;

    • தாய் -
      • உன்னையென்னவென்று அழைத்தனர்? மதிப்புடன் என்னவென்று எண்ணிக்கொண்டனர்?

    • இராமன் -
      • நல் சாட்சியாக வரச்சொன்னனர்; 'உயர், தியாகராசனால் போற்றப்பெற்ற தெய்வமே'யென்றனர்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ராம/ ராம/ ராம/ லாலி/ ஸ்ரீ ராம/
    இராமா/ இராமா/ இராமா/ தாலேலோ/ ஸ்ரீ ராமா/

    ராம/ ராம/ லாவண்ய/ லாலி/
    இராமா/ இராமா/ அழகா/ தாலேலோ/


    சரணம்
    சரணம் 1
    தொ3ரக/-ரானி/ நிதி4/ ராரா/ தொ3ரகு/
    கிடைக்க/ மாட்டாத/ செல்வமே/ வாடா/ துரைக்கு/

    தொ3ரவு/ நீவு/ தொட்லலோ/ ராரா/ (ராம)
    துரையே/ நீ/ தொட்டிலில்/ வாடா/


    சரணம் 2
    வரமு/-ஐனட்டி/ நா/ பட்டி/ ராரா/ வர/
    பேறு/ போலும்/ என்/ குழந்தாய்/ வாடா/ உயர்/

    ஸுருலகு/ அருதை3ன/ ஸுந்த3ர/ ராரா/ (ராம)
    வானோருக்கும்/ அரிதான/ சுந்தரா/ வாடா/


    சரணம் 3
    தொலி/ ஜேஸின/ நோமு/ ப2லமா/ ராம/
    முன்/ செய்/ நோன்பின்/ பயனே/ இராமா/

    இலனு/ வெலயு/ மா/ இன/ குல/ த4னமா/ (ராம)
    புவியில்/ ஒளிரும்/ எமது/ பரிதி/ குல/ செல்வமே/


    சரணம் 4
    கல கலமனி/ ராவு/ செந்த/
    கலகலப்பாக/ வாராயேனோ/ அருகினில்/

    ஆகலி/ கொண்டிவோ/ லேக/ கருணா/ ஸ்வாந்த/ (ராம)
    பசி/ யெடுத்ததோ/ அன்றி/ கருணை/ யுள்ளத்தோனே/

    சரணம் 5
    மத3/ க3ஜ/ க3மன/ நா/ ஸ்வாமி/ ஓ/
    மத/ கரி/ நடையோனே/ என்/ தெய்வமே/ ஓ/

    ஸத3யுட3/ நீ/-லோனி/ ஜாலி/ தெல்புமீ/ (ராம)
    தயாளா/ உனது/ உள்ள/ துயரத்தினை/ சொல்வாய்/


    சரணம் 6
    ஸரி/ பா3லுலு/-ஆட3/ ரம்மு/-அனிரி/ ஆடி3/
    ஒத்த/ சிறுவர்கள்/ விளையாட/ வா/ யென்றனர்/ ஆடியபின்/

    வரத3/ நீவு/ ரா/-வத்3து3/ பொம்மு/-அனிரி/ (ராம)
    வரதா/ நீ/ வர/ வேண்டாம்/ போ/ யென்றனர்/


    சரணம் 7
    எவரு/ நின்னு/ ஏமி/-அனிரி/
    எவர்/ உன்னை/ என்ன/ சொன்னார்கள்/

    ராக4வ/ நீ-எட3/ தப்பு/ கனி/ ரா/-வத்3து3/-அனிரி/ (ராம)
    இராகவா/ உன்னிடம்/ தவறு/ கண்டா/ வர/ வேண்டாம்/ என்றனர்/


    சரணம் 8
    கனுலு/ மூஸி/-ஆடி3னாரு/
    கண்களை/ மூடி/ ஆடினார்கள்/

    கரமுனகு/-அணக3னி/ நேத்ரமு/-அனி/ கஸரெத3ரு/ (ராம)
    கைக்குள்/ கொள்ளா/ கண்கள்/ என/ குறை/ சொன்னார்கள்/


    சரணம் 9
    கலுவ/ ரேகுலனு/ போலு/ கனுலு/
    தாமரை/ இதழ்/ போலும்/ கண்கள்/

    கலக3னு/-ஏல/ நன்னு/ கன்ன/ த3யாளோ/ (ராம)
    அமைந்தது/ ஏனோ/ என்னை/ ஈன்ற/ தயாளா/


    சரணம் 10
    தேட/ கன்னுலனு/ மூஸெத3ரு/ நா/
    திறந்த/ கண்களை/ மூடினர்/ எனது/

    தோடி3 வாருலு/-எல்ல/ போ/-வத்3து3/-அனெத3ரு/ (ராம)
    தோழர்கள்/ எல்லோரும்/ போக/ வேண்டாம்/ என்றனர்;


    சரணம் 11
    நுது3டனு/ ஸ்1ரம/ ஜலமு/-ஏல/ ஆ/
    நெற்றியில்/ வியர்வை/ துளிகள்/ ஏன்/ அந்த/

    கத2/-ஏமி/ தெலுபவே/ கருணா/-ஆலவால/ (ராம)
    கதை/ என்ன/ சொல்வாய்/ கருணை/ கடலே/


    சரணம் 12
    சிந்தசே/ தா3கு3து3/ வேரே/ மேனி/
    'வைத்துக்கொள்/ ஒளிந்துகொண்டாயென்று/; பின்னர்/ (உனது) உடல்/

    காந்திசே/ தகி3லிதே/ கர்மமு/-அனெரே/ (ராம)
    ஒளியினால்/ அகப்பட்டால்/ தொல்லை'/ என்றனரே/


    சரணம் 13
    முத்யால/ ஸருல/ சிக்கு/-ஏமி/ ஓ/
    முத்து/ சரங்கள்/ பின்னிக்கொன்டது/ என்ன/ ஓ/

    ஸத்ய/ ஸந்த4/ பாத3/ ஸருல/ நொக்கு/-ஏமி/ (ராம)
    சொல்/ தவறாதவனே/ கால்/ (கொலுசு) சரங்கள்/ நசுங்கினது/ என்ன/


    சரணம் 14
    முத3முன/ நே/ பட்டு/ வேள/
    களிப்புடன்/ நான்/ பிடிக்கும்/ போழ்து/

    நா/ பத3முன/ வ்ராலெத3ரு/ பலுமாரு/-ஆ வேள/ (ராம)
    எனது/ கால்களில்/ விழுந்தனர்/ பலமுறை/ அவ்வேளை/


    சரணம் 15
    நின்னு/-ஏமி-அனி/ பிலுசுகொனிரி/ ராம/
    உன்னை/ என்னவென்று/ அழைத்தனர்/ இராமா/.

    மன்னனதோனு/-ஏமி-அனி/ எஞ்சுகொனிரி/ (ராம)
    மதிப்புடன்/ என்னவென்று/ எண்ணிக்கொண்டனர்/


    சரணம் 16
    பா3க3/ ஸாக்ஷி/ ரம்மு/-அனிரி/ வர/
    நல்/ சாட்சியாக/ வர/ சொன்னனர்/ 'உயர்/

    த்யாக3ராஜ/ நுத/ தை3வமா/-அனிரி/ (ராம)
    தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ தெய்வமே'/ என்றனர்/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    சில புத்தகங்களில், முதல் சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    1 - மா இன குல - இன குல

    2 - தோடி3 வாருலெல்ல - தோடி வாருலெல்ல

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    கண்களை மூடி ஆடினார்கள் - கண்ணாம்பூச்சி

    Top


    Updated on 18 May 2009

    Thursday, May 14, 2009

    தியாகராஜ கிருதி - ரகு4 பதே ராம - ராகம் ஸ1ஹான - Raghupate Rama - Raga Sahana

    பல்லவி
    ரகு4 பதே ராம ராக்ஷஸ பீ4ம

    அனுபல்லவி
    ப்4ரு2கு3 ஸுத மத3 ஹரண முனி ப்3ரு2ந்த3 வந்தி3த சரண (ரகு4)

    சரணம்
    சரணம் 1
    ஸரஸீ-ருஹ நயன ஸஜ்ஜன ஹ்ரு2த3ய நிகேதன
    த4ரணீ த4ர தீ4ர ஸீதா மனோ-ஹர
    நிரவதி4 ஸுக2தா3ப்ரமேய நிருபம நாரத3 ஸுகே3ய
    கர த்4ரு2த ஸ1ர ஜால நீல க4ன வர்ணாமர பால (ரகு4)


    சரணம் 2
    தருணாருண நிப4 சரண தரணி வம்ஸ1 விபூ4ஷண
    வருணாலய மத3 த3மன வாரணாவன
    கருணா-கர கி3ரீஸ1 சாப க2ண்ட3ன நிர்ஜித தாப
    1பரிபூர்ணாவதார பர பா4மினீ தூ3ர (ரகு4)


    சரணம் 3
    ஹரி ஹய பங்கஜ ப4வ நுத புர வைரி 2பராஸ1ர ஹித
    3நர வர வேஷ ஸுகே3ய தாரக நாம-தே4ய
    ஸ்வர ஜித க4ன ரவ பரேஸ1 ஸ1த பா4ஸ்கர ஸங்காஸ1
    பரிபாலித த்யாக3ராஜ பாஹி ப4க்த ஸமாஜ (ரகு4)


    பொருள் - சுருக்கம்
    • ஓ இரகு பதி! இராமா! அரக்கருக்கு அச்சமூட்டுவோனே!

    • பிருகு மைந்தன் மதத்தினை யொடுக்கியோனே! முனிவர்கள் தொழும் திருவடியோனே!

    • கமலக்கண்ணா!நல்லோர் இதயத்துறையே! புவியைச் சுமந்த தீரனே! சீதையின் உள்ளம் கவர்வோனே! இடையறா சுகமருளும் அளவிடற்கரியனே! ஒப்பற்ற, நாரதரால் சிறக்க பாடப் பெற்றோனே! எண்ணற்ற அம்புகள் கையிலேந்துவோனே! கார்முகில் நீல வண்ணத்தோனே! அமரரைக் காப்போனே!

    • இளங்காலை நிகர் செந்திருவடியோனே! பரிதி குல அணிகலனே! கடலரசனின் செருக்கை அடக்கியோனே! வாரணத்தைக் காத்தோனே!கருணாகரனே! கிரீசனின் அம்பை முறித்தவனே! துயர் வென்றோனே! பரிபூரண அவதாரமே! பிறன் மனைக்கு தூரமானவனே!

    • பொற்குதிரையோன், மலரோனால் போற்றப் பெற்றோனே! புரமெரித்தோன், பராசரருக்கு இனியவனே! உயர் மனித வேடத்தோனே! சிறக்க பாடல் பெற்றோனே! தாரக நாமத்தோனே! குரலில் இடியினை மிக்கோனே! மேலான தெய்வமே! நூறு பரிதிகள் நிகரொளியோனே! தியாகராசனைப் பேணுவோனே! தொண்டர் சமூகத்துறைவோனே!

      • காப்பாய்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ரகு4/ பதே/ ராம/ ராக்ஷஸ/ பீ4ம/
    ஓ இரகு/ பதி/ இராமா/ அரக்கருக்கு/ அச்சமூட்டுவோனே/


    அனுபல்லவி
    ப்4ரு2கு3/ ஸுத/ மத3/ ஹரண/ முனி ப்3ரு2ந்த3/ வந்தி3த/ சரண/ (ரகு4)
    பிருகு/ மைந்தன்/ மதத்தினை/ யொடுக்கியோனே/ முனிவர்கள்/ தொழும்/ திருவடியோனே/


    சரணம்
    சரணம் 1
    ஸரஸீ-ருஹ/ நயன/ ஸஜ்ஜன/ ஹ்ரு2த3ய/ நிகேதன/
    கமல/ கண்ணா/ நல்லோர்/ இதயத்து/ உறையே/

    த4ரணீ/ த4ர/ தீ4ர/ ஸீதா/ மனோ/-ஹர/
    புவியை/ சுமந்த/ தீரனே/ சீதையின்/ உள்ளம்/ கவர்வோனே/

    நிரவதி4/ ஸுக2த3/-அப்ரமேய/ நிருபம/ நாரத3/ ஸுகே3ய/
    இடையறா/ சுகமருளும்/ அளவிடற்கரியனே/ ஒப்பற்ற/ நாரதரால்/ சிறக்க பாடப் பெற்றோனே/

    கர/ த்4ரு2த/ ஸ1ர/ ஜால/ நீல/ க4ன/ வர்ண/-அமர/ பால/ (ரகு4)
    கையில்/ ஏந்துவோனே/ அம்புகள்/ எண்ணற்ற/ நீல/ கார்முகில்/ வண்ணத்தோனே/ அமரரை/ காப்போனே/


    சரணம் 2
    தருண/-அருண/ நிப4/ சரண/ தரணி/ வம்ஸ1/ விபூ4ஷண/
    இளம்/ காலை (சிகப்பு)/ நிகர்/ திருவடியோனே/ பரிதி/ குல/ அணிகலனே/

    வருண-ஆலய/ மத3/ த3மன/ வாரண/-அவன/
    கடலரசனின்/ செருக்கை/ அடக்கியோனே/ வாரணத்தை/ காத்தோனே/

    கருணா-கர/ கி3ரி/ -ஈஸ1/ சாப/ க2ண்ட3ன/ நிர்ஜித/ தாப/
    கருணாகரனே/ கிரி/ ஈசனின்/ அம்பை/ முறித்தவனே/ வென்றோனே/ துயரினை/

    பரிபூர்ண/-அவதார/ பர/ பா4மினீ/ தூ3ர/ (ரகு4)
    பரிபூரண/ அவதாரமே/ பிறன்/ மனைக்கு/ தூரமானவனே/


    சரணம் 3
    ஹரி/ ஹய/ பங்கஜ ப4வ/ நுத/ புர/ வைரி/ பராஸ1ர/ ஹித/
    பொற்/ குதிரையோன்/ மலரோனால்/ போற்றப் பெற்றோனே/ புரம்/ எரித்தோன்/ பராசரருக்கு/ இனியவனே/

    நர/ வர/ வேஷ/ ஸுகே3ய/ தாரக/ நாம-தே4ய/
    மனித/ உயர்/ வேடத்தோனே/ சிறக்க பாடல் பெற்றோனே/ தாரக/ நாமத்தோனே/

    ஸ்வர/ ஜித/ க4ன/ ரவ/ பர/-ஈஸ1/ ஸ1த/ பா4ஸ்கர/ ஸங்காஸ1/
    குரலில்/ மிக்கோனே/ கார்முகில்/ இடியினை/ மேலான/ தெய்வமே/ நூறு/ பரிதிகள்/ (நிகர்) ஒளியோனே/

    பரிபாலித/ த்யாக3ராஜ/ பாஹி/ ப4க்த/ ஸமாஜ/ (ரகு4)
    பேணுவோனே/ தியாகராசனை/ காப்பாய்/ தொண்டர்/ சமூகத்துறைவோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    3 - நர வர வேஷ ஸுகே3ய தாரக நாம-தே4ய - நர வர வேஷ தாரக நாம-தே4ய.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    1 - பரிபூர்ணாவதார - கிருஷ்ணாவதாரத்தைத்தான் பொதுவாக 'பூரணாவதாரம்' என்பர். ஆனால், தியாகராஜர், ராமாவதாரத்தினை 'பூரணாவதாரம்' என்கின்றார்.

    2 - பராஸ1ர - பராசரர் - பராசர முனிவர் - வியாசரின் தந்தை

    பிருகு மைந்தன் - பரசுராமன்
    புவியைச் சுமந்தோன் - வராக (பன்றி) அவதாரம்
    வாரணம் - யானை
    கிரீசன், புரமெரித்தோன் - சிவன்
    பொற்குதிரையோன் - இந்திரன்
    தாரக நாமம் - பிறவிக்கடலை தாண்டுவிக்கும் 'ராம' நாமம்
    குரலில் இடியினை - குரல் முழக்கத்தினில்

    Top


    Updated on 14 May 2009

    Wednesday, May 13, 2009

    தியாகராஜ கிருதி - நிஜமுக3 நீ - ராகம் ஸ1ஹான - Nijamuga Nee - Raga Sahaana

    பல்லவி
    நிஜமுக3 நீ 1மஹிம தெல்ப லேரு

    அனுபல்லவி
    ப4ஜன ஸேயுமனி பலிகிரி கானி
    2அஜ க3ஜ ஸிம்ஹ 3ஸ்ரு2கா3லாந்தரமனி (நிஜ)

    சரணம்
    4பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு
    ப்ரொத்3து3னொஸகி3 பைகமுலார்ஜிஞ்சே
    5ஸித்3து4லு ஸுஜனுல ஸப4கு ரா நேரனி
    5பெத்3த3லு ஸ்ரீ 6த்யாக3ராஜ வினுத ராம (நிஜ)


    பொருள் - சுருக்கம்
    தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
    • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்

      • 'பஜனை செய்வீர்' எனப் பகர்ந்தனர்; ஆயின்,

      • ஆடு - யானை, சிங்கம் - ஓநாய்களின் வேறுபாடென

    • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்

      • அறிவெனும் தாயினை விடயங்களெனும் காமுகர்களுக்கு காலைமுதல் அளித்து, பணம் தேட்டும் 'சித்தர்கள்',

      • நல்லோரின் அவைக்கு வர நேராத 'பெரியோர்கள்',

    • நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    நிஜமுக3/ நீ/ மஹிம/ தெல்ப/ லேரு/
    நிசமாக/ உனது/ மகிமையினை/ தெரிவிக்க/ மாட்டார்/


    அனுபல்லவி
    ப4ஜன/ ஸேயுமு/-அனி/ பலிகிரி/ கானி/
    பஜனை/ செய்வீர்/ என/ பகர்ந்தனர்/ ஆயின்/

    அஜ/ க3ஜ/ ஸிம்ஹ/ ஸ்ரு2கா3ல/-அந்தரமு/-அனி/ (நிஜ)
    ஆடு/ யானை/ சிங்கம்/ ஓநாய்(களின்)/ வேறுபாடு/ என/ நிசமாக...


    சரணம்
    பு3த்3தி4/-அனு/ தல்லினி/ விஷய/ விடுலகு/
    அறிவு/ எனும்/ தாயினை/ விடயங்களெனும்/ காமுகர்களுக்கு/

    ப்ரொத்3து3ன/-ஒஸகி3/ பைகமுலு/-ஆர்ஜிஞ்சே/
    காலைமுதல்/ அளித்து/ பணம்/ தேட்டும்/

    ஸித்3து4லு/ ஸுஜனுல/ ஸப4கு/ ரா/ நேரனி/
    'சித்தர்கள்'/ நல்லோரின்/ அவைக்கு/ வர/ நேராத/

    பெத்3த3லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வினுத/ ராம/ (நிஜ)
    'பெரியோர்கள்'/ ஸ்ரீ தியாகராசனால்/ போற்றப் பெற்ற/ இராமா/ நிசமாக...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - மஹிம - மஹிமலு

    3 - ஸ்ரு2கா3ல - ஸ்1ரு2கா3ல : 'ஸ்1ரு2கா3ல' என்ற சம்ஸ்கிருத சொல்லின் தெலுங்கு திரிபு 'ஸ்ரு2கா3ல'

    4 - பு3த்3தி4யனு - பு3த்3த்4யனு

    6 - த்யாக3ராஜ வினுத ராம - த்யாக3ராஜ வினுத

    Top

    மேற்கோள்கள்


    விளக்கம்
    2 - அஜ க3ஜ ஸிம்ஹ ஸ்ரு2கா3லாந்தர - ஆடு - யானை மற்றும் சிங்கம் - ஓநாய் இவற்றின் வேறுபாடு : 'ராம' என்ற நாமம் பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் 'தாரக நாம'மாகும். தனது அறிவினை, செல்வம் தேட்டுதலில் ஈடுபடுத்துவோர் இதனை அறியவியலர். அதனால், அவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் செய்வர் - அதுவும் அறைகுறையாக.

    தியாகராஜர், 'ப4க்தி பி3ச்சமிய்யவே' என்ற கீர்த்தனையில், 'கெட்டித்தனமுடைத்தோருக்கு, வேதாகம, புராணங்களின் பிரசங்கத் திறமை ஏற்படுவதனால் என்ள பயன்' என்கின்றார்.

    'அஜாமிள'னின் கதையில் (பாகவத புராணம், புத்தகம் 6, அத்தியாயம் 2) நாராயணனின் நாமத்தினை தெரிந்தோ, தெரியாமலோ, ஓர்முறை சொன்னாலும், அதுவும் இறக்கும் தறுவாயில் கூறினால், நமன் பிடியிலிருந்து தப்பலாம், என்று கூறப்பட்டது. அப்படியிருக்க, இறைவனின் நாம பஜனையில் உள்ள பயனை முழுவதுமாக உணராமல் மனிதர்கள் இருப்பதனை தியாகராஜர் குறை கூறுகின்றார்.

    Top

    4 - பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு - தியாகராஜரின் 'மனஸு விஷய நட விடுலகு' என்ற 'நாடகுரஞ்சி' கீர்த்தனையையும் நோக்கவும்.

    கடோபநிடதத்தில் கூறப்பட்டது (I-iii) -

    "புலன்கள் குதிரைகளெனக் கூறுவர்; புலன்களால் நுகரப்படுபவை பாட்டைகளாம். அறிவு எனும் தேரோட்டி, புலன்களெனும் குதிரைகளை, மனமெனும் கடிவாளத்தினை சரிவர இயக்கி, நேர் வழியில் தேரினை நடத்த, வீடு சேரலாம். அங்ஙனமன்றி, கடிவாளமில்லாத குதிரைகள், தத்தம் பாட்டைகளில் செல்ல நேர, தேர் வழி தவறி வீழந்து நொறுங்கும்.

    கடோபநிடத விளக்கம் நோக்கவும்.

    தியாகராஜர், அறிவினை தாயென்று (பு3த்3தி4யனு தல்லி) கூறி, அவ்வறிவு, புலன்களை அடக்கியாளாது, அவற்றின் வழி செல்ல (விஷய விடுலகு ஒஸக3), எங்ஙனம் தாரக நாமத்தின் மகிமையினை உணரமுடியும், என்று கேட்கின்றார்.

    5 - ஸித்3து4லு - பெத்3த3லு - சித்தர்கள், பெரியோர்கள் - இவை கேலிச் சொற்கள்.

    மாட்டார் - இயலார் என
    விடயம் - புலன்களால் நுகரப்படுபவை

    Top


    Updated on 14 May 2009

    Tuesday, May 12, 2009

    தியாகராஜ கிருதி, தே3ஹி தவ பத3 - ராகம் ஸ1ஹான - Dehi Tava Pada - Raga Sahana

    பல்லவி
    தே3ஹி தவ பத3 ப4க்திம் வைதே3ஹி பதித பாவனி மே ஸதா3

    அனுபல்லவி
    ஐஹிகாமுஷ்மிக ப2லதே3
    கமலாஸனானன்யஜ1 வர ஜனனீ (தே3ஹி

    சரணம்
    சரணம் 1
    கலஸ1 2வாராஸி1 ஜனிதே கனக பூ4ஷண லஸிதே
    3கலஸ1ஜ கீ3த முதி3தே 4காகுத்ஸ்த2 ராஜ ஸஹிதே (தே3ஹி)


    சரணம் 2
    அகி2லாண்ட3 ரூபிணி அளி குல நிப4 வேணி
    மக2 ஸம்ரக்ஷண ராணி மம பா4க்3ய காரிணி (தே3ஹி)


    சரணம் 3
    ஸ1ரணாக3த பாலனே 5ஸ1த முக2 மத3 த3மனே
    தருணாருணாப்3ஜ நயனே த்யாக3ராஜ ஹ்ரு2த்ஸத3னே (தே3ஹி)


    பொருள் - சுருக்கம்
    • வைதேகி! வீழ்ந்தோரை புனிதப்படுத்துபவளே!

    • இம்மை, மறுமை பயனளிப்பவளே! மலரோன், காமனையீன்ற தூயவளே!

    • குடக்கடலில் உதித்தவளே! பொன்னணிகலன்களுடன் திகழ்பவளே! குடமுனி இசையில் மகிழ்பவளே! காகுத்த மன்னன் உடனுறையே!

    • அனைத்தண்ட உருவினளே! கரு வண்டின நிகர் குழலினளே! வேள்வி காத்தோன் அரசியே! எனது பேற்றின் காரணமே!

    • புகலடைந்தோரைக் காப்பவளே! இராவணனின் செருக்கழித்தவளே! இளங்காலை நிகர் கமலக் கண்ணாளே! தியாகராசன் இதயத்துறையே!

      • தருவாயுனது திருவடிப் பற்றினை எனக்கு, எவ்வமயமும்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    தே3ஹி/ தவ/ பத3/ ப4க்திம்/ வைதே3ஹி/ பதித/ பாவனி/ மே/ ஸதா3/
    தருவாய்/ உனது/ திருவடி/ பற்றினை/ வைதேகி/ வீழ்ந்தோரை/ புனிதப்படுத்துபவளே/ எனக்கு/ எவ்வமயமும்/


    அனுபல்லவி
    ஐஹிக/-ஆமுஷ்மிக/ ப2லதே3/
    இம்மை/ மறுமை/ பயனளிப்பவளே/

    கமல-ஆஸன/-அனன்யஜ/ வர/ ஜனனீ/ (தே3ஹி)
    மலரோன்/ காமனை/ தூய/ ஈன்றவளே/


    சரணம்
    சரணம் 1
    கலஸ1/ வாராஸி1/ ஜனிதே/ கனக/ பூ4ஷண/ லஸிதே/
    குட/ கடலில்/ உதித்தவளே/ பொன்/ அணிகலன்களுடன்/ திகழ்பவளே/

    கலஸ1ஜ/ கீ3த/ முதி3தே/ காகுத்ஸ்த2/ ராஜ/ ஸஹிதே/ (தே3ஹி)
    குடமுனி/ இசையில்/ மகிழ்பவளே/ காகுத்த/ மன்னன்/ உடனுறையே/


    சரணம் 2
    அகி2ல/-அண்ட3/ ரூபிணி/ அளி/ குல/ நிப4/ வேணி/
    அனைத்து/ அண்ட/ உருவினளே/ கரு வண்டு/ இன/ நிகர்/ குழலினளே/

    மக2/ ஸம்ரக்ஷண/ ராணி/ மம/ பா4க்3ய/ காரிணி/ (தே3ஹி)
    வேள்வி/ காத்தோன்/ அரசியே/ எனது/ பேற்றின்/ காரணமே/


    சரணம் 3
    ஸ1ரண/-ஆக3த/ பாலனே/ ஸ1த/ முக2/ மத3/ த3மனே/
    புகல்/ அடைந்தோரை/ காப்பவளே/ நூறு/ முகன் (இராவணனின்)/ செருக்கு/ அழித்தவளே/

    தருண/-அருண/-அப்3ஜ/ நயனே/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்/-ஸத3னே/ (தே3ஹி)
    இளம்/ காலை (நிகர்)/ கமல/ கண்ணாளே/ தியாகராசன்/ இதயத்து/ உறையே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)

    மேற்கோள்கள்
    1 - அனன்யஜ - காமன்

    3 - கலஸ1ஜ கீ3த முதி3தே - அகத்தியரின் இசையினில் மகிழ்பவள் - அகத்தியர் இசையில் வல்லவர் என தியாகராஜர் தனது 'ஸங்கீ3த ஞானமு' என்ற கீர்த்தனையில் குறிப்பிடுகின்றார். 'அகத்தியரும் இசையும்' நோக்கவும் -

    அகத்தியர் இயற்றியது -
    அகத்திய னவயவ பேதநா லேழனுள்
    ஒரோ வொன்றை யிரண்டின் டுஞற்றி
    அவற்றை நான்கொடு நந்நான் காக்கிச்
    சிவன்சிவை முறையே வொருமையைத் தெரிந்து
    ராச சேகர வழுதிக் கிசைத்தனன். ....56

    அகத்தியர் வீணை இசையில் ராவணனைத் தோற்கடித்தார்

    Top

    4 - காகுத்ஸ்த2 - காககுத்தன் - இக்ஷ்வாகு குலத்தினில் தோன்றிய மன்னன் - 'புரஞ்சயன்', 'இந்திர வாகன்' என்றும் பெயருடையவன். 'காகுத்தன்' என்ற சொல்லுக்கு '(இந்திரனெனும்) எருதின் திமிலில் நிற்பவன்' எனப் பொருள். பாகவத புராணம், புத்தகம் 9, அத்தியாயம் 6 நோக்கவும்.

    5 - ஸ1த முக2 - நூறு முகத்தோன் - இவ்விடத்தில், இச்சொல் ராவணனைக் குறிக்கும். ஆனந்த ராமாயணத்தினில் 'நூறு முக ராவணன்' என கூறப்பட்டுள்ளது

    Top

    விளக்கம்
    2 - வாராஸி1 - இவ்விடத்தில், இச்சொல்லுக்கு 'கடல்' என்று பொருளாகும். சம்ஸ்கிருத அகராதியின்படி 'வாரிராஸி1' அல்லது 'வார்ராஸி1' சரியான சொல்லாகும். தியாகராஜர் மற்ற கீர்த்தனங்களில் கூட இச்சொல்லினை 'கடல்' என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.

    குடக்கடல் - பாற்கடல்
    குடமுனி - அகத்தியர்
    காகுத்த மன்னன், வேள்வி காத்தோன் - இராமன்

    Top


    Updated on 13 May 2009

    Monday, May 11, 2009

    தியாகராஜ கிருதி - கி3ரிபை நெலகொன்ன - ராகம் ஸ1ஹான - Giripai Nelakonna - Raga Sahana

    பல்லவி
    1கி3ரிபை நெலகொன்ன ராமுனி
    கு3ரி தப்பக கண்டி

    அனுபல்லவி
    பரிவாருலு விரி ஸுரடுலசே
    நிலப3டி3 விஸருசு கொஸருசு ஸேவிம்பக3 (கி3ரி)

    சரணம்
    புலகாங்கிதுடை3 ஆனந்தா3ஸ்1ருவுல
    நிம்புசு மாடலாட3 வலெனனி
    2கலுவரிஞ்ச கனி 3பதி3 பூடலபை
    காசெத3னனு த்யாக3ராஜ வினுதுனி (கி3ரி)


    பொருள் - சுருக்கம்
  • மலை மீது நிலைபெற்ற இராமனை குறி தவறாது கண்டேன்

    • பரிவாரத்தினர் மலர் விசிறிகளுடன் நின்று, விசிறிக்கொண்டும், வேண்டிக்கொண்டும், சேவிக்க,

  • மலை மீது நிலைபெற்ற இராமனை குறி தவறாது கண்டேன்

    • புல்லரிப்புற்று, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உரையாட வேணுமெனப் பிதற்றக் கண்டு,

    • பத்து வேளைக்குப் பின் காப்பேனெனும், தியாகராசனால் போற்றப் பெற்றோனை,

  • மலை மீது நிலைபெற்ற இராமனை குறி தவறாது கண்டேன்



  • பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    கி3ரி/ பை/ நெல/ கொன்ன/ ராமுனி/
    மலை/ மீது/ நிலை/ பெற்ற/ இராமனை/

    கு3ரி/ தப்பக/ கண்டி/
    குறி/ தவறாது/ கண்டேன்/


    அனுபல்லவி
    பரிவாருலு/ விரி/ ஸுரடுலசே/
    பரிவாரத்தினர்/ மலர்/ விசிறிகளுடன்/

    நிலப3டி3/ விஸருசு/ கொஸருசு/ ஸேவிம்பக3/ (கி3ரி)
    நின்று/ விசிறிக்கொண்டும்/ வேண்டிக்கொண்டும்/ சேவிக்க/ மலை மீது...


    சரணம்
    புலக/-அங்கிதுடை3/ ஆனந்த3/-அஸ்1ருவுல/
    புல்லரிப்பு/ உற்று/ ஆனந்த/ கண்ணீர்/

    நிம்புசு/ மாடலு-ஆட3/ வலெனு/-அனி/
    பெருக்கி/ உரையாட/ வேணும்/ என/

    கலுவரிஞ்ச/ கனி/ பதி3/ பூடல/ பை/
    பிதற்ற/ கண்டு/ பத்து/ வேளைக்கு/ பின்/

    காசெத3னு/-அனு/ த்யாக3ராஜ/ வினுதுனி/ (கி3ரி)
    காப்பேன்/ எனும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனை/ மலை மீது...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    2 - கலுவரிஞ்ச - எல்லா புத்தகங்களிலும் இவ்வாறே கொடுக்கப்பட்டிருந்தாலும், 'கலவரிஞ்ச' என்பது சரியான சொல்லாகும்

    Top

    மேற்கோள்கள்
    1 - கி3ரிபை நெலகொன்ன - மலை - இலங்கையில் வானர சேனை தங்கிய 'சுவேல' மலை - "இறக்கும் தறுவாயில், 'சுவேல மலை ராமனை' தியானித்தால், அவனுக்கு வைகுண்டம் கிடைக்குமென, கந்த புராணத்தினில் கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த தியாகராஜர், அந்த ராமனை தியானித்து, இந்த கீர்த்தனையைப் பாடினார்" - (சொற்பொழிவின் தமி்ழாக்கம்) 'சுவேல மலை ராமன்'

    இலங்கை நகரத்தினை, 'சுவேல' மலை மீதேறி, ராமன் பார்வையிட்டான் என, வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 38-ல் காணலாம்.

    Top

    விளக்கம்
    3 - பதி3 பூடல - பத்து வேளை - 'பூட' என்ற சொல்லுக்கு 'நாள்' என்றோ அல்லது, 'நாளின் ஒரு பகுதி' யென்றோ பொருள் கொள்ளலாம். ஓர் பகல் - ஓர் இரவை, இரண்டு வேளைகளாகக் கொண்டால், 'பத்து வேளை' என்பது ஐந்து நாட்களைக்குறிக்கும். ஆனால், இது பத்து நாட்களாகவும் இருக்கலாம்.

    சூரியனைக் குறிக்கும், 'பூட' என்ற தெலுங்கு சொல்லும், 'பூடன்' எனும் தமிழ் சொல்லும், 'பூஷ' என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபென்றும், 'பகல்' எனும் தமிழ்ச் சொல்லும் 'பகலு' எனும் தெலுங்கு சொல்லும் 'ப4க3' என்னும் சம்ஸ்கிருத சொல்லின் திரிபென்றும் கருத ஏதுவிருக்கின்றது. 'பூஷ' மற்றும் 'ப4க3' பன்னிரண்டு ஆதித்தியர்கள் பட்டியலில் சேரும்.

    தியாகராஜர், தனது பூதவுடலை துறக்குமுன் இயற்றிய 'பரிதாபமு கனி' என்ற பாடலில், இப்பாடலில் இறைவனிடம் தான் பெற்ற வாக்குறுதியினை நினைவூட்டி, 'கருணை கொள்வாய்' என்று வேண்டுகின்றார்.

    Top


    Updated on 12 May 2009

    Sunday, May 10, 2009

    தியாகராஜ கிருதி - ஏமானதிச்சேவோ - ராகம் ஸ1ஹான - Emaanaticchevo - Raga Sahana

    பல்லவி
    1ஏமானதிச்சேவோ ஏமெஞ்சினாவோ

    அனுபல்லவி
    நா மாடலு வினவோ ராம நா தல வ்ராலேமோ (ஏ)

    சரணம்
    யஸ1மாயுவு ஸத்3ப4க்தியு ஏகாந்த சித்தமு
    2ஸு-ஸ1ரீரமொஸங்கே3 பா4ஸுர த்யாக3ராஜ 3நுத (ஏ)


    பொருள் - சுருக்கம்
    இராமா! புகழ், ஆயுள், தூய பற்று, ஓர்-நோக்க சித்தம், நல்லுடலும் அருளும், சுடரொளிரும், தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
    • என்ன ஆணையிட்டுள்ளாயோ?

    • என்ன எண்ணியுள்ளாயோ?

    • எனது சொல் கேளாயோ?

    • எனது தலையெழுத்தென்னவோ?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஏமி/-ஆனதி/-இச்சேவோ/ ஏமி/-எஞ்சினாவோ/
    என்ன/ ஆணை/ இட்டுள்ளாயோ/ என்ன/ எண்ணியுள்ளாயோ/


    அனுபல்லவி
    நா/ மாடலு/ வினவோ/ ராம/ நா/ தல/ வ்ராலு/-ஏமோ/ (ஏ)
    எனது/ சொல்/ கேளாயோ/ இராமா/ எனது/ தலை/ எழுத்து/ என்னவோ/


    சரணம்
    யஸ1மு/-ஆயுவு/ ஸத்3/-ப4க்தியு/ ஏக/-அந்த/ சித்தமு/
    புகழ்/ ஆயுள்/ தூய/ பற்று/ ஓர்/-நோக்க/ சித்தம்/

    ஸு-ஸ1ரீரமு/-ஒஸங்கே3/ பா4ஸுர/ த்யாக3ராஜ/ நுத/ (ஏ)
    நல்லுடலும்/ அருளும்/ சுடரொளிரும்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - ஏமானதிச்சேவோ - ஏமானதிச்செத3வோ

    2 - ஸு-ஸ1ரீரமொஸங்கே3 - ஸு-ஸ1ரீரமொஸங்கெ3டு3

    3 - நுத - வினுத

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்



    Updated on 11 May 2009

    தியாகராஜ கிருதி - ஊரகே கல்கு3னா - ராகம் ஸ1ஹான - Urake Kalgunaa - Raga Sahana

    பல்லவி
    ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி

    அனுபல்லவி
    ஸாரெகுனு ஸம்ஸாரமுன ஜொச்சி
    ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன (ஊரகே)

    சரணம்
    சரணம் 1
    ஆலு ஸுதுலு ஜுட்டாலு வர
    ஸத3னாலு காய ப3லாலு கனக
    த4னாலு கல 1விப4வமுல கனி 2அஸ்தி2ரமு-
    லனே
    பா4க்3ய-ஸா1லுலகு கா3க (ஊரகே)


    சரணம் 2
    3மஞ்சி வாரினி பொட3கா3ஞ்சி ஸந்ததமு
    ஸேவிஞ்சி மனவினாலகிஞ்சியாத3ரி
    ஸாதி4ஞ்சி ஸர்வமு ஹரியஞ்சு தெலிஸி
    பா4விஞ்சி மதி3னி பூஜிஞ்சு வாரிகி கா3க (ஊரகே)


    சரணம் 3
    ராஜஸ கு3ண யுக்த பூஜலனொனரிஞ்சக
    அஜ ஸன்னுத த்யாக3ராஜுனி ஜிஹ்வபை
    ராஜில்லு வர 4மந்த்ர ராஜமுனு
    ஸதா3 5ஜபிஞ்சு 6மஹராஜுலகு கா3க (ஊரகே)


    பொருள் - சுருக்கம்
    பிரமனால் போற்றப் பெற்றோனே!
    • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

      • எவ்வமயமும் உலக வாழ்வினிலுழன்று,

      • (அதனை) சாரமென எண்ணுவோரின் மனத்தினில்

    • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

      • மனைவி, மக்கள், சுற்றம், உயர் மாளிகை, உடல் வலிமை, பொன், செல்வங்களுடைத்த கொண்டாட்டத்தினைக் கண்டு,

      • நிலையற்றவை யெனும் பேறுடைத்தோருக்கன்றி

    • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

      • நன்மக்களை தரிசித்து,

      • எவ்வமயமும் சேவித்து,

      • (அவரது) வேண்டுகோளினைச் செவி மடுத்து,

      • பணிவுடன் நிறைவேற்றி,

      • யாவும் அரியென்றறிந்து, உணர்ந்து,

      • மனதில் (இறைவனை) வழிபடுவோருக்கன்றி

    • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?

      • இராசத குணமுடை பூசைகளை மேற்கொள்ளாது,

      • தியாகராசனின் நாவினில் திகழும் உயர் மந்திரங்களில் தலைசிறந்த (தாரக நாமத்தினை)

      • எவ்வமயமும் செபிக்கும் பெருந்தகைகளுக்கன்றி

    • தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஊரகே/ கல்கு3னா/ ராமுனி/ ப4க்தி/
    தானாகவே/ தோன்றுமோ/ இராமனின்/ பக்தி/


    அனுபல்லவி
    ஸாரெகுனு/ ஸம்ஸாரமுன/ ஜொச்சி/
    எவ்வமயமும்/ உலக வாழ்வினில்/ உழன்று/

    ஸாரமு/-அனி/-எஞ்சு வாரி/ மனஸுன/ (ஊரகே)
    (அதனை) சாரம்/ என/ எண்ணுவோரின்/ மனத்தினில்/ தானாகவே...


    சரணம்
    சரணம் 1
    ஆலு/ ஸுதுலு/ ஜுட்டாலு/ வர/
    மனைவி/ மக்கள்/ சுற்றம்/ உயர்/

    ஸத3னாலு/ காய/ ப3லாலு/ கனக/
    மாளிகை/ உடல்/ வலிமை/ பொன்/

    த4னாலு/ கல/ விப4வமுல/ கனி/ அஸ்தி2ரமுலு/-
    செல்வங்கள்/ உடைத்த/ கொண்டாட்டத்தினை/ கண்டு/ நிலையற்றவை/

    அனே/ பா4க்3ய/-ஸா1லுலகு/ கா3க/ (ஊரகே)
    எனும்/ பேறு/ உடைத்தோருக்கு/ அன்றி/ தானாகவே...


    சரணம் 2
    மஞ்சி/ வாரினி/ பொட3கா3ஞ்சி/ ஸந்ததமு/
    நன்/ மக்களை/ தரிசித்து/ எவ்வமயமும்/

    ஸேவிஞ்சி/ மனவினி/-ஆலகிஞ்சி/-ஆத3ரி/
    சேவித்து/ (அவரது) வேண்டுகோளினை/ செவி மடுத்து/ பணிவுடன்/

    ஸாதி4ஞ்சி/ ஸர்வமு/ ஹரி/-அஞ்சு/ தெலிஸி/
    நிறைவேற்றி/ யாவும்/ அரி/ என்று/ அறிந்து,

    பா4விஞ்சி/ மதி3னி/ பூஜிஞ்சு/ வாரிகி/ கா3க/ (ஊரகே)
    உணர்ந்து/ மனதில்/ (இறைவனை) வழிபடுவோருக்கு/ அன்றி/ தானாகவே...


    சரணம் 3
    ராஜஸ/ கு3ண/ யுக்த/ பூஜலனு/-ஒனரிஞ்சக/
    இராசத/ குணம்/ உடை/ பூசைகளை/ மேற்கொள்ளாது/

    அஜ/ ஸன்னுத/ த்யாக3ராஜுனி/ ஜிஹ்வபை/
    பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ தியாகராசனின்/ நாவினில்/

    ராஜில்லு/ வர/ மந்த்ர/ ராஜமுனு/
    திகழும்/ உயர்/ மந்திரங்களில்/ தலைசிறந்த (தாரக நாமத்தினை)/

    ஸதா3/ ஜபிஞ்சு/ மஹராஜுலகு/ கா3க/ (ஊரகே)
    எவ்வமயமும்/ செபிக்கும்/ பெருந்தகைகளுக்கு/ அன்றி/ தானாகவே...


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - விப4வமுல - விப4வால

    2 - அஸ்தி2ரமுலனே - அஸ்தி2ராலனே

    4 - மந்த்ர ராஜமுனு - மந்த்ர ராஜமுனனு

    5 - ஜபிஞ்சு - ஜபிஞ்சே

    6 - மஹராஜுலகு - மஹாராஜுலகு

    Top

    மேற்கோள்கள்
    4 - மந்த்ர ராஜமு - மந்திரங்களில் தலைசிறந்தது - தாரக நாமம் - 'ராமா'யெனும் நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்

    Top

    விளக்கம்
    3 - மஞ்சி வாரி மனவினாலகிஞ்சி ஆத3ரி ஸாதி4ஞ்சி - 'நன்மக்களின் வேண்டுகோளினை செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி' - இங்கு 'நிறைவேற்றி' என்ற சொல் 'யாவும் அரியென்று அறிந்து, உணர்ந்து, இறைவனை வழிபடுவதனை'க் குறிக்கும்.

    இராசத குணமுடை பூசைகள் - உலக இன்பங்களுக்காக இயற்றப்படுபவை

    Top


    Updated on 10 May 2009

    Saturday, May 9, 2009

    தியாகராஜ கிருதி - ஈ வஸுத4 நீவண்டி - ராகம் ஸ1ஹானா - Ivasudha Neevanti - Raga Sahana

    பல்லவி
    ஈ 1வஸுத4 நீவண்டி 2தை3வமுனெந்து3 கானரா

    அனுபல்லவி
    பா4வுகமு கல்கி3 வர்தி4ல்லு
    கோவூரி 3ஸுந்த3ரேஸ1 கி3ரீஸ1 (ஈ)

    சரணம்
    ஆஸசேயர நிமிஷமு நீ புர
    வாஸமொனர ஜேயு வாரி மதி3
    வேஸடலெல்லனு தொலகி3ஞ்சி
    த4ன ராஸுலனாயுவுனு4
    பூ4-ஸுர ப4க்தியு தேஜமுனொஸகி3
    பு4வனமந்து3 5கீர்தி கல்க3 ஜேஸே
    தா3ஸ வரத3 த்யாக3ராஜ ஹ்ரு2த3ய
    நிவாஸ சித்3விலாஸ ஸுந்த3ரேஸ1 (ஈ)


    பொருள் - சுருக்கம்
    நற்பேறுடைத்து, செழித்திருக்கும் கோவூரின் சுந்தரேசா! மலையரசே! தியாகராசனின் இதயத்தினில் உறைவோனே! சித்தத்தினில் ஒளிர்வோனே! சுந்தரேசா!
    • இப்புவியில் உன்னைப் போன்ற தெய்வத்தினை யெங்கும் காணேனய்யா!

      • விரும்பி, அரை நிமிடமுனது நகர வாசம் பெறச் செய்வோரின்

      • மனத் துயரங்கள் அனைத்தினையும் போக்கி,

      • நிறைச் செல்வமும், (நீண்ட) ஆயுளும், அந்தணரிடம் பற்றும், (தேக) காந்தியும் வழங்கி,

    • புவியினில் புகழடையச் செய்யும், தொண்டருக் கருள்வோனே!



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஈ/ வஸுத4/ நீவு/-அண்டி/ தை3வமுனு/-எந்து3/ கானரா/
    இந்த/ புவியில்/ உன்னை/ போன்ற/ தெய்வத்தினை/ எங்கும்/ காணேனய்யா/


    அனுபல்லவி
    பா4வுகமு/ கல்கி3/ வர்தி4ல்லு/
    நற்பேறு/ உடைத்து/ செழித்திருக்கும்/

    கோவூரி/ ஸுந்த3ரேஸ1/ கி3ரி/-ஈஸ1/ (ஈ)
    கோவூரின்/ சுந்தரேசா/ மலை/ யரசே/


    சரணம்
    ஆஸசே/-அர/ நிமிஷமு/ நீ/ புர/
    விரும்பி/ அரை/ நிமிடம்/ உனது/ நகர/

    வாஸமு/-ஒனர/ ஜேயு வாரி/ மதி3/
    வாசம்/ பெற/ செய்வோரின்/ மன/

    வேஸடலு/-எல்லனு/ தொலகி3ஞ்சி/
    துயரங்கள்/ அனைத்தினையும்/ போக்கி/

    த4ன/ ராஸுலனு/-ஆயுவுனு/
    செல்வம்/ நிறையவும்/ (நீண்ட) ஆயுளும்/

    பூ4-ஸுர/ ப4க்தியு/ தேஜமுனு/-ஒஸகி3/
    அந்தணரிடம்/ பற்றும்/ (தேக) காந்தியும்/ வழங்கி/

    பு4வனமு-அந்து3/ கீர்தி/ கல்க3/ ஜேஸே/
    புவியினில்/ புகழ்/ அடைய/ செய்யும்/

    தா3ஸ/ வரத3/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த3ய/
    தொண்டருக்கு/ அருள்வோனே/ தியாகராசனின்/ இதயத்தினில்/

    நிவாஸ/ சித்3/-விலாஸ/ ஸுந்த3ரேஸ1/ (ஈ)
    உறைவோனே/ சித்தத்தினில்/ ஒளிர்வோனே/ சுந்தரேசா/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    1 - வஸுத4 - வஸுதா4.

    2 - தை3வமுனெந்து3 - தை3வமு நேனெந்து3.

    4 - ஆயுவுனு - ஆயுவுலு : 'ஆயுவனு' இந்த இடத்தில் பொருந்தும்.

    5 - கீர்தி கல்க3 ஜேஸே - கீர்தி கல்க3 ஜேயு.

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    3 - ஸுந்த3ரேஸ1 - சுந்தரேச - காஞ்சீபுரத்தருகில் உள்ள கோவூரில் சிவனின் பெயர்.

    தியாகராஜரின் வாழ்க்கைச் சரிதத்தின்படி, அவர், சுந்தரேச முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி, கோவூருக்கு வந்து, அவ்வூர் இறைவனாகிய, சுந்தரேசனின் மீது, ஐந்து கீர்த்தனங்கள் பாடினார். எனவே, 'ஆஸசே-அர நிமிஷமு நீ புர வாஸமு-ஒனர ஜேயு வாரி' (விரும்பி அரை நிமிடம் உனது நகர வாசம் பெற செய்வோரின்) என்ற சொற்கள், பொதுப்படையாக இருந்தாலும், அவரை அழைத்த, திரு சுந்தரேச முதலியாரைக் குறிக்கலாம்.

    Top


    Updated on 09 May 2009