Showing posts with label Rama Rama Rama Laali. Show all posts
Showing posts with label Rama Rama Rama Laali. Show all posts

Saturday, August 15, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம - ராகம் செஞ்சுருட்டி - Rama Rama Raama - Raga Chenchuruti

பல்லவி
ராம ராம ராம ராம ராரா ஸீதா ராம

சரணம்
சரணம் 1
ஸந்ததம்பு3 பத3முலனர்சிந்து
ஏகாந்தமுனனு நின்னாராதி4ந்து ஸீதா (ராம)


சரணம் 2
தனிவி தீர நின்னு கௌகி3லிந்து நாது3
தா3ஹமெல்ல தீர்சி ஸேவிந்து ஸீதா (ராம)


சரணம் 3
கனுலு சல்லகா3னு நின்னு கந்து3 நாது3
தனுவு புலகரிஞ்ச மெச்சுகொந்து3 ஸீதா (ராம)


சரணம் 4
அடு33டு3கு3கு மடு3புலனந்தி3த்து
நின்னனுஸரிஞ்சி மெல்ல பல்கனித்து ஸீதா (ராம)


சரணம் 5
கன்னுல ஜாட3லனு தெலிஸி நடு3து ராம
1கட3 ஜாலி தூ3ரமுனனு விடு3து ஸீதா (ராம)


சரணம் 6
பாமர விஷயாது3ல நே மரது ராம
நீ 2மனஸுன செலிமி ஜேஸி கரது ஸீதா (ராம)


சரணம் 7
கொஸரி கொஸரி ஸன்னிதி4 நே கொலுது ராம
கோரி ஸுரடிசே விஸருசு பிலுது ஸீதா (ராம)


சரணம் 8
தொட3ரி மேனொஸங்கி3 3தொட3லனனுது
நின்னெட3-பா3யக பா4வமுனனு தலது ஸீதா (ராம)


சரணம் 9
ஸம்மதமுனனித்துனு செயி வ்ராலு ராம
கம்மனி விடெ3மிம்மனி நன்னேலு ஸீதா (ராம)


சரணம் 10
இட்லு தொ3ரகுனா ப்3ரஹ்மகைன
நேனிலனு வெலஸி 4நீவே நேனைன ஸீதா (ராம)


சரணம் 11
நிக்கமுகா3 5தாள ஜால ரட்டு ராம
எக்குவகா3 நாது3 செட்ட பட்டு ஸீதா (ராம)


சரணம் 12
ஜாட3ல வின்னபமு தெலுஸுகோரா
நீ-வாடு3 கா3க த்யாக3ராஜு வேரா ஸீதா (ராம)


பொருள் - சுருக்கம்
இராமா! சீதாராமா!
  • வாருமய்யா.


  • எவ்வமயமும் திருவடிகளைத் தொழுவேன்;

  • தனிமையில் உன்னை ஆராதிப்பேன்;

  • ஆசை தீர உன்னையணைப்பேன்;

  • எனது தாகமெல்லாம் தணித்து சேவிப்பேன்;

  • கண்கள் குளிர உன்னைக் காண்பேன்;

  • எனது உடல் புல்லரிக்க மெச்சிக்கொள்வேன்;

  • அடிக்கடி (வெற்றிலைச்) சுருள்களை யளிப்பேன்;

  • உன்னை அனுசரித்து மெல்ல பேசவைப்பேன்;

  • கண்களின் குறிப்பறிந்து நடப்பேன்;

  • (எனது) தேவைகளை தூரத்தில் விட்டுவிடுவேன்;

  • இழிந்த புலன் நாட்டங்களை நான் மறப்பேன்;

  • உனது உள்ளத்தினில் காதல் கொண்டு கரைப்பேன்;

  • வேண்டி வேண்டி (உனது) சன்னிதியில் நான் சேவிப்பேன்;

  • விரும்பி, விசிறியினால் விசிறிக்கொண்டு, அழைப்பேன்;

  • தொடர்ந்து மேனியையளித்து, தொடைகளைப் பிடித்துவிடுவேன்;

  • உன்னை இடை பிரியாது, உளமார நினைப்பேன்;

  • ஒப்புதலை யளிப்பேன், கையெழுத்திட்டு;


  • மணக்கும் வீடிகையளிக்க என்னை ஏவலிடுவாய்.

  • இங்ஙனம் கிடைக்குமோ பிரமனுக்கும்? நான் புவியில் ஒளிர்ந்து, நீயே நானாகிட;


  • உண்மையாகத் தாளவியலேன் (இந்த) இழிவினை;

  • உயர்த்தியாக எனது கரம் பற்றுவாய்;

  • சைகையின் விண்ணப்பத்தினை அறிந்துகொள்வாயய்யா;

  • உன்னவனன்றி இத்தியாகராசன் வேறோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ராம/ ராரா/ ஸீதா/ ராம/
இராமா/ இராமா/ இராமா/ இராமா/ வாருமய்யா/ சீதா/ ராமா/


சரணம்
சரணம் 1
ஸந்ததம்பு3/ பத3முலனு/-அர்சிந்து/
எவ்வமயமும்/ திருவடிகளை/ தொழுவேன்/


ஏகாந்தமுனனு/ நின்னு/-ஆராதி4ந்து/ ஸீதா/ (ராம)
தனிமையில்/ உன்னை/ ஆராதிப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 2
தனிவி/ தீர/ நின்னு/ கௌகி3லிந்து/ நாது3/
ஆசை/ தீர/ உன்னை/ அணைப்பேன்/ எனது/

தா3ஹமு/-எல்ல/ தீர்சி/ ஸேவிந்து/ ஸீதா/ (ராம)
தாகம்/ எல்லாம்/ தணித்து/ சேவிப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 3
கனுலு/ சல்லகா3னு/ நின்னு/ கந்து3/ நாது3/
கண்கள்/ குளிர/ உன்னை/ காண்பேன்/ எனது/

தனுவு/ புலகரிஞ்ச/ மெச்சுகொந்து3/ ஸீதா/ (ராம)
உடல்/ புல்லரிக்க/ மெச்சிக்கொள்வேன்/ சீதா/ ராமா...


சரணம் 4
அடு3கு3-அடு3கு3கு/ மடு3புலனு/-அந்தி3த்து/
அடிக்கடி/ (வெற்றிலைச்) சுருள்களை/ அளிப்பேன்/

நின்னு/-அனுஸரிஞ்சி/ மெல்ல/ பல்கனித்து/ ஸீதா/ (ராம)
உன்னை/ அனுசரித்து/ மெல்ல/ பேசவைப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 5
கன்னுல/ ஜாட3லனு/ தெலிஸி/ நடு3து/ ராம/
கண்களின்/ குறிப்பு/ அறிந்து/ நடப்பேன்/ இராமா/

கட3ம ஜாலி/ தூ3ரமுனனு/ விடு3து/ ஸீதா/ (ராம)
(எனது) தேவைகளை/ தூரத்தில்/ விட்டுவிடுவேன்/ சீதா/ ராமா...


சரணம் 6
பாமர/ விஷய-ஆது3ல/ நே/ மரது/ ராம/
இழிந்த/ புலன் நாட்டங்களை/ நான்/ மறப்பேன்/ இராமா/

நீ/ மனஸுன/ செலிமி/ ஜேஸி/ கரது/ ஸீதா/ (ராம)
உனது/ உள்ளத்தினில்/ காதல்/ கொண்டு/ கரைப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 7
கொஸரி/ கொஸரி/ ஸன்னிதி4/ நே/ கொலுது/ ராம/
வேண்டி/ வேண்டி/ (உனது) சன்னிதியில்/ நான்/ சேவிப்பேன்/ இராமா/

கோரி/ ஸுரடிசே/ விஸருசு/ பிலுது/ ஸீதா/ (ராம)
விரும்பி/ விசிறியினால்/ விசிறிக்கொண்டு/ அழைப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 8
தொட3ரி/ மேனு/-ஒஸங்கி3/ தொட3லனு/-அனுது/ நின்னு/-
தொடர்ந்து/ மேனியை/ அளித்து/ தொடைகளை/ பிடித்துவிடுவேன்/ உன்னை/

எட3-பா3யக/ பா4வமுனனு/ தலது/ ஸீதா /(ராம)
இடை/ பிரியாது/ உளமார/ நினைப்பேன்/ சீதா/ ராமா...


சரணம் 9
ஸம்மதமுனனு/-இத்துனு/ செயி/ வ்ராலு/ ராம/
ஒப்புதலை/ அளிப்பேன்/ கை/ யெழுத்திட்டு/ இராமா/

கம்மனி/ விடெ3மு/-இம்மு-அனி/ நன்னு/-ஏலு/ ஸீதா/ (ராம)
மணக்கும்/ வீடிகை/ அளிக்க/ என்னை/ ஏவலிடுவாய்/ சீதா/ ராமா...


சரணம் 10
இட்லு/ தொ3ரகுனா/ ப்3ரஹ்மகு-ஐன/ நேனு/-
இங்ஙனம்/ கிடைக்குமோ/ பிரமனுக்கும்/ நான்/

இலனு/ வெலஸி/ நீவே/ நேனு/-ஐன/ ஸீதா/ (ராம)
புவியில்/ ஒளிர்ந்து/ நீயே/ நான்/ ஆகிட/ சீதா/ ராமா...


சரணம் 11
நிக்கமுகா3/ தாள/ ஜால/ ரட்டு/ ராம/
உண்மையாக/ தாள/ இயலேன்/ (இந்த) இழிவினை/ இராமா/

எக்குவகா3/ நாது3/ செட்ட/ பட்டு/ ஸீதா/ (ராம)
உயர்த்தியாக/ எனது/ கரம்/ பற்றுவாய்/ சீதா/ ராமா...


சரணம் 12
ஜாட3ல/ வின்னபமு/ தெலுஸுகோரா/
சைகையின்/ விண்ணப்பத்தினை/ அறிந்துகொள்வாயய்யா/

நீ-வாடு3/ கா3க/ த்யாக3ராஜு/ வேரா/ ஸீதா/ (ராம)
உன்னவன்/ அன்றி/ இத்தியாகராசன்/ வேறோ/ சீதா/ ராமா...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மனஸுன - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில் 'மனஸுனு' என்ற சொல் பொருந்தும்.

Top

மேற்கோள்கள்
4 - நீவே நேனைன - நீயே நானாகிட - 'சாரூப்பியம்' எனப்படும் இறைவனின் உருப்பெறல் - "கஜேந்திரன் இறைவனால் தொடப்பெற்றமையால், அவ்வமயமே, தான் கட்டுப்பட்டவன் என்ற அறியாமையினின்று விடுபட்டதுடன், இறைவனுடை உருப்பெற்று, இறைவனுடய அங்க இலக்கணங்களாகிய, நான்கு கைகள் மற்றும் பீதாம்பரத்துடன் விளங்கினான்." பாகவத புராணம், 8-வது புத்தகம், 4-வது அத்தியாயம் (6-வது செய்யுள்).

சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சாயுச்சியம் எனும் முக்தியின் நான்கு நிலைகள் மற்றும் ஸேஷத்வம் மற்றும் தாஸத்வம் எனப்படும் வைணவ கோட்பாடுகளைக் குறித்து அறியவும்.

Top

விளக்கம்
1 - கட3 - இத்தெலுங்கு சொல்லுக்கு 'தேவை' மற்றும் 'குறை' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில், அடுத்துவரும் 'தூரத்தில் விட்டுவிடுவேன்' என்ற சொற்களை நோக்குகையில், 'கடமை' என்ற தமிழ்ச்சொல் பொருந்தும் எனத் தோன்றுகின்றது. கண்ணன் கீதையில் (அத்தியாயம் 18, செய்யுள் 66) மொழிந்ததனையும் நோக்கவும் -

"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு, என் ஒருவனையே புகலடைவாயாக; நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே."

ஆனால், பரம்பரையாக, தெலுங்கு சொல்லுக்குள்ள பொருளே புத்தகங்களில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே அங்ஙனமே இங்கும் மொழிபெயர்க்கப்பட்டது.

3 - தொட3லனனுது - தொட3லனு அனுது - தொடைகளைப் பிடித்துவிடுவேன். புத்தகங்களில் இங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆயின் 'அனுது' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் இருப்பதாகத்தெரியவில்லை. தமிழ்ச்சொல் 'அமுக்கு'-வுக்கு ஈடான 'அணசு' என்ற தெலுங்கு சொல்லின் திரிபாக 'அனுது' இருக்கலாம் என கருதப்படுகின்றது.

5 - தாள ஜால ரட்டு - இழிவினைத் தாளவியாலாது - இதற்கு முன் வரும் சரணத்தில், சாருப்பிய நிலையைப் பற்றிக் கூறிவிட்டு, இந்த சரணத்தில் இங்ஙனம் கூறுவதனை நோக்குகையில், இதற்கு முன் சரணங்களில் கூறிய யாவும், இறைவனிடம் தியாகராஜருடைய வேண்டுகோட்களேயன்றி, அந்தந்த நிலைகளை எய்தியதாகக் கொள்ளவியலாது.

Top

இந்த கிருதி முழுவதும் 'நாரத பக்தி சூத்திர'ங்களில் 'காந்தாஸக்தி' எனப்படும் ஒரு மனைவி தன் கணவனிடம் எப்படிப்பட்ட தொண்டுள்ளம் உடையவளாக இருப்பாளோ அத்தகைய மனப்பாங்கினையே இறைவனிடம் கொண்டுள்ளதை விவரிப்பதாக உள்ளது. 11-வது சரணத்தில், 'எனது கைப்பற்றவாய்' (மணம்புரிவாய்) என்பதனையும் நோக்கவும்.

'இழிந்த புலன் நாட்டங்களை நான் மறப்பேன்' (சரணம் 6), 'விசிறியால் விசிறிக்கொண்டு உன்னை அழைப்பேன்' (சரணம் 7) மற்றும் 'மேனியை அளித்து, உனது தொடைகளைப் பிடித்துவிடுவேன்' (சரணம் 8) - இது குறித்து 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறப்படுவதாவது -

'ப்ரேம பக்தி' எனப்படும் 'இறைவனிடம் கொள்ளும் காதல் நிறைந்த பக்தி' என்பது காம இச்சையின் தன்மையதல்ல; ஏனென்றால், அது துறவு நிலையாகும் (சூத்திரம் 7); கோகுலத்தில், ஆய்ச்சியர் கண்ணனிடன் கொண்ட பக்தி, அத்தகையதே (சூத்திரம் 21); அந்த ஆய்ச்சியர், கண்ணனின் தெய்வீக நிலையை அறியாது, காதல் கொண்டிருந்தால், அத்தகைய காதல், ஒரு பெண், தனது ஆசை நாயகனிடம் கொள்ளும் காம இச்சைக்கே ஈடாகும் (சூத்திரம் 23); ஆசை நாயகனிடம், ஒரு பெண் கொள்ளும் உலகவியற் காதலில், தன்னுடைய இன்பத்தில், ஆசை நாயகனின் இன்பத்தினைப் பற்றிய எண்ணம் இருக்காது (சூத்திரம் 24) - ஸ்வாமி த்யாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.

தியாகராஜர், 7-வது சரணத்தில், 'இழிந்த புலன் நாட்டங்களை மறப்பேன்' என்று கூறுகின்றார். எனவே, புலன் நாட்டங்களற்றுவிட்டால், அங்கு காமத்திற்கு இடமேது? அத்தகைய காதலை, உலகோரின் கண்ணோட்டத்தினைக் கொண்டு விவரிக்க இயலாது. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 'The Gospel of Sri Ramakrishna' என்ற புத்தகத்தில் (அத்தியாயம் 23) 'தெய்வீகக் காதல்' என்ன என்பதனைப் பற்றிய முழு விவரம் காணலாம்.

வீடிகை - தாம்பூலம்

Top


Updated on 15 Aug 2009

Monday, May 18, 2009

தியாகராஜ கிருதி - ராம ராம ராம லாலி - ராகம் ஸ1ஹான - Rama Rama Rama Laali - Raga Sahana

பல்லவி
ராம ராம ராம லாலி ஸ்ரீ ராம
ராம ராம லாவண்ய லாலி

சரணம்
சரணம் 1
தொ3ரக-ரானி நிதி4 ராரா தொ3ரகு
தொ3ரவு நீவு தொட்லலோ ராரா (ராம)


சரணம் 2
வரமைனட்டி நா பட்டி ராரா வர
ஸுருலகு அருதை3ன ஸுந்த3ர ராரா (ராம)


சரணம் 3
தொலி ஜேஸின நோமு ப2லமா ராம
இலனு வெலயு 1மா இன குல4னமா (ராம)


சரணம் 4
கல கலமனி ராவு செந்த
ஆகலி கொண்டிவோ லேக கருணா ஸ்வாந்த (ராம)

சரணம் 5
மத33ஜ க3மன நா ஸ்வாமி ஓ
ஸத3யுட3 நீ-லோனி ஜாலி தெல்புமீ (ராம)


சரணம் 6
ஸரி பா3லுலாட3 ரம்மனிரி ஆடி3
வரத3 நீவு ரா-வத்3து3 பொம்மனிரி (ராம)


சரணம் 7
எவரு நின்னு ஏமனிரி
ராக4வ நீயெட3 தப்பு கனி ரா-வத்33னிரி (ராம)


சரணம் 8
கனுலு மூஸியாடி3னாரு
கரமுனகணக3னி நேத்ரமனி கஸரெத3ரு (ராம)


சரணம் 9
கலுவ ரேகுலனு போலு கனுலு
கலக3னேல நன்னு கன்ன த3யாளோ (ராம)


சரணம் 10
தேட கன்னுலனு மூஸெத3ரு நா
2தோடி3 வாருலெல்ல போ-வத்33னெத3ரு (ராம)


சரணம் 11
நுது3டனு ஸ்1ரம ஜலமேல ஆ
கத2யேமி தெலுபவே கருணாலவால (ராம)


சரணம் 12
சிந்தசே தா3கு3து3 வேரே மேனி
காந்திசே தகி3லிதே கர்மமனெரே (ராம)


சரணம் 13
முத்யால ஸருல சிக்கேமி ஓ
ஸத்ய ஸந்த4 பாத3 ஸருல நொக்கேமி (ராம)


சரணம் 14
முத3முன நே பட்டு வேள
நா பத3முன வ்ராலெத3ரு பலுமாரா வேள (ராம)


சரணம் 15
நின்னேமனி பிலுசுகொனிரி ராம
மன்னனதோனேமனி எஞ்சுகொனிரி (ராம)


சரணம் 16
பா33 ஸாக்ஷி ரம்மனிரி வர
த்யாக3ராஜ நுத தை3வமாயனிரி (ராம)


பொருள் - சுருக்கம்
  • இந்தப் பாடல் குழந்தை இராமனுக்கும் தாய் கௌசலைக்கும் நடக்கும் உரையாடலாக அமைந்துள்ளது.

    • தாய் -

      • முன்செய் நோன்பின் பயனே! புவியிலொளிரும் எமது பரிதி குலச் செல்வமே!

      • கருணையுள்ளத்தோனே! மதகரி நடையோனே! என் தெய்வமே! ஓ தயாளா!

      • வரதா! இராகவா! என்னையீன்ற தயாளா! கருணைக் கடலே! ஓ சொல் தவறாதவனே!


      • இராமா! தாலேலோ!

      • இராமா! அழகா! தாலேலோ!

      • கிடைக்க மாட்டாத செல்வமே, வாடா!

      • துரைக்கு துரையே, நீ தொட்டிலில் வாடா!

      • பேறுபோலும் என் குழந்தாய், வாடா!

      • உயர் வானோருக்கும் அரிதான சுந்தரா, வாடா!


    • தாய் -
      • கலகலப்பாக வாராயேனோ, அருகினில்? பசியெடுத்ததோ? அன்றி, உனதுள்ளத் துயரத்தினைச் சொல்வாய்;

    • இராமன் -
      • ஒத்த சிறுவர்கள் விளையாட வாயென்றனர்; ஆடியபின், நீ வரவேண்டாம், போயென்றனர்;

    • தாய் -
      • எவருன்னை என்ன சொன்னார்கள்? உன்னிடம் தவறு கண்டா வரவேண்டாமென்றனர்?

    • இராமன் -
      • கண்களை மூடி ஆடினார்கள்; கைக்குள் கொள்ளாக் கண்களென குறை சொன்னார்கள்;

    • தாய் -
      • தாமரையிதழ் போலும் கண்கள் அமைந்ததேனோ?

    • இராமன் -
      • திறந்த கண்களை மூடினர்; எனது தோழர்களெல்லோரும் போகவேண்டாமென்றனர்;

    • தாய் -
      • நெற்றியில் வியர்வைத் துளிகளேன்? அந்த கதையென்ன, சொல்வாய்;

    • இராமன் -
      • 'ஒளிந்துகொண்டாயென்று வைத்துக்கொள்; பின்னர் (உனது) உடலொளியினால் அகப்பட்டால் தொல்லை', என்றனரே;

    • தாய் -
      • முத்துச்சரங்கள் பின்னிக்கொன்டதென்ன? கால் (கொலுசு) சரங்கள் நசுங்கினதென்ன?

    • இராமன் -
      • களிப்புடன் நான் பிடிக்கும்போழ்து, எனது கால்களில் விழுந்தனர், பலமுறை, அவ்வேளை;

    • தாய் -
      • உன்னையென்னவென்று அழைத்தனர்? மதிப்புடன் என்னவென்று எண்ணிக்கொண்டனர்?

    • இராமன் -
      • நல் சாட்சியாக வரச்சொன்னனர்; 'உயர், தியாகராசனால் போற்றப்பெற்ற தெய்வமே'யென்றனர்.



    பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ராம/ ராம/ ராம/ லாலி/ ஸ்ரீ ராம/
    இராமா/ இராமா/ இராமா/ தாலேலோ/ ஸ்ரீ ராமா/

    ராம/ ராம/ லாவண்ய/ லாலி/
    இராமா/ இராமா/ அழகா/ தாலேலோ/


    சரணம்
    சரணம் 1
    தொ3ரக/-ரானி/ நிதி4/ ராரா/ தொ3ரகு/
    கிடைக்க/ மாட்டாத/ செல்வமே/ வாடா/ துரைக்கு/

    தொ3ரவு/ நீவு/ தொட்லலோ/ ராரா/ (ராம)
    துரையே/ நீ/ தொட்டிலில்/ வாடா/


    சரணம் 2
    வரமு/-ஐனட்டி/ நா/ பட்டி/ ராரா/ வர/
    பேறு/ போலும்/ என்/ குழந்தாய்/ வாடா/ உயர்/

    ஸுருலகு/ அருதை3ன/ ஸுந்த3ர/ ராரா/ (ராம)
    வானோருக்கும்/ அரிதான/ சுந்தரா/ வாடா/


    சரணம் 3
    தொலி/ ஜேஸின/ நோமு/ ப2லமா/ ராம/
    முன்/ செய்/ நோன்பின்/ பயனே/ இராமா/

    இலனு/ வெலயு/ மா/ இன/ குல/ த4னமா/ (ராம)
    புவியில்/ ஒளிரும்/ எமது/ பரிதி/ குல/ செல்வமே/


    சரணம் 4
    கல கலமனி/ ராவு/ செந்த/
    கலகலப்பாக/ வாராயேனோ/ அருகினில்/

    ஆகலி/ கொண்டிவோ/ லேக/ கருணா/ ஸ்வாந்த/ (ராம)
    பசி/ யெடுத்ததோ/ அன்றி/ கருணை/ யுள்ளத்தோனே/

    சரணம் 5
    மத3/ க3ஜ/ க3மன/ நா/ ஸ்வாமி/ ஓ/
    மத/ கரி/ நடையோனே/ என்/ தெய்வமே/ ஓ/

    ஸத3யுட3/ நீ/-லோனி/ ஜாலி/ தெல்புமீ/ (ராம)
    தயாளா/ உனது/ உள்ள/ துயரத்தினை/ சொல்வாய்/


    சரணம் 6
    ஸரி/ பா3லுலு/-ஆட3/ ரம்மு/-அனிரி/ ஆடி3/
    ஒத்த/ சிறுவர்கள்/ விளையாட/ வா/ யென்றனர்/ ஆடியபின்/

    வரத3/ நீவு/ ரா/-வத்3து3/ பொம்மு/-அனிரி/ (ராம)
    வரதா/ நீ/ வர/ வேண்டாம்/ போ/ யென்றனர்/


    சரணம் 7
    எவரு/ நின்னு/ ஏமி/-அனிரி/
    எவர்/ உன்னை/ என்ன/ சொன்னார்கள்/

    ராக4வ/ நீ-எட3/ தப்பு/ கனி/ ரா/-வத்3து3/-அனிரி/ (ராம)
    இராகவா/ உன்னிடம்/ தவறு/ கண்டா/ வர/ வேண்டாம்/ என்றனர்/


    சரணம் 8
    கனுலு/ மூஸி/-ஆடி3னாரு/
    கண்களை/ மூடி/ ஆடினார்கள்/

    கரமுனகு/-அணக3னி/ நேத்ரமு/-அனி/ கஸரெத3ரு/ (ராம)
    கைக்குள்/ கொள்ளா/ கண்கள்/ என/ குறை/ சொன்னார்கள்/


    சரணம் 9
    கலுவ/ ரேகுலனு/ போலு/ கனுலு/
    தாமரை/ இதழ்/ போலும்/ கண்கள்/

    கலக3னு/-ஏல/ நன்னு/ கன்ன/ த3யாளோ/ (ராம)
    அமைந்தது/ ஏனோ/ என்னை/ ஈன்ற/ தயாளா/


    சரணம் 10
    தேட/ கன்னுலனு/ மூஸெத3ரு/ நா/
    திறந்த/ கண்களை/ மூடினர்/ எனது/

    தோடி3 வாருலு/-எல்ல/ போ/-வத்3து3/-அனெத3ரு/ (ராம)
    தோழர்கள்/ எல்லோரும்/ போக/ வேண்டாம்/ என்றனர்;


    சரணம் 11
    நுது3டனு/ ஸ்1ரம/ ஜலமு/-ஏல/ ஆ/
    நெற்றியில்/ வியர்வை/ துளிகள்/ ஏன்/ அந்த/

    கத2/-ஏமி/ தெலுபவே/ கருணா/-ஆலவால/ (ராம)
    கதை/ என்ன/ சொல்வாய்/ கருணை/ கடலே/


    சரணம் 12
    சிந்தசே/ தா3கு3து3/ வேரே/ மேனி/
    'வைத்துக்கொள்/ ஒளிந்துகொண்டாயென்று/; பின்னர்/ (உனது) உடல்/

    காந்திசே/ தகி3லிதே/ கர்மமு/-அனெரே/ (ராம)
    ஒளியினால்/ அகப்பட்டால்/ தொல்லை'/ என்றனரே/


    சரணம் 13
    முத்யால/ ஸருல/ சிக்கு/-ஏமி/ ஓ/
    முத்து/ சரங்கள்/ பின்னிக்கொன்டது/ என்ன/ ஓ/

    ஸத்ய/ ஸந்த4/ பாத3/ ஸருல/ நொக்கு/-ஏமி/ (ராம)
    சொல்/ தவறாதவனே/ கால்/ (கொலுசு) சரங்கள்/ நசுங்கினது/ என்ன/


    சரணம் 14
    முத3முன/ நே/ பட்டு/ வேள/
    களிப்புடன்/ நான்/ பிடிக்கும்/ போழ்து/

    நா/ பத3முன/ வ்ராலெத3ரு/ பலுமாரு/-ஆ வேள/ (ராம)
    எனது/ கால்களில்/ விழுந்தனர்/ பலமுறை/ அவ்வேளை/


    சரணம் 15
    நின்னு/-ஏமி-அனி/ பிலுசுகொனிரி/ ராம/
    உன்னை/ என்னவென்று/ அழைத்தனர்/ இராமா/.

    மன்னனதோனு/-ஏமி-அனி/ எஞ்சுகொனிரி/ (ராம)
    மதிப்புடன்/ என்னவென்று/ எண்ணிக்கொண்டனர்/


    சரணம் 16
    பா33/ ஸாக்ஷி/ ரம்மு/-அனிரி/ வர/
    நல்/ சாட்சியாக/ வர/ சொன்னனர்/ 'உயர்/

    த்யாக3ராஜ/ நுத/ தை3வமா/-அனிரி/ (ராம)
    தியாகராசனால்/ போற்றப்பெற்ற/ தெய்வமே'/ என்றனர்/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    சில புத்தகங்களில், முதல் சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

    1 - மா இன குல - இன குல

    2 - தோடி3 வாருலெல்ல - தோடி வாருலெல்ல

    Top

    மேற்கோள்கள்

    விளக்கம்
    கண்களை மூடி ஆடினார்கள் - கண்ணாம்பூச்சி

    Top


    Updated on 18 May 2009